செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

சுதர்சன் ரெட்டி- இந்தியா கூட்டணியின் துணை குடியரசு தலைவர்! யார் இவர்?

 மின்னம்பலம் -  Mathi : துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியின் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணியின் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா ஆளுநராக பதவி வகிக்கிறார். உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர் சுதர்சன் ரெட்டி.

யார் இந்த சுதர்சன் ரெட்டி?

    1946-ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திராவில் பிறந்தவர்.
    ஹைதராபாத்தில் வழக்கறிஞராக 1971-ம் ஆண்டு பணியாற்ற தொடங்கினார்.
    1988- 1990-ல் ஆந்திரா அரசின் ப்ளீடராக பதவி வகித்தார்.
    ஹைதராபத் ஒஸ்மானியா பல்கலைக் கழகத்தின் சட்ட ஆலோசகராக பணியாற்றினார்.
    1995-ம் ஆண்டு ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
    2005-ம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தின் குஹவாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியானார் சுதர்சன் ரெட்டி.
    பின்னர் 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
    2013-ம் ஆண்டு கோவா மாநிலத்தின் முதலாவது லோக் ஆயுக்தா நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆனால் 7 மாதங்களில் அந்த பதவியை ராஜினாமா செய்தார்.
    தற்போது ஹைதராபாத் International Arbitration and Mediation Centre போர்டு அறங்காவலராக இருக்கிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக