வெள்ளி, 9 ஜூலை, 2010

இலங்கை விவசாயிகளுக்கு இஸ்ரேலில் தொழில் வாய்ப்பு

இலங்கை விவசாயிகளுக்கு இஸ்ரேலில் தொழில் வாய்ப்புக்கள் அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
விவசாய அமைச்சர் மஹிந்தயப்பா அபேவர்தனவிற்கும் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
 
இஸ்ரேலுக்கான இந்திய தூதுவர் இட்டாய் தக்னருக்கும் அமைச்சருக்கும் இடையில் பத்தரமுல்லவில் அமைந்துள்ள விவசாய அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
 
இஸ்ரேலில் தொழில் வாய்ப்புப் பெற்றுச் செல்லும் விவசாயிகளுக்கு தலா 1000 அமெரிக்க டொலர் மாதச் சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
 
ஆறு மாத கால ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
 
இவ்வாறு தொழில் வாய்ப்பு வழங்கப்படுவதன் மூலம் இஸ்ரேலில் பயன்படுத்தப்படும் நவீன விவசாய தொழில் நுட்பங்களை இலங்கையில் அறிமுகப்படுத்த வழி ஏற்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த யப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக