சனி, 15 ஜூலை, 2023
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்:6 தளம் ரூ.120 கோடி.. 5 முக்கிய அம்சம்.
மதுரை - புதுநத்தம் சாலையில் ரூ.120.75 கோடியில் உலகத் தரத்துக்கு இணையாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இந்நூலகம். 2,13,338 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 2 லட்சத்திற்கு அதிகமான புத்தகங்கள் இடம்பெறுகின்றன.
பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் வாங்க சுமார் ரூ.10 கோடி, தொழில்நுட்ப உபகரணங்களுக்கென ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து, ஏற்கெனவே அரசாணை பிறபித்து, கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
ஜாக்கி வாசுதேவின் ஈஷாவில் அமைச்சர் மெய்யானாதன் விவசாய கருத்தரங்கு துவக்கி வைக்கிறார்
மாலை மலர் : ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் புதுக்கோட்டையில் நாளை (ஜூலை 16) நடத்தும் மாபெரும் விவசாய கருத்தரங்கை மாண்புமிகு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி. மெர்சி ரம்யா அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்லார்
காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் இணைந்து நடத்தும் சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி குறித்த மாபெரும் கருத்தரங்கு புதுக்கோட்டையில் நாளை நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக பங்கேற்க உள்ளனர்.
இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் கூறியதாவது:
திராவிட சினிமா .. விமர்சனங்கள் மட்டுமே வரலாறாகி விடக்கூடாது
திராவிட இயக்க கொள்கைகளை தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளையும் தாண்டி இலங்கை மலாயா பர்மா மொரிசியஸ் போன்ற நாடுகளுக்கும் எடுத்து சென்றதில்,
அன்றைய மேடை பேச்சுக்களும் கொள்கை பாடல்களும் நாடகங்களும் திரைப்படங்களும் திரைபட பாடல்களும் பெரும் பங்காற்றி உள்ளன.
நான் திரைப்படம் பார்க்கும் வயதை எட்டும் முன்பே கூட என் காதில் அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற வரிகள் ஆழமாக பதிந்து விட்டிருந்தது
இப்போது கேட்டாலும் இன்றுதான் இந்த பாடலை புதிதாக கேட்பது போன்ற புத்துணர்வு ஏற்படுகிறது.
பேரறிஞர் அண்ணாவின் வேலைக்காரியில் தொடங்கி பராசக்தியில் எகிறி பாய்ந்த திராவிட திரையின் ஆட்சி எவ்வளவு பிரமாண்டமானது என்பதை நாம் சற்று மறந்து விட்டோம் என்று தோன்றுகிறது.
அன்றைய காலக்கட்டத்தில் மேற்கு நாடுகளை போலல்லாது தெற்கு ஆசிய மிகவும் பின் தங்கி இருந்தது.
அந்த இருண்ட காலத்தில் ஆசியாவின் தென்கோடியில் உதித்த திராவிட சூரியனின் வரலாறு உலகிற்கு இன்னும் சரியாக சொல்லப்படவில்லை என்று கருதுகிறேன்.
முதலமைச்சர் ஸ்டாலின்THE WEEK ஆங்கில இதழுக்கு அளித்த முழு பேட்டி : ”பாஜகவின் மக்கள் விரோத ஆட்சி வீழ்த்தப்படும்”
Kalaignar Seithigal - Lenin : 11. பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் நீங்கள் ஃபரூக் அப்துல்லா அவர்களையும் மெஹபூபா முப்தி அவர்களையும் சந்தித்தீர்கள்.
பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்பு, அங்கு நிலவும் சூழ்நிலையைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
காஷ்மீரில் இப்போது இருப்பது உண்மையான அமைதி அல்ல. கையையும் காலையும் கட்டிப் போட்டு, வாயைப் பொத்திவிட்டு ஒருவன் அமைதியாக இருக்கிறான் என்பதைப் போன்ற அமைதிதான் அது.
அரசியல் தலைவர்கள் அனைவரையும் வீட்டுச் சிறையில் வைத்துவிட்டு,
370-ஆவது பிரிவை நீக்கினார்கள். ஏதோ காஷ்மீருக்கு மட்டும்தான் சிறப்புரிமை இருப்பதைப் போல பரப்புரை செய்தார்கள்.
வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றுக்கும் சிறப்புரிமை தரப்பட்டுள்ளதே. அதை நீக்க பா.ஜ.க.வால் முடியுமா? தைரியம் இருக்கிறதா?
வெள்ளி, 14 ஜூலை, 2023
திமுக தமிழ்நாட்டுக்கு வெளியே இலங்கையில் இ.தி.மு.க இருந்தது. Gowra Rajasekaran ·
ராதா மனோகர் : இலங்கையில் 1960 ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திரு அந்தோணி முத்து தலைமையில் இயங்கிய இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் ஆணையாளரால் பதிவு பெற்ற கட்சியாகும்
இதற்கு முன்பு தோழர் இளஞ்செழியன் தலைமையிலான இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் அவசர காலச்சட்டத்தின் அடிப்படையிலேயே தடை செய்யப்பட்டது . அந்த சட்டம் காலாவதியான பின்பு இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதான தடையும் காலாவதியானது
இந்த இடைப்பட்ட காலத்தில் பல இலங்கை திராவிட முன்னேற்ற கழக தோழர்கள் இடது சாரி கட்சிகளிலும் அமைப்புக்களில் இணைந்து விட்டிருந்தார்கள்.
தோழர் இளஞ்செழியன் போன்றோர் பிற்காலத்தில் ஜேவிபியில் ஈடுபாடு கொண்டிருந்தார்
மேலும் பலரை இலங்கை தமிழரசு கட்சி ஈர்த்துக்கொண்டது
குறிப்பாக தோழர் மணவைத்தம்பி இலங்கை தமிழரசு கட்சியோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார்
இந்த இரு இ தி மு காவிற்கும் இடையில் உரசல் உண்டாக்கி திராவிட முன்னேற்ற கழக தோழர்களை உட்கட்சி சண்டையிலேயே காலத்தை கழிப்பதற்கு கோவை மேகேஸ்வர சர்மாவை ஆசிரியராக கொண்ட தமிழரசு கட்சியின் சுதந்திரன் மிக கேவலமான பிரசாரங்களை மேற்கொண்டிருந்தது.
கார் விபத்தில் அறுபட்ட சிறுவனின் தலையை மீண்டும் இணைத்தனர். இஸ்ரேல் மருத்துவர்கள் சாதனை
மாலைமலர் : கார் மோதியதால் கழுத்து அறுபட்ட 12-வயது இஸ்ரேலி சிறுவனுக்கு இஸ்ரேல் மருத்துவர்கள் மிகவும் அசாதாரணமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை செய்து தலையை மீண்டும் கழுத்தில் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர்.
அந்த சிறுவன் தற்போது நலமாக உள்ளான்.
சுலைமான் ஹசன் எனப்படும் அந்த சிறுவன் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது அவன் மீது கார் மோதியிருக்கிறது.
இதில் அவனது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
தசைநார்கள் கிழிந்து முதுகுத்தண்டின் மேற்பகுதியிலிருந்து அவரது மண்டை ஓடு பிரிந்து விட்டது. கிட்டத்தட்ட அவனது கழுத்து துண்டான நிலைதான் இருந்தது.
பெங்களூரு ஐ.டி. நிறுவன எம்.டி வெட்டிக்கொலை - முன்னாள் ஊழியர் சிஇஓ அலுவலகம் புகுந்து வெறிச்செயல் - Aironics Media Private limited
Ceylonmirror.net - தமிழினி : ஐ.டி. நிறுவன எம்.டி, சிஇஓ அலுவலகம் புகுந்து வெட்டிக்கொலை – முன்னாள் ஊழியர் வெறிச்செயல்
பெங்களூருவில் இணைய சேவை நிறுவனத்திற்குள் வைத்து இரண்டு அதிகாரிகள் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில், இணைய சேவை வழங்கும் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆகியோர், அலுவலகத்திலேயே வாளால் வெட்டிக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெங்களூருவின் அமிர்தஹள்ளி பகுதியில், இணைய சேவை வழங்கும் ஏரோனிக்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் மேலாண் இயக்குநராக பணிந்தர சுப்பிரமணியாவும், முதன்மை செயல் அதிகாரியாக வினுகுமாரும் இருந்து வந்தனர்.
கனடிய தமிழ் எம்பி ஜி.ஆனந்தசங்கரிக்கு விசா வழங்க இலங்கை அரசாங்கம் மறுப்பு!
hirunews.lk கனடிய தமிழ் எம்பி ஜி. ஆனந்தசங்கரிக்கு விசா வழங்க இலங்கை அரசாங்கம் மறுப்பு!
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரிக்கு இலங்கை அரசாங்கம் விசா வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தொடர்பாக, குறிப்பாக மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் போர் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தாம் மேற்கொள்ளும் பணிகளுக்காகவே விசா மறுக்கப்பட்டதாக ஆனந்தசங்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
சுதந்திரமான பேச்சு, அரசாங்கத்திற்குப் பொருத்தமாக இருக்கும்போது அது அனுமதிக்கப்படுகிறது.
வியாழன், 13 ஜூலை, 2023
தமிழ்நாடு மகளிர் உரிமைத் தொகை திட்டம்: விண்ணப்பம் பெற 24ம் தேதி முதல் சிறப்பு முகாம்
மாலை மலர் : சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சென்னையில் சுமார் 3,200 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அறிவித்து,
அதனை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சென்னை மாநகராட்சியில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக விண்ணப்பங்களை பெற 24ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
மேலும், சென்னையில் சுமார் 3,200 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும் அவர் கூறினார்
தென்காசி மறு வாக்கு எண்ணிக்கையில் பழனி நாடார் வெற்றி
மாலை மலர் : கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தென்காசி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரான செல்வ மோகன்தாஸ் பாண்டியனை விட 370 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. எனவே தபால் வாக்குகளையும், மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்றுகள் வரை பதிவான வாக்குகளை மறுஎண்ணிக்கை நடத்த வேண்டும் என ஐகோர்ட்டில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.
பாலியல் குற்றவாளி சதுர்வேதி சாமியார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு- வருகிற 31-ந்தேதிக்குள் நேரில் வருமானு உத்தரவு
மாலைமலர் : சென்னை தி நகரை சேர்ந்தவர் சதுர்வேதி சாமியார். இவர் மீது கடந்த 2004-ம் ஆண்டு தொழில் அதிபர் மனைவி மற்றும் மகளை மயக்கி கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் பக்தர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக சதுர்வேதி சாமியார் சிறப்பு பூஜைகளை செய்து வந்தார்.
அப்போது தனது பிரச்சினைகளுக்காக தொழில் அதிபர் ஒருவர் சதுர்வேதி சாமியாரை பார்க்க சென்றபோதுதான் அவரது மனைவியையும் மகளையும் சதுர்வேதி சாமியார் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இது போன்று சதுர்வேதி சாமியார் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் வழக்குபதிவு செய்யப்பட்டிருந்தது. மொத்தம் 5 வழக்குகள் அவர் மீது போடப் பட்டிருந்தது. இந்த வழக்கு களில் சதுர்வேதி சாமியார் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இதன் பின்னர் அவர் தப்பி ஓடி தலை மறைவானார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
தந்தை பெரியார்: உலகத்தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம்! ஏன் பெரியார் விமர்சித்தார்!
ராதா மனோகர் : தமிழாராய்ச்சி மாநாடு வண தனிநாயகம் அடிகளால் முழுக்க முழுக்க தமிழ் மொழியின் ஒரு ஆய்வு மன்றமாகவே தொடங்கப்பட்டது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியின் போது சென்னையில் நடந்த 2 வது மாநாட்டில் ஆய்வு என்பதை தாண்டி தமிழ் தேசிய அரசியலுக்கு ஒரு வாய்ப்பாக இது பயன்பட கூடும் என்ற சந்தேகம் பெரியாருக்கு இருந்திருக்க வாய்ப்புள்ளது
இந்த சந்தேகம் சரிதான் என்பதை யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாடு நிரூபித்து விட்டது
அந்த மாநாடு முழுக்க முழுக்க இலங்கை தமிழரசு கட்சியின் மீள் எழுச்சிக்கே பெரிதும் பயன்பட்டது/
அதுமட்டுமல்ல இலங்கை தமிழரின் நியாயமான அரசியல் போராட்டத்தை வெறித்தனமான இனவாதமாக மடைமாற்றியதில் இந்த நான்காவது உலக தமிழிராய்ச்சி மாநாட்டுக்குதான் மிக பெரிய பங்கு இருக்கிறது
இந்த இனவாத வெறுப்பு அரசியல் தமிழர்களை முள்ளிவாய்க்கலைக்குள் கொண்டு போய் சேர்த்தது
அந்த மாநாடு பற்றி இன்றுவரை கதைகளே வரலாறாக இட்டு கட்டப்படுகிறது!
டிஐஜி விஜயகுமார் கடைசியாக அனுப்பிய ரவுடிகள் பற்றிய செய்தியும் உத்தரவும்?
மின்னம்பலம் : டிஐஜி விஜயகுமார் கடைசியாக அனுப்பிய வாட்ஸ் அப் செய்தி இதுதான்!
தமிழக காவல்துறையை மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்தையும் பொதுமக்களையும் அதிர வைத்த சம்பவம் கடந்த ஜூலை 7 ஆம் தேதி காலை கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டதுதான்.
ஒவ்வொரு நாளும் காலையில் டிஐஜி விஜயகுமார் தனது நண்பர்களுக்கும், போலீஸ் குரூப்பில் உள்ளவர்களுக்கும் வாட்ஸ் அப்பில் தவறாமல் காலை வணக்கம் மற்றும் சில செய்திகளை அனுப்பி வந்திருக்கிறார்.
தற்கொலை செய்துகொண்ட அன்று (ஜூலை 7) காலை 6.40க்கும் வழக்கம்போல வாட்ஸ் அப்பில் இருந்து செய்தி அனுப்பியிருக்கிறார் டிஐஜி விஜயகுமார்.
அன்று தன் வாழ்க்கையில் கடைசியாக அனுப்பிய மெசேஜ் என்ன என்ற தகவல், தற்கொலை வழக்கை விசாரித்து வரும் போலீஸ் வட்டாரங்களில் பேசியபோது நமக்குத் தெரியவந்தது.
“ஒவ்வொரு நாளும் டிஐஜி விஜயகுமார் ஆன்மீகம், தத்துவம் என்று பல்வேறு மெசேஜ்களில் காலை வேளையில் அனுப்பி வைத்து வருவார்.
இமாச்சலில் 88 பேர் உயிரிழப்பு .. கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி..
மாலை மலர் : சிம்லா தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், அரியானா மாநிலங்களில பேய்மழை பெய்தது.
இதற்கிடையே, கடந்த 3 நாட்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என இமாச்சலப் பிரதேசம் மிக மோசமாக பாதிப்பு அடைந்துள்ளது. 1,300 சாலைகள் சேதமடைந்துள்ளன. 40 பாலங்கள் சிதைந்துள்ளன. 79 வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாகின. 333 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன.
சிம்லா - மணாலி, சண்டிகர் - மணாலி, சிம்லா - குல்கா தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டதால் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் திண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
திரு அமிர்தலிங்கம் 34 ஆண்டு நினைவேந்தல்! (ஜூலை 13, 1989 கொழும்பில்)
திரு அமிர்தலிங்கம் அவர்களின் 34 ஆண்டு நினைவேந்தல்! (ஜூலை 13, 1989 கொழும்பில்)
இலங்கை திராவிடர் கழகத்தின் இந்தி எதிர்ப்பு போராட்ட குழுவின் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய திரு அமிர்தலிங்கம்,
பின்பு திரு எஸ் ஜெ வி செல்லநாயகத்தின் தமிழரசு கட்சியில் தன்னை இணைத்து கொண்டு நீண்ட அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.
திரு அமிர்தலிங்கம் அவர்கள் சுயமரியாதை சமூகநீதியை பேசிய திராவிட இயக்கத்தில் இருந்து தடம் மாறி, எந்த அரசியல் சித்தாந்தமும் இல்லாத,
தமிழ் தேசிய அரசியலுக்குள் நுழைந்தது ஒரு பெரிய வரலாற்று தவறாகவே முடிந்தது!
இவரின் அரசியலை புலிகள் முடித்து வைத்தாலும் உண்மையில் இந்த முடிவை தீர்மானித்த முக்கிய காரணியாக திரு எஸ் ஜெ வி செல்வநாயகத்தை தான் நாம் குறிப்பிடவேண்டும்.
திரு அமிர்தலிங்கம் மட்டுமல்ல பிரபாகரனும்கூட எஸ் ஜெ வி செல்வநாயகத்தின் தவறான வெறுப்பு அரசியலின் பகடைக்காய்கள்தான்!
புதன், 12 ஜூலை, 2023
தயாரிப்பாளர் எஸ் ஏ ராஜ்கண்ணு காலமானார்.. ராதிகா, பாரதிராஜா கண்ணீர்.. 16 வயதினிலே மட்டுமின்றி கிழக்கே போகும் ரயில்..
மின்னம்பலம் - christopher : அறிமுகம் கொடுத்த தயாரிப்பாளர் மரணம்: ராதிகா, பாரதிராஜா கண்ணீர்!
தமிழ்சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வந்த எஸ்.ஏ.ராஜ்கண்ணு(வயது 77) உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 11) காலமானார்.
தமிழ் திரையுலகில் காலத்தால் அழியாத பொக்கிஷமாக பார்க்கப்படும் திரைப்படம் 1977ஆம் ஆண்டு வெளிவந்த ’16 வயதினிலே’
இந்த படத்தின் மூலம் இயக்குநர் இமயம் என்று கொண்டாடப்படும் பாரதிராஜாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு.
பாரதிராஜாவுக்கு மட்டுமின்றி அதில் நடித்த கமல், ஸ்ரீதேவி, ரஜினி ஆகியோருக்கும் அவர்களது வாழ்வில் மறக்கமுடியாத படமாக அது அமைந்தது.
நடிகர் விஜய் .. 234 தொகுதிகளிலும் இரவு பாடசாலைகளை தொடங்க திட்டம் . காமராஜர் பிறந்தநாளில்
tamil.oneindia.com - Jeyalakshmi C : சென்னை: தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் இரவு பாடசாலைகளை தொடங்கப்போவதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு இந்த இரவு பாடசாலை திட்டம் தொடங்கப்பட உள்ளத
கல்வி உதவித்தொகைகளை வழங்கிய நடிகர் விஜய் இளம் தலைமுறை வாக்காளர்களை கவரும் வகையில் இரவு பாடசாலை திட்டத்தை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தன் தொண்டர்கள் மூலம் பல சமூக சேவைகளை செய்து வருகிறார்.
அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்காக போஸ்டர்கள் ஒட்டியும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
ஈஸ்டர் தாக்குதல்- பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15 மில்லியன் இழப்பீடு வழங்கினார் முன்னாள் இலங்கை அதிபர் சிறிசேனா
இந்த தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர்.
இலங்கையில் இயங்கிவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
இதுதொடர்பான வழக்கில், கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றான ஈஸ்டர் தாக்குதலை தடுப்பதில் அலட்சியமாக இருந்ததற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் இலங்கை ரூபாய் வழங்க வேண்டும் என அப்போதைய அதிபர் சிறிசேனாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடைகளை திறந்தால் புரட்சி வெடிக்கும்”- கிருஷ்ணசாமி
மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் “குடியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம், மது இல்லா புதிய தமிழகம் படைப்போம்” எனும் புத்தகத்தை அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் 1971 ஆம் ஆண்டு வரை பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது, 1971 ல் கலைஞர் மதுக்கடைகளை அறிமுகம் செய்து வைத்தார். தமிழகத்தில் அரசே மது விற்பனை செய்து வருகிறது.
பாஜகவை வீழ்த்தும் தென்னிந்தியாவின் 'பவர்புல் லீடர்' -முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய மலையாள மனோரமா
திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில்,
தமிழ்நாடு அரசு பல்வேறு அதிரடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் காரணமாக அதிமுக அரசின் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பின்தங்கிய தமிழ்நாடு தற்போது முன்னேறி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு ஏராளமான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, நம் மாநிலத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது. இது தவிர முதலமைச்சரே சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்று பல்வேறு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
எம்.பி. கதிர் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை கைவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
மாலை மலர் : சென்னை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க. பொதுச் செயலாளருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இவர் 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த 2012-2013ம் நிதியாண்டிற்கான வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்ததோடு, வருமான வரியையும் கால தாமதமாக கட்டியுள்ளார் எனக்கூறி வேலூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.
இதற்கிடையே, வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கதிர் ஆனந்த் எம்.பி சென்னை உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை ரத்துசெய்ய முடியாது என அதிரடியாக தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் , கதிர் ஆனந்த் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
செவ்வாய், 11 ஜூலை, 2023
இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை .....அகதிகள் குடியுரிமை சட்டத் திருத்தம்
இலங்கை ஈழம் அகதிகள் தமிழர்கள் குடியுரிமை சட்டத் திருத்தம்
மரங்களுக்கு வேரோட மண் இருக்கிறது. பறவைகளுக்குக் குஞ்சு பொறிக்கக் கூடு இரக்கிறது. காட்டு விலங்குகளுக்கு உறங்குவதற்குக் குகை இருக்கிறது. ஆனால்.... தங்களுக்கென்று தரையோ, வானமோ, கடலோ, நிலமோ இல்லாத அனாதைகளாய், அடிமைகளைவிடக் கேவலமாய்... வாழ்க்கை என்ற சூழலில் வாடிக் கொண்டிருப்பவர்கள் அகதிகள். இனங்களுக்கிடையேயான இனக் கலவரங்கள் காலகாலமாய் நடந்து வரும் நிலையில் வர
லாறு காணாத மிகப் பெரிய இனக்கலவரம் 1983-இல் இலங்கையில் ஏற்பட்டது. கலவரங்களும் யுத்தங்களும் ஏற்படுத்திய கொடிய பாதிப்புகளில் இருந்து.... தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கட்டிய துணியோடு குழந்தை குட்டிகளுடன் தமிழ்நாட்டின் கரைகளைத் தேடி, படகுகளில் உயிரைப் பணயம் வைத்து வந்து தஞ்சமடைந்த இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்நிலையோ மிகவும் துயரம் நிறைந்ததாக உள்ளது.
கனடாவில் சிறுமி மீது பாலியல் வன்கூடுமை .. தமிழக பாதிரியார் அருள் சவரி கைது
Arul Savari and his church |
இவர் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு கனடாவிற்கு சென்றுள்ளார்
அங்கு மனிடோபா என்ற மாநிலத்தில் உள்ள பூர்வகுடிகளின் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்துள்ளார்
தனது தேவாலயத்தை சுத்தம் செய்வதற்கு அயலில் உள்ள 8 வயது சிறுமியை அழைத்து அவர் மீது பாலியல் வன்முறை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரின் பிடியில் இருந்து தப்பி ஓடிவந்த அந்த சிறுமி தனது தாயாரிடம் விபரத்தை கூறியுள்ளார்
தற்போது இவர் போலீசின் பிடியில் உள்ளார் winnipeg tamil priest sexual abuse
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர் மிக கடுமையான தண்டனையை பெறுவார்
ஆட்டோ வாங்க மகளிருக்கு ரூ.1 லட்சம் மானியம்! முதல்வா் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் DIN
தினமணி : பெண் ஓட்டுநா்கள் புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் அளிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
மேலும், நிகழ் நிதியாண்டில் 2,500 கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.50 கோடி நிதியையும் அவா் அளித்தாா்.
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநா்கள் மற்றும் தானியங்கி மோட்டாா் வாகனங்கள் பழுது பாா்க்கும் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற பெண் ஓட்டுநா்கள் சொந்தமாக ஆட்டோ வாங்குவதை ஊக்குவிக்க அரசு முடிவு செய்தது.
அதன்படி, 500 பெண் ஓட்டுநா்கள் புதிதாக ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு: எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!
மாலை மலர் : அ.தி.மு.க.வில் கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த போது அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தனர்.
இதனால் கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் கூட்டப்பட்டது.
இந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என்று முறையிட்டார்.
15 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த திருச்சபை பாதிரியார்! மாரவில தேவாலயம் இலங்கை
இலக்கியா இன்போ : com : 15 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த திருச்சபை பாதிரியாரை பொலிஸார் தேடி வருகின்றனர்: சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்லாதவாறு நீதிமன்றம் உத்தரவு!
ஏறக்குறைய ஒரு வருட காலமாக 15 வயது பாடசாலை மாணவியை அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மாரவில தேவாலயம் ஒன்றின் திருச்சபை பாதிரியாரை கைது செய்ய மாரவில பொலிஸாரின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கைது செய்யப்படுவதைத் தவிர்க்க பாதிரியார் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பொலிஸார், சந்தேகநபர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்தால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய உத்தரவைப் பெற்றுள்ளனர்.
கோயிலைச் சுற்றி தீண்டாமை வேலி! வேலூர் மாவட்டம் கெம்மங்குப்பம்
minnambalam.com - avi : பட்டியல் சமூகத்தினர் உள்ளே வரக் கூடாது என்பதற்காக கோயிலைச் சுற்றி அமைத்த தீண்டாமை வேலியைப் பிடுங்கியெறிந்த அதிகாரிகளின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த கெம்மங்குப்பம் கிராமத்திலுள்ள மூன்றரை ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் முருகன், முனீஸ்வரர், ஆஞ்சநேயர், கெங்கையம்மன் சந்நிதிகள் அடங்கிய கிராமக் கோயில் அமைந்திருக்கிறது.
அதனருகில், சிறிய விளையாட்டு மைதானம், நெல் களம், காரிய மேடை, குளம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி போன்றவையும் இருக்கின்றன.
அனைத்துச் சமூக மக்களும், இந்தக் கோயில்களில் ஒன்றுகூடி வழிபட்டு, காரிய மேடை, குளம் போன்றவற்றையும் பயன்படுத்தி வருகின்றனர்.
வட மாநிலங்களில் பலத்த மழை இமாச்சல பிரதேச மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன.
மாலை மலர் : வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன.
தொடர் மழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இமாச்சல பிரதேசத்தின் பல மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடமான பர்வானூ என்ற பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மழை வெள்ளத்தில்அடித்து செல்லப்பட்டன. இதன் வீடியோ வைரலாகி பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திங்கள், 10 ஜூலை, 2023
ஈரானில் ஆறு மாதங்களில் 354 பேருக்கு தூக்குத்தண்டனை – திணறும் மனித உரிமைகள் அமைப்புக்கள் !
thesam.net: ஈரானில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளதாக நோர்வேயை தளமாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, இங்கு ஆண்டுக்கு ஆண்டு தூக்கிலிடப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல், போதைப்பொருள் விவகாரத்தில் தூக்கிலிடப்பட்டவர்கள் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட 126 சதவீதமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
உலகின் ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில் ஈரானில்தான் ஆண்டுதோறும் அதிக பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோரை அச்சுறுத்தி ஒடுக்கவே, பெரும்பாலான குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுதாக கவலை தெரிவிக்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
ஹிஜாப் விவகாரத்தில் உலக நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளான ஈரான் தற்போது மரண தண்டனை விவகாரத்திலும் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
மனைவியின் வீட்டை பறித்து தெருவுக்கு துரத்திய வேலுமுருகன் எம் எல் ஏ! . தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் மீது பகீர் குற்றச்சாட்டு
nakkheeran.in : “பாஜக என் மனைவியை வைத்து என்னை முடக்க நினைக்கிறது” - வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு
வேலூரில் நடைபெற்ற திராவிட நட்புக் கழகத்தின் மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்திக்கையில், “இந்தியாவை அமைதியின்மையை நோக்கி நகர்த்துகிறது
பாஜக. தான்தோன்றித்தனமாகத் தன்னிச்சையாகச் செயல்படுகிறார்
ஆளுநர். அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுகிறார். துணிந்து முதலமைச்சர் எடுத்த இந்த முடிவை மனதார வரவேற்றுப் பாராட்டுகிறோம்.
கலைஞர் பேனா சிலை அமைக்க தடை இல்லை! உச்சநீதிமன்றம் அனுமதி
மாலை மலர் :; புதுடெல்லி தமிழ்நாடு தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நினைவாக கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி கொடுத்துள்ளது.
மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து விரைவில் கடலோர ஒழுங்கு முறை மண்டலமும் அனுமதி கொடுக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
பேனா நினைவுச் சின்ன திட்டத்தை ரத்து செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற மனுக்களை பொதுநல மனுவாக ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஸ்டாலின்- அழகிரி சந்திப்பு! ‘அவங்க எப்போ சண்டை போட்டாங்க?’
tamil.indianexpress.com : மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான கலைஞர் அவர்களின் துணைவியார் தயாளு அம்மாவின் 90ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மு.க ஸ்டாலின், மு.க. அழகிரி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சென்னை கோபாலபுரத்தில் அவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார். அப்போது, மு.க. ஸ்டாலினும், மு.க. அழகிரியும் பேசிக்கொண்டார்களா? எனக் கேள்வியெழுப்பினார்கள்.
இதற்குப் பதிலளித்த உதயநிதி, “அவர்கள் எப்போது சண்டைப் போட்டார்கள். அவர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டார்கள்” என்றார்.
தொடர்ந்து, மீண்டும் கட்சிக்கு வருவாரா? என்ற கேள்விக்கு அதெல்லாம் ஏன் கேட்கிறீர்கள்” என்றார். ஆட்சிக்கு ஆபத்துவரக் கூடிய சூழல் நிலவுதா? என்ற கேள்விக்கு அப்படியெல்லாம் எனக்கு தெரியவில்லை; உங்களுக்கு தெரிகிறதா? எனப் பதில் கொடுத்தார்.
பாமக நிர்வாகி நாகராஜன் கொலை- தப்பியோடிய நபரை சுட்டுப் பிடித்த போலீசார் செங்கல்பட்டு
மாலை மலர் : செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நாகராஜனின் உடலை வைத்து போராட்டம். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி நூறுக்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு. செங்கல்பட்டு மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்த பாமக நகர செயலாளர் நாகராஜை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந் செங்கல்பட்டு நகர போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நாகராஜனின் உடலை வைத்து உறவினர்கள், கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி நூறுக்கும் மேற்பட்டோர் கூடியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலலவியது
உடலை வைத்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.
10 உயிர்கள் காவு கொள்ளப்பட்ட மனம்பிட்டி கோர விபத்து .. இலங்கை
hirunews :
hirunews.lk : இலங்கை மன்னம்பிட்டி பேருந்து விபத்து - பலி எண்ணிக்கை மேலும் உயர்வு
பொலனறுவை – மன்னம்பிட்டிய கொத்தலிய பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இந்த விபத்தில் காயமடைந்த 20க்கும் அதிகமானவர்கள் மன்னம்பிட்டிய மற்றும் பொலனறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய பதிவு
பொலனறுவை – மன்னம்பிட்டிய கொத்தலிய பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
யாழ் தேவி தொடருந்து 100 கிலோமீற்றர் வேகத்தில் கொழும்பு யாழ்ப்பாணம் சேவையில்
தமிழ் மிரர் :இலங்கை யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கு இடையில் சேவையில் உள்ள யாழ் தேவி தொடருந்து புதிய வேகத்தில் புதிய தண்டவாளத்தில் வெற்றிகரமான வெள்ளோட்டம்
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹவ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன
புனரமைப்பு பணிகள் இரண்டு கட்டமாக அபிவிருத்தி செயற்திட்டத்தில் வவுனியா – .அனுராதபுரம் வரையில் 48 கிலோமீற்றர் புகையிரத பாதையும் , வவுனியா ஓமந்தை வரையான 13 கிலோமீற்றர் புகையிரத பாதை புனரமைக்கப்பட்டன.
இந்த அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு 91.27 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டிருந்தது .இந்த அபிவிருத்தி செயற்திட்டம் நிறைவுப் பெற்றதை தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தில் 100 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரத்தை இயக்க முடியும் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே இன்று பரிட்சார்த்தமாக யாழ்தேவி புகையிரதம் பயணித்திருந்தது.
ஞாயிறு, 9 ஜூலை, 2023
இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின்படி 1,40,000 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது.
ந. சரவணன் : தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின பிரச்சினையை பொருத்தவரை
அதனை பதிவு செய்யும் நபர்,
அனுகுபவர்களின் மனநிலை, வெளிப்படுத்தும் பாங்கு அதற்கான சூழல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டே அவர்களது பிரச்சினையின் தன்மை பொதுச்சமூகத்தால் அளவிடப்படுகிறது
அல்லது கவனம் பெறுகிறது.
ஏனெனில் அவர்களது பிரச்சினை நேரடியாக வெறும் இடப்பெயர்வு அல்லது புகலிட கோரிக்கை எனும் அளவில் நின்றிடாமல்,
இலங்கை இந்திய அரசியலுறவு, பூகோள அரசியல், தனிநாடு கோரிக்கை ,
விடுதலை அமைப்பு மற்றும் அதன் அதன் தலைமைகள் ,
இந்திய பிரதமர், தமிழ் தேசியம் என ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது.
ஆதலால் அவர்களின்பால் அக்கறையுடன் அல்லது பொதுச்சமூகத்தின் குரலாக நின்று பேசுகிறோம் என்பவர்கள்,
அவர்களது பிரச்சினைய வெறும் உணர்ச்சி அடிப்படையில் பச்சாதாபம் தேடுவதாகவோ,