வியாழன், 8 ஜூலை, 2010

புலிகளின் பணத்தில் வாங்கிய வீடுகள், காணிகள், வர்த்தக தொகுதிகள், எரிபொருள் நிலையங்கள்

கனடா புலிகளிற்கள் தொடரும் சொத்து பிரிப்பு உச்சக்கட்டத்தில்


-சிவஞானமூர்த்தி [கனடா]
கடந்த ஆண்டு விடுதலை புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதை தொடர்ந்து புலம்பெயர் புலிகளிற்குள் தொடங்கிய குத்துவெட்டு தற்போது சொத்து பிரிப்பு என்று உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. தமிழீழம் பெற்றுதருவதாக கூறி புலம்பெயர் தமிழர்களிடம் பெருமளவு பணத்தினை சேகரித்த புலம்பெயர் புலிகள் அவற்றை கொண்டு ஜரோப்பிய, கனேடிய நாடுகளில் சொத்துக்களாக வாங்கி குவித்தனர்.

அந்த சொத்துக்கள் புலிகள் இல்லை என்ற நிலையில் தமது பெயர்களிற்கு மாற்றப்பட வேண்டும் என்பதில் புலிகளின் தளபதிகளின் சகோதரர்கள், உறவினர்களும் புலி தொண்டர்களும் உரிமை கொண்டாட தொடங்கிவிட்டனர். கனடாவில் பெருமளவு வர்த்தகங்கள், தொழிற்சாலைகள், எரிபொருள் நிலையங்கள், தளபாட நிலையங்கள் என்று புலம்பெயர் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டவற்றின் சொத்துக்கள் தமக்கு தாமே சொந்தம் என்றும் சிலர் அவற்றை விற்றுக்கொண்டு தலைமறைவாகும் சம்பவங்களும் கனடாவில் சூடுபிடித்துள்ளது.
கனடாவில் உள்ள புலிகளின் சொத்துக்களில் ஒன்றான எஸ்பி.இம்போட்டர்ஸ் நிறுவனம் புலிகளின் தமிழ் செல்வனுக்கு சொந்தமானது என்றும் அதனை தனது பெயருக்கு மாற்றவேண்டும் என்று தமிழ் சகோதரனின் சகோதரி போர்க்கொடி தூக்கியதினால் இவ் விடயம் அம்பலத்தி;ற்கு வந்துள்ளது.
இதே நிலை எதிர்காலத்தில் பின்வரும் சொத்துக்களிற்கும் ஏற்படவுள்ளது.
*கனடா கந்தசாமி
*ஸ்பைஸ்லாண்ட்
*ஓஸன்
*ஏசியன்
*ஜடியல்
*ஜயப்பன்
*மஜீக்வ+ட்
*அம்பிகா
*சி.ரி.ஆர்.

ஏன்று புலிகளின் பணத்தில் வாங்கிய வீடுகள், காணிகள், வர்த்தக தொகுதிகள், எரிபொருள் நிலையங்கள் என்று பல பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்கள் குறித்த குத்துவெட்டுக்கள் வெளிச்சத்திற்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையே இந்த சொத்துக்கள் யாரது பெயரில் உள்ளதோ அவர்களிற்கு எதிராக கனேடிய அரசு ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கைகளை பணம் கொடுத்து ஏமாந்த கனேடிய தமிழ்மக்கள் எடுக்க முனைந்துள்ளதாகவும் அறியப்படுகின்றது.
ஏற்கனவே கனடாவில் உள்ள புலிகளின் ரி.வி.ஜ தொலைக்காட்சி மற்றும் சி.எம்.ஆர் வானொலி என்பன தொடர்பான சொத்துக்கள் குறித்து அம்பலத்திற்கு வந்துள்ளதும் இது குறித்த செய்திகள் கனேடிய தமிழ்பத்திரிகையிலும் இணையத்தளங்களிலும் வெளிச்சத்திற்கு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஆகவே இன்னும் பெயர் குறிப்பிடாமல் விடப்பட்ட புலிகளின் சொத்துக்கள் கனடாவில் இருந்தால் அறியத்தாருங்கள். இவற்றை இலங்கை அரசிடம் செல்வதற்கு விடாமல் அதனை பொதுவான றஸ்ரி ஒன்றை ஏற்படுத்தி அதில் வைப்பு செய்து அதன் மூலம் தாயகத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு உதவ முன்வரவேண்டும்.
இவ் பணம் தனிநபர் கைகளில் சிக்குண்டு அநியாயமாக செல்வதை தடுத்திட பாடுபடவேண்டும் என்றும் பணம் கொடுத்து ஏமாந்த தமிழனாக இந்த கோரிக்கையை விடுக்கின்றேன். இதனை அனைத்து இணைய தளங்களும், பத்திரிகை, வானொலிகள் வெளியிட்டு உதவ வேண்டும் என்பதை வேண்டி கொள்கின்றேன்.
www.neruppu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக