சனி, 10 ஜூலை, 2010

100 நாட்களைத் தாண்டியுள்ள அங்காடித் தெரு படத்திற்கு மிக

பெரிய டப்பா படம் 25 நாள் ஓடினாலே அமர்க்களமாக விழா எடுக்கும் இக்கால கட்டத்தில் அட்டகாசமாக ஓடி, அமர்க்களமான முறையில் 100 நாட்களைத் தாண்டியுள்ள அங்காடித் தெரு படத்திற்கு மிக மிக அமைதியான முறையில் விழா கொண்டாடியுள்ளனர் படக் குழுவினர்.

சமீப காலத்தில் வந்த விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில திரைப்படங்களில் அங்காடித் தெருவுக்கு முதலிடம் கொடுக்கலாம். இயல்பான கதையோட்டம், சுரீர் என இதயத்தை தொடும் நிஜங்கள், தத்ரூபமான காட்சியமைப்புகள், அழகான கதாபாத்திரங்கள் என நெஞ்சைத் தொடும் வகையில் வந்த படைப்பு அங்காடித் தெரு.

வசந்த பாலன் இயக்கத்தில் உருவான இப்படம் 100 நாட்களைத் தாண்டியுள்ளது. இதையடுத்து படத்தை தயாரித்த ஐங்கரன் நிறுவனம் அமைதியான முறையில் 100 வது நாளை கொண்டாடியது. அதுவும் சென்னையில் அல்ல காஞ்சிபுரத்தில்.

அங்குள்ள ஸ்ரீநாராயணமூர்த்தி தியேட்டரில் நடந்த விழாவில் படத்தின் நாயகன் மகேஷ், நாயகி அஞ்சலி, இயக்குநர் வசந்த பாலன், தயாரிப்பாளர் அருண்பாண்டியன் என படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

அமைதியான முறையில் கொண்டாடியதில் தவறில்லை. ஆனால் நல்ல படங்களுக்கு இந்த அமைதி தேவையில்லை. சற்று ஆர்ப்பாட்டமாகவே இருந்திருக்கலாம்.
பதிவு செய்தவர்: கண்ணன்
பதிவு செய்தது: 10 Jul 2010 4:27 pm
நல்ல படம் .வசந்த பாலனுக்கு பாராட்டுங்கள்.

பதிவு செய்தவர்: ஐயோ இயோ
பதிவு செய்தது: 10 Jul 2010 4:02 pm
சுறா படத்தோட விழ எப்போன்னு சொல்லுங்க ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக