வெள்ளி, 14 ஜூலை, 2023

பெங்களூரு ஐ.டி. நிறுவன எம்.டி வெட்டிக்கொலை - முன்னாள் ஊழியர் சிஇஓ அலுவலகம் புகுந்து வெறிச்செயல் - Aironics Media Private limited

Ceylonmirror.net  - தமிழினி : ஐ.டி. நிறுவன எம்.டி, சிஇஓ அலுவலகம் புகுந்து வெட்டிக்கொலை – முன்னாள் ஊழியர் வெறிச்செயல்
பெங்களூருவில் இணைய சேவை நிறுவனத்திற்குள் வைத்து இரண்டு அதிகாரிகள் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில், இணைய சேவை வழங்கும் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆகியோர், அலுவலகத்திலேயே வாளால் வெட்டிக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெங்களூருவின் அமிர்தஹள்ளி பகுதியில், இணைய சேவை வழங்கும் ஏரோனிக்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் மேலாண் இயக்குநராக பணிந்தர சுப்பிரமணியாவும், முதன்மை செயல் அதிகாரியாக வினுகுமாரும் இருந்து வந்தனர்.


இந்நிலையில் நேற்று அலுவலகத்தில் வாளுடன் நுழைந்த கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டியது. படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில், ஏரோனிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு வினுகுமாரும், பணிந்திர சுப்பிரமணியாவும் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.

அந்த நிறுவனத்தில் வேலை செய்த ஃபெலிக்ஸ் என்பவரே தற்போது இந்த இரட்டை கொலையை செய்துள்ளதும் தெரியவந்தது. ஏரோனிக்ஸ் நிறுவனத்தால், ஃபெலிக்ஸ் பணியாற்றி வரும் நிறுவனம் பாதிக்கப்பட்டதால், இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேக்கின்றனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக