ராஜ்ப்ரியன் .nakkheeran.in :
திருவண்ணாமலை நகரம், அய்யங்குளத்தெருவில் இந்தியன் வங்கி எதிரே கிப்ட் ஷாப்
மற்றும் மொபைல் ரீசார்ச் கடை உள்ளது. இந்த கடையில் டிசம்பர் 29ந்தேதி
மாலை 5.30 மணியளவில் கடைக்குள் இருந்தவரை இரண்டு பேர் கடைக்குள் புகுந்து
அடித்துள்ளனர். அந்த இளைஞர் வெளியே ஓடிவர, வெளியே நின்றிருந்த இரண்டு பேர்
மடக்கி சரமாரியாக கழுத்திலேயே வெட்டி கொன்றுவிட்டு இரண்டு இருசக்கர
வாகனத்தில் 5 பேர் எஸ்கேப்பாகினர்.
; கொலை செய்யப்பட்ட நாகராஜ், சென்னையில் பணியாற்றும்போது, சென்னை எம்.ஜீ.ஆர் நகரில் குடியிருந்துள்ளார். அங்கு வசித்தபோது கார்த்திகேயன் மனைவி மஞ்சுளாவை ஆசை வார்த்தை கூறி கள்ளக்காதலியாக வைத்திருந்தார். இதனை கேட்டு அதிர்ச்சியான கார்த்திகேயன் மனைவியை எச்சரித்துள்ளார். அதோடு காவல்நிலையத்தில் புகார் தந்தனர். முதல் முறை எச்சரித்து அனுப்பப்பட்ட நாகராஜ், சில மாதங்கள் அமைதியாக இருந்தவர் மீண்டும் மஞ்சுளாவிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். இதை அறிந்த கார்த்திகேயன், மீண்டும் காவல்நிலையத்தில் புகார் தந்ததன் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.