வெள்ளி, 9 ஜூலை, 2010

கூட்டமைப்பு இந்திய அரசிடம் ,வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்கும்படி

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்கும்படி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. அத்தோடு குறிப்பிட்ட ஒரு காலகெடுவுக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்று இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரி உள்ளது. இந்தியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழுவினர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவையும் நேற்று சந்தித்தனர். அப்போதே அவர்கள் இக்கோரிக்கைகளை விடுத்திருக்கின்றார்கள்.
இச்சந்திப்பு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளவை வருமாறு,
“நேற்று வியாழக்கிழமை நாம் வெளிவிவகார அமைச்ர் கிருஷ்ணாவையும், மத்திய பாதுகாப்பு ஆலோகரையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்தோம். அவர்களுடன் அரசியல் தீர்வு சம்பந்தமாகப் பேசினோம். தமிழ் பேசும் மக்களுக்கு வடக்குக் கிழக்கில் நியாயமான தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடினோம்.
அரசியல் தீர்வின் மூலம் கிடைக்கின்ற அங்கீகாரங்களைப் பயன்படுத்தி, எமது மக்கள், பாதுகாப்பான முறையில் வாழ வேண்டும்.சமூகப் பொருளாதார, அரசியல் விடயங்களை அவர்களாகவே கையாண்டு நிம்மதியாக வாழக்கூடிய ஒரு அரசியல் தீர்வு சம்பந்தமாக நாங்கள் அவர்களிடம் வலியுறுத்தினோம்.
எமது கருத்துக்களை அவர்கள் பரிபூரணமாக ஏற்றுக்கொண்டார்கள். இவ்விடயம் சம்பந்தமாக சேர்ந்து உழைக்கின்றமைக்கும், ஒத்துழைக்கின்றமைக்கும் தயாராக இருக்கின்றானர்என கூறினார்கள்.”
மூலம்/ஆக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக