சனி, 10 ஜூலை, 2010

கலைஞரும் புலிகளுக்கு ஆதரவாக மாகாண சபையைக் கலைக்க வலியுறுத்தினார்

யாழ் உதயன் பத்திரிகைக்கு வரதராஜப்பெருமாள் வழங்கிய பேட்டி: 
வி.பி.சிங் இந்திய இராணுவத்தை மீள எடுப்பதிலேயே அக்;கறை காட்டினார். மாகாணசபையைக் கலைக்குமாறு தூது விட்டார். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களும் புலிகளுக்கு ஆதரவாக இருந்து மாகாண சபையைக் கலைக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். புலிகள் தமிழர்களைக் காப்பாற்றுவார்கள் தமிழர்களின் உரிமைகளை வெல்வார்கள் என்றார். மொத்தத்தில் அன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான வட்டத்திற்குள் ஒரு தீர்வு எந்தக் கோணத்திலிருந்தும் கிடைக்கவில்லை. நியாயமான நடைமுறைச் சாத்தியமான தீர்வுக்காக உழைத்த எங்களுக்குத் துணையாக ஒரு அரசியற் சக்தியும் அன்று இருக்கவில்லை.
அதைவிட எம்மை எதிர்த்தவர்களும் எம்மை அழிக்க முனைந்தவர்களுமே மிக அதிகமாக இருந்தனர்.
நாம், ஈழப்போராட்டத்துக்குப் பதிலாக இந்தியா ஒரு நீதியான தீர்வை ஏற்படுத்தித் தரும் என்பதற்காகவே மாகாண சபை முறைக்கு ஒத்துக்கொண்டோம். ஆனால் நியாயமான தீர்வெதையும் இந்தியாவும் தரவில்லை, இலங்கையும் தரவில்லை.
இலங்கை அரசாங்கமோ புலிகளின் உதவியுடன் எல்லாவற்றையும் மோசமாக சீரழிப்பதிலேயே கடுமையாக இருந்தது. எனவேதான் வேறு வழியின்றி நாங்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போகிறோம் என்பதைச் சொல்ல வேண்டியாயிற்று.
அந்த ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாம் அன்று முன்வைத்த பத்தொன்பது அம்சங்களில் பெரும்பாலானவை இன்றைக்கும் பொருத்தமானவை நீங்கள் இப்போதாயினும் படித்துப் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.

ஜெனிலியா புதுமுக ஹீரோவுக்கு ஜோடியாக ரூ.1 கோடி கேட்டார்

முன்னணி ஹீரோயின்கள் புதுமுகங்களுக்கு ஜோடியாக நடிப்பது சினிமாவில் சாத்தியம் இல்லாத விஷயம். பெரிய இயக்குனரின் படமாக இருந்தால் மட்டுமே அது நடக்கும். சிறு படத்தில் புதுமுகத்துக்கு ஜோடியாக பெரிய ஹீரோயின்களை கேட்டால், மறுத்துவிடுவார்கள். சிலர் அதிக சம்பளம் கேட்டு அதிர வைப்பார்கள். இதில் ஜெனிலியா இரண்டாவது ரகம். வெள்ளித்திரை படம் இயக்கியவர் விஜி. இவர் அடுத்து புதுமுகங்களை வைத்து படம் இயக்குகிறார். இதில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடம். அதனால் அசினிடம் பேசினார். அவர் கால்ஷீட் இல்லை என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ஜெனிலியாவிடம் பேசப்பட்டது.


 ரூ. 1 கோடி சம்பளம் தந்தால் நடிக்கிறேன் என அதிர்ச்சி தந்துள்ளார் ஜெனிலியா. வழக்கமாக ஒரு படத்துக்கு கால்ஷீட் தேதிக்கு ஏற்ப ரூ. 40 லட்சம் வரைதான் ஜெனிலியா சம்பளம் வாங்குகிறார். ஆனால் புதுமுக ஹீரோவுடன் நடிக்க அவர் ரூ. 1 கோடி கேட்டது, அநியாயம். கதையை கேட்காமல், கேரக்டரை கேட்காமல், சம்பளத்தில் மட்டுமே  நடிகைகள் குறியாக இருக்கின்றனர் என புலம்புகிறது அப்பட தயாரிப்பு தரப்பு.

சிங்கள் அரச ஊழியர்கள் தமிழையும் கற்று நாட்டில் சம

இன்னும் ஐந்து வருட காலத்தில் தமிழ் அரச ஊழியர்கள் சிங்களத்தையும் சிங்கள் அரச ஊழியர்கள் தமிழையும் கற்று நாட்டில் சம நிலை தோன்றக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. இதனையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன்.” யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த காலத்தில் இடம்பெற்ற அரசியல் நிலைமைகள் மற்றும் அரசியல் தலைவர்கள் விட்ட பிழைகளினால் இந்த நாட்டு அரசியலில் குழப்பமான நிலைமை ஏற்பட்டதுடன் மொழிப் பிரச்சினையும் காணப்படுகின்றது.
இத்தகைய நிலைமையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இந்த வகையில் நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்கும் போது, பொலிஸ் சேவையில் உள்ள 600 பேர் மட்டுமே தமிழ் தெரிந்தவாகளாகக் காணப்பட்டனர். அன்று சுமார் 1000க்கும் மேற்பட்ட பொலிசார் தமிழ் கற்றிருந்தார்கள்.
அதேபோன்று ஏனைய படையினரும் கூட தமிழைக் கற்று வருகின்றார்கள். கடந்த காலத்தில் இல்லாதவாறு இன்று தமிழும் சிங்களமும் அரச கரும மொழி அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
இச்சந்தர்ப்பத்தில் நான் உங்களுடன் தமிழில் உரையாற்ற முடியாமைக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். கடந்த காலத்தில் தெல்லிப்பளை பகுதியில் நான் வருமானவரி அதிகாரியாகக் கடமையாற்றியுள்ளேன்.
உங்கள் மனதில் இடம்பெற்றுள்ள அரசியல் தலைவர்களான செல்வநாயகம் அமிர்தலிங்கம், தர்மலிங்கம், வி.பொன்னம்பலம் போன்றோருடன் அரசியலில் ஈடுபட்டதுடன் இந்தப் பகுதியிலும் கூட அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டவன் நான்.
இன்று இங்கிருந்து எனது சேவையைத் தொடர்வதில் நான் பெருமகிழச்சி அடைகின்றேன்” என்றார்.

புலிகள், நிதியுதவி மூலம் ஊக்குவித்தவர்க ளில் புலம்பெயர்ந்த

புலம்பெயர்ந்தவர்களின் தார்மீகக் கடப்பாடு
புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை வெற் றிகரமாக முடிந்துவிட்டது. ஆனால் யுத்தத்துக்குப் பிந்திய பிரச்சினைகளுக்கான தீர்வு இன்னும் முழுமை பெறவில்லை.

இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம், மீள்குடியேற்றப்பட்டவர்களின் சீவனோபாயம், இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பனவே அவை. இவற்றுள் மீள்குடியேற்றமும் அது தொடர்பான விடயங்களும் முன்னுரிமை க்கு உரியன.

மீள்குடியேற்றப் படுபவர்களின் வீடுகள் இராணுவ நட வடிக்கையின் போது மோசமாகச் சேதமடைந்து விட் டன. ஒருசில வீடுகள் தப்பிப் பிழைத்திருக்கலாம். மற்றைய வீடுகள் எல்லாம் ஏறக்குறையத் தரைமட்ட மாகிய நிலை. எனவே, மீள்குடியேற்றத்தின் பிரதான பணி வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதாகவே உள்ளது.

மீள்குடியேற்றப்படும் அனைவருக்கும் உடனடியாக வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கக்கூடிய நிலையில் அரசாங்கம் இல்லை. எனினும், இயன்றளவு துரிதமாக வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க வேண்டு மென்பதால் பல நிறுவனங்களின் உதவியுடன் அப்பணியை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

புலம்பெயர்ந்த தமிழர்களும் இவ்விடயத்தில் உதவுவதற்கு முன் வர வேண்டும் என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இவ்வேண்டுகோளை விடுத்த பிரதியமைச்சர் புலம் பெயர்ந்தவர்களின் உதவி கிடைக்குமேயானால் இடம்பெயர்ந்த அனைவருக்கும் ஒரு வருடத்துக்குள் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்க முடியும் எனக் கூறினார்.

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இது ஒரு தார்மீகக் கடமை. இடம்பெயர்ந்த இம்மக்களின் வீடுகள் சிதைந்து சேதமடைந்ததற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களும் ஒருவகையில் பொறுப்பாளிகள் என்பதை இங்கு குறி ப்பிடாதிருக்க முடியாது. நடைமுறைச் சாத்தியமற்ற தனிநாட்டு நிகழ்ச்சி நிரலின் கீழ் புலிகள் நடத்திய ஆயுதப் போராட்டமே தமிழ் மக்களின் சொத்துகள் சேதமடைந்ததற்குப் பிரதான காரணம்.

பிரிவினைப் போராட்டத்தை நிதியுதவி மூலம் ஊக்குவித்தவர்க ளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பிரதான இடம் வகி க்கின்றனர். இவர்கள் வழங்கிய பெருமளவு நிதியுதவியினால் தீவிரமடைந்த பிரிவினைப் போராட்டம் தமிழ் மக்களின் உயிரிழப்புக்கும் உடைமைகளின் அழிவுக்கும் காரணமாகியதே தவிர எந்தவிதமான சாதக விளைவையும் ஏற்படுத்தவில்லை.

எனவே, பிரிவினை யுத்தத்தின் விளைவாக வீடுகளை இழந்து நிற்பவர்களுக்குக் கைகொடுக்க வேண்டிய தார்மீகக் கடப்பாடு புலம்பெயர்ந்தவர்களுக்கு உண்டு. பிரிவினை யுத்தத்துக்கு நிதியுதவி வழங்காதவர்களுக் கும் ‘உடன்பிறப்புகளின்’ துயர்துடைக்கும் கடப்பாடு இல்லாமலில்லை.

மீள்குடியேற்றம் பற்றி விமர்சனம் செய்யும் பாராளும ன்ற உறுப்பினர்கள் விமர்சனத்துடன் தங்கள் பொறு ப்பு முடிந்துவிட்டதெனக் கருதலாகாது. குறைந்த பட்சம், இம்மக்களுக்கு உதவ முன்வருமாறு புலம் பெயர்ந்தவர்களுக்கு வேண்டுகோளாவது விடுக்கலாமே.
தினகரன் தலையங்கம்

உண்ணாவிரதம் முடிவு,ஜனாதிபதி நேரில் பார்வையிட்டபின் விமலின

ஜனாதிபதி நேரில் பார்வையிட்டபின் விமலின் உண்ணாவிரதம் முடிவு

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் விமல் வீரவன்ஸவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் நேரில் பார்வையிட்டார்.

அதையடுத்து விமல் வீரவன்ஸவுக்கு  நீர் அருந்தக்கொடுக்கப்பட்டதுடன் அவர் அம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.

இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு நியமனத்திற்கு எதிராக, கொழும்பு ஐ.நா. செயலகத்திற்கு முன்னால் கடந்த வியாழக்கிழமையிலிருந்து அமைச்சர் விமல் வீரவன்ஸ உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (

ஜாஎல பொலிஸாரினால் கைது,குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் வைத்தியர்

குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் வைத்தியர் கைது

பிறந்து 3 நாள்களேயான குழந்தையொன்றை விற்பனை செய்வதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வைத்திய ஒருவர் நேற்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி 75000 ரூபாவிற்கு குறித்த குழந்தையை விற்பனை செய்வதற்கு அந்த வைத்தியர் முயற்சித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

டபிள்யூ.ஏ.சாந்த லொக்கு பண்டார என்ற வைத்திய அதிகாரியே ஜாஎல பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபராவார்.

குழந்தைகளை விற்பனை செய்வது தொடர்பில் குறித்த வைத்தியருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது

ஆடிப்போன காங்.-'அட்மிஷன் பைல்' தள்ளிவைப்பு!,செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் செல்வம். பின்னர் திருமாவளவனுடன் பிணக்கு ஏற்படவே கட்சியை விட்டு வெளியேறினார்.

இருப்பினும் எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்யவில்லை. தொடர்நது எம்.எல்.ஏ. பதவியை உடும்புப் பிடியாக பிடித்து வைத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகளை விட்டு விலகிய பின்னர் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் அங்கு பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான அவர் சமீபத்தில் கட்சியை விட்டு தூக்கப்பட்டார். இந்த நிலையில் தனது ஆதரவாளர்களோடு காங்கிரஸில் போய்ச் சேர ஆர்வம் தெரிவித்துள்ளார் செல்வம்.டெல்லி சென்ற செல்வம் இதுதொடர்பாக குலாம் நபி ஆசாத்தை சந்தித்துப் பேசினர். இதையடுத்து நேற்றே டெல்லி [^]யில் வைத்து ப.சிதம்பரம் உள்ளிட்டோர் முன்னிலையில் அவர் காங்கிரஸில் சேரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் குழப்பம் ஏற்பட்டது. பிற்பகலில் அவர் சேருவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை.
நேற்றே செல்வம் காங்கிரஸில் சேரவிருந்த நிலையில் திடீரென தள்ளிப் போனதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து கிளம்பிய எதிர்ப்புகளே காரணம் எனக் கூறப்படுகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியி்ல செல்வம் நம்பர் 2 தலைவராக இருந்தபோது பல அடிதடி வழக்குகள், கொலை முயற்சி, கொலை முயற்சி என பல வழக்குகளில் தொடர்பு கொண்டிருந்தார்.

புதிய தமிழகம் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது, புரட்சி பாரதம் பிரமுகர் கொலை செய்யப்பட்டது, வெடிகுண்டு வீச்சு, குண்டர் சட்டத்தில் கைதானது உள்பட பல்வேறு வழக்குகள் பற்றிய மொத்த தகவல்களையும் காங்கிரஸ் கட்சியின் தமிழக பிரிவு டெல்லிக்கு அனுப்பி வைத்து விட்டது.

செல்வம் தொடர்பான கிரைம் பைலைப் பார்த்த டெல்லி தலைமை ஆடிப் போய் விட்டதாம். இதனால் அவசரப்பட்டு முடிவெடுக்க விரும்பாமல் செல்வத்தின் சேர்க்கையை தள்ளிப் போட்டு விட்டனராம்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவோரை தண்டிக்க புது சட்டம்: துரைமுருகன்

பேச்சுரிமை என்ற போர்வையில் வெளிநாட்டு பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசுபவர்களை தண்டிக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் விடுமுறை கால குடும்ப நல நீதிமன்ற துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசுகையில்,

இந்தியாவிலேயே தலைசிறந்த நீதியரசர்களையும், புகழ் பெற்ற வழக்கறிஞர்களையும் தமிழ்நாடு உருவாக்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக செல்வோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தான் நுழைவு வாயிலாக உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 153 புதிய நீதிமன்றங்கள் கட்டப்பட்டுள்ளன. 190 சிவில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிது புதிதாக நீதிமன்றங்கள் கட்டப்படுவதுடன் நீதிபதிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனாலும் வழக்குகள் குறைந்தபாடில்லை. வளரும் சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரிகத்தான் செய்யும்.

சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் 14,160 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு விரைந்து தீர்வு காண்பதற்குத்தான் இந்த விடுமுறை கால நீதிமன்றங்கள் துவக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் சில பேர் வெளிநாட்டு பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேச்சுரிமை என்ற போர்வையில் பேசி வருகிறார்கள். அத்தகைய நபர்களை தண்டிக்க தற்போது சட்டங்கள் உள்ளன. ஆனாலும் அத்தகைய நபர்கள் இனி புதிய சட்டத்தையும் சந்திக்க வேண்டும். இவர்களை தண்டிக்க விரைவில் கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என்றார் துரைமுருகன்.

பதிவு செய்தவர்: வெங்கட்
பதிவு செய்தது: 10 Jul 2010 5:05 pm
இதை முன்னாடிஎசெய்திருக்கலாமே ரொம்ப லேட்
 

மகளை ரூ.4000 க்கு விற்ற பெற்றோர் கைது

வதோதரா : மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 8 வயத மகளை சட்ட விரேதமாக ரூ.4000 ஆயிரத்திற்கு விற்ற பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்மகல், லீலாபென் தம்பதியர் தங்களது மகளை 3 மாதத்திற்கு முன் ரூ.4000 க்கு அவரது மாமாவிடம் விற்றுள்ளனர். அவர்கள் அப்பெண்ணை ரமேஷ்பாய் மற்றும் ரேகா தம்பதிக்கு விற்றுள்ளனர். அவர்கள் அப்பெண்ணை வீட்டு வேலைகள் செய்ய சொல்லி பல்வேறு விதங்களில் துன்புறுத்தி உள்ளனர். அந்த 8 வயது சிறுமி அவர்களிடம் இருந்து தப்பி வந்து, குவாலியர் போலீசில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில் அப்பெண்ணின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிசு கிசு வலையில் தற்போது பலமாக சிக்கியிருப்பவர் தமன்னா.

காதல் கிசு கிசு வலையில் தற்போது பலமாக சிக்கியிருப்பவர் தமன்னா.

அவரையும் நடிகர் கார்த்தியையும் இணைத்துப் பலமாக பேசுகின்றனர். ஆனால் இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை தமன்னா.

இந்த காதல் செய்தி குறித்து அவரிடம் கேட்டால், நான் அனைவரிடமும் நட்புடன் பழகுவேன். அப்படித்தான் கார்த்தியுடனும் பழகி வருகிறேன். மற்றபடி காதல் எல்லாம் இல்லை.

நட்புடன் பழகி வரும் நான் இதுவரை யாரிடமும் காதலில் விழவில்லை. மேலும் எந்த நடிகரையும் நான் காதலிக்கவில்லை. கார்த்தியும் என்னைப் போலவே கலகலப்பாக பேசுகிறார். அதனால் இணைத்துப் பேச ஆரம்பித்து விட்டனர்.

மீண்டும் நான் கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறேன். இது எதேச்சையானது.

மற்றபடி இதில் காதல், ரெக்கமன்டேஷன் எதுவும் இல்லை.

தனுஷுடன் கூட மீண்டும் சேர்ந்து நடிக்கவுள்ளேன். மற்றபடி இது தொழில். வேறு எதுவும் இல்லை என்கிறார் கூலாக.

100 நாட்களைத் தாண்டியுள்ள அங்காடித் தெரு படத்திற்கு மிக

பெரிய டப்பா படம் 25 நாள் ஓடினாலே அமர்க்களமாக விழா எடுக்கும் இக்கால கட்டத்தில் அட்டகாசமாக ஓடி, அமர்க்களமான முறையில் 100 நாட்களைத் தாண்டியுள்ள அங்காடித் தெரு படத்திற்கு மிக மிக அமைதியான முறையில் விழா கொண்டாடியுள்ளனர் படக் குழுவினர்.

சமீப காலத்தில் வந்த விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில திரைப்படங்களில் அங்காடித் தெருவுக்கு முதலிடம் கொடுக்கலாம். இயல்பான கதையோட்டம், சுரீர் என இதயத்தை தொடும் நிஜங்கள், தத்ரூபமான காட்சியமைப்புகள், அழகான கதாபாத்திரங்கள் என நெஞ்சைத் தொடும் வகையில் வந்த படைப்பு அங்காடித் தெரு.

வசந்த பாலன் இயக்கத்தில் உருவான இப்படம் 100 நாட்களைத் தாண்டியுள்ளது. இதையடுத்து படத்தை தயாரித்த ஐங்கரன் நிறுவனம் அமைதியான முறையில் 100 வது நாளை கொண்டாடியது. அதுவும் சென்னையில் அல்ல காஞ்சிபுரத்தில்.

அங்குள்ள ஸ்ரீநாராயணமூர்த்தி தியேட்டரில் நடந்த விழாவில் படத்தின் நாயகன் மகேஷ், நாயகி அஞ்சலி, இயக்குநர் வசந்த பாலன், தயாரிப்பாளர் அருண்பாண்டியன் என படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

அமைதியான முறையில் கொண்டாடியதில் தவறில்லை. ஆனால் நல்ல படங்களுக்கு இந்த அமைதி தேவையில்லை. சற்று ஆர்ப்பாட்டமாகவே இருந்திருக்கலாம்.
பதிவு செய்தவர்: கண்ணன்
பதிவு செய்தது: 10 Jul 2010 4:27 pm
நல்ல படம் .வசந்த பாலனுக்கு பாராட்டுங்கள்.

பதிவு செய்தவர்: ஐயோ இயோ
பதிவு செய்தது: 10 Jul 2010 4:02 pm
சுறா படத்தோட விழ எப்போன்னு சொல்லுங்க ப்ளீஸ்

கும்மிடிப்பூண்டி,இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் பெண் தீக்குளிப்பு

கும்மிடிப்பூண்டி: அகதிகள் முகாமில் பெண் தீக்குளிப்பு

கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்த வெற்றி -ராதிகா தம்பதிகளுக்கு 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

வேலைக்கு சென்று விட்டு வெற்றி இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது மனைவி ராதிகா கணவனுக்கு சாப்பிட சாப்பாத்தி கொடுத்தார். இதனைக் கண்ட வெற்றி, சாப்பிட சாப்பாடு ஏதும் செய்யாமல் சப்பாத்தி செய்து இருக்கிறாயே என்று திட்டினார்.

இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இக்குடும்ப சண்டையால் மனம் உடைந்த அகதிப்பெண் ராதிகா நள் ளிரவில் வீட்டில் எல்லோரும் தூங்கும்போது உடலில் மண் எண்ணை ஊற்றி தீவைத்து கொண்டார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அகதிப்பெண் ராதிகா சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொதுமருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே.பி. யின் 18 கப்பல்களுக்கும் வெளிநாட்டிலுள்ள 500 பெற்றோல் நிரப்பு நிலையங்களுக்கும் வியாபாரத்திற்கும்


கே.பி.யின் பணத்தில் வன்னி மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்கவேண்டும்: சபையில் ரணில
் (கே.பி.் புதிய படங்கள் வெளியாகியுள்ளன)
கே.பி. யின் 18 கப்பல்களுக்கும் வெளிநாட்டிலுள்ள 500 பெற்றோல் நிரப்பு நிலையங்களுக்கும் வியாபாரத்திற்கும் என்ன நடந்துள்ளது. அந்த பணத்தில் வன்னி மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்து இராணுவத்தினருக்கு இப்பலோகம வீடுகளை கொடுக்கவும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார. சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) இருக்கின்றது. எனினும் (ஐ.எம்.எப்.இரண்டு)  மெதல நிதியத்தின் செயற்பாட்டினால் மக்கள் பெரும் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளதுடன் மக்கள் வயிற்றிலும் அடிக்கின்றது என்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி நாள் விவாதத்தில் கலந்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,
வங்கி வைப்பாளர்கள் மூலமே கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வங்கிகளில் கூடுதலான இலாபம் கிடைக்கின்றபோதிலும் அதன் பலனை வைப்பாளர்களோ, கடன் பெற்றோரோ அனுபவிப்பதில்லை, வங்கியில் வைப்பிலிடப்படும் பணத்தில் பெறுகின்ற 50 வீத இலாபத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்கவே போதுமானதாக இருக்கின்றது.
தேசியப்பட்டியலில் இடம் கொடுக்கவில்லை என்பதற்காக என் மீது குற்றம் சாட்டுகின்றனர். அதனையும் நான் ஏலம் போட வேண்டுமோ?
1991 ஆம் ஆண்டே பெரும் சவால்களுக்கு பிரேமதாஸ முகம் கொடுத்தார். வடக்கு கிழக்கில் யுத்தம், குவைட் ஆக்கிரமிப்பு, இலங்கையர்கள் அங்கிருந்து திரும்பியமை, சுற்றுலாத்துறை வீழ்ச்சி, சோவியத்தில் பொருளாதார வீழ்ச்சி இதனால் தேயிலை விலையில் வீழ்ச்சி, ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இவற்றுக்கெல்லாம் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸா முகம் கொடுத்தார் அப்போது ஜப்பான் அரசாங்கமே உதவியது.
அவ்வாறு செய்தபோது 1991 ஆம் ஆண்டு ஐ.நா. விற்கு சென்று முறையிட்டனர். சர்வதேச நாணய நிதியம் மெதல நிதியம் மக்களின் நிவாரணத்தை கழித்துவிட்டது. சாப்பாடு இன்றி மக்கள் வாழ்வதுடன் புலமைப்பரிசில் திட்டத்திற்கு ஒரு சதமேனும் அதிகரிக்கப்படவில்லை. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலையும் நிறுத்த முயற்சிக்கின்றனர்.
பல்கலைக்கழகத்திற்கு 100 கோடி ஒதுக்கப்படுகின்றது. ஐஃபா நிறுவனத்திற்கு 110 கோடி ஒதுக்கப்படுகின்றது. கடனில் அல்ல வெளிநாட்டு வியாபார கடனில் அடிபணிந்துள்ளோம். அடுத்த வருடம் வரி கூடும்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் இப்பலோகம வீடமைப்பிற்கு 75 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு வீட்டிற்கும் 8 இலட்சம் அறவிடுவது ஏன்? அவ்வீடுகளை இராணுவத்திற்கு கொடுத்து கே.பி. பணத்தில் வன்னி ம(க்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு கோருகின்றேன்.
கே.பி. புதிய படங்கள் வெளியாகியுள்ளன)

வடக்குகிழக்கு இணைப்பு,முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது.

வடக்கு கிழக்கை மீண்டும் இணைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. வடக்குகிழக்கு இணைப்பு கிழக்கு முஸ்லிம்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்தக் கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது. இப்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று நாடாளுமன்றில் கூறினார்.

வரவு செலவுத் திட்டம் மீதான நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: அரசமைப்புத் திருத்தம் மேற்கொள் ளப்படும்போது சிறுபான்மை இனம் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் முஸ்லிம்களின் கோரிக்கைகளும் அரசமைப்பில் உள்ளடக் கப்பட வேண்டும்.
குறிப்பாகத் தேர்தல் முறைமை திருத் தப்படும் போது சிறுபான்மை இனம் அதனால் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது.
நிரந்தர அரசியல் தீர்வொன்று எட்டப்படும் போது முஸ்லிம்களின் நலன் அதில் உள்வாங்கப்பட வேண்டும். அவர்கள் பாதிக்கப்படாதவாறே தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா சென்று வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்கான நடவடிக்கையை மேற் கொள்ளுமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கின்றது. இதை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்காது.
கூட்டமைப்பின் இரட்டை நிலைப்பாடு இந்தியாவில் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துவிட்டு இங்கு வந்து முஸ்லிம்களுடன் பேசவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது.
கூட்டமைப்பின் இந்த இரட்டை நிலைப்பாட்டை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் ஏற்காது.
வடக்கு கிழக்கை மீண்டும் இணைக்குமாறு கோரிக்கை விடுக்கும் உரிமை கூட்டமைப்புக்கு இல்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீள் இணைப்புக்கான நடவடிக் கையை மேற்கொள்வார் என்று நாம் நம்பவில்லை.
1987இல் செய்துகொண்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கூட முஸ்லிம்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டன. அவர்களுக்குத் தெரியாமலேயே அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்க புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்ய முற்பட்ட போது கூட அதை நாம் எதிர்த்தோம். அது முஸ்லிம்களைப் பாதிக்கும் என்றோம். எமது கோரிக்கையையும் மீறி ஒப்பந்தம் செய்ததால் நாம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டோம். ஆகவே, முஸ்லிம் சமூகத்துடன் பேசியே எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும். என்றார்.

வகுப்பறையில் மாணவரை நிர்வாணப்படுத்திய ஆசிரியர்

கணித பாட ஆசிரியர் சுந்தர்ராஜன், பாடம் நடத்தும் போது, "ஒன்றில் அரை போனால் எவ்வளவு?' என கேட்டார். மாணவர் உபைது ரஹ்மான் சிரித்துக் கொண்டே, "அரை' என கூறியுள்ளார். வகுப்பில் இருந்த சக மாணவர்கள் சிரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் சுந்தர்ராஜன், உபைது ரஹ்மானின் பேன்ட், சட்டையை சக மாணவர்கள் மூலம் கழற்றினார். ஜட்டியை பாதி அவிழ்த்தபோது, மாணவர் கதறி அழுததால் விட்டுள்ளார். பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவர் உபைது ரஹ்மான், நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறினார். அவரது தாய், இதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார். இதனால் மனம் வெறுத்த மாணவர் உபைது ரஹ்மான், இரண்டு நாட்களாக பள்ளிக்குச் செல்லவில்லை.

நேற்று முன்தினம் (8ம் தேதி) பள்ளிக்குச் சென்ற சக மாணவர்கள், ஆசிரியரை கண்டித்து வகுப்புக்கு செல்லாமல் புறக்கணித்தனர். அவர்களை மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்து வகுப்பறைக்குள் அனுப்பி வைத்தனர். மாணவரை நிர்வாணப்படுத்திய சம்பவம், பிற மாணவர்கள் மூலம் நேற்று வெளியே தெரியத் துவங்கியது. இதைத் தொடர்ந்து, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் முகமது யூனுஸ், ஜெகநாதன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். தகவலறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயலர் முத்துராஜா தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பள்ளி முன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. டி.எஸ்.பி., மூவேந்தன், தாசில்தார் காமராஜ் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பாலசுப்ரமணியத்திடம் விசாரணை நடத்தினர். இப்பிரச்னையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சுந்தர்ராஜன் நேற்று பள்ளிக்கு வரவில்லை. கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில், ஆசிரியர் சுந்தர்ராஜன் நேற்றிரவு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

திலகனின, மம்மூட்டியும் மோகன்லாலும் தன்னை நடிக்க விடாது த

தடை செய்யப்பட்ட டைரெக்டர் வினயனின் படத்தில் நடித்ததை காரணம் காட்டி மெகா ஸ்டார்கள் திலகனின் கலை வாழ்வை குலைக்க  முயற்சி.

மலையாள சினிமாவின் மாபெரும் கலைஞன் திலகன் தற்போது விரக்தியின் விளிம்பில் உள்ளார்.
மம்மூட்டியும் மோகன்லாலும் தன்னை நடிக்க விடாது தடை செய்து உள்ளனர். இந்த மாபியாக்களால் நான் மிகவும் மனமொடிந்து உள்ளேன். தற்கொலை செய்யும் எண்ணமும் எனக்கு வந்துவிட்டது.
விரைவில் அமைச்சர் பேபியின் வீட்டின் முன்பாக நான் தற்கொலை செயவும் கூடும்.
திரையில் கதாநாயகனாக நடிக்கும் மெகா ஸ்டார்கள் நிஜ வாழ்வில் கடைந்த்தேடுத்த அயோக்கியர்களாக இருப்பது ஒன்றும் அதிசயம் இல்லையே?

நீதிமன்ற வளாகத்திற்குள்், மந்திரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் கைது ச

நேற்று நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது மந்திரவாதியொருவர் நீதிமன்ற வளாகத்திற்குள் வந்திருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடத்துமாறும் அரச தரப்பு சட்டத்தரணி நீதிபதியிடம் கோரினார்.

இதையடுத்து முனகமகே டொன் குணவர்தன என்பவர் கைது  செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறும் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டார்.

இதேவேளை, இவ்வழக்கு தொடர்பான ஜூரிகள் சபையின் தலைவருக்கும் ஏனைய அங்கத்தவர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். ஜூரிகள் சபையின் தலைவர் தனக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புகள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவித்ததையடுத்தே இந்த உத்தரவு விடுக்கப்பட்டது.

் 3000இற்கும் மேற்பட்ட சட்டவிரோத கருக்கலைப்பு நிலையங்கள் இயங்கிவருவதா

இலங்கையில் நாளொன்றுக்கு 1000 கருச்சிதைவு..!

நாடளாவிய ரீதியில் இயங்கிவருகின்ற சட்டவிரோதமான கருக்கலைப்பு நிலையங்களினூடாகவும் கருவுறுதல் பற்றிய அறிவின்மை காரணமாகவும் நாளொன்றுக்கு சராசரியாக 1000 கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக அதிர்ச்சித்தகவல் தெரிவிக்கிறது.

நாடளாவிய ரீதியில் 3000இற்கும் மேற்பட்ட சட்டவிரோத கருக்கலைப்பு நிலையங்கள் இயங்கிவருவதாக சுகாதார கல்விச் சபையின் ஊடகத்துறை தலைவர், வைத்தியர் சாந்த ஹெட்டியாராச்சி தெரிவிக்கின்றார். மிகவும் ரகசியமான முறையில் இந்த கிளினிக்குகள் இயங்கிவருவதால் சரியான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

திருமணமாகிய, திருமணமாகாத பெண்களின் கருக்கலைப்பு தொடர்பான போதிய அறிவின்மை காரணமாகவும் பொருளாதார வசதியின்மையினாலேயுமே இப்படியான கருச்சிதைவுகள் இடம்பெறுகின்றன. அதுமட்டுமல்லாமல் இளம்பெண்கள் தவறான முறையில் கருவுறுகிறார்கள். இவர்கள் முறையான பாலியல் கல்வி அறிவின்மையால் முறையற்ற கருச்சிதைவுக்கு ஆளாகின்றனர். அதேபோல் திருமணமான பெண்களின் பொருளாதாரன பிரச்சினை காரணமாக சீரான குடும்பக்கட்டுப்பாடு முறைமை தெரியாமையினாலேயுமே இப்படியான கருச்சிதைவுகளுக்குக் காரணமாகின்றன எனவும் மேலும் தெரிவித்தார் வைத்தியர் சாந்த ஹெட்டியாராச்சி.
-Lakna Paranamanna
www.tamil.dailymirror.lk 

துபாயில் தவிக்கும் தமிழர்கள், பாஸ்ப்போர்ட்டை கொடுத்தாலாவது இவர்கள் தமிழகம் திரும்பிவிடுவார்கள்

தமிழக தலைவர்களுக்கு  துபாயில் தவிக்கும் தமிழர்கள் கண்ணீர் கோரிக்கை

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குற்றாலத்தை சேர்ந்த ஒரு ஏஜெண்ட் மூலமாக சார்சாவில் உள்ள பாகிஸ்தானி நடத்துன் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்திற்கு 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைக்கு சென்றனர்.
ஒரு ஆண்டு வரை சாப்பாடு, தங்குமிடம், சம்பளம் கொடுத்த அந்த நிறுவனம் அதன்பிறகு சம்பளம் கொடுப்பதை நிறுத்திவிட்டது.   சாப்பாடு, தங்குமிடம் மட்டுமே கொடுத்து வேலை வாங்கிக்கொண்டது.
இதில் பலரும் ஊர் திரும்பிவிட்டனர்.  8 பேர் மட்டும் சம்பளமின்றி வேலை பார்த்துவந்தனர்.  ஒரு ஆண்டுக்கு முன்பு சம்பளம் கொடுக்க முடியாது என்று நிறுவனம் அறிவித்த பிறகு இவர்கள் இந்திய தூதரகம் மற்றும் இந்திய நலச்சங்கங்கள் போன்றவற்றில் உதவிகள் கேட்டும் சரியான உதவிகள் கிடைக்கவில்லை.
இறுதியாக 8 பேரும் சம்பளம் கேட்டு நீதிமன்ற படியேறி 4 தினார் சம்பளம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பிறகும் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை அந்த நிறுவனம்.  மேலும் உணவையும் கொடுக்க மறுத்துவிட்டது. 
அதன்பிறகு குடிநீரும் கொடுக்கப்படவில்லை.

உணவுக்கு வழியின்றி ஆள் அரவமற்ற நேரங்களில் அறையில் இருந்து வெளியே வந்து சாலையில் கிடக்கும் பேப்பரை
பொறுக்கி அதனை விற்று இரண்டு தினங்களுக்கு ஒருமுறை மட்டுமே உண்ணும் நிலையில் உள்ளனர்.

இவர்களின் பாஸ்ப்போர்ட்டை கொடுத்தாலாவது இவர்கள் தமிழகம் திரும்பிவிடுவார்கள்.  அதையும் நிர்வாகம் கொடுக்க
மறுப்பதால் நிர்வாகம் கொடுத்த அறையை காலி செய்ய மறுத்து அங்கேயே தங்கி வருகின்றனர்.

ஆகவே தமிழக தலைவர்கள் எங்களின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு இந்திய அரசின் உதவியுடன் சம்பளத்துடன்
பாஸ்போர்ட் கிடைத்து தாயகம் திரும்ப உதவி செய்ய வேண்டும் என்று நக்கீரன் மூலமாக கோரிக்கை வைத்தனர்.

வெள்ளி, 9 ஜூலை, 2010

நித்யானந்தா சொற்பொழிவு ஆற்றுகிறார்.


நித்யானந்தா மீண்டும் சொற்பொழிவு ஆற்றப்போகிறாராம்!

நடிகை ரஞ்சிதா -  நித்யானந்தா வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து  நித்யானந்தா தலைமறைவானார். கர்நாடகா சி.ஐ.டி., போலீசார், ஏப்ரல் 21ம் தேதி இமாச்சல பிரதேசத்தில் கைது செய்தனர். ஏப்ரல் 30ம் தேதி வரை பெங்களூரில் போலீஸ் காவலில் வைத்து விசாரித்தனர்.
ஏப்ரல் 30ம் தேதி நித்யானந்தாவை ராம்நகர் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.தனக்கு ஜாமீன் வழங்க கோரி, நித்யானந்தா, கர்நாடகா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 
’ஒரு லட்சம் ரொக்கம் ஜாமீன், இரு நபர் ஜாமீன், ராம்நகர் போலீஸ் நிலையத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஆஜராக வேண்டும், போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
 தன்னை நிரபராதி என நிரூபிக்கும் வரை ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்த கூடாது’’ என்ற நிபந்தனையின் பேரில் கர்நாடகா ஐகோர்ட்  ஜாமீன் வழங்கியது.

நித்யானந்தாவை ஜாமீனில் விடுவிக்கும்போது விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகளை கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தளர்த்தியுள்ளது.
ஆன்மீக சொற்பொழிவாற்ற விதிக்கபட்டிருந்த தடை  விலக்கப்பட்டதால், வரும் 11-ம் தேதி பெங்களூரில் உள்ள தனது ஆசிரமத்தில் நித்யானந்தா சொற்பொழிவாற்ற உள்ளாராம்.
இதையடுத்து, மூன்று மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக, ஜூலை 11-ம் தேதி மாலை 5 மணிக்கு பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தா சொற்பொழிவு ஆற்றுகிறார். இதில் பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்களாம்.

விஜயசாந்தி வீடியோவை ஆய்வு செய்யும் தேர்தல் ஆணையம்:

ஆந்திராவில் 5 மாவட்டங்களில் உள்ள 12 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 27 ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடைமுறை விதிகளை தேர்தல் கமிஷன் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 30 ந்தேதி தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி எம்.பி. நடிகை விஜயசாந்தி முன்னிலையில் பல்வேறு கட்சி தொண்டர்கள் தெலுங்கானா கட்சியில் சேரும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயசாந்தி தனி தெலுங்கானா மாநிலம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை
கடுமையாக விமர்சித்து பேசினார்.

தெலுங்கானா மாநிலத்தை யார் எதிர்த்தாலும் அவர்களை வெட்டி கொல்வேன் என்று ஆவேசமாக பேசினார்.

இதுபற்றி தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தேர்தல் கமிஷன் விஜயசாந்திக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
அனுப்பியது.

அதில், தேர்தல் விதி அமலில் இருக்கும் போது அதை மீறி வன்முறையை தூண்டும் வகையில் பேசி இருக்கிறீர்கள். உங்கள்
மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? இதற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

மேலும் விஜயசாந்தி வீடு உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதி போலீசுக்கும் விஜயசாந்தி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை
எடுக்கும்படி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதன் படி பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் விஜயசாந்தி மீது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர். அவரை உடனடியாக கைது செய்யவும் முடிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து விஜயசாந்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். கைது செய்யப்பட்ட அவருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக சென்னை வந்த நவீன் சாவ்லாவிடம் இந்த விவகாரம் கேட்டபோது,
‘’ விஜயசாந்தி மீது நடவடிக்கை எடுப்பது பற்றி  8ம் தேதி முடிவு செய்யப்படும்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆந்திர தலைமைத் தேர்தல் அதிகாரி ஐ.வி. சுப்பா ராவ், ஹைதராபாதில் இன்று  இது குறித்து,  ’’பொறுப்புள்ள அரசியல் கட்சித் தலைவர் என்ற நிலையில் உள்ள விஜயசாந்தி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியிருக்கக் கூடாது.
 இது தொடர்பாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவரது பேச்சு அடங்கிய வீடியோ பதிவை தேர்தல் ஆணையம் முழுமையாக ஆராய்ந்து வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

சொற்கள் மிக மிக வலிமையானவை. அவற்றை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள்

சொற்கள் மிக மிக வலிமையானவை. அவற்றை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் பெறாத வெற்றிகள் இல்லை. அவற்றை முட்டாள்தனமாகப் பயன்படுத்துபவர்கள் படாத கஷ்டங்கள் இல்லை. பேச்சையே மூலதனமாக வைத்து நாட்டின் ஆட்சியையே பிடித்தவர்களை நாம் அறிவோம். சரியாகப் பேசத் தெரியாமல் இருப்பதெல்லாம் இழந்தவர்களையும் நாம் நம் தினசரி வாழ்க்கையில் பார்க்கிறோம்.

அந்த அளவு முக்கியமான பேச்சுக் கலை பற்றி வள்ளுவர் பல இடங்களில் விளக்கி உள்ளார். பொதுவாக சில விஷயங்களை அந்தந்த அதிகாரங்களிலேயே விளக்கும் அவர், பேச்சைப் பற்றி பரவலாகப் பல இடங்களில் சொல்கிறார்.

எப்படிப் பேச வேண்டும்? 

மிகவும் பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேச வேண்டும்
www.enganeshan.blogspot.com

நயனதாராவை 2 நிமிட விளம்பரத்திற்காக ரூ. 2 கோடிக்கு புக் செய்துள்ளதாம்.

இதுவரை விளம்பப் படம் எதிலுமே நடித்திராத நடித்திரா நடிகை [^] நயனதாரா [^] முதல் முறையாக நடிக்கப் போகிறார். அதற்காக அவர் வாங்கவுள்ள சம்பளம் ரூ. 2 கோடியாம்.

விளம்பரங்களில் வெளுத்தும் கட்டிய நடிகை முன்பு சினேகாதான். பிறகு ஆசின், திரிஷா [^] என பலரும் களம் இறங்கி கலக்க ஆரம்பித்தனர். ஆனால் நயனதாரா மட்டும் விளம்பரத்திற்கு வரவே இல்லை. தொடர்ந்து வராமல் அவர் தனித்தே நின்றிருந்தார்.

இந்த நிலையில் அவரையும் விளம்பரக் களத்திற்கு வந்து விட்டார். அவராகத்தான் விளம்பர நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாராம். படங்களில் இப்போது சுத்தமாக வாய்ப்பு இல்லாமல் போண்டியாகியுள்ளதால்தான் இந்த மன மாற்றம் என்கிறார்கள்.

தற்போது ஒரு நிறுவனம் நயனதாராவை 2 நிமிட விளம்பரத்திற்காக ரூ. 2 கோடிக்கு புக் செய்துள்ளதாம்.

ஷாப்பிங் வளாகத்தில் சில பொருட்களை திருடியதாக மாட்டி,

பிரபலமான வில்லன் நடிகர் ஒருவரின் முன்னாள் மனைவி மலேசியா [^]வுக்குப் போயிருந்தபோது ஷாப்பிங் வளாகத்தில் சில பொருட்களை திருடியதாக மாட்டி, தப்பித்தோம், பிழைத்தோம் என தப்பி வந்துள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

அந்த நடிகர் தமிழ், தெலுங்கு [^] ஆகிய இரு மொழிகளிலும் பிரகாசமான வில்லன் ஆவார். இவருக்கும், இவரது காதல் மனைவிக்கும் சமீபத்தில்தான் விவாகரத்து ஆனது. அடுத்த கல்யாணத்துக்கும் கூட நடிகர் தயாராகி விட்டார்.

இவரது முன்னாள் மனைவி சமீபத்தில மலேசியா போனார். அங்கு பெரிய ஷாப்பிங் வளாகத்தில் பர்ச்சேஸ் செய்துள்ளார். அப்போது பில்லில் ஏறாத சில பொருட்கள் இவரது கூடைக்குள் எப்படியோ வந்துள்ளன.

இதையடுத்து இவர்தான் அவற்றை திருடியதாக கூறி பிடித்து வைத்துக் கொண்டனர். போலீஸ் வரைக்கும் போகப் போவதாக ஷாப்பிங் வளாக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த அந்த முன்னாள் மனைவி, உடனடியாக தனது மாஜி கணவருக்குப் போன் போட்டுள்ளார். அவரோ செல்போனை ஆப் செய்து விட்டாராம்.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சியான நடிகை, உடனடியாக சென்னையில் உள்ள சில பிரபலங்களுக்குப் போன் போட்டு கதறினாராம். இதையடுத்து அவர்கள் தலையிட்டு நடிகையை அங்கிருந்து மீட்டு அனுப்பி வைக்க உதவினராம்.

பதிவு செய்தவர்: போனிகபூர்
பதிவு செய்தது: 09 Jul 2010 6:51 pm
லலிதாகுமாரிக்கு அப்படி என்ன பண பிரச்சனை. உம் புருஷனுக்கு சொல்லவே வேண்டாம் உன்னை பார்த்தவே பிரகாஷ்ராஜுக்கு ஆகாது. அதிலும் இது வேராய ஏன்டி கொழுப்பு ஏடுது திரியரிக்க. தமிழ்நாட்டு மானத்தை வங்கரிங்காடி சி கேவலமாருக்குது உங்க சைகை.

பதிவு செய்தவர்: jeejix
பதிவு செய்தது: 09 Jul 2010 6:31 pm
மணிரத்னத்தின் அடுத்த ஹீரோ - jeejix.com

வெற்றிக்கூட்டணியில்தான் பாமக எப்போதும் இருக்கும். அதுதான் நாங்க திமுகவோடு?

சென்னை: பாமக மாநிலத் தலைவராக 7வது முறையாக இன்று ஜி.கே. மணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

பாமக தலைமை சிறப்பு பொதுக்குழு கூட்டம் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று நடந்தது. அதில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதில் பாமக மாநிலத் தலைவராக ஜி.கே. மணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன், துணைப் பொதுச் செயலாளராக முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே. மூர்த்தி, பொருளாளராக அக்பர் அலி செய்யது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இளைஞர் அணி தலைவர் அன்புமணி:

மாநில பாமக இளைஞர் அணித் தலைவராக டாக்டர் அன்புமணி தேர்வு செய்யப்பட்டார். இந்த அணியின் செயலாளர்களாக இரா. அருள், அறிவு செல்வன், செந்தில்,சைதை சிவா, பொதுச் செயலாளராக ஞானசேகரன் ஆகியோர் தேர்வாயினர்.

கூட்டத்தில் தமிழில் படித்தவர்களுக்கு மாநில அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்த திமுக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

-தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை டாக்டர் ராமதாசுக்கு வழங்குவது.

-மத்திய அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

-மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்.

-உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்.

-மண்ணெண்ணெய் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். -பெட்ரோலியப் பொருட்கள் மீது மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வரிகளைக் குறைக்க வேண்டும்.

-இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. அமைத்துள்ள 3 நபர் கொண்ட விசாரணைக் குழுவை பாமக வரவேற்கிறது. ஐ.நா. சபையின் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று செயல்படும் இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம். விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி இலங்கை அரசிடம் இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.

-இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் இந்தியா தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கையை தமிழக அரசு உறுதியுடன் வற்புறுத்த வேண்டும்.

-தனியார் பள்ளிகளில் கட்டண சீரமைப்பு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நீதிபதி கோவிந்தராஜன் குழுவினரால் அறிவிக்கப்பட்ட கட்டண விகிதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மாநில அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

-காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு குறித்த சிக்கல் தீர்க்கப்படாத வரை மத்திய மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதனை உடனடியாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கர்நாடக அணைகளில் இருந்து இடைக்கால தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விட வலியுறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 comments:
பதிவு செய்தவர்: avs
பதிவு செய்தது: 09 Jul 2010 6:52 pm
ஒருவாரம இவர்கள் காமடியவே கானமேன்னு பார்த்தேன் ஜி.கே. மணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். திமுக வுக்கு ஒரு அன்பழகன் அதிமுக வுக்கு ஒரு பன்னீர்செல்வம் பாமக வுக்கு ஒரு மனி நாடு வெலங்கும்

பதிவு செய்தவர்: அன்பு
பதிவு செய்தது: 09 Jul 2010 6:41 pm
திமுக காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றிக்கூட்டணி. வெற்றிக்கூட்டணியில்தான் பாமக எப்போதும் இருக்கும். அதுதான் நாங்க திமுகவோடு கூட்டணி சேர்கிறோம்.

உலகின் முதல் முழு முகமாற்று ஆபரேஷன்: பிரான்ஸ் டாக்டர்கள் சாதனை

பாரீஸ்: பிரான்சை சேர்ந்த டாக்டர் லாரண்ட் லான்டியரி உலகிலேயே முதன்முறையாக முழு முகமாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜெரோம் என்ற 35 வயது நபருக்கு இந்த முழு முகமாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஜெரோமின் முகம் மரபணு கோளாறால் அகோரமாக இருந்தது.

இதையடுத்து டாக்டர் லாரன்ட்டை அணுகி தனது முகத்தை மாற்ற ஆபரேஷன் செய்வது குறித்து விவாதித்தார் ஜெரோம். இதையடுத்து டாக்டர் லாரண்ட் தலைமையிலான குழு இறந்து போன ஒருவரின் முகத்தை எடுத்து இவருக்கு பொருத்தி சாதனை படைத்துள்ளது.

இந்த ஆபரேஷன் பாரிஸ் புறநகர் பகுதியில் உள்ள ஹென்றி-மான்டர் மருத்துவமனையில் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் நடந்தது.

இது குறித்து டாக்டர் லாரன்ட் கூறுகையில்,

புதிதாக பொருத்தப்பட்டுள்ள முகம் நோயாளியின் எலும்பு அமைப்போடு ஒன்றிவிடும். ஆபரேஷன் செய்யப்பட்டவர் நன்றாக உள்ளார். மேலும், அவர் தற்போது நன்றாக நடந்து கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறார் என்றார்.

இலங்கை விவசாயிகளுக்கு இஸ்ரேலில் தொழில் வாய்ப்பு

இலங்கை விவசாயிகளுக்கு இஸ்ரேலில் தொழில் வாய்ப்புக்கள் அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
விவசாய அமைச்சர் மஹிந்தயப்பா அபேவர்தனவிற்கும் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
 
இஸ்ரேலுக்கான இந்திய தூதுவர் இட்டாய் தக்னருக்கும் அமைச்சருக்கும் இடையில் பத்தரமுல்லவில் அமைந்துள்ள விவசாய அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
 
இஸ்ரேலில் தொழில் வாய்ப்புப் பெற்றுச் செல்லும் விவசாயிகளுக்கு தலா 1000 அமெரிக்க டொலர் மாதச் சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
 
ஆறு மாத கால ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
 
இவ்வாறு தொழில் வாய்ப்பு வழங்கப்படுவதன் மூலம் இஸ்ரேலில் பயன்படுத்தப்படும் நவீன விவசாய தொழில் நுட்பங்களை இலங்கையில் அறிமுகப்படுத்த வழி ஏற்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த யப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் விடயம் ,தமிழக அரசியல்வாதிகள் கடும் சீற்றமாம்

சிங்கள கடற்படைக்கு எதிராக தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்: பெ.மணியரசன்
மீனவர்களைப் பாதுகாக்கத் தமிழகக் கடலோரக் காவல் பொறுப்பை ஐ.நா. சபை ஏற்கவேண்டும். இல்லையேல் சிங்கள கடற்படைக்கு எதிராக தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் கூறியுள்ளார்.
இதுகுறத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கொலை செய்த எண்ணிக்கை 7.7.2001 இரவுடன் 451 ஆக உயர்ந்துள்ளது. வேதாரணியம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர் பன்னாட்டுக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கொல்லப்பட்டார்.

சிங்களக் கடற்படையினர் அப்படகுக்குள் சென்று கம்பி, தடி, கயிறு ஆகியவற்றால் படகில் இருந்த மீனவர்கள் செல்லப்பன், காளியப்பன், செல்வராசு திருவன் புலம் ஆகியோரைத் தாக்கியுள்ளனர்.

அத்தாக்குதலில் செல்லப்பன் இறந்தார்.மற்ற மூவர் காயமடைந்தனர். இதற்கு முன்னால் கடந்த ஆண்டுகளில் துப்பாக்கியால் சுட்டு 450 தமிழக மீனவர்களைச் சிங்களப் படையினர் கொன்று விட்டனர்.

இன்னொரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த முருகேசன் அறிவழகன், சின்னப்பூ, இளையராஜா ஆகிய நால்வரையும் இரும்புக் கம்பியால் தாக்கி விட்டு, அவர்கள் நால்வரின் உடைகளைக் களைந்து அவற்றைக் கடலில் வீசி விட்டனர்.

பன்னாட்டுக் கடலில் மீன் பிடிப்பதைத் தடுக்க சிங்களப் படைக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த பேரவலம் பல்லாண்டுகளாகத் தொடர்கிறது.காரணம், தமிழக மீனவர்கள் அயல்நாட்டுப் படையினரால் கொல்லப் பட்டாலோ,அவர்களின் மீன்களையும் மீன் பிடி வலைகளையும் கடலில் வீசினாலோ அவர்களை அம்மணப்படுத்தினாலோ அந்த அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தி, பாதுகாப்புக் கொடுக்க தமிழருக்கென்று இறையாண்மையுள்ள ஓர் அரசு இல்லை.

இந்தியாவுக்குள் தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழகத்தின் இயற்கை வளங்களையும்  தமிழர்களின் உழைப்பையும் சுரண்டுவதற்கு மட்டுமே இந்திய அரசு தமிழ்நாட்டைப் பயன்படுத்திக் கொள்கிறது. தமிழர்களின் பாதுகாப்புக்கு அது பொறுப்பேற்பதில்லை.

தமிழகத்தில் உள்ள மாநில ஆட்சியாளர்கள் இந்திய அரசுக்குக் கங்காணி வேலை பார்த்து, தங்களின் பதவி மற்றும் பணப் பசிகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க உருப்புடியான, உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் ஒப்புக்குக் கண்டனம் தெரிவிப்பதும் கடிதம் எழுதுவதும் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை 451 அப்பாவி மீனவர்களை சிங்கள நாட்டுக் கப்பற்படை கொன்று விட்டது. இனியும்  இந்த மனித அழிவு நடைபெறாமல் தடுக்க ஐ.நா. சபை தலையிட்டு, தமிழகக் கடலோரக் காவலை அது தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து தமிழக மீனவர்கள் தங்களின் தற்காப்பிற்கு ஆயுதம் ஏந்தவேண்டும். இந்த இரண்டு வழிகளைத் தவிர தமிழக மீனவர்களைக் காக்க வேறு வழி தமிழர்களுக்கு விட்டு வைக்கப்படவில்லை. ஐ.நா சபை உடனடியாக தலையிடுமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Comments:
தமிழகத்தில் மீண்டும் கோமாளிகள் கும்மாளம் ஆரம்பம். அதாவது சோர்ந்து போயிருந்த சகல புலி ஆதரவு அரசியல்வாதிகளும் மீனவர்களுக்காக நீலிக்கண்ணீர் நாடகத்தை அரங்கேற்றியாவது தங்கள் அரசியல் இருப்பை வெளிப்படுத்தும் அங்கலாய்ப்பு தான் இது. இவர்களின் வீராவேசத்தை நம்பியே முள்ளிவாய்க்கால் வரை மக்களை கொண்டுபோய் நிறுத்தியது ஒரு முட்டாள் கூட்டம். போதும் அய்யா பொது அய்யா பேசாம நல்ல வடிவேலு படமா பார்த்து விட்டு போங்க. ம்ம்ம் இப்ப மட்டும் என்ன பண்ணறீங்க வெறும் வாய்ப்பந்தல் தானே. அதென்னங்கட உங்களாலே வெளிநாட்டு வெங்காயங்களை மட்டும் இன்னும் அல்வா தின்ன வைக்க முடிகிறது?

வீரவன்ஸவின் பதவி விலகல் கோரிக்கை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.


அமைச்சர் விமல் வீரவன்ஸ தாம் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக கூறி ஜனாதிபதிக்கு இன்று அனுப்பிய கடிதத்தை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
விமல் வீரவன்ஸ உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக முன்னால் இடம்பெறும் செய்தியாளர் மாநாட்டின் போது, இந்த தகவலை தேசிய சுதந்திர முன்னணி மத்திய குழு உறுப்பினர் ஜெயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவை கலைக்கக் கோரி விமல் வீரவன்ஸ சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், தமது போராட்டத்திற்கு அமைச்சு பதவி பாதகமாக அமைந்துள்ளமையை கருத்திற்கொண்டு, தாம் பதவி விலகும் முடிவை எடுத்துள்ளதாக விமல் வீரவன்ஸ ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள  தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்

முள்ளந்தண்டிலிருந்த துப்பாக்கி ரவையை நீக்கிய சாவகச்சேரி வைத்தியர்கள்.

முல்லைத்தீவு வலைஞர் மடப்பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்ற மோதலின் போது துப்பாக்கி ரவை பாய்ந்து காயமடைந்த பெண் ஒரு வருடத்திற்கு மேலாக பெரும் கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமை சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த இப்பெண்ணுக்கு உடனடியாக வைத்தித்தியர்களால் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு ரவை அகற்றப்பட்டது. நாவற்குழி மறவன்புலோவைச் சேர்ந்த எஸ். கோமலேஸ்வரி (வயது- 26) என்பவரின் உடலில் இருந்தே துப்பாக்கி ரவை மீட்கப்பட்டது.

இவ்வைத்தியசாலையில் இவ்வருட முற்பகுதியில் முல்லைத்தீவுப் பகுதியில் காயமடைந்த இரு சிறுவர்களின் தொடை மற்றும் மார்புப் பகுதிகளில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கேரளாவை மையமாக்கி புலிகளின் சர்வதேச ரகசியப் பணிகள் நடந்து வருகின்றனவா ?

கொல்த்தில் ஆட்கடத்தல் மன்னன் கைது. புலிகளியக்க உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் கும்பலில், போலீசாரிடம் பிடிபட்ட இலங்கை நபர், புலி இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கேரளாவை மையமாக்கி புலிகளின் சர்வதேச ரகசியப் பணிகள் நடந்து வருகின்றனவா என, போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் கொல்லத்தில், காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் ராகுல் வருவதற்கு முன், அங்குள்ள விடுதிகளில் போலீசார், "ரெய்டு' நடத்தினர். அப்போது, இலங்கையைச் சேர்ந்த 27 பேர் சிக்கினர். அவர்களில் ஒருவர் சிவா (எ) பராபரன். இவரிடம் தனிப்படை போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், இலங்கையில் புலி தலைவர் பிரபாகரனின் தீவிர ஆதரவாளர் என்பதும், அங்கு நடந்த போரில் சிங்கள வீரர்களின் துப்பாக்கி குண்டு, அவரது காலில் பட்டு காயமடைந்தார் என்பதும் தெரிந்தது.

மேலும், 1990ம் ஆண்டு முதல், 10 ஆண்டுகள் புலிகள் அமைப்பிற்காக பல பணிகளை செய்து வந்துள்ளார். குறிப்பாக, கண்ணிவெடிகளை தயாரித்து பூமிக்கடியில் புதைத்து வைப்பதில் வல்லவர் என்பதும் தெரிந்தது. இவர், 2007ம் ஆண்டு பயணிகள் விசாவில், இலங்கையில் இருந்து விமானத்தில் தமிழகம் வந்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களை இந்தியாவுக்கு கடத்தி வந்து, அவர்களை போலி விசா அல்லது படகுகள் மூலம், ஆஸ்திரேலியா நாட்டுக்கு அனுப்பும் ஏஜன்ட் வேலை செய்து வந்தார். இதற்காக பலரிடம், ஒரு லட்சம் ரூபாய் வீதம் பெற்று வந்துள்ளார். இலங்கையில் இருந்து அனுப்பப்படும் பணம், ராமேஸ்வரத்தில் செயல்படும் வங்கி வழியாக, இவருக்கு கைமாறி வந்தது.

இவரது காலில் குண்டு தாக்கியதால் பாதிக்கப்பட்ட தழும்பு இருப்பதும், போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

கூட்டமைப்பு இந்திய அரசிடம் ,வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்கும்படி

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்கும்படி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. அத்தோடு குறிப்பிட்ட ஒரு காலகெடுவுக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்று இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரி உள்ளது. இந்தியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழுவினர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவையும் நேற்று சந்தித்தனர். அப்போதே அவர்கள் இக்கோரிக்கைகளை விடுத்திருக்கின்றார்கள்.
இச்சந்திப்பு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளவை வருமாறு,
“நேற்று வியாழக்கிழமை நாம் வெளிவிவகார அமைச்ர் கிருஷ்ணாவையும், மத்திய பாதுகாப்பு ஆலோகரையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்தோம். அவர்களுடன் அரசியல் தீர்வு சம்பந்தமாகப் பேசினோம். தமிழ் பேசும் மக்களுக்கு வடக்குக் கிழக்கில் நியாயமான தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடினோம்.
அரசியல் தீர்வின் மூலம் கிடைக்கின்ற அங்கீகாரங்களைப் பயன்படுத்தி, எமது மக்கள், பாதுகாப்பான முறையில் வாழ வேண்டும்.சமூகப் பொருளாதார, அரசியல் விடயங்களை அவர்களாகவே கையாண்டு நிம்மதியாக வாழக்கூடிய ஒரு அரசியல் தீர்வு சம்பந்தமாக நாங்கள் அவர்களிடம் வலியுறுத்தினோம்.
எமது கருத்துக்களை அவர்கள் பரிபூரணமாக ஏற்றுக்கொண்டார்கள். இவ்விடயம் சம்பந்தமாக சேர்ந்து உழைக்கின்றமைக்கும், ஒத்துழைக்கின்றமைக்கும் தயாராக இருக்கின்றானர்என கூறினார்கள்.”
மூலம்/ஆக்கம்

இலங்கை கடற்படை அட்டூழியம்: கலைஞர் கண்டனம்

நேற்று  இரவு  கடலில் மீன் பிடிக்கச் சென்ற  நாகப்பட்டினம்  மாவட்டம்,  வெல்லப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த  செல்லப்பன்  என்ற  மீனவர்,  இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு  உயிரிழந்தார்.
இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’7-7-2010  பிற்பகல்  12 மணி அளவில்  கடலுக்குள்  மீன் பிடிக்கச் சென்ற  நாகப்பட்டினம்  மாவட்டம்,  தலைஞாயிறு  காவல் சரகத்தைச் சேர்ந்த  வெல்லப்பள்ளம்  கிராமம்,  மீனவர் காலனியைச்  சேர்ந்த  செல்லப்பன்  உள்ளிட்ட  நான்கு  பேர்  கோடியக்கரைக்கு தென்கிழக்கே   சுமார்  இருபது  கடல்  மைல்  தொலைவில்  இரவு  பத்து  மணி அளவில்  மீன் பிடித்துக் கொண்டிருந்த போது,
அங்கு  வந்த   இலங்கை  கடற்படையினர்  தமிழக  மீனவர்களைப் பயங்கரமாக தாக்கியதாகவும், அவர்கள் பிடித்து வைத்திருந்த  மீன்களையும், வலைகளையும் கடலிலே தூக்கி எறிந்ததாகவும்,  அந்தத் தாக்குதலில்  செல்லப்பன்  என்ற  மீனவர்  படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும்,  வேறு சில மீனவர்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை  செய்ததாகவும்  செய்தி வந்துள்ளது. 

  இலங்கை கடற்படையினர்  தமிழக மீனவர்களை  இவ்வாறு  கொடுமை புரிவதென்பது  இது முதல் முறையல்ல.    தொடர்ந்து நடைபெறும்  தொடர்கதையாக உள்ளது. 

  தமிழக மீனவர்களின் இந்தத் துயர  நிலை குறித்து -  தமிழக அரசின் சார்பில்  மத்திய அரசுக்கும், பிரதமருக்கும்,  தொடர்புடைய அமைச்சர்களுக்கும்  இதுவரை பல முறை நேரிலும், கடிதங்கள் மூலமும்  கோரிக்கைகளை விடுத்தும்  தமிழக மீனவர்களின் அவலம்   நின்ற பாடில்லை.

   தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறை  சித்ரவதைக்கும் கொலைக்கும் ஆளாகும்போது  -  மத்திய அரசிடம் நாம் முறையிடுவதும், அவர்களும்  நம்மைச் சமாதானப்படுத்துகின்ற  முயற்சியிலே  ஒரு கடிதமோ, வேண்டுகோளோ  இலங்கை அரசுக்கும் விடுப்பதும்  - ஆனால் அதற்குப் பிறகு சில நாட்களில் இப்படிப்பட்ட கொடுமை நடைபெறுவதும்  மிகவும் கண்டிக்கத் தக்க ஒன்றாகும்.

 இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே  பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்று  ஒப்பந்தம் போடப்பட்ட நேரத்திலே கூட,  தமிழக மீனவர்களின் இந்நிலை குறித்து விரிவாகப் பேசப்பட்டு  -  தமிழக மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்தால் கூட,  அவர்களை தாக்குவதோ, கொலை செய்வதோ கூடாது என்றும்,  முறைப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர இது போன்ற செயல்களில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபடக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 ஆனால் அதற்கு மாறாக,  தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும்  இக்கொடுமையைக் களைய  மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு  இது போன்ற  செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க  -  கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதோடு   இந்த நிகழ்ச்சி  பற்றிய  உண்மை விபரமும்  தமிழக  மக்களுக்குத்  தெரியப்படுத்தியாக வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை பகுதியில் உள்ள மக்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக

இலங்கை முழுவதும் பொலிஸ் பதிவுக்கு உத்தரவு-பொலிஸ் பேச்சாளர்

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் உள்ள மக்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தமிழ்மிரர் இணையதளத்திற்கு சற்று முன் தெரிவித்தார்.

இப்பதிவு நடவடிக்கை வெள்ளவத்தை பகுதியில் மாத்திரமல்லாமல் முழு இலங்கை முழுவதும் இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர்  பிரசாந்த ஜெயகொடி குறிப்பிட்டார்.

இந்த பதிவு மேற்கொள்ளப்படுவதற்கு  பிரதான காரணம் என்னவென்று வினவிய போது, இந்த பதிவு நடவடிக்கை  பொலிஸ் கட்டளை சட்டத்தின் கீழ் இடம்பெறுகின்றது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். (RA

புலம்பெயர் தமிழர்கள் கட்டைப் பஞ்சாயத்து நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்!

புலம்பெயர் தமிழர்கள் கட்டைப் பஞ்சாயத்து நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்!
கேணல் ஹரிஹரன் புத்திமதி!!
கேணல் ஆர்.ஹரிஹரன் இந்திய இராணுவத்தின் முக்கியமான முன்னாள் புலனாய்வு அதிகாரியாவார். அவர் இலங்கைத் தமிழர் பிரச்சினை சம்பந்தமாக, அவ்வப்போது யதார்த்தபூர்வமான சில கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார். அண்மையில் அவர், புலம்பெயர் தமிழ் இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த நீணட பேட்டியொன்றில், புலம்பெயர் தமிழர்களின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்த பகுதியை மட்டும், அதன் முக்கியத்துவம் கருதி கீழே தருகின்றோம். ஆனால் ஹரிஹரன் போன்றவர்களின் இத்தகைய கருத்துக்கள் கூட, சில புலம்பெயர் தமிழர்களின் கண்களைத் திறக்குமா அல்லது வழக்கம் போல எருமை மாட்டில் மழை பெய்த கதைதானா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கேள்வி – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் ஈழத்தமிழர் வாழ்வுரிமை குறித்து முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளின் ஆரோக்கியத்தன்மை குறித்த உங்களது கருத்து என்ன?
பதில் - ஆரோக்கியம் குன்றிய நிலையில் உள்ளது என்றே தோன்றுகிறது. முதலில் புலம்பெயர்ந்த தமிழர்கள் கடந்த காலத்தில் தாங்கள் நடந்து கொண்ட வழிமுறைகளை மனக்கண்ணாடியில் பார்த்து புதிய செயலாக்கங்களை உருவாக்க வேண்டும். பழையன கழித்துப் புதியன புகுத்தும் நேரம் வந்துவிட்டது.
சென்னைத் தமிழில் சொன்னால் கட்டைப் பஞ்சாயத்து அணுகுமுறை கைவிடப்பட வேண்டும். ஆரோக்கியமான ஜனநாயகமுறையைப் பின்பற்ற வேண்டும். நல்ல முயற்சிகளை சிலர் எடுத்து வருகிறார்கள். அது வரவேற்கத்தக்கது. அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
மாற்றுக் கருத்துக்களைக் கூறுபவர்களை துரோகி என்றும் விபீடணன் என்றும் வர்ணிப்பதில் காழ்ப்புணர்ச்சியே அதிகரிக்கும்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யும் முயற்சிகளை இலங்கையில் வாழும் தமிழர்கள் எவ்வாறு எதிர் கொள்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். புலம்பெயர்ந்த தமிழர்களின் செயல்பாட்டின் விளைவுகளை அவர்களே அனுபவிக்கிறார்கள்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்கு இந்தியாவையும் தமிழ்நாட்டுத் தலைவர்களையும் சாடுகிறார்கள். விமரிசனம் வரவேற்கத்தக்கதே. ஆனால் வரைமுறை இல்லாமல் சாடுவது பயனற்றது. அதனால் இந்தியாவில் தமிழர் பிரச்சினைகளில் உண்மையான அனுதாபத்துடன் உள்ளவர்கள் எடுக்கும் முயற்சிகளை அது எவ்வாறு பாதிக்கும் என்பதை அப்படிச் சாடுபவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஒரே ஒரு வாக்கியத்தில் சொன்னால் வெற்றுப் பேச்சுப் போதாது, பயனுள்ள செயல்பாடுகளே தேவை.

சூரிய சக்தியில் இயங்கும் ் விமானமொன்று முதல் தடவையாக

சூரிய சக்தியில் இயங்கும் பாரிய கிளைடர் விமானமொன்று முதல் தடவையாக இரவு நேரத்தில் சூரியசக்தியில் மாத்திரம் பறந்து சாதனை படைத்துள்ளது. சுவிற்சர்லாந்தில் நேற்று வியாழனன்று இச்சாதனைப் பறப்பு இடம்பெற்றது. 26 மணித்தியாலங்கள், 9 நிமிடங்கள் இவ்விமானம் பறந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பகலில் சேமிக்கப்பட்ட சூரிய ஒளியே இவ்விமானத்தின் இரவு நேரப் பறப்புக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விமானத்தின் அகலம் ஏ340 எயார்பஸ் ரக விமானங்களின் அகலத்திற்குச் சமமானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. விமானங்களின் வரலாற்றில் சூரியசக்தியில் பறந்த மிகப்பெரிய விமானமாகவும் இது விளங்குகின்றது.
தூய்மையான தொழில்நுட்பம் மற்றும் மீளப் பயன்படுத்தப்படக்கூடிய எரிசக்தி ஆகியவற்றுக்கான சாத்தியத்தை இவ்விமானத்தின் வெற்றிகரமான பறப்பு விளக்குகிறது என இத்திட்டத்தின் தலைவரான பேர்ட்ரான்ட் பிக்கார்ட் தெரிவித்துள்ளார். இவர் 1999 ஆம் ஆண்டு வாயுபலூன் மூலம் முதல் தடவையாக உலகத்தைச் சுற்றி வந்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விமானப் பயணத்தின் போது இணை விமானியாக செயற்பட்ட அந்ரே போர்ஸ்ச்பேர்க் கருத்துத் தெரிவிக்கையில் “இச்சாதனையை இன்னும் நம்பமுடியாதுள்ளது. நாம் எதிர்பார்த்ததைவிட இப்பயணம் வெற்றிகரமாக அமைந்தது. நாம் இன்னும் நீண்டதூரம் பயணம் செய்யவிருந்தோம். ஆனால் நாம் செய்ய நினைத்ததை சாதித்துவிட்டதால் திரும்பி வந்துவிட்டோம்” எனக் கூறினார்.

500 ரூபாய் நோட்டுகளில் மதமாற்் றுமபிரசாரம,கடலோர கிராமங்களில

ராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.

மாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன. மொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை. தற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன. பணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக , இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன. பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது. பெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது. இதன் காரணமாக, பணப்புழக்கம் ஜரூராக இருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே பல கடலோர கிராமங்கள் களை கட்டி வருகின்றன. பணத்தை பெற்றவர்கள், தேவைகளுக்காக அவற்றை புழக்கத்தில் விட்டதால், மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது. ஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்

மதமாற்றம் செய்யகூடாது என்று சொல்பவர்கள், கூன்பாண்டியனையும் மங்கையர்க்கரசியையும் திருஞானசம்பந்தர் சித்து வேலைகள் மூலமாக சமணமதத்திலிருந்து சைவ மதத்தித்கு மாற்றியதை எப்படி நியாயப்படுத்துவார்கள்? சரி , கூன்பாண்டியன் முன்னாள் சைவ மதத்தவர் என்று சொல்லலாம். மதம் மாற மறுத்த ஒரே காரணத்திற்காக 8000 சமணர்களை கழுவிலேற்றி கொன்றதுதான் நமது ஹிந்து மதம். புத்த மதத்திலிருந்து மாற மறுத்த ஒரே காரணத்திற்காக மாமன்னர் அசோகரின் மகனான பிரகத்ரதனையும் பல்லாயிரம் புத்த பிட்சுக்களையும் கொன்ற மகானுபாவர் புஷ்யமித்ரசுங்கன் வாழ்ந்த நாடு நமது ஹிந்துஸ்தானம். இதை எல்லாம் எப்படி நியாயபடுத்துவார்கள்? இதெல்லாம் அவாளுக்கு தப்பு இல்லை. ஏனென்றால் இந்த மதங்களெல்லாம் பார்ப்பனர்களை உயர்வு படுத்தவில்லை. மனிதனை மனிதனாக பார்த்தன. உடனே அவாளுக்கு பொத்துக்கொண்டு வந்துடுத்து. இந்த மதங்களை எல்லாம் உண்டு இல்லைனு பண்ணிட்டா. அதே கோபம்தான் இப்போது கிறிஸ்தவ மதத்து மேலேயும் இஸ்லாம் மேலேயும். வர்ணஷ்ரமம், பிராமண ஆதிக்கம், குலக்கல்வியை ஆதரிக்காத எந்த ஒரு மதமானாலும் தத்துவமானாலும் அவாளுக்கு பத்திண்டு வரும். அட, ஹிந்து மதத்திலேயே கபாலிகம், லோகாயதம்,புரோகிதம்னு பல பிரிவுகள் உண்டு. அதிலே புரோகிதம் மட்டும்தான் பார்பனர்களுக்கு ஏற்ற கொள்கை உள்ளதுனுட்டு அதை மட்டும் தான் ஹிந்து மதமாக பிரசாரம் பண்ணுவா. பிராமண ஆதிக்கத்துக்கு துணை புரியாத கபாலிகம், லோகாயதம் போன்ற பிற ஹிந்து மதங்களை அழித்த இவாள் மதமாற்றம் பற்றி பேசுவதா?...

என்ஜீனியரிங் கல்லூரிகளில் மாவோயிஸ்ட் மாணவர்களா? போலீஸ் விசாரணை

சென்னையில் உள்ள தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் மாவோயிஸ்ட் ஆதரவு வட மாநில மாணவர்கள் உள்ளனரா என்ற கோணத்தில் கியூ பிரிவு போலீஸார் புதிய விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சென்னை பொறியியல் கல்லூரிகளில் புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது. இதை ஆரம்பத்திலேயே தடுக்க உயர்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சமீபத்தில் ஒரு கொலையில் வந்து நின்றுள்ளது இந்தப் பிரச்சினை.

சென்னையில் ஏராளமான தனியார் சுய நிதிப் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இவர்களில் 3, 4வது ஆண்டு படிக்கும் சீனியர் மாணவர்கள் புரோக்கர்களாக மாறியுள்ளது சமீபத்தில் தெரிய வந்தது. அதாவது தங்களது மாநிலத்திலிருந்து பல மாணவர்களை தாங்கள் படித்து வரும் கல்லூரிகளில் சேர்த்து விடுவதற்காக கணிசமான தொகையை அவர்களது பெற்றோர்களிடமிருந்து கமிஷனாக பெறுகின்றனர்.

மேலும், பெருமளவில் மாணவர்களை சேர்த்து விடும் மாணவர்களுக்கு சில கல்லூரிகளும் கூட கமிஷன் தருவதாகவும் கூறப்படுகிறது. இப்படி வட மாநில மாணவர்களில் பலர் புரோக்கர்களாக செயல்படுவதால் அவர்களுக்கிடையே கமிஷன் அதிகம் பெறுவது யார் என்ற போட்டி ஏற்பட்டது. இந்த போட்டியில்தான் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்குச் சொந்தமான மதுரவாயல் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் 3வது ஆண்டு பிடெக் படித்து வந்த நிர்பேஷ் குமார் சிங் என்ற மாணவர் வட மாநில மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வட மாநில மாணவர்கள் தொடர்பாக போலீஸாருக்கு புதிய சந்தேகம் எழுந்துள்ளது. சென்னை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் பீகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒரிசா, அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்த மாநிலங்கள் அனைத்தும் மாவோயிஸ்டுகள் மற்றும் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்தவையாகும்.

எனவே சென்னை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடையே மாவோயிஸ்ட் ஆதரவு மாணவர்கள் பெருமளவில் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் கமிஷனாக பெறும் தொகையை நக்சல் அமைப்புக்கு இவர்கள் தருகிறார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதையடுத்து சென்னையில் உள்ள முக்கிய கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் கியூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மாணவர்களின் விவரம், அவர்களது பின்னணி உள்ளிட்டவை குறித்து தீவிரமாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் அவர்கள் ஹாஸ்டலில் தங்கியுள்ளனரா, தனி வீடு எடுத்துத் தங்கியுள்ளனரா, அவர்களது தொடர்புகள், அவர்களது நடமாட்டம் உள்ளிட்டவை குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன. அவர்களை தேடி யாரெல்லாம் வருகிறார்கள் என்பது குறித்த தகவல்களும் சேகரிக்கப்படுகிறது.

பதிவு செய்தவர்: முஸ்தாக்
பதிவு செய்தது: 08 Jul 2010 11:40 pm
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் தமிழகத்தில் அமைதி சீர்குலைய ஆரம்பித்து இருக்கிறது. தமிழகத்தில் படிக்க வரும் அண்டை மாநிலம் மாணவர்கள் பற்றிய விபரம் அனைத்தையும் சேகரிக்கவேண்டும்.

பதிவு செய்தவர்: ஏழுமலை
பதிவு செய்தது: 08 Jul 2010 10:39 pm
இதுபோன்ற பிரச்சினைகள் களையப்படவேண்டும் என்றால், காவல்துறைக்கு சுதந்திரமும், தன்னாட்சியும் வழங்கப்பட்டு, தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் தரப்படவேண்டும். சந்தேகம் உள்ள எவரையும் அழைத்து விசாரணைக்குட்படுத்தப்படும் அதிகாரமும் தேவை. அரசியல் குறுக்கீடு, ஊழல் என்று எதுவும் இருக்கக்கூடாது. இந்த விவகாரத்தில், முதலில் விசாரிக்கப்படவேண்டியவர் AC சண்முகம் அவர்களே. யாருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்று அறிதல் அவசியம். கடும் நடவடிக்கை, மற்றவர்களுக்கு பாடமாக அமையும்.

[ Post Comments ]

வியாழன், 8 ஜூலை, 2010

வட பகுதி பிரயாணங்களுக்கான தற்போதைய நடைமுறை விபரங்களை அறியத்தருகின்றோம்

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று வடபகுதிக்கு பிரயாணம் செய்வதற்கான தற்போதைய நடைமுறைகளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் புதிய முயற்சிகளும்.


 வசந்த கால விடுமுறைக்காக புலம்பெயர் நாடுகளில் இருந்து தாயகம் வரவிருக்கும் புலம்பெயர் உறவுகள் பலரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியதை அடுத்து வட பகுதி நோக்கிய பிரயாணங்களுக்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி குறித்த விடயங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதன் போது தற்போதைய நடைமுறையில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவது குறித்த விபரங்களை பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து பெற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்த நடைமுறைகளை மேலும் இலகு படுத்துவது குறித்தும் பாதுகாப்பு அமைச்சுடன் பேசி இணக்கப்பாடு காணும் பட்சத்தில் வட பகுதிக்கான பாதுகாப்பு அமைச்சின் பிரயாண அனுமதியினை முற்றாக நீக்கி புலம்பெயர் உறவுகள் எதிர் நோக்கும் அசௌகரிங்களை போக்குவது குறித்தும் ஆலோசித்து வருகின்றார்.

இதே வேளை புலம்பெயர் உறவுகளின் அவசர தேவை கருதி பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவது குறித்த தற்போதைய நடைமுறை விபரங்களை அறியத்தருகின்றோம்.

1. யாராவது ஒரு நபர் இலங்கையில் பிறந்தவராகவோ அல்லது இலங்கைப் பிரஜாவுரிமை உடைய நபர் ஒருவராகவோ இருக்கும் பட்சத்தில் அவர் இலங்கையில் வசித்தாலோ அன்றில் வெளிநாடொன்றில் வசிப்பவராக இருப்பினும் வடபகுதிக்கு செல்வதற்கு எவ்வித அனுமதியும் பெறவேண்டியதில்லை.

2. யாராவது ஒரு நபர் இலங்கைக்கு வெளியே பிறந்தவராக இருந்தால் அல்லது இலங்கை பிரஜாவுரிமை அற்றவராக இருப்பின் குறித்த நபர் வடபகுதிக்கு (மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள்) பயணம் செய்வதாக இருப்பின் அவர் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். (பாதுகாப்பு அனுமதியை பெறுவதற்கு கீழே உள்ள 6ம் பந்தியைப் பார்க்கவும்)

3. யாராவது ஒரு நபர் (மேலே 2ம் பந்தியில் குறிப்பிட்டபடி) இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் செயற்படும் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றில் அல்லது சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றில் பணிபுரிபவராக இருப்பின் தமது கடமைக்காலம் முடியும் வரை அந்நபர் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அனுமதி பெற்றுக்கொள்ளாமல் வடபகுதிக்கு பயணத்தை மேற்கொள்ளமுடியும்.

4. இலங்கையில் பிறந்த நபர் ஒருவர் கீழே உள்ள ஆவணங்களில் ஏதாவதொன்றினை சமர்ப்பிக்க வேண்டும்.

அ. தேசிய அடையாள அட்டை
       ஆ. பிறப்பச் சான்றிதழ்.
     இ. வலுவுள்ளதான இலங்கை கடவச்சீட்டு

ஈ. வெளிநாட்டு கடவுச்சீட்டு அல்லது பயண அனுதிப்பத்திரத்தில் இலங்கையில் பிறந்தவர் என அச்சிடப்பட்டிருத்தல்

உ.  இலங்கை அரசாங்க நிறுவனம் ஏதேனும் ஒன்றினால் குறித்த நபர் இலங்கையில் பிறந்தவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருத்தல்.

5. 18 வயதிற்கு உட்பட்ட பிள்ளை ஒருவர் வெளிநாட்டில் பிறந்திருக்கும் பட்சத்தில் இலங்கையில் பிறந்த தனது பெற்றோருடன் பயணம் மேற்கொள்ளுவாராயின் பயண அனுமதி பெறத்தேவையில்லை.

6. பாதுகாப்பு அமைச்சின் பயண அனுமதிக்காக விண்ணப்பிக்கும்போது கீழ்வரும் விடயங்களைப் பூர்த்திசெய்து

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பாதுகாப்பு அமைச்சு - சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுப் பாதுகாப்பு பாலதக்ஷ மாவத்தை கொழும்பு
இலங்கை எனும் முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    அ.  முழுப்பெயர்
    ஆ.  குடியுரிமை
    இ.  தொழில்
    ஈ.   பிறந்த இடம்
    உ.  தற்போதைய முகவரி
    ஊ.  கடவுச்சீட்டு இலக்கம்.

எ.   இலங்கையின் வடபகுதிக்கு செல்லவேண்டிய இடத்தின் முகவரி

ஏ.   அங்கு தங்கியிருக்கும் கால எல்லை.
 
மேற்படி பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் கீழ்வரும் ஏதாவதோர் வழியில் பாதுகாப்பு அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அ. மேலே குறிப்பிட்ட முகவரிக்கு அஞ்சலில் அனுப்புதல் (இதன்போது விண்ணப்பதாரரின் இலங்கைக்குட்பட்ட தொலைநகல் இலக்கமொன்று விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.)

ஆ. 0094-11-2328109 எனும் இலக்கத்திற்கு    தொலைநகல் ஊடாக அனுப்புதல் (இதன்போது விண்ணப்பதாரரின் இலங்கைக்குட்பட்ட தொலைநகல் இலக்கமொன்று விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.)

இ. பாதுகாப்பு அமைச்சில் நேரடியாக விண்ணப்பத்தை   ஒப்படைத்தல். அனுமதி வழங்கப்படுமிடத்து அதேநாளில் பயண அனுமதி வழங்கப்படும்.

புதுடில்லியில், நீங்கள் அனைத்து தமிழ்கட்சிகளும் ஒன்றிணைந்து வருவதன் மூலமே எம்மால் இலங்கை அரசுக்கு

இந்தியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசின் முக்கிய அமைச்சர்கள், தலைவர்களை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளனர்.

இலங்கையில் மீற்குடியேற்றத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த இந்திய அரசு, தமிழ்பேசும் கட்சிகள் அனைத்தும் ஒரணியில் ஒன்றுதிரண்டு வாருங்கள், கொழும்பில் ஏற்கனவே தமிழ் கட்சிகள் பல சந்தித்து தீர்வு விடயத்தில் ஒன்றிணைந்து செயற்படுவது என்று முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே குறைந்தது தீர்வு விடயத்தில் நீங்கள் அனைத்து தமிழ்கட்சிகளும் ஒன்றிணைந்து வருவதன் மூலமே எம்மால் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஒரு சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக புதுடில்லியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ள ஐக்கிய நாடுக

இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி நீல் பூஹ்னேவை நியூயோக்கிற்கு திருப்பியழைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்னால் அரசாங்க அமைச்சர் ஒருவர் தலைமையில் எதிர்ப்பு போராட்டம் நடைபெறுவதை அடுத்தே இந்த அழைப்பு இன்று மாலை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் தகவல் தருகையில், ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தின் பணிகளை முன்கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டுள்ளமையை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நீல் பூஹ்னேயுடன் கலந்தாலோசனை நடத்துவதற்காக அவரை நியூயோர்க்கிற்கு வருமாறு அழைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் துணைப்பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

புலிகளின் பணத்தில் வாங்கிய வீடுகள், காணிகள், வர்த்தக தொகுதிகள், எரிபொருள் நிலையங்கள்

கனடா புலிகளிற்கள் தொடரும் சொத்து பிரிப்பு உச்சக்கட்டத்தில்


-சிவஞானமூர்த்தி [கனடா]
கடந்த ஆண்டு விடுதலை புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதை தொடர்ந்து புலம்பெயர் புலிகளிற்குள் தொடங்கிய குத்துவெட்டு தற்போது சொத்து பிரிப்பு என்று உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. தமிழீழம் பெற்றுதருவதாக கூறி புலம்பெயர் தமிழர்களிடம் பெருமளவு பணத்தினை சேகரித்த புலம்பெயர் புலிகள் அவற்றை கொண்டு ஜரோப்பிய, கனேடிய நாடுகளில் சொத்துக்களாக வாங்கி குவித்தனர்.

அந்த சொத்துக்கள் புலிகள் இல்லை என்ற நிலையில் தமது பெயர்களிற்கு மாற்றப்பட வேண்டும் என்பதில் புலிகளின் தளபதிகளின் சகோதரர்கள், உறவினர்களும் புலி தொண்டர்களும் உரிமை கொண்டாட தொடங்கிவிட்டனர். கனடாவில் பெருமளவு வர்த்தகங்கள், தொழிற்சாலைகள், எரிபொருள் நிலையங்கள், தளபாட நிலையங்கள் என்று புலம்பெயர் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டவற்றின் சொத்துக்கள் தமக்கு தாமே சொந்தம் என்றும் சிலர் அவற்றை விற்றுக்கொண்டு தலைமறைவாகும் சம்பவங்களும் கனடாவில் சூடுபிடித்துள்ளது.
கனடாவில் உள்ள புலிகளின் சொத்துக்களில் ஒன்றான எஸ்பி.இம்போட்டர்ஸ் நிறுவனம் புலிகளின் தமிழ் செல்வனுக்கு சொந்தமானது என்றும் அதனை தனது பெயருக்கு மாற்றவேண்டும் என்று தமிழ் சகோதரனின் சகோதரி போர்க்கொடி தூக்கியதினால் இவ் விடயம் அம்பலத்தி;ற்கு வந்துள்ளது.
இதே நிலை எதிர்காலத்தில் பின்வரும் சொத்துக்களிற்கும் ஏற்படவுள்ளது.
*கனடா கந்தசாமி
*ஸ்பைஸ்லாண்ட்
*ஓஸன்
*ஏசியன்
*ஜடியல்
*ஜயப்பன்
*மஜீக்வ+ட்
*அம்பிகா
*சி.ரி.ஆர்.

ஏன்று புலிகளின் பணத்தில் வாங்கிய வீடுகள், காணிகள், வர்த்தக தொகுதிகள், எரிபொருள் நிலையங்கள் என்று பல பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்கள் குறித்த குத்துவெட்டுக்கள் வெளிச்சத்திற்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையே இந்த சொத்துக்கள் யாரது பெயரில் உள்ளதோ அவர்களிற்கு எதிராக கனேடிய அரசு ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கைகளை பணம் கொடுத்து ஏமாந்த கனேடிய தமிழ்மக்கள் எடுக்க முனைந்துள்ளதாகவும் அறியப்படுகின்றது.
ஏற்கனவே கனடாவில் உள்ள புலிகளின் ரி.வி.ஜ தொலைக்காட்சி மற்றும் சி.எம்.ஆர் வானொலி என்பன தொடர்பான சொத்துக்கள் குறித்து அம்பலத்திற்கு வந்துள்ளதும் இது குறித்த செய்திகள் கனேடிய தமிழ்பத்திரிகையிலும் இணையத்தளங்களிலும் வெளிச்சத்திற்கு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஆகவே இன்னும் பெயர் குறிப்பிடாமல் விடப்பட்ட புலிகளின் சொத்துக்கள் கனடாவில் இருந்தால் அறியத்தாருங்கள். இவற்றை இலங்கை அரசிடம் செல்வதற்கு விடாமல் அதனை பொதுவான றஸ்ரி ஒன்றை ஏற்படுத்தி அதில் வைப்பு செய்து அதன் மூலம் தாயகத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு உதவ முன்வரவேண்டும்.
இவ் பணம் தனிநபர் கைகளில் சிக்குண்டு அநியாயமாக செல்வதை தடுத்திட பாடுபடவேண்டும் என்றும் பணம் கொடுத்து ஏமாந்த தமிழனாக இந்த கோரிக்கையை விடுக்கின்றேன். இதனை அனைத்து இணைய தளங்களும், பத்திரிகை, வானொலிகள் வெளியிட்டு உதவ வேண்டும் என்பதை வேண்டி கொள்கின்றேன்.
www.neruppu.com