ஞாயிறு, 30 டிசம்பர், 2018

மோடியின் நிகழ்ச்சியில் கல் வீசி தாக்குதலில் போலீஸ்காரர் மரணம் : உ.பி ல் பதட்டம்

splco/ - ஸ்பெல்கோ : உத்தரப் பிரதேச மாநிலம், காஸிபூரில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏற்ப்பட்ட வன்முறையில் கல்வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார். காஸிபூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு ராஷ்ட்ரீய நிஷாத் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் வந்தனர். >அவர்கள் இடஒதுக்கீடு கோரி போராடி வருவதால் அவர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர், காஸிபூரில் இருந்து பிரதமர் மோடி நிகழ்ச்சியின் போதே பல இடங்களில் தடுத்து நிறுத்தினர். மேலும், வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.>இதுகுறித்த தகவலின்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போலீஸார் மீதும் கற்கள் வீசப்பட்டன. இதில் காவலர் சுரேஷ் வத்ஸ் என்பவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ராஷ்ட்ரீய நிஷாத் கட்சியினர் 15 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கல்வீச்சு தாக்குதலில் பலியான காவலர் சுரேஷ் மனைவிக்கு ரூ.40 லட்சமும், பெற்றோருக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். கல்வீச்சுத் தாக்குதலில் தொடர்புடையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
புலந்த்சாஹரில் கும்பல் ஒன்று அண்மையில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை ஆய்வாளர் சுபோத் குமார் சிங் என்பவர் உயிரிழந்தார். இதில் சம்பந்தப்பட்ட பஜ்ரங் அணியின் ஹிந்த்துவ நிர்வாகியை இன்னமும் போலிசார் பிடிக்க முடியமால் திணறி வரும் நிலையில் இந்த    சம்பவத்தை முன்வைத்து, பாஜக மீது எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றன.
மேலும்  கல்வீச்சு தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்திருப்பது உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டது எனவும் போலிசுக்கே பாதுகாப்பு இல்லை எனவும் சமஜ்வாடி கட்சி , மாயாவதி கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அரசை குற்றம் சாட்டுவதால் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக