சனி, 15 ஜூன், 2019

நிதி அயோக் மூன்று முதல்வர்கள் புறக்கணிப்பு .. மம்தா, . சந்திரசேகர ராவ் . அமிரீந்தர் சிங்

nitiதினமணி : புது தில்லி: பிரதமராக நரேந்திர மோடி மீண்டும்
பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக நிதி ஆயோக் கூட்டம் தில்லியில் இன்று பிற்பகலில் கூடியது.
சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கான முதல்வர் சந்திரசேகர ராவ், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகிய மூன்று பேரும் புறக்கணித்துள்ளனர்.
இவர்களைத் தவிர பிற மாநில முதல்வர்களும், தலைமைச் செயலாளர்களும், மத்திய அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
சுமார் 6 மணி நேரம் நடைபெறவுள்ள இக்கூட்டத்தின்போது, பல்வேறு மாநிலங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக