சனி, 30 செப்டம்பர், 2017

தினகரன் 21 எம்.எல்.ஏக்களுடன் அனிதா வீட்டிற்கு சென்று ரூ.15லட்சம் நிதியுதவி !

நக்கீரன் : அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வு காரணமாக மருத்துவம் படிக்கும் வாய்ப்பினை இழந்தார். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோருடன் இன்று மாணவி அனிதா வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர்கள் அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவியையும் வழங்கினர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன் கூறியதாவது, தேர்தல் ஆணையம் நடுநிலையோடு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். இரட்டை இலையை மீட்போம். நாங்கள் தேர்தல் ஆணையத்தோடு வெற்றி பெற்றாலும் அவர்கள் நீதிமன்றத்துக்கு முறையீட்டிற்கு போவார்கள். ஆகையால் இது முடிகிற கதை அல்ல. ஆனால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். இரட்டை இலையை மீட்போம் என்றார். நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக