சனி, 23 ஆகஸ்ட், 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தீவிர சிகிச்சைப் பிரிவில்

May be an image of 1 person, ambulance and text Former President Ranil Wickremesinghe, who was transferred from the Prison Hospital to the Colombo National Hospital earlier today, has been admitted to the Intensive Care Unit (ICU).
Deputy Director of the Colombo National Hospital, Dr. Rukshan Bellana, said doctors recommended moving him from the Emergency Treatment Unit to the ICU due to his medical condition.
Hospital sources reported that Wickremesinghe was transferred following a deterioration in his health. (Newswire
மலையோரம் செய்திகள் : கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளார்.

நடிகர் விஜயின் தவெகவும் ஒரு சில்வண்டு தான்!

May be an image of 1 person, smiling and text
actor vijay with out wick 

 சுமதி விஜயகுமார் : விஜய்யின் மேடை பேச்சு முக்கிய அரசியல் பிரச்சனைகளை தொடாமல், 
சினிமா வசனத்தை போல தொண்டர்களின் (ரசிகர்களின்) கை தட்டலுக்கு ஏற்றவாறு அமைந்திருந்தது, மாநாட்டில் போதுமான அளவிற்கு கழிப்பறை வசதிகள் இல்லை, 
தொண்டர்கள் நாற்காலிகளை உடைத்தார்கள், 
கம்பங்கள் மேல், மரத்தின் மேல் ஏறினார்கள்.
 மேடையில் பேசியவர்களின் தமிழில் அத்தனை பிழைகள் இருந்தன,
 என்பதை எல்லாம் தாண்டி, 
விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்குகளை எப்படி பிரிக்க போகிறார், 
அதனால் தமிழ்நாட்டின் அரசியல் எப்படி மாறப் போகிறது என்பது தான் மிக முக்கியம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிறீரமசிங்க கைது! முழுமையான விபரம்!

ஹிருனியுஸ் : இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட சம்பவம் நீதித்துறையில் முக்கிய நிகழ்வாக பதிவாகியுள்ளது. 
 குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று (22) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலை

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

சமண கழுவேற்ற - பழமையான மகாவீரர் சிற்பம்! மீட்க வந்த அதிகாரிகள்! சிலையை கொடுக்க மறுத்த கிராம மக்கள்!

 A thousand-year-old Mahavira sculpture that reinforces Jain wash paintings! Officials came to rescue it! Villagers refused to give up the statue Photograph: (pudukottai)

நக்கீரன் - பகத்சிங் : சமண கழுவேற்ற ஓவியங்களுக்கு வலுசேர்க்கும் ஆயிரமாண்டு பழமையான மகாவீரர் சிற்பம்! மீட்க வந்த அதிகாரிகள்! சிலையை கொடுக்க மறுத்த கிராம மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே அரிமழம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளாளவயல் சுப்பிரமணியர் கோவில் வடக்குப் பக்கம் யாரும் உள்ளே நுழைய முடியாத கருவேல முட்புதரில்  பெரிய கருங்கல் சிற்பம் ஒன்று கிடக்கிறது. சாய்ந்து கிடக்கும் சிற்பத்தின் மேல் இலைகள் கொட்டி தூர்ந்து என்ன உருவம் என்றே தெரியாத அளவில் உள்ளது என்ற தகவல் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன் குழுவினருக்கு தெரிய வந்ததையடுத்து மணிகண்டன் முட்புதர்கள் அடர்ந்த பகுதிக்குச் சென்று கருங்கல் சிற்பத்தை மீட்டு கழுவி சுத்தம்
செய்து பார்த்து இது தமிழ்நாட்டில் மகாவீரர் சிற்பங்களில் அபூர்வமான சிற்பம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது!

 ஜப்னா முஸ்லீம் .காம் : முன்னாள்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். 
அவர் இன்று (22)  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரணிலின் மனைவியும் கைது செய்யப்படுவாரா..?
இலங்கையினுடைய  வரலாற்றில் முதன்முறையாக   முன்னாள் ஜனாதிபதியொருவர் கைது  செய்யப்பட்டிருக்கின்றார். 
தன்னுடைய மனைவி மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழா ஒன்றுக்காக லண்டன் சென்றிருந்த நிலையில், குறித்த பயணத்திற்கு அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இதனடிப்படையில், இன்றையதினம் CID ற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த  ரணில் இன்று (22) கைது செய்யப்டார்.  

தெருநாய்கள் விவகாரம்: நாளை உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்/

 மாலை மலர் :  டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும். இதை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.
இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

வியாழன், 21 ஆகஸ்ட், 2025

ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!

 கலைஞர் செய்திகள் பிரேம்குமார் : சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்ற கழக நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் அ. இரகுமான் கான் அவர்கள் எழுதிய "நியாயங்களின் பயணம்", "மெளனமாய் உறங்கும் பனித்துளிகள்", "உலகமறியா தாஜ்மஹால்கள்", "பூ... பூக்கும் இலையுதிர் காலம்", "வானம் பார்க்காத நட்சத்திரங்கள்", ஆகிய 5 நூல்கள் மற்றும் "இடி முழக்கம்" அ. இரகுமான் கான் சட்டமன்றப் பேருரைகள், ஆகிய நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

துரோகிஸ்தான்களால் சுடப்பட்டு தெருவில் வீசப்பட்ட பேராசிரியர் ராஜினி திறனகம அவர்களை ஞாபகம் இருக்கிறதா?

69TH BIRTHDAY – Ravana Lanka ...
Rajini Thiranagama 
ராதா மனோகர்   துரோகிஸ்தான்களால் சுடப்பட்டு தெருவில் வீசப்பட்ட   யாழ்ப்பாண பல்கலை கழக மருத்துவ பீடாதிபதி திருமதி ராஜினி திறனகம அவர்களை ஞாபகம் இருக்கிறதா? 
Sharika Thiranagama | Institute for ...
Shaarika Thiranagama

இப்போது அவரின் மகள் பேராசிரியர் சாரிகா திறனகம அதே யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் இம்மாதம் 25 ஆம் தேதி நடைபெறும் ஒரு ஆய்வரங்கத்திற்கு வருகை தந்துள்ளார் என்று தெரிகிறது!
இவர் அமெரிக்க ஸ்டான்போர்ட் பல்கலை கழகத்தில் உதவி மானுடவியல் பேராசிரியராக பணியாற்றுகிறார்!
இயற்கை என்ற ஒன்று இருக்கிறதல்லவா? 
நீ கொடுப்பதை நீயே பெற்றுக்கொள்வாய்!
உன் மனதில் எது இருக்கிறதோ அதுவே உன்னை நோக்கி வரும்!
நீ எல்லோரையும் ஏமாற்றலாம் ஆனால் ஒருபோதும் உனக்குள்ளும் உன்னை சுற்றியும் உள்ள இந்த பிரபஞ்சத்தை ஏமாற்றவே முடியாது 
நீதான் கல்வி அறிவற்ற தற் குறியாச்சே?
வெறும் சுயநலமும் கொடூரத்தை ரசிக்கும் உளவியல் நோயும் நிரம்ப பெற்றவராச்சே?

மதுரை நடிகர் விஜய் மாநாடு சுட்டெரிக்கும் வெயில்.. சுருண்டு விழும் பிஞ்சு குழந்தைகள், தொண்டர்கள்- 50 பேருக்கு சிகிச்சை

 மின்னம்பலம்  Mathi  :  மதுரையில் சுட்டெரிக்கும் 97 டிகிரி வெயில்.. சுருண்டு விழும் பிஞ்சு குழந்தைகள், தொண்டர்கள்- 50 பேருக்கு சிகிச்சை
நடிகர் விஜய்யின் தவெக மாநாடு நடைபெறும் மதுரையில் வெயில் உக்கிரத்தைக் காட்டி வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் பிஞ்சு குழந்தைகள், தொண்டர்கள் பலர் மயக்கமடைந்தனர். மாநாட்டு வளாகத்தில் உள்ள முதலுதவி மையங்களில் 50 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மதுரையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்காக தமிழ்நாடு முழுவதும் இருந்தும் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்த மாநாட்டில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், ‘சர்ச்சைகளுக்கு’ இடம் தராத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சசி தரூர் முழு சங்கியானார்! - பாஜகவின் 30 நாட்கள் பதவி பறிப்பு சட்டம் சரியாம்

 மாலை மலர்  : காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூர், கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் எதிர்த்துப் பேசியுள்ளார்.
மத்திய அரசு இன்று மக்களவையில் தாக்கல் செய்த தகுதி நீக்க மசோதா, பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சர்கள் குற்ற வழக்குகளில் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் இருந்தால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறுகிறது.
அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்தபோது மக்களவையில் எதிர்க்கட்சியினர் மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசி எறிந்தனர்.

புதன், 20 ஆகஸ்ட், 2025

அமித் ஷா ஹிட்லர் சட்டம்! முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கும் சட்டம்- மக்களவையில் இன்று தாக்கல்!

மின்னம்பலம் - Mathi  : நாட்டின் பிரதமர், மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் ‘கடுமையான குற்றச்சாட்டுகளின்’ கீழ் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்க வகை செய்யும் சட்ட மசோதாவை மக்களவையில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்கிறார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைய உள்ள நிலையில் பல முக்கியமான மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் ஒன்றுதான் பிரதமர்- முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் சட்ட மசோதா.

சுதர்ஷன ரெட்டி - துணை குடியரசு தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்ட்ரோக்!

 tamil.oneindia.com  - Yogeshwaran Moorthi  :  கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலின் கொடுத்த விருந்து.. அடுத்த சில நிமிடங்களில் வந்த ட்வீட்! என்ன மேட்டர்?
சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டன. 
ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்குப் பின், 
இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

சுதர்சன் ரெட்டி- இந்தியா கூட்டணியின் துணை குடியரசு தலைவர்! யார் இவர்?

 மின்னம்பலம் -  Mathi : துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியின் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணியின் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா ஆளுநராக பதவி வகிக்கிறார். உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர் சுதர்சன் ரெட்டி.

துணை குடியரசு தலைவர் தேர்தலில் வைகோ சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து!

 மின்னம்பலம் - easwari minnambalam :  துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மகிழ்ச்சிகரமான வாழ்த்துகளை தெரிவிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்
கோவை சூலூர் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 18) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “துணைக் குடியரசு தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி அடைந்தேன், வாழ்த்துச் சொன்னேன்” என்றார்.

இலங்கை பணிப்பெண்களால் 4.43 பில்லியன் டொலர்கள் அந்நிய செலாவணி கிடைத்துள்ளது

 இலங்கைக்கு மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் மகளிர் மூலம் கடந்த ஏழுமாத காலத்தில் 4.43 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணி கிடைத்துள்ளது 
இதே கால அளவில் அந்நிய நேரடி முதலீடாக வெறும் 507 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே அந்நிய செலாவாணியாக கிடைத்துள்ளது .
இப்படி கிடைக்கும் அந்நிய செலாவணியை இறக்குமதியாளர்கள் என்ற என்ற கமிஷன் வியாபாரிகளுக்கு தாரை வார்த்து விடுகிறது அரசு 
அதிலும் அவசியமில்லாத ஆடம்பர பொருட்களுக்கே  அதிக அந்நிய செலாவணி விரயமாகிறது 
உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய கோழி முட்டை உப்பு மீன் கருவாடு டின்மீன் போன்றவற்றையும் கூட அந்நிய செலாவணியை விரயம் செய்து இறக்குமதி செய்கிறார்கள் ( கமிஷன் + லஞ்சம்)
அதின் பின்பு உலக நாடுகளில் கந்து வட்டிக்கு கடன் வாங்கும் தில்லாலங்கடி வேலைதான் நடக்கிறது 

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

திருச்சி சிவா துணை ஜனாதிபதி தேர்தலில் - இந்தியா கூட்டணி சார்பி நிறுத்த திட்டம்?

 மாலை மலர் :  துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். 
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 21ஆம் தேதியாகும். அன்றைய தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்துவோம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. சி.பி. ராதாகிருஷ்ணனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யாரை களம் இறக்குவது என்று இந்தியா கூட்டணி ஆலோசனை நடத்தி வருகிறது.

ராதாகிருஷ்ணன் ஜெகதீப் தன்கர் நடிகை மீனா .... என்ன நடக்கிறது

``எனது எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வழிநடத்த உதவும்..'' - துணை ஜனாதிபதியை  சந்தித்த மீனா - Vikatan
May be an image of 1 person and text that says '17 17/08/025 /08/025 © GET the Latest Headlines Instantly WhatsApp தின Grae தின.மல き茶 மலர் தேரிய தமிழ் கானிதர் 78452 53111 துணை ஜனாதிபதி வேட்பாளர் சி. பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலில் தேஜ கூட்டணி வேட்பாளராக க தமிழகத்தைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிரா கவர்னருமான ன சி. பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு தினமமலர் மலர் தினதமலம் தின் AppStore Downlad Dinamalar pps GooglePlay rollow லர்'

M Ponnusamy  :  முதலில் அதிமுக,  இரண்டாவது  திமுக இந்த இரண்டு திராவிடக் கட்சிகள் போட்ட பிச்சையால் 1998 & 1999 ல் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் சி.பி.இராதாகிருஷ்ணன்.  
 (C.P. Radhakrishnan )  (சந்திராபுரம், பொன்னுசாமி. ராதாகிருஷ்ணன்)*
அதன்பின் 2004, 2014, 2019 என்று மும்முறை அல்லது அதற்கும் மேல் தொடர்ந்து மண்ணைக் கவ்வியவர் இந்த காவிகிருஷ்ணன்.*  
கோவை மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்படவே இனி இது வேலைக்காவாது என்று இந்தியாவிலேயே அதிசொகுசு பதவியான ஆளுநர் பதவிகள் இவருக்கு வழங்கப்பட்டன.*
இறுதியாக இப்போது இருப்பதிலேயே டம்மி பதவியான துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.  வெற்றி எளிதில் வாய்க்குமா எனத் தெரியவில்லை, இருந்தாலும் அவரே வெல்வார்.!  

ஜெயா மரணப் படுக்கையில் இருந்தபோது அதிகமாக இங்கு தொகுறிக் கொண்டிருந்தவர் வெங்கைய்யா.  அவரை அடக்கி கட்டிப் போட இந்தப் பதவியைத்தான் தந்தனர்.  அதன்பின் அவர் நடந்த தடம் கூட யார் கண்ணுக்கும் தெரியவில்லை.

வாக்கு திருட்டு - தேர்தல் ஆணையத்தின் விளக்கம் நகைப்புக்குரியது - காங்கிரஸ் -

 மாலை மலர் : மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டுகள், பீகார் தேர்தல் நெருங்கும் சமயத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் தொடர் சர்ச்சைகளில் சிக்கியது.
இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திபில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தங்கள் நிலைப்பாடு குறித்து விளக்கினார்.

அந்நிய செலாவணியை இறக்குமதியாளர்களுக்கு வாரி வழங்கி விட்டு தொடர்ந்து கோட்டை விடும் இலங்கை

May be an image of car

தேயிலை இறப்பர் போன்ற உள்நாட்டு உற்பத்திகளாலும், புலம்பெயர்   மக்களாலும், மத்தியகிழக்கு நாடுகளில் பணிபுரியும் மக்களாலும், சுற்றுலா பயணிகள் வருகையாலும்,  தான் இலங்கைக்கு அதிக அளவு அந்நியச்செலாவணி கிடைக்கிறது1
இப்படி கிடைக்கும் அந்நிய செலாவணியை கோழிமுட்டையில் இருந்து லக்ஷ்ரி கார் வரையில்  இறக்குமதி செய்வதற்கு தாராளமாக  வாரி வாரி வழங்குகிறார்கள் 
அந்த இறக்குமதியாளர்களின் இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் சுங்கவரியை  இலங்கை ரூபாயில் செலுத்துகிறார்கள் 
இந்த இறக்குமதியாளர்கள் மேல்மட்ட செல்வாக்கு இல்லாமல் ஒரு போதும் இறக்குமதி அனுமதியையோ  அதற்கு உரிய அந்நிய செலாவணியையோ பெற முடியாது 
எந்த அரசு வந்தாலும் இந்த " இறக்குமதியாளர்கள்" எனப்படுபவர்கள் கொடுக்கவேண்டியதை கொடுத்து பெறவேண்டியதை பெறுவார்கள் 
இதனால் தொடர்புடைய பலரும் பெரிய அளவு பயன்பெறுவர்கள்!

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

BJP துணை ஜனாதிபதி வேட்பாளர் தமிழ்நாட்டின் சி.பி. ராதாகிருஷ்ணன்

 மின்னம்பலம் - Mathi  : பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான, மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் திடீரென பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் 15 மணி நேர சோதனை! எதுவுமே கைப்பற்ற படவில்லை

 மாலை மலர்  :  திண்டுக்கல் தமிழக ஊரக வளர்ச்சி த்துறை அமைச்சரும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமியின் சென்னை மற்றும் திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரம் துரைராஜ் நகரில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
இதேபோல் திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள அவரது மகனும், பழனி தொகுதி எம்.எல்.ஏ.வுமான செந்தில்குமார் வீடு, வள்ளலார் நகரில் உள்ள அமைச்சரின் மகள் இந்திரா வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையிட்டனர்.

நாகப்பட்டினம் - இலங்கை இடையே கப்பல்- மாணவர்களுக்கு சலுகை கட்டணம்

tamil.samayam.com  - அ.அரவிந்தன் :  nagapattinam srilanka ferry service offer to school and college students
இந்த கப்பல் சேவையானது தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனாலும் அடிக்கடி ரத்து செய்யப்படுகிறது. 
பயணிகள் அதிக அளவில் பயணிக்காததால் நஷ்டத்திற்கு கப்பல் சேவையை நடத்துவதற்கு அந்த நிறுவனம் தயாராக இல்லை.
இதனால் அடிக்கடி பயணம் ரத்து செய்யப்படுகிறது. பொதுவாகவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் வெளிநாடுகளில் பொருளிட்டுவதால் ஓரளவுக்கு செல்வ செழிப்புடன் இருக்கின்றனர். அவர்கள் இலங்கைக்கு சென்று அங்குள்ள இயற்கை வளங்களை ரசிப்பார்கள் என்ற நோக்கத்தில் தான் இந்த கப்பல் நிறுவனம் நாகப்பட்டினத்தை தேர்வு செய்து கப்பல் சேவையை தொடங்கியது.

திருச்செந்தூர் கடலில் நீராடிய பக்தர்களுக்கு கால் முறிவு!

 மின்னம்பலம் - christopher  : திருச்செந்தூர் கடலில் நீராடிய பக்தர்கள் 10க்கும் மேற்பட்டோருக்கு கால்முறிவு ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று (ஆகஸ்ட் 16) ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து பின்னர் கோவில் முன்புள்ள கடலில் நீராடி வருகின்றனர்.