ஒருங்கிணைக்கவே பா.ஜ.வுடன் சிவசேனா கூட்டணி வைத்தது என அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மத்திய அரசை குற்றம்சாட்டி பேசினார்.மஹாராஷ்டிராவில் பா.ஜ., சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.முதல்வராக பா.ஜ.வைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். கூட்டணியில் சிவசேனா இருந்தாலும் மத்திய அரசின் செல்லாதநோட்டு அறிவிப்பு, ஜி.எஸ்.டி. மசோதா , எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றை சிவசேனா கடுமையாக விமர்சித்தும் எதிர்த்தும் வருகிறது.இந்நிலையில் தசரா பண்டிகையையொட்டி மும்பை சிவாஜி பார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் சிவசேனா தலைவர் உத்தவ் பேசியதாவது, இந்துக்களின் ஓட்டுக்களை ஒருங்கிணைக்கவே பா.ஜ.வுடன் சிவசேனா கூட்டணி வைத்ததே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. ஜி.எஸ்.டி.யால் வரி விதிப்பு முறை சீராக உள்ளது என்றனர். எங்கே சீராக உள்ளது. இந்தியாவை விட பாகிஸ்தானில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது.செல்லாத நோட்டு அறிவிப்பை ஆதரிப்பவர்கள் ‛தேசபக்தர்கள்' என அழைக்கிறீர்கள் எதிர்ப்பவர்களை ‛தேசதுரோகிகள்' என அழைக்கிறீர்கள்.
சனி, 30 செப்டம்பர், 2017
கையால் மலம் ரயில்வே -- புல்லெட் ரயில் தேவையா? மோடி அரசை விளாசும் தாக்கரே
ஒருங்கிணைக்கவே பா.ஜ.வுடன் சிவசேனா கூட்டணி வைத்தது என அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மத்திய அரசை குற்றம்சாட்டி பேசினார்.மஹாராஷ்டிராவில் பா.ஜ., சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.முதல்வராக பா.ஜ.வைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். கூட்டணியில் சிவசேனா இருந்தாலும் மத்திய அரசின் செல்லாதநோட்டு அறிவிப்பு, ஜி.எஸ்.டி. மசோதா , எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றை சிவசேனா கடுமையாக விமர்சித்தும் எதிர்த்தும் வருகிறது.இந்நிலையில் தசரா பண்டிகையையொட்டி மும்பை சிவாஜி பார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் சிவசேனா தலைவர் உத்தவ் பேசியதாவது, இந்துக்களின் ஓட்டுக்களை ஒருங்கிணைக்கவே பா.ஜ.வுடன் சிவசேனா கூட்டணி வைத்ததே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. ஜி.எஸ்.டி.யால் வரி விதிப்பு முறை சீராக உள்ளது என்றனர். எங்கே சீராக உள்ளது. இந்தியாவை விட பாகிஸ்தானில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது.செல்லாத நோட்டு அறிவிப்பை ஆதரிப்பவர்கள் ‛தேசபக்தர்கள்' என அழைக்கிறீர்கள் எதிர்ப்பவர்களை ‛தேசதுரோகிகள்' என அழைக்கிறீர்கள்.
ஆளுநர் விடுவிப்பு என்கிற ஆணையின் காரணமாக தப்பித்து விட்டாரா வித்யசாக ராவ்....
Special Correspondent FB Wing :
தற்போது அதிமுக அமைச்சர்கள் ஜெயலலிதா பார்த்த விஷயத்தில் மாறி மாறி
பேசிய நிலையில் ஆளுநர் கூட்டு சதி வெளிப்படுவதால் அவரையும் சேர்ந்து சிபிஐ
மூலம் விசாரிக்க வேண்டும் என்று திமுக செயலை தலைவர் ஸ்டாலின் கூறிய
நிலையில் அதிரடியாக ஆளுநர் ராவ் விடுவிக்கப்பட்டு உள்ளார்
ஜெயலலிதாவின் உடல் நலத்தை அறிவதற்காக 2 முறை அப்பல்லோவுக்கு விசிட் அடித்தார் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசகராராவ்.
இரண்டு முறையும் ராஜ்பவன் அறிக்கை அளித்தது. அதேபோல, மத்திய உள்துறைக்கும் இரண்டு முறை தனது ரிப்போர்ட்டை கவர்னர் அனுப்பி வைத்திருக்கிறார்.
ராஜ்பவனிலிருந்து பொதுமக்களுக்காக வெளியிடப்பட்ட அறிக்கைக்கும், உள்துறை அமைச்சகத்துக்கு வித்யாசகரராவ் அனுப்பி வைத்த அறிக்கைக்கும் நிறைய முரண்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை, மக்களுக்காக கொடுக்கப்பட்ட அறிக்கைக்கு நேர் எதிராக இருப்பதாகவே டெல்லியிலிருந்து தகவல்கள் கசிகின்றன.

தினகரன் 21 எம்.எல்.ஏக்களுடன் அனிதா வீட்டிற்கு சென்று ரூ.15லட்சம் நிதியுதவி !
நக்கீரன் : அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வு காரணமாக மருத்துவம் படிக்கும் வாய்ப்பினை இழந்தார். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோருடன் இன்று மாணவி அனிதா வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர்கள் அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவியையும் வழங்கினர்.
Bigg Boss Finale .. சாருநிவேதா ... மெஸ் அய்யாக்காளால் நிரம்பி வழியும் தேசம்!
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி நான்
பார்க்கவில்லை. ஆனாலும் பிந்து மாதவிதான் வெளியேறி இருப்பார் என்று
நினைக்கிறேன். எஞ்சி இருப்பவர்கள் சினேகன், ஹரிஷ், ஆரவ் மற்றும் கணேஷ்.
இதில் வெல்லப் போவது சினேகன் என்று சினேகனே தீர்மானித்துவிட்டார். அது
அவரது பேச்சிலும் நடை உடை பாவனைகளிலும் தெளிவாக தெரிகிறது. பிரச்சனையில்லை.
;இந்த நான்கு பேரில் ஐம்பது லட்சம் பரிசைப் பெறத் தகுதியானவர் யாரென்று பார்போம்.

;கணேஷ் நூறு நாட்கள் இருந்தவர். போராடியவர். நல்லவர். ஆனால், பரிசை வெல்லத் தகுதியில்லாதவர் என்று நினைக்கிறேன். ஏனென்றால், ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள எல்லோரையும் போலவே இதிலும் பட்டும் படாமலேயே இருக்கிறார். தர்ம ஆவேசம் என்பது அவரிடம் கிஞ்சித்தும் இல்லை. இப்படிப்பட்டவர்களால் சமூகத்துக்குத் தீமையே தவிர நன்மை இல்லை. இப்போதைக்கு சமூகத்துக்கு நன்மை செய்பவர்களை காட்டிலும் எந்தத் தீமையும் செய்யாமல் இருப்பவரே சமூகத்துக்குத் தேவையானவர்.
ஸௌபாக்கியா - முழுக்க முழுக்க மின்சாரத்தைத் தனியார் கைகளில் .. மோடியின் சோப்பு நுரை திட்டங்கள்
வினவு :புதிய திட்டங்கள் – மோடி ஊதித்தள்ளும் சோப்பு முட்டை
“
இந்தியா முழுதும் மின்சார வசதியற்ற மக்களுக்கு 24/7 மின்சாரம் வழங்கும் 16,320 கோடி ரூபாய் மதிப்பிலான சவுபாக்கியா திட்டத்தை ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியான தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த நாளான செப்டம்பர் 25 -ம் தேதி அன்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
புதிய திட்டங்கள் – மோடி ஊதித்தள்ளும் சோப்பு முட்டை “கிராமத்திலோ நகரத்திலோ அல்லது தொலைதூர இடங்களில் இருந்தாலும், ஒவ்வொரு வீட்டையும் இந்த அரசாங்கம் இணைக்கும். இந்த இணைப்பிற்காக ஏழைகள் யாரும் பணம் செலுத்த வேண்டியதில்லை. ஏழைகள் ஒவ்வொருவர் வீட்டிற்கும் அரசாங்கம் நேரடியாக சென்று இணைப்பை வழங்கும். ஒரு ரூபாய் செலவழிக்காமல் கிடைக்கும் மின்சார இணைப்பு இது. இதற்கு 16,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும். ஏழைகள் யாரும் இந்த சுமையை ஏற்கக் கூடாது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.” என்று மோடி தன்னுடைய உரையில் கூறியிருந்தார்.

லென்ஸ் – புரியாத புதிர் – அந்தரங்கத்தைக் காப்பாற்றுவது எப்படி ?
ஆணாதிக்கத்தின் காம நுகர்வு வெறியால் காதலை கண்டு கொள்ளவே இயலாது. உடல் புனிதத்தால் அடிமைப்பட்டிருக்கும் பெண்ணடிமைத்தனம் ஜனநாயகமயமான காதலுக்கு போராடவே வராது.
மூணாறு அருகே அமைதியாக வாழும் யோகன் பேச இயலாத ஏஞ்சலை திருமணம் செய்கிறான். அந்த தம்பதியினர் உறவு கொள்வதை திருட்டுத்தனமாக படம் பிடிக்கும் ஒரு “பிளம்பர்” அந்தக் காட்சி அடங்கிய பென் டிரைவை தொலைத்து விடுகிறான். அந்தப் பென் டிரைவை எடுக்கும் அரவிந்த் இணையத்தில் பதிவேற்றம் செய்கிறான்.
அந்தரங்கம் வெளியான அதிர்ச்சியில் ஏஞ்சல் தற்கொலை செய்கிறாள். யோகனோ மனைவியின் மரணத்துக்கு பழிவாங்கும் பொருட்டு பிளம்பரைக் கொல்வதோடு, அரவிந்தை பொறி வைத்து பிடிக்கிறான். கூடவே அவன் வாயாலே குற்றத்தை வரவழைத்து அனைத்தையும் பதிவு செய்து இணையத்தில் வெளியிடுகிறான். இறுதியில் தற்கொலை செய்கிறான்.

குவைத்தில் 15 இந்தியர்களின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!
தினத்தந்தி : குவைத்தில் 15 இந்தியர்களின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக
குறைக்கப்பட்டு உள்ளது. இதற்கு இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ்
நன்றி தெரிவித்து உள்ளார்.
குவைத்,
குவைத் நாட்டில் பல்வேறு குற்றங்களுக்காக 15 இந்தியர்களுக்கு சமீபத்தில்
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குவைத் நாட்டின் அமீர்
ஷேக் சபா அல் அகமது அல் ஜாபர் அல் சபா, 15 இந்தியர்களின் மரண தண்டனையை
ரத்து செய்து, அதனை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அங்குள்ள 119 இந்திய கைதிகளின் தண்டனை காலத்தையும் அவர் குறைத்து உத்தரவிட்டுள்ளார். இதற்காக இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் குவைத் அமீருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் குவைத் சிறையில் இருந்து விடுதலையாகும் இந்திய கைதிகளுக்கு தாய் நாடு திரும்ப தேவையான வசதிகளை செய்து தருமாறு சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார். HH the Emir of Kuwait has been pleased to commute the sentence of 15 Indian nationals from death to life imprisonment.
— Sushma Swaraj (@SushmaSwaraj) HH the Emir has further directed the reduction in sentence of 119 Indian nationals. /2 — Sushma Swaraj (@SushmaSwaraj) We are grateful to the Emir of Kuwait for this kind gesture./3 — Sushma Swaraj (@SushmaSwaraj)

ஆளுநர் வித்தியாசாகர் மாற்றத்துக்கு எது காரணம்? 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் அல்லது அம்மாவின் கட்டை விரலை பார்த்த சாட்சியம்?
வெப்துனியா :டெல்லிக்கு வித்யாசாகர் ராவ் கொடுத்த அதிர்ச்சி: புதிய ஆளுநர் நியமனத்தின் பின்னணி!
கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தமிழகத்துக்கு முழு நேர ஆளுநர் இல்லாமல் பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநர் வித்யாசாகர் ராவ் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தற்போது தமிழகத்தின் புதிய முழு நேர ஆளுநராக மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டதுக்கு பின்னணியில் பகீர் காரணம் ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருந்த வித்யாசாகர் ராவ் தமிழக சட்டமன்றத்தை முடக்க திட்டமிட்டிருந்ததாக டெல்லிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமும் அவர் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது கடும் கோபத்தில் இருந்ததால் எந்தவித சமாதானத்துக்கும் அவர் உடன்படவில்லை என கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் 18 எம்எல்ஏக்கள் தகுநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் எதிர் கட்சிகளால் ஆளுநரும் விமர்சிக்கப்பட்டார்.
இதனால் தனது பெயர் தேவையில்லாமல் டேமேஜ் ஆவதை விரும்பாத வித்யாசாகர் ராவ் தனது முடிவான தமிழக சட்டமன்றத்தை முடக்குவதை செயல்படுத்திவிடுவார் என அஞ்சி தான் டெல்லி மேலிடம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்... இவரின் கடந்த கால வரலாறு .. ஒரு பார்வை
நக்கீரன :தமிழகத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக அரசியலிலும், தமிழக சட்டமன்றத்திலும் மாநிலத்தின் பொது நலன்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நேரத்தில், தமிழகத்திற்குப் பொறுப்பு ஆளுநர் மட்டுமே நியமிக்கப்பட்டு இருந்ததால், மாநில அரசு நிர்வாகத்தின் ஸ்திரத்தன்மை முற்றிலும் சிதைக்கப்பட்டு, இன்று அனைத்துத்துறைகளிலும் தமிழகத்தின் முன்னேற்றம் தேக்க நிலைமைக்கு வந்துவிட்டது.
"234 சட்டமன்ற உறுப்பினர் பலம் கொண்ட தமிழக சட்டமன்றத்தில், 113 உறுப்பினர்களின் ஆதரவுதான் இருக்கிறது", என்று தேர்தல் ஆணையத்தில், முதலமைச்சரின் அணி சார்பில் வெளிப்படையான பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருக்கின்ற இந்தநேரத்தில், பதவியேற்கும் புதிய ஆளுநர் அவர்கள் அரசியல் சட்டம் அளித்துள்ள பொறுப்புகளையும், கடமைகளையும் தமிழக மக்களின் நலன் கருதி சுதந்திரமாகவும், நடுநிலையோடும் நிறைவேற்றுவார் என்று உளமார நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்
கேரளாவில் இருந்து வரும் திராவிட நாடு முழக்கங்கள்
dravidiankural.com /கேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு
வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், அது
கேரளாவில் இருந்து வருவதை தமிழர்கள் பலர் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு
காண்கின்றனர்.
கேரள மக்கள் திராவிடநாடு என பேசுவதற்கு பின்னால் இருக்கும் செய்தி மிகப் பெரியது. அந்த செய்தியை இந்திய ஒன்றியத்தின் அரசியல் அறிவுஜீவிகள் கொஞ்சம் அதிர்ச்சியோடுதான் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
சோவியத் ரஷ்யா உருவாக்கப்பட்ட போது, உருவாக்கப்படும் முறையில் லெனினுக்கு உடன்பாடில்லை என்று படித்திருக்கிறேன். பிற்காலத்தில், கோர்பசேவ் கொண்டுவந்த சீர்திருந்தங்களை அடுத்து, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, நாடுகள் சோவியத்தை விட்டு விலகி தனிநாட்டை அமைத்துக்கொண்டன. உலகின் மிகபெரிய நாடு, இரண்டு கண்டங்களில் இருந்த நாடு, வல்லரசு நாடு, மிக எளிதாக சிதறுண்டு போனது. இதனை கம்யூனிசத்தின் தோல்வி என பலர் கூறினர். ஆனால் அது கம்யூனிசத்தின் தோல்வி அல்ல, பல நாடுகளை இணைத்து உருவாக்கிய ரஷ்யா அதன் பன்மைத்தன்மைக்கு முக்கியத்துவம் தராமல் இருந்ததால் ஏற்பட்ட தோல்வி அது.

கமல், ரஜினி, விஜய், சிம்பு அப்புறம் எவன் வேண்டுமென்றாலும் வரலாம்
கீற்று : செ.கார்கி :
அனைத்துப் போராட்டங்களுமே யார் ஆட்சி
அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதை நோக்கித்தான் வரலாற்றில் நடந்து
வந்திருக்கின்றது. ஆட்சி அதிகாரம் சாமானிய மக்களை முதன்மைப்படுத்தும்
சித்தாந்திகளின் கையில் இருக்கப் போகின்றதா, இல்லை முதலாளிகளின் நலனை
முதன்மைப்படுத்தும் சித்தாந்திகளின் கையில் இருக்கப் போகின்றதா என்பதை
நோக்கித்தான் அனைத்துப் போராட்டங்களும் கட்டமைக்கப்படுகின்றன. நாம் இயல்பான
போராட்டம் என்று கருதும் போராட்டங்களில் கூட ஒரு வர்க்க அரசியல் ஒளிந்து
கொண்டுதான் இருக்கும். அது அந்தப் போராட்டத்தை முன்னெடுக்கும்
பொதுசமூகத்திற்குக்கூட தெரியாமல் இருக்கலாம். அவர்களின் அரசியல் புரிதல்
அதை அறியச் செய்யாமல் தடுத்துவிடலாம். ஆனால் வர்க்க அரசியலை அது
முதலாளித்துவ வர்க்க அரசியலை முன்னெடுப்பவர்களாக இருக்கட்டும்,
பட்டாளிவர்க்க அரசியலை முன்னெடுப்பவர்களாக இருக்கட்டும் அவர்கள் அறிந்தே
வைத்திருக்கின்றார்கள். போராட்டம் நடத்தும் மக்களை யார் வென்றெடுப்பது
என்பதில் அவர்களுக்குள் ஒரு போட்டி இருந்து கொண்டே இருக்கும்.
வேலூர் ஏ.டி.எம்.,களில் அதிக நீளத்தில் ரூ.500 நோட்டு
dhinamalar : வேலுார், ஏ.டி.எம்.,களில், சரியாக வெட்டப்படாத, 500 ரூபாய்
நோட்டுகள் வந்தன. வேலுார், சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகத்தில், ஸ்டேட் வங்கி, ஏ.டி.எம்., மில் நேற்று முன்தினம் இரவு, ஒருவர் பணம் எடுத்தார். இதில் 500 ரூபாய் சரியான அளவில் வெட்டப்படாமல், ஒரு முனையில் மட்டும் நீளமாக இருந்தது. இதுபோன்ற நோட்டுகள், சத்துவாச்சாரி, வேலுாரில் உள்ள ஸ்டேட் வங்கி, ஏ.டி.எம்.,களில் மட்டும், பலருக்கு வந்தது. வங்கிகள் தொடர் விடுமுறையால், அவற்றை மாற்ற முடியாமல் 20க்கும் மேற்பட்டோர் புலம்பினர். இதற்கு வங்கி நிர்வாகமே காரணம் என அவர்கள் குற்றம்சாட்டினர்.

கார்ப்பரேட் விகடனின் ஹைடெக் அரசியல்!
thetimestamil.com : ரபீக் ராஜா : முதல்வர், துணைமுதல்வர், வனத்துறை அமைச்சர் ஆகியோர், தலைகீழாகத் தரை,
‘நக்கி’ அரசியல் செய்வதாக ஒரு கார்ட்டூன். ‘லங்கா கட்டை உருட்டுவது’
போலவும், “எடப்பாடி ஆட்சியின் கேவலங்கள்” எனவும் ஒரு கட்டுரை, இந்தவார
விகடனில்.
கட்டுரையல்ல அது; வெறுப்பரசியலின்
வெளிப்பாடு; மறைபொருளாக இருப்பதை மேலும் திசைதிருப்புவது; நிலவுடைமை மதிப்பீட்டுடன் கார்ப்பரேட் ஊடகம் எழுதிய வசவு மொழிகள்.
“ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருக்கின்றன”, என்று யாவரும் அறிந்த ஒன்றை, ஒரு வருடமாக ஒட்டுமொத்த ஊடகங்களும் “அசலாக” அலசி அம்பலப்படுத்தவில்லை. “வராது வந்த மாமணியாகிய வனிதாமணியின்” ஆட்சி, ‘பன்னீர், பழனிச்சாமி’ கைகளுக்குப் போனதை, ‘பஞ்சகட்ச மாமா’ விகடன் தாத்தாவால் ஏற்க முடியவில்லை என்பதை, விகடன் பலமுறை வெளிப்படுத்தியே வந்திருக்கிறது.

குஜராத் .. மீசை வைத்ததற்காகத் தலித் இளைஞர் மீது தாக்குதல்!
மின்னம்பலம் : குஜராத்தில் மீசை வைத்திருந்த காரணத்துக்காக இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் தலைநகர் காந்தி நகரிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது லிம்போதரா கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞரான பியுஷ் பர்மார் (24) மற்றும் அவரது உறவினர் டிகன்ட் மகேரியா ஆகியோர் கடந்த 25ஆம் தேதி கார்பா விழாவில் கலந்துகொண்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். அப்போது தர்பார் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் அவர்களைக் கடுமையாக தாக்கியுள்ளனர். தலித் சமூகத்தைச் சேர்ந்த பியுஷ் மீசை வைத்திருந்ததால் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மோடியை மாற்றிவிட்டு புதியவரை நியமிக்க ஆர் எஸ் எஸ் முடிவு?
மின்னம்பலம் : ஆரா : எதிர்ப்பே
இல்லாதவர் என்று கருதப்பட்டு வந்த பிரதமர் மோடிக்கு பாஜகவில் இருந்தே சமீப
நாள்களாகப் புறப்பட்டிருக்கும் எதிர்ப்புகளுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ்.
இருக்கிறதா என்ற கேள்வி தேசிய அளவில் இப்போது விவாதமாகியிருக்கிறது.
முன்னாள் நிதியமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா, தற்போதைய மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை வெளிப்படையாக தாக்கியிருக்கிறார். ‘இந்தியாவைச் சரிவுக்கு இட்டுச் செல்கிறார்கள் மோடியும், ஜெட்லியும்’ என்று சின்ஹா கூற, பதிலுக்கு ஜெட்லி, ‘வேலை தேடும் 80 வயது முதியவர்’ என்று சின்ஹாவைத் தாக்கினார்.
இந்த நிலையில், ஏற்கெனவே மோடிக்கு எதிராக கலகக்குரல் எழுப்பிவரும் பீகார் பாஜக எம்.பியும் பிரபல நடிகருமான சத்ருஹன் சின்ஹா, ‘நாட்டின் தற்போதைய பொருளாதார சூழல் பற்றி மோடி நாட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா : அருண் ஜேட்லியின் தரக்குறைவான, மலிவான கருத்துக்கள்
tamilthehindu : நரேந்திர மோடியின் நடப்பு ஆட்சியின் பொருளாதாரக் கொள்கைகள் மீது கடும்
விமர்சனங்களை பாஜக முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா முன்வைத்ததற்குப்
பதில் அளித்த அருண் ஜேட்லி, “80 வயதில் வேலைக்கு விண்ணப்பம் செய்கிறார்” என்று பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்திருந்தார்.
இது பற்றி பிடிஐ செய்தி நிறுவனம் கருத்து கேட்ட போது யஷ்வந்த் சின்ஹா, “மிகவும் தரக்குறைவான, மலிவான கருத்துக்கெல்லாம் பதில் அளிப்பது எனது மரியாதைக்கு இழுக்கானதாகக் கருதுகிறேன்” என்றார். மேலும் அத்வானியின் அறிவுரையைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டு அவருக்கு இழுக்கு தேடித்தந்துள்ளார் அருண் ஜேட்லி என்றும் கூறினார் யஷ்வந்த் சின்ஹா. அதாவது எதாக இருந்தாலும் பிரச்சினைகளைப் பேச வேண்டுமே தவிர தனிமனித தாக்குதல் கூடாது என்று அத்வானி தனக்கு 1999-ல் அறிவுரை வழங்கியதாகவும் தான் அவ்வப்போது அதனை மீறினாலும் பெரும்பாலும் அவரது அறிவுரையைப் பின்பற்றுகிறேன் என்று அருண் ஜேட்லி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி சிலை ராசி இல்லையாம்! எடப்பாடி பம்மிய மர்மம் - சோதிடர்கள் ஆலோசனை!
மின்னம்பலம் : சிவாஜி விழாவை தவிர்த்த பின்னணி!
“நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறில் மணி மண்டபம் கட்டப்பட்டு அக்டோபர் 1ஆம் தேதி திறப்பு விழாவுக்கு அரசு நாள் குறித்திருக்கிறது. இந்த மணி மண்டப திறப்பு விழா நிகழ்வில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமை வகிப்பார் எனவும், மணிமண்டபத்தை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்துவைத்து, சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

வெள்ளி, 29 செப்டம்பர், 2017
நடிகை தன்ஷிகாவிடம் தனது ஆணாதிக்க வெறியை நிலைநாட்டிய ராஜேந்தர் !
Sukirtha Rani : 'விழித்திரு'
திரைப்பட விழாவில் டி.இராஜேந்தர் தன்ஷிகாவிடம் கேள்வி கேட்பதும் நீ என
ஒருமையில் பேசுவதும் விளக்கம் கொடுக்க முற்பட்ட தன்ஷிகாவைப் பேசவிடாமல்
தடுத்து குரலை உயர்த்தி அவரை அமர வைப்பதும் புடவை உடுத்தாமல் வந்து
சாரி(மன்னிப்பு) கேட்கிறாய் எனக் கலாச்சாரக் கமிஷ்னராய் கருத்து
உதிர்த்ததும் அப்போது இராஜேந்தரின் உடல்மொழியும் ஆணாதிக்கத்தின்
அநாகரிகத்தின் ஆண்திமிரின் உச்சம்..அவர் பேசுவதைக் கண்டிக்காமல்
மேடையிலும் அரங்கத்திலும் அமர்ந்துகொண்டு வெடிசிரிப்புச் சிரித்துக்
கொண்டிருந்தவர்கள் அவரைவிட நாகரிகம் துளியும் அற்றவர்கள்.. மேடையில் ஒரு
பெண்குரலைப் பேசவிடாமல் நெரித்த இவர்களையும் இவர்களின் கீழ்த்தரமான
செயலையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
வடமாநில கிராமங்கள் இப்பொழுதுதான் மின்சார இணைப்பு .. மகாராஷ்டிரா அம்தேலி குக்கிராமம் குதுகலம்!
தினமலர் : மும்பை: சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின் 200 பேர் வசிக்கும்
குக்கிராமத்திற்கு மின்சாரம்,பஸ் வசதி கிடைத்துள்ளதால் அந்த கிராமமே
மகிழ்ச்சியில் உள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் காட்சிரோலி மாவட்டத்தின்
எல்லைப்பகுதியில் உள்ளது அம்தேலி குக்கிராமம் . இந்த கிராமம்
மகாராஷ்டிரம்-தெலுங்கானா மாநிலம் எல்லையில் உள்ளதால் இங்குள்ளவர்கள்
தெலுங்குமொழி பேசுகின்றனர்.
மலைப்பாங்கான பகுதியாக உள்ளதால் தேர்தல் நேரத்தில் மட்டுமே அரசியல்வாதிகள் இங்கு வந்து செல்வர். பின்னர் தோற்றாலும், ஜெயித்தாலும் இந்த கிராமத்தின் பக்கம் அவர்கள் வருவதே இல்லை. நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகியும் மின்சாரம், போக்குவரத்து என அடிப்படை வசதிகள் கூட கிராம மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்து வந்துள்ளது.

புதிய வரி விதிப்பு வீதங்கள் வருகிறது ,,, மக்கழே ரெடியா இருங்க ...
Proposing an exemption of up to Rs 3 lakh, it had suggested that the peak rate of 30% tax apply to those with income above Rs 25 lakh, while those earning Rs 10-25 lakh were to face 20% levy.
Prasanna VK -GoodReturns Tamil : நாட்டின் மறைமுக வரியை முழுமையாக மாற்றி வல்லரசு நாடுகளில் இருப்பதைப் போலச் சரக்கு மற்றும் சேவை வரியான ஒற்றை வரி அமைப்பை இந்தியாவிலும் பல்வேறு பிரச்சனைகள் மத்தியில் அமலாக்கம் செய்தது மோடி தலைமையிலான மத்திய அரசு.
இதன் பாதிப்புகள் இன்னமும் சந்தையில் குறையாமல் இருக்கும் நிலையில், சரக்கு மற்றும் சேவை வரியால் வர்த்தகச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முழுமையாக ஆய்வு செய்து முடிக்காத நிலையிலும், 56 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் வருமானம் மற்றும் கார்பரேஷன் வரி விதிப்புகளான நேரடி வரி விதிப்பை மாற்ற முடிவு செய்துள்ளார் மோடி. நிதியமைச்சகம் நிதியமைச்சகம் நிதியமைச்சகம் தற்போது புதிய வரிச் சட்டத்தை வடிவமைக்கும் குழுவை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளாது என அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதார் , டிஜிடல் . பின் நம்பர் ...தனி நபர் சுதந்திரத்தை மொத்தமாக காவு வாங்கியுள்ளது
savukkuonline.com/; I
dont want to live in a world where everything that I say, everything I
do, everyone I talk to, every expression of creativity or love or
friendship is recorded” – Edward Snowden
ஆம் நாம் செய்யும் செயலும், இருக்கும் இடமும் நாம் அறியாமலேயே தொடர்ந்து கண்காணிக்க படுகிறது, அதை அறியாமல் நாமும் அதற்கு துணை நிற்கிறோம். உண்மை என்னவென்றால் நம்மை பற்றி நாம் தெரிந்து கொண்டிருப்பதை விட அமெரிக்காவில் மவுண்ட் வியூவில் உள்ள ஒரு கணினிக்கு நன்றாக தெரியும். ஒரு கற்பனையான உரையாடல் ஒன்று இன்று நிஜமாகி கொண்டிருக்கிறது
வாடிக்கையாளர் சேவை: Pizza Hut இற்கு அழைத்தமைக்கு நன்றி, உங்கள் ஆதார் என்னை …
வாடிக்கையாளர்: எனக்கு ஒரு…
வாடிக்கையாளர் சேவை: மன்னிக்கவும், தங்களின் ஆதார் என்னை பதிவு செய்யவும்
வாடிக்கையாளர்: Ok, 1234-1234-1234

இந்திய உற்பத்தி திறன் கடும் வீழ்ச்சி- அம்பானி அதானிகளின் வளர்ச்சியோ வளர்ச்சி
பொருளாதார வளர்ச்சிப் பட்டியலில், உலகளவில் இந்தியா ஓரிடம் கீழிறங்கி 40-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
www.splco.me/tamil/karuthukal/karuthu14. : இந்திய பணக்காரர்கள் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக ஹூரன் நிறுவனம் ஆய்வு
நடத்தி வருகிறது. தற்போது 6-ஆவது ஆண்டாக, இந்திய பெரும்பணக்காரர்களின்
பட்டியலை அது வெளியிட்டுள்ளது.
1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்து வைத்துள்ளவர்களை மட்டுமே ஆய்வில் ஹூரன் சேர்த்துள்ளது.
இந்திய பெரும்பணக்காரர்களில் எப்போதும் போல, முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். நடப்பாண்டு அவரது சொத்து மதிப்பு சுமார் 58 சதவிகிதம் வரை அதிகரித்து மொத்த சொத்தின் மதிப்பு 2 லட்சத்து 57 ஆயிரத்து 900 கோடியாக ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் 2016-ஆம் ஆண்டில், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 339 பேர்களாக இருந்தது. அதுவே இந்தாண்டு 617 பேர்களாக அதிகரித்துள்ளது.இதில் எப்போதுமில்லாத வகையில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 287 பேர் புதிதாக 1,000 கோடி ரூபாய் என்ற அளவை தாண்டி பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர். இந்தாண்டு பார்மா மற்றும் எப்எம்ஜிசி துறையைச் சேர்ந்தவர்களின் சொத்து மதிப்பே இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
2017-ஆம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் பார்மா துறையில் இருந்து 79 பேரும், எப்எம்ஜிசி துறையில் இருந்து 63 பேரும் இடம்பெற்றுள்ளனர்.இதில் யோகா சாமியார் ராம்தேவ் நடத்தும் பதஞ்சலியும் அடக்கம் .

தன்ஷிகாவை மேடையில் பண்பற்று பேசிய டி.ராஜேந்தர் ... beep சிம்புவின் அப்பா அல்லவா?
விழித்திரு படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ராஜேந்தர், அந்த படத்தில் நடித்திருக்கும் நடிகை தன்ஷிகாவை மேடையிலேயே விமர்சித்து அழ வைத்தார்.
நடிகர்கள் கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, நடிகை தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் விழித்திரு படத்தை எழுத்தாளர் மீரா கதிரவன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை தன்ஷிகா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ஆனால் டி.ராஜேந்தரின் பெயரை மட்டும் விட்டுவிட்டார். இதனையடுத்து பேச வந்தார் நடிகர் டி.ராஜேந்திர் >அப்போது பேசிய அவர், நடிகை தன்ஷிகாவும் எனது பெயரை மறந்துவிட்டார். தன்ஷிகாவெல்லாம் என்னுடைய பெயரை சொல்லியா நான் வாழப்போகிறேன். ஹன்சிகாவை பற்றியே கவலைப்படாதவன் தன்ஷிகாவை பற்றியா கவலைப்பட போகிறேன். மேடை நாகரீக என்று ஒன்று உள்ளது என்றார். இதனையடுத்து நடிகை தன்ஷிகா டி.ராஜேந்தரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஆனாலும் விடாத ராஜேந்தர் நீ கட்டி வரவில்லை சாரி(சேலை) இப்ப கேட்கிற சாரி(மன்னிப்பு) என விமர்சனம் செய்தார். இதனால் நடிகை தன்ஷிகா மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். வெப்துனியா

திரு.வீரமணி : ரஜினியும் கமலும் பாஜகவுக்கு பாதை போடும் முயற்சியில் மும்மரம் !
ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவதாகக் கூறி பாஜகவுக்கு பாதைபோட முயற்சி செய்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றுவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சந்தேகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை… பகுத்தறிவுவாதி என்பவர் இப்படியென்றால், அவன் இருக்கான் - எல்லாம் அவன் பார்த்துப்பான் என்று சொல்லுகிற ரஜினிகாந்த் ஆட்சி அதிகாரப் பீடத்தில் அமர ஆசைப்படுகிறார். சர்வமும் சர்வேசன் மயம் என்று சொல்லி கடவுளைக் கைகாட்டிவிடுவார். ஆண்டவன் சொல்றான் - அடியேன் செய்கிறான் என்று சுலபமாக சொல்லிவிடுவாரே?
இது தமிழ்நாட்டில் எடுபடுமா? தமிழ்நாட்டுக்காக இதுவரை அவர் என்ன செய்திருக்கிறார்?
அவரின் முதலீடுகள் எல்லாம் எந்த மாநிலத்தில் என்ற கேள்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருக்குமே! இவற்றை எல்லாம் தாக்குப் பிடிக்கும் இயல்பை - திறனைக் கொண்டவரா ரஜினிகாந்த்?
;தமிழ்நாட்டில் 1967 முதல் தி.மு.க ஆட்சியும், அண்ணா பெயரில் அ.இ.அ.தி.மு.க.வும் ஆட்சி நடத்தி வந்துள்ளன. செல்வி ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு, மரணத்தைத் தழுவிய நிலையில் அ.இ.அ.தி.மு.க பிளவுபட்டு, பலகீன நோயால் படுக்கையில் விழுந்துவிட்டது.பா.ஜ.க.வுக்கு வழிவகுக்கவா?
BBC :மும்பை ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு ; 39 பேர் காயம்
மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்திருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை காலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.
மும்பை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்: 22 பேர் பலி (காணொளி)
காலையில் பெய்த கனமழையை அடுத்து, எஸ்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலைய நடை மேம்பாலத்தில் பெருமளவிலான மக்கள் கூட்டம் ஏற்பட்டது.
காலை சுமார் 10.50-க்கு அந்த நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி உடைந்ததால் அதில் இருந்த மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும் விபத்து ஏற்பட்டுவிட்டதாகக் கருதி, அங்கிருந்த பெருமளவிலான மக்கள் தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டபோது, பெரும் பீதி ஏற்பட்டது. அதனால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அதில் படுகாயமடைந்த பலர் கெம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
அதில் 20 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், மேலும் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மொத்தம் 22 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கெம் மருத்துவமனையின மூத்த மருத்துவ அதிகாரி டாக்டர் பிரவிண் பங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் பலருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் உள்ளனர்.
இந்த ரயில் நிலையம்தான், நகரின் இரண்டு முக்கிய ரயில் சேவை தடங்களை இணைக்கிறது
போலந்தின் க்ராக்காவ் - தமிழகத்தின் கீழடி தொல்லியல் ஆய்வுகள்
subashini.thf : மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இந்த வார வியாழன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை.
..இந்திய மத்திய அரசின் தொல்லியல் துறை, மதுரையில் பாயும் வைகைக்கு அருகே உள்ள 293 கிராமங்களில் தொல்லியல் சின்னங்கள் இருப்பதைக் கண்டறிந்தது. பின்னர் கீழடியில் 43 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வாளர் அமர்நாத் என்பவரின் தலைமையில் இங்கு ஆய்வுகள் தொடங்கப்பட்டன. இந்த ஆய்வில் மனித நாகரிகத்தைப் பறைசாற்றும் பல சான்றுகள் கிடைத்தன. பானை ஓடுகளில் கீறப்பட்ட பிராமி எழுத்துக்கள், சுடுமண் உலைகள், சுடுமண் குழாய்கள், சுடுமண் உருவங்கள், சுடுமண் கலங்கள், தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட தாயக் கட்டைகள், அணிகலன்கள் போன்றவை இந்த ஆய்வில் கிட்டின. அதுமட்டுமன்றி செங்கல்லினால் அமைக்கப்பட்ட கட்டிட சுவர்களையும் இந்த அகழாய்வு நமக்குப் புலப்படுத்தியது. அதுமட்டுமன்றி இதே போன்ற அடுப்புக்களும் தமிழகத்தின் அரிக்கமேடு, உறையூர் போன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளன என்பதும் ஒரு பண்பாட்டுக் கலாச்சார ஒற்றுமையை நமக்கு நிறுவும் சான்றாக அமைகின்றது.

தலித் மாணவி அமராவதியின் மரணம் எழுப்பும் கேள்விகள்,, நீதி விசாரணை???
thetimestamil :அன்பு செல்வம்
விருத்தாசலம் வட்டம் அரசக்குழி அருகேயுள்ள முதனை கிராமத்தில் பத்தாம்
வகுப்பு படித்து வந்த தலித் மாணவி அமராவதி (வயது 15) கடந்த வெள்ளியன்று
(22.9.2017) தற்கொலை செய்து கொண்டார். ஊடகங்களில் பெரிதும் பரபரப்பாக
பேசப்படாத செய்தியாக இருந்தாலும் அண்மைக்காலத்தில் கல்விக்கூடம் தொடர்பான
சம்பவங்களால் தற்கொலை செய்து கொள்ளும் தலித் மாணவ – மாணவிகளின் மரணங்கள்
அதிகரித்து வருவதை உணர்த்துகிற ஒரு படுகொலை. தொடர்ந்து நிகழுகிற இது போன்ற
மரணங்கள் பொதுச் சமூகத்தின் வழமையான செய்தியாகவும் மாறிவிட்டதை
அமராவதியின் மரணம் உணர்த்தியுள்ளது. இது குறித்து விசாரிப்பதற்கு நேரில்
சென்றிருந்தோம். உள்ளபடியே அமராவதியின் மரணம் குறித்து பேச பலர்
தயங்கினார்கள்.
முதனை கிராமத்தில் 850 தலித் குடும்பங்களும், 6000 வன்னியர் குடும்பங்களும், சிறிய அளவில் முதலியார்களும் வசித்து வருகின்றனர். அந்த சுற்று வட்டாரத்தில் பறையர்களைக் கொண்ட ஒரே காலனி குடியிருப்பு முதனை தெற்குத் தெரு மட்டும் தான். அமராவதியின் தந்தை முருகன் (மாற்றுத்திறனாளி) சாத்தமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வாட்ச்மேனாகப் பணியாற்றி வருகிறார். அவரது தாயார் செம்பாயி கூலி வேலை செய்பவர். மூன்று பெண்கள் ஒரு ஆண் உட்பட நான்கு பிள்ளைகள். அமராவதி தான் மூத்தவள்.

ஜெயமோகன November 20, 2016 இல் பாஜகவுக்கு செய்த விபசாரம்... / பிரசாரம் !
1. வங்கிசார்ந்த பொருளியலை நோக்கி நம் வணிக உலகை உந்தும். முழுமையாக அது நிகழமுடியாது. ஏனென்றால் இவ்வமைப்பு மிகமிகப்பெரியது. 20 சதவீதம் நிகழ்ந்தாலே அது மிகப்பெரிய லாபம்
2. நோட்டுக்களாகவே தேங்கிய பணம் எவ்வகையிலேனும் புழக்கத்திற்கு வரக்கூடும். அது பொருளியலுக்கு நல்லது
3. கள்ளநோட்டுக்களில் கணிசமான பகுதி இல்லாமலாகும். மீண்டும் அவை வர சில ஆண்டுகளாகும். அதுவரை பொருளாதாரம் தாக்குப்பிடிக்கமுடியும்
4. வரிகொடுக்கப்படாத கள்ளப்பணத்தில் 20 சதவீதமாவது வரிகொடுக்கப்பட்ட பணமாக ஆகலாம். அதுவே இன்றைய சூழலில் மிகப்பெரிய வெற்றி. ஆகவே மிகமிக முற்போக்கான, மிக இன்றியமையாத ஒரு நடவடிக்கை இது. இடதுசாரி அரசுகளே இத்தகைய நடவடிக்கைகளைச் செய்யத் துணியும். அதை ஓர் வலதுசாரி அரசு செய்திருப்பது ஆச்சரியம். அதை இடதுசாரிகள் தெருவுக்கு வந்து எதிர்ப்பது பேராச்சரியம். வரிகட்டுவோருக்கு ஆதரவான நடவடிக்கை
நரேந்திர மோடி வென்று வந்தபின்னர் நான் எப்போதும் மெல்லிய ஐயத்துடனேயே அவரை அணுகிவந்தேன். அவரை எவ்வகையிலும் ஆதரிக்கவில்லை. அவருடைய அரசியல் எழுச்சியின்போதே அந்த ஐயம் நீடித்தது. அவர் பதவிக்கு வந்தால் அவருக்கு எதிரான மனநிலையை தக்கவைக்கவேண்டும் என்று அப்போதே முடிவுசெய்து அதை அன்றே இந்தத்தளத்தில் எழுதவும் செய்திருந்தேன். http://www.jeyamohan.in/92500#.Wc266TVrwdV

ஸ்டாலின் அதிரடி : ஆளுநர்,அமைச்சர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை..
Mayura Akilan" Oneindia Tamil :
சென்னை:
தி.க தலைவர் வீரமணி கூறியது போல ஜெயலலிதா மரணம் பற்றி அமைச்சர்கள் மாறி
மாறி பேசி வருவதால் அனைவரையும் உண்மை நிலை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த
ஆளுநர் முன்வர வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், தி.க. தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசும் போது, ஜெயலலிதா மரணத்தில் அமைச்சர்கள் உண்மை சொல்கிறார்களா, பொய் சொல்கிறார்களா என்பதை கண்டறிய மெய், பொய் கண்டறியும் இயந்திரத்தில் அமைச்சர்களை அனுப்ப ஆளுநருக்கு அவசரம், அவசியமான வேலை உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை கேலி கூத்தாக்கும் வகையில் உள்ள இந்த அமைச்சரவை எவ்வளவு நாள் நீடிக்க வேண்டும் என ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோரின் கேள்வியாக உள்ளது என்று கூறினார்.>இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், தி. க தலைவர் வீரமணி கூறியது மிக சிறப்பான யோசனை என்று கூறினார்.
தமிழக அமைச்சர்களை மட்டுமல்ல, மத்திய அமைச்சர்களையும்,எய்ம்ஸ் மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்கள், ஏன் ஆளுநரையும் கூட உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

திருமா :பொது எதிரியை எதிர்க்க உருவான கூட்டணி.
Bhimraj Gandhi : ஒற்றுமையே வாழ்வு.. இல்லையேல் தாழ்வு..
1. விடுதலை சிறுத்தைகள் தேர்தல் நோக்கில் திமுகவுடன் தற்போது இணையவில்லை. இது பொது எதிரியை எதிர்க்க உருவான கூட்டணி.
2. திமுக வுடன் உறவு சுமுகமாகும் முன்பே திராவிடர் கழகம், தமிழக கம்யுனிஸ்ட் கட்சியுடன் இணைந்து பல நீட் எதிர்ப்பு மற்றும் மாநில சுயாட்சி மாநாடுகளையும் விடுதலை சிறுத்தைகள் செய்துள்ளனர்.
3. விடுதலை சிறுத்தைகளே முன்னிருந்து 'மாநில சுயாட்சி மாநாடு' நடத்த காரணம் மாணவி அனிதாவின் மரணம். அது ஏற்றிய சமூக நீதிக்கான தீயில் பறிபோகும் மாநில உரிமைகளை பற்றி மக்களை விழிப்படைய செய்ய சிறிய கால இடைவெளியில் நடந்த நிகழ்வு அது.
3. நீட் தேர்வின் கொடுமைகளை முன் கூட்டியே கணித்து எதிர்த்தவர் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி. முதலில் ஆதரவு தெர்வித்தோர் திமுகவும் விடுதலை சிறுத்தைகளும்.
4. ஜனவரி மாதம் மாநிலம் தழுவிய நீட் எதிர்ப்பு போராட்டத்தை ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதை திசை திருப்பவே ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரம் அடைய அரசு அனுமதித்தது. முடிவில் அடித்து இனி எப்போராட்டமும் செய்யாதே என எச்சரித்தது.
5. சமீபத்தில் நிகழ்ந்த குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல், இந்த வீடியோவில் திருமா அவர்கள் குறிப்பிடும் உத்திர பிரதேச தேர்தலில் வென்ற யோகி ஆதித்யனாத் மீதும் பெரும் அதிருப்தி கிளிம்பியுள்ளது.
BBC :சிவாஜி மணி மண்டபம்: அரசின் ‘அலட்சியம்’ ஏன்?
மறைந்த பிரபல நடிகர் சிவாஜி
கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தைத்
திறந்துவைக்க தமிழக முதல்வரோ, துணை முதல்வரோ செல்லத் திட்டமிடாமல் செய்தி
மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்துவைப்பார் என்ற அரசின்
அறிவிப்பு ஏமாற்றத்தை அளிப்பதாக சிவாஜி குடும்பத்தினரும், ரசிகர்களும்
தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஏன் பங்கேற்கவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவைத் தொடர்பு
கொண்டு பிபிசி கேட்டபோது, அவர் “இது ஒரு வழக்கமான நிகழ்ச்சி. ரூ.2.8 கோடி
செலவில், முக்கியமான பகுதியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அந்தத்
துறையின் அமைச்சராக நான் அதைத் திறக்கிறேன். அம்மா இருந்திருந்தால் அவர்
விடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்திருப்பார். இப்போது நாங்கள் நேரில் சென்று
திறக்கிறோம்,” என்றார்.