சனி, 23 செப்டம்பர், 2023

சீமானுக்கு வீரலட்சுமி சவால் : என் கணவருடன் பாக்ஸிங் செய்யத் தயாரா?

மின்னம்பலம் - Kavi  : என் கணவருடன் பாக்ஸிங் செய்யத் தயாரா? சீமானுக்கு சவால் விட்ட வீரலட்சுமி
நடிகை விஜயலட்சுமி விவாகரத்தைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக பேசிய தமிழக முன்னேற்றப்படைத் தலைவர் வீரலட்சுமிக்கும், சீமானுக்கும் இடையே வார்த்தை போர் முற்றி வருகிறது.
இந்தச்சூழலில் வீரலட்சுமியின் கணவர் பெயரில், சீமானை பாக்சிங்கிற்கு அழைத்து ஆடியோ ஒன்று வெளியானது.
இதுதொடர்பாக செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “அவர் என் கையால்தான் சாகுறதுன்னு முடிவு எடுத்துட்டார்னா, நான் அதை சந்தோஷமா எதிர்கொள்கிறேன். ஊடகத்தினரே நேரம் மற்றும் இடத்தை கேட்டுச் சொல்லுங்கள்” என்றார்.
சீமானின் பேச்சுக்குப் பதிலளித்து வீரலட்சுமி இன்று (செப்டம்பர் 23) வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், “நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களே ஊடகவியாளர் மத்தியிலும், நாட்டு மக்கள் மத்தியிலும் என்னை பெண் என்றும் பாராமல் ஒழுங்கீனமாக பேசி வருகிறீர்கள்.

நீங்கள் பேசும் பேச்சுகளை பொது வாழ்வில் உள்ள ஒரு பெண்ணாகத் தலைவராக நான் வேண்டுமானால் கடந்து செல்லலாம். ஆனால், உங்களது இழிவான பேச்சுகளை கேட்டுக் கொண்டு அமைதியாக கடந்து செல்ல எனது கணவருக்கு எந்த அவசியமும் கிடையாது.

எனது கணவர் கணேசன் உங்களை செல்போனில் தொடர்புக் கொண்டபோது அழைப்பை துண்டித்துவிட்டீர்கள். மீண்டும் தொடர்பு கொண்டபோது ’உங்களுடன் பாக்ஸிங் செய்ய ஆசையாக இருக்கிறது. ஒத்தைக்கு ஒத்தை நிற்கலாமா’ என்று சீமானிடம் என் கணவர் கேட்டார். ஆனால் அதற்குப் பதில் எதுவும் கூறவில்லை.

உங்களுக்கு ஊடகம் முன்பு பேச மட்டும்தான் வீரம் வருமா? 10 ஆண்டுகளுக்கு முன்பே எனது கணவர் உங்களிடம் ஒன்றரை மணி நேரம் கேள்வி கேட்டு பேசியவர் அதெல்லாம் உங்களுக்கு நினைவுக்கு வராது.

இப்போது நான் திருவள்ளூர் வட்டம் தொட்டிக்கலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட மைதானத்தில் நிற்கிறேன். இங்குதான் நீங்களும் என் கணவரும் பாக்ஸிங் செய்ய போகிறீர்கள். வரும் காணும் பொங்கல் அன்று போட்டி நடக்கும் என்று அறிவிக்கிறேன்.

என்ன பந்தயம் என்று போட்டி நடக்கும் மூன்று நாட்களுக்கு முன்பு அறிவிக்கிறேன்” என்று சீமானுக்கு வீரலட்சுமி சவால் விடுத்துள்ளார்.

பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக