வெள்ளி, 9 ஜூலை, 2010

வீரவன்ஸவின் பதவி விலகல் கோரிக்கை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.


அமைச்சர் விமல் வீரவன்ஸ தாம் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக கூறி ஜனாதிபதிக்கு இன்று அனுப்பிய கடிதத்தை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
விமல் வீரவன்ஸ உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக முன்னால் இடம்பெறும் செய்தியாளர் மாநாட்டின் போது, இந்த தகவலை தேசிய சுதந்திர முன்னணி மத்திய குழு உறுப்பினர் ஜெயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவை கலைக்கக் கோரி விமல் வீரவன்ஸ சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், தமது போராட்டத்திற்கு அமைச்சு பதவி பாதகமாக அமைந்துள்ளமையை கருத்திற்கொண்டு, தாம் பதவி விலகும் முடிவை எடுத்துள்ளதாக விமல் வீரவன்ஸ ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள  தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக