சனி, 15 ஜூன், 2019

மேற்கு வங்க மாநிலத்தின் மொழி அடையாளம் சமரசம் செய்ய கூடியது அல்ல .. மம்தா

மம்தா : மேவங்கத்தில் இருக்கும் வட இந்தியர்கள் இனி வங்க மொழிதான் பேச வேண்டும்.
மே வங்கத்தில் உள்ள வங்கமொழி பேசாதவர்கள் பெரிதும் பாஜகவின் ஆதரவாளர்களாக மட்டுமல்லாது அவர்கள் இந்தி இந்து என்ற அடையாளம் பரப்பிகளாக இருந்ததன் பெறுபேறுதான் இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வங்கமொழி பற்றிய அறிவிப்புக்கு காரணம்.
எந்த நாட்டில் அல்லது மாநிலத்தில் இருந்தாலும் அந்த மண்ணின் மைந்தர்கள் மீது சவாரி செய்யும் எண்ணத்தோடு இருந்தால் உள்ளூர் மக்களின் வெறுப்பை சம்பாதிக்கவேண்டி வரும்.
இது வெறும் மேற்கு வங்கத்திற்கு மட்டும் உரிய விடயம் அல்ல. இதே போன்ற நிலைதான் மகாராஷ்ட்ரத்தில் இருக்கிறது , கர்நாடகாவில் இருக்கிறது .. இன்னும் பல மாநிலங்களில் இந்த நிலை வேகமாக உருவாக்கி கொண்டிருக்கிறது .
ஆனால் ஊடகங்கள் இது பற்றி பேசுவதில்லை . அவர்களின் நேர்மைத்தன்மை பற்றி புதிதாக கூற வேண்டியதில்லை.
தமிழகத்தில் இருக்கும் பிற மாநில மக்களுக்கு இது ஒரு எசசரிக்கையாக அல்லது படிப்பினையாக இருக்க வேண்டும் .

மாநில மக்களின் உணர்வுகளை மதிக்கவோ ஏற்று கொள்ளவோ முடியாவிட்டால் அவரவர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதுதான் நேர்மை.
ஒவ்வொரு மாநில மக்களுக்கும் தங்கள் அடையாளம் என்பது சமரசம் செய்து கொள்ள கூடியது அல்ல.
ஹிந்தியோ உருதுவோ அரபுவோ அவரவர் குடிபெயரும் மாநிலங்களுக்கு எடுத்து சென்று பரப்பும் செய்கை ஒரு ஆதிக்க விஸ்தரிப்பாகத்தான் மண்ணின் மைந்தர்களால் கருதப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக