சனி, 15 ஜூன், 2019

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலியை வெட்டி சாய்த்துவிட்டு ரயில் முன் பாய்ந்த காதலன்

தந்தி டிவி : சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில், இளம்பெணை அரிவாளால் வெட்டிச்சாய்த்த காதலன், ரயில் முன் பாய்ந்தார். Facebook Twitter Mail கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் இருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு அடுத்த ரயில்நிலையமான சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் அதேபோல மற்றொரு பயங்கரம் நடந்தேறியுள்ளது. தேன் மொழி என்ற இளம் பெண்ணை, சுரேந்தர் என்ற இளைஞர் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில், சரமாரியாக வெட்டியுள்ளார். இதை கண்டு சக பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். தேன்மொழி ரத்த வெள்ளத்தில் சாய்ந்த நிலையில், சுரேந்தர் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடி கொண்டிருந்த தேன்மொழி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், சுரேந்தர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் இருவரும், காதலர்கள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக