சனி, 12 மே, 2018

50 ஆண்டுகளாக கட்டி எழுப்பிய மருத்துவ கட்டமைப்பை ....

Ganesh Babu : ஒரு சராசரி இந்திய மனம் எப்படி இயங்கும்?
பார்ப்பனர்கள் எல்லாம் அறிவாளிகள் என நம்பும்,
இறைச்சி உண்டால் படிப்பு வராது என நம்பும்,
இந்துமதம் மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மதம் என்று நம்பும்,
வெள்ளையா இருக்கவன் பொய் சொல்லமாட்டான் என நம்பும்,
குடும்பம், பிள்ளைக்குட்டி இல்லாத தலைவர்கள் பெரும்பாலும் யோக்கியர்களாகத்தான் இருப்பார்கள் என நம்பும்,
CBSE மட்டும்தான் தரமான பாடத்திட்டம் என நம்பும்,
ஊழல்தான் இந்நாட்டின் ஆகப்பெரிய பிரச்சனை என்று நம்பும்,
'இப்போ எல்லாம் யார் சார் சாதி பாக்குறது?' என்றக் கேள்வியை நியாயமென நம்பும்,
Salute to Indian Army, Pray for Paris/Syria/Israel என்று முகநூல் photoframeஐ கும்பல் கும்பலாக மாற்றுவதே மிகப் பெரிய சமூகப்புரட்சி என நம்பும்,
குடும்பத்தோடு கிளம்பிச் சென்று காப்பி அருந்தும் சிறிதுநேரத்தில் அந்த ஒரு அமர்விலேயே தனக்கான வாழ்கைத் துணையை தேர்ந்தெடுத்துவிடமுடியும் என்று நம்பும்,
இந்த அமைப்புமுறை, சமூகம் எல்லாவற்றையும் அப்படியே வைத்துக்கொண்டு ஒரேயொரு மனிதர் தேவதூதரைப் போல ஆட்சிக்கு வருவதன்மூலம் நாடு நிமிர்ந்துவிடும் என்று நம்பும்,

இட-ஒதுக்கீடு பற்றியோ, இந்தியாவின் சமூகநீதி வரலாற்றைப் பற்றியோ எதுவுமே தெரியாமல், தன் சிறிய அனுபவத்தில் தான் பார்த்த ஒரு ஏழை பார்ப்பன குடும்பத்தையோ, ஒரு மேல்தட்டு தலித் குடும்பத்தையோ அடிப்படையாக வைத்துக்கொண்டு இட-ஒதுக்கீடு ஏழைகளுக்கு எதிரானது என்று நம்பும்,
50ஆண்டுகளாக தமிழ்நாடு போன்ற ஒரு பெரிய மாநிலத்தின் மருத்துவக் கட்டுமானத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டியெழுப்பிய சமூகநீதி அரசியலை புறந்தள்ளிவிட்டு, மருத்துவத்துறையில் புரட்சி செய்ய NEET போன்ற ஒரு Choose the best answer தேர்வுமுறையே போதுமானது என நம்பும்.
இப்படி பலவற்றை நம்பும். நம்பி நாசமாய்ப்போகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக