வெள்ளி, 14 ஜூலை, 2023

கனடிய தமிழ் எம்பி ஜி.ஆனந்தசங்கரிக்கு விசா வழங்க இலங்கை அரசாங்கம் மறுப்பு!

Image result for gary anandasangaree

hirunews.lk  கனடிய தமிழ் எம்பி ஜி. ஆனந்தசங்கரிக்கு விசா வழங்க இலங்கை அரசாங்கம் மறுப்பு!
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரிக்கு இலங்கை அரசாங்கம் விசா வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தொடர்பாக, குறிப்பாக மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் போர் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தாம் மேற்கொள்ளும் பணிகளுக்காகவே விசா மறுக்கப்பட்டதாக ஆனந்தசங்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
சுதந்திரமான பேச்சு, அரசாங்கத்திற்குப் பொருத்தமாக இருக்கும்போது அது அனுமதிக்கப்படுகிறது.


கொடும்பாவிகளை எரிப்பதால், இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான தோல்விகளை சரி செய்ய முடியாது.
வருந்தத்தக்க வகையில், இலங்கை எனது விசாவை மறுத்துவிட்டது.
இது நாம் செய்யும் பணிக்கான பழிவாங்கலாகும்.
எனவே நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கேரி ஆனந்தசங்கரி இலங்கையின் முன்னணி தமிழ் அரசியல்வாதியான வி.ஆனந்தசங்கரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக