திங்கள், 10 ஜூலை, 2023

பாமக நிர்வாகி நாகராஜன் கொலை- தப்பியோடிய நபரை சுட்டுப் பிடித்த போலீசார் செங்கல்பட்டு

மாலை மலர் :  செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நாகராஜனின் உடலை வைத்து போராட்டம். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி நூறுக்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு. செங்கல்பட்டு மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்த பாமக நகர செயலாளர் நாகராஜை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந் செங்கல்பட்டு நகர போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நாகராஜனின் உடலை வைத்து உறவினர்கள், கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
 குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி நூறுக்கும் மேற்பட்டோர் கூடியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலலவியது
உடலை வைத்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.



இந்நிலையில், பாமக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.
தப்பியோடிய கும்பலில் அஜய் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
துப்பாக்கி குண்டு பாய்ந்து காலில் காயமடைந்த அஜய் காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அஜய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக