Vini Sharpana : வியாபாரிகள் பெரும்பாலான
நேரங்களில் கஸ்டமர்களிடம் கனிவோடுதான் நடந்துகொள்கிறார்கள். ஆனால்,
கோபப்பட்டு தாக்குமளவுக்கு போகிறார்கள் என்றால் பிரபலம் செய்த பிராப்ளம்
என்ன என்று சம்பந்தப்பட்டவர்களிடமே விசாரித்தேன்.
நாகர்கோயில் நேசமணி நகரிலுள்ள( ஒலக லெவல் நேசமணி அல்ல) மாவுக்கடையில் வழக்கம்போல் தோசைமாவு கேட்டிருக்கிறார் ஜெயமோகன். புதியமாவு தயாராகவில்லை. பழையமாவுதான் இருக்கிறது. கொஞ்சம் புளிப்பாக இருக்கும் என்று சொல்லித்தான் கொடுத்திருக்கிறார் மாவுக்கடை பெண்மணி. வாங்கிச் சென்றவருக்கு வீட்டில் என்ன டோஸ் விழுந்திருக்குமோ... கோபம் கொப்பளிக்க வந்தவர் திருப்பிக்கொடுத்துவிட்டு காசைக் கேட்டிருந்தால் பிரச்சனை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், மாவுப்பாக்கெட்டை பெண்மணியிடம் தூக்கி வீசிவிட்டு அசிங்கமாகவும்
தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தியதோடு அத்துமீறியிருக்கிறார். தன்
கண்முன்னே தன் மனைவியின் மீது கை வைத்தால் எந்தக் கணவனால்தான்
பொறுத்துக்கொள்ள முடியும்?