வெள்ளி, 11 மே, 2018

பழம்பெரும் நடிகர் நீலு ( நீலகண்டன்) உடல்நலக் குறைவால் காலமானார்

பழம்பெரும் நடிகர் நீலகண்டன் உடல்நலக் குறைவால் சென்னையில் மரணம்தினத்தந்தி: சென்னை, பழம்பெரும் நடிகர் நீலகண்டன் (வயது 82) என்கிற நீலு உடல்நலக் குறைவால் சென்னையில் மரணமடைந்தார். மேடை நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்து உள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார். நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று மாலையில் மரணம் அடைந்தார்.
மறைந்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் நீலு, தனது காமெடியால் பலரையும் கலக்கியவர். அதைத் தாண்டி அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் விமர்சகராகவும் இருந்துள்ளார். பழம்பெரும் நடிகர் நீலு இன்று மரணமடைந்தார். நாடகம் மூலம் திரைப்பட நடிகரான அவர், ஆயிரக்கணக்கான நாடகங்கள், 160 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காமெடி நடிப்பில் தனக்கென்று தனி பாணியை வைத்துக் கொண்டு, பலரையும் கவர்ந்தவர். இயல்பாகவே நகைச்சுவையாக பேசக் கூடியவர். காமெடி நடிகர் மொட்டை பாஸ்கி ஒருங்கிணைப்பாளராக இருந்த சன் நியூஸ் தொலைக்காட்சியின் என் வழி டோணி வழி நிகழ்ச்சியிலும் நீலு பங்கேற்றார்.
அதேபோல் கிரிக்கெட் தொடர்பான பல டிவி நிகழ்ச்சிகளிலும் நீலு பங்கேற்றிருந்தார். இவற்றில் கிரிக்கெட் குறித்து நீலு அறிந்து வைத்திருந்த தகவல்கள், அவருடைய விமர்சனம், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களையே ஆச்சரியப்படுத்தியது.:tamil.mykhel.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக