திங்கள், 31 டிசம்பர், 2018

காராகோரம் ஹைவே .. பாகிஸ்தானையும் சீனாவையும் இணைக்கும் நெடுஞ்சாலை ..


Mahalaxmi :  பாகிஸ்தானிலிருந்து – சீனாவிற்கு செல்லும்,
1300 கிலோமீட்டர் தூர மலைப்பாதை “காரகோரம் ஹைவே”
( Karakoram Highway )… இந்த பெருஞ்சாலை பால்டிஸ்தானில்
உள்ள கில்கிட்டை (gilgit -ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள ஒரு பகுதி )பண்டைக்கால சில்க் ரோடுடன் இணைக்கிறது.
இதில் 806 கி.மீ. பாகிஸ்தான் எல்லைக்குள்ளும்,
மீதி தூரம் சீன எல்லைக்குள்ளும் அமைந்திருக்கிறது….
இந்தப்பாதையை அமைக்க 20 ஆண்டுகள் பிடித்திருக்கிறது.
பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட
உடன்பாட்டின்படி, இதன் பெரும்பாலான செலவு, சீனாவால்
ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
1959-ல் துவங்கிய பணி இருபது ஆண்டுகள் கழித்து
1979-ல் முடிவடைந்திருக்கிறது. அதன் பின்னர் பல சமயம்
பாதை பல இடங்களில் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு,
புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
இந்த பாதையை உருவாக்கும் பணியில் –
நிலச்சரிவுகளாலும், மலையிலிருந்து
சறுக்கி விழ நேர்ந்ததாலும், பணியில் இருக்கும்போதே –
810 பாகிஸ்தானியர்களும், 200 சீனர்களும் தங்கள்
உயிரை இழந்திருக்கிறார்கள்.

காரகோரம் மலைச்சிகரங்களை கடக்கும்போது,
இந்த பாதை சுமார் 15,466 அடி அதாவது 4,714 மீட்டர்
உயரத்தில் செல்கிறது….
உலகத்தின் 26,000 அடி (எட்டாயிரம் மீட்டர்) உயரத்தில்
அமைந்திருக்கும் 5 சிகரங்களை இந்தப்பாதையில்
பயணிக்கும்போது பார்க்க முடியும்….
இதிலிருந்து நெருங்க முடியும்…
இனி – உலகத்தின் மிக அதிசயமான, ஆபத்தான
பாதையில் பயணம் போகலாம் வாருங்கள் …!!!
மீண்டும் ஒரு முறை பாருங்கள். அப்போது தான் அதன் அருமையை உணர முடியும்…
நான் மீண்டும் மீண்டும் பலமுறை பார்த்து விட்டேன்.
இன்னும் பிரமிப்பு அடங்கவில்லை… எப்படித்தான் திட்டம் போட்டு, எப்படித்தான் கட்டினார்களோ…? அதுவும் அவ்வளவு உயரத்தில், செங்குத்தான சிகரங்களில்….!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக