மாலைமலர் :
கேரள மாநிலத்தின் மாவேலிக்காரா
மாவட்டத்தில் இன்று பட்டப் பகலில் பெண் போலீஸ்எரித்துக் கொல்லப்பட்ட
சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தின் மாவேலிக்காரா மாவட்டத்திற்குட்பட்ட வல்லிகுன்னம் காவல்
நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வந்த ஒருவர் இன்று பிற்பகல் பணி
முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த ஒருவர் பெண் காவலர் மீது
திடீரென்று பெட்ரோலை ஊற்றி தீவைத்து கொளுத்தினார். இதில் உடல் கருகிய
அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மூன்று குழந்தைகளின் தாயான அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதாக
தெரியவந்துள்ள நிலையில், அவரை விரட்டிவந்து தீயிட்டு கொளுத்திய நபரும்
கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக