வெள்ளி, 14 ஜூன், 2019

உதயநிதி பேச்சால் உடைகிறது கூட்டணி? நாங்குனேரியில் காங்கிரஸ் தனித்து போட்டியா?

வெப்துனியா :சமீபத்தில் திமுக கூட்டம் ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின், 'நாங்குனேரி தொகுதியை திமுகவுக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும், அதேபோல் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்கிவிட்டு திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும் கூறினார்.  தேர்தல் நேரத்தின் போது கட்சி தலைவர்கள் பேச வேண்டிய சென்சிடிவான   விடயத்தை . உதயநிதி தனது சிறுபிள்ளை தனமான பேச்சால் சொதப்பி உள்ளார்  என்று பலரும் கருதுகின்றனர். ராதாரவி விடயத்திலும் இப்படித்தான் தூக்கி எறிந்தமை  அரசியல் முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது.
காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதியை திமுக கேட்பது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது என்று பொங்கி எழுந்துள்ள தமிழக காங்கிரஸ், டெல்லி தலைமைக்கு நாங்குனேரி தொகுதியை திமுகவுக்கு விட்டுக்கொடுக்க சம்மதிக்க கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறது.

ஒருவேளை திமுக நாங்குனேரியில் போட்டியிட்டே தீர்வது என்று முடிவு செய்தால் காங்கிரஸ் தனித்து நின்று தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற குரலும் தமிழக காங்கிரஸார் இடையே வலுத்து வருகிறது இந்த ஒரே ஒரு தொகுதியால் ஏற்பட்ட மனக்கசப்பால் திமுக-காங்கிரஸ் கூட்டணியே உடையும் ஆபத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவொரு சிறிய பிரச்சனை என்றும் ராகுல்காந்தி-ஸ்டாலின் சந்திப்பு நடந்தால் இந்த பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டுவிடும் என்றும் திமுகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக