tamil.indianexpress.com : மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான கலைஞர் அவர்களின் துணைவியார் தயாளு அம்மாவின் 90ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மு.க ஸ்டாலின், மு.க. அழகிரி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சென்னை கோபாலபுரத்தில் அவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார். அப்போது, மு.க. ஸ்டாலினும், மு.க. அழகிரியும் பேசிக்கொண்டார்களா? எனக் கேள்வியெழுப்பினார்கள்.
இதற்குப் பதிலளித்த உதயநிதி, “அவர்கள் எப்போது சண்டைப் போட்டார்கள். அவர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டார்கள்” என்றார்.
தொடர்ந்து, மீண்டும் கட்சிக்கு வருவாரா? என்ற கேள்விக்கு அதெல்லாம் ஏன் கேட்கிறீர்கள்” என்றார். ஆட்சிக்கு ஆபத்துவரக் கூடிய சூழல் நிலவுதா? என்ற கேள்விக்கு அப்படியெல்லாம் எனக்கு தெரியவில்லை; உங்களுக்கு தெரிகிறதா? எனப் பதில் கொடுத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக