மின்னம்பலம்: கூலிப்படை
மூலம் தன்னைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள
மம்தா பானர்ஜி, சாவுக்குத் தான் அஞ்சவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வரும் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இயங்கிவருகிறார். இதற்காக பல்வேறு தலைவர்களிடமும் அவர் பேச்சு நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று (மே 11) மாலை ‘ஜி 24 கண்டா’ என்ற வங்க ஊடகத்துக்கு மம்தா பேட்டியளித்திருந்தார். அப்போது, “ என்னைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அரசியல் கட்சி என்னைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளது என்பது எனக்குத் தெரியும். என்னைக் கொலை செய்யும் பணி கொடுக்கப்பட்டு உள்ள நபர்கள் என்னுடைய வீடு, அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளை எல்லாம் உளவு பார்த்துவிட்டார்கள்.
கலிகட் பகுதியில் உள்ள வீட்டை மாற்றுமாறு எனக்கு போலீசார் பலமுறை அறிவுரை வழங்கினர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். இறப்பதற்கு நான் பயப்படவில்லை. பாதுகாப்புடன் நான் வாழ்ந்தால், மக்களுக்கும் எனக்குமான தூரம் அதிகரித்துவிடும்” என்று தெரிவித்தார்.