ராதா மனோகர் : இலங்கையில் 1960 ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திரு அந்தோணி முத்து தலைமையில் இயங்கிய இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் ஆணையாளரால் பதிவு பெற்ற கட்சியாகும்
இதற்கு முன்பு தோழர் இளஞ்செழியன் தலைமையிலான இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் அவசர காலச்சட்டத்தின் அடிப்படையிலேயே தடை செய்யப்பட்டது . அந்த சட்டம் காலாவதியான பின்பு இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதான தடையும் காலாவதியானது
இந்த இடைப்பட்ட காலத்தில் பல இலங்கை திராவிட முன்னேற்ற கழக தோழர்கள் இடது சாரி கட்சிகளிலும் அமைப்புக்களில் இணைந்து விட்டிருந்தார்கள்.
தோழர் இளஞ்செழியன் போன்றோர் பிற்காலத்தில் ஜேவிபியில் ஈடுபாடு கொண்டிருந்தார்
மேலும் பலரை இலங்கை தமிழரசு கட்சி ஈர்த்துக்கொண்டது
குறிப்பாக தோழர் மணவைத்தம்பி இலங்கை தமிழரசு கட்சியோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார்
இந்த இரு இ தி மு காவிற்கும் இடையில் உரசல் உண்டாக்கி திராவிட முன்னேற்ற கழக தோழர்களை உட்கட்சி சண்டையிலேயே காலத்தை கழிப்பதற்கு கோவை மேகேஸ்வர சர்மாவை ஆசிரியராக கொண்ட தமிழரசு கட்சியின் சுதந்திரன் மிக கேவலமான பிரசாரங்களை மேற்கொண்டிருந்தது.
அது மட்டுமல்ல இ தி முக தடையை எதிர்பார்த்து காத்திருந்தது போல எஸ் ஜெ வி செல்வநாயகம் இலங்கை தொழிலாளர் கழகம் என்ற அமைப்பை மலையகத்தில் தொடங்கினர் . ஆனால் சில ஆண்டுகளில் அது இயங்காமல் போனது .
திரு சௌமியமூர்த்தி தொண்டைமானின் அரசியல் பெரும் எழுச்சியை நோக்கி பயணித்ததால் எஸ் ஜெ வி செல்வநாயகத்தின் மலையக அரசியல் காணாமல் போனது.
இலங்கை தமிழரசு கட்சியானது தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் எப்படியோ அப்படித்தான் இலங்கையில் தமிழரசு கட்சி என்று வடக்கு கிழக்கு மக்களை நம்பவைத்து அரசியல் செய்துகொண்டார்கள்
குறிப்பாக அண்ணா கலைஞர் என்ற பெயர்கள் அப்போது தமிழர்களின் அன்றாட பேசுபொருளாக ஒலித்தது.
இதை முழுக்க முழுக்க தங்கள் அரசியல் இலாபத்திற்கு எஸ் ஜெ வி செல்வநாயகம் பயன்படுத்தி கொண்டார்
திராவிட முன்னேற்ற கழகத்தின் தமிழ் தேசிய உரிமை குரலை மட்டுமே பயன்படுத்தி கொண்டனர்
தப்பி தவறியும் சுயமரியாதை சமூகநீதி என்ற சொற்களை தமிழரசு கட்சியினர் உச்சரித்ததே கிடையாது.
இலங்கையில் அரசியல் சாராத பகுத்தறிவு இயக்கம் பரவலாக வளர்ந்து வந்தது
அதையும் கூட இவர்களின் வெறுப்பு அரசியல் காணாமல் ஆக்கிவிட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக