![]() |
| actor vijay with out wick |
சுமதி விஜயகுமார் : விஜய்யின் மேடை பேச்சு முக்கிய அரசியல் பிரச்சனைகளை தொடாமல்,
சினிமா வசனத்தை போல தொண்டர்களின் (ரசிகர்களின்) கை தட்டலுக்கு ஏற்றவாறு அமைந்திருந்தது, மாநாட்டில் போதுமான அளவிற்கு கழிப்பறை வசதிகள் இல்லை,
தொண்டர்கள் நாற்காலிகளை உடைத்தார்கள்,
கம்பங்கள் மேல், மரத்தின் மேல் ஏறினார்கள்.
மேடையில் பேசியவர்களின் தமிழில் அத்தனை பிழைகள் இருந்தன,
என்பதை எல்லாம் தாண்டி,
விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்குகளை எப்படி பிரிக்க போகிறார்,
அதனால் தமிழ்நாட்டின் அரசியல் எப்படி மாறப் போகிறது என்பது தான் மிக முக்கியம்.
'வராரு வராரு வந்துட்டாரு' என்று மாஸ் என்ட்ரியுடன் விஜய் டிவியில் விஜயகாந்தின் பேட்டி நிகழ்ந்தது.
அதில் என்ன பேசினார் என்பதெல்லாம் நினைவில் இல்லை.
ஆனால் திமுக, அதிமுக என்று மீண்டும் மீண்டும் இரண்டே இரண்டு சாய்ஸ் அலுத்து போன சமயத்தில், விஜயகாந்தின் வருகை ஒரு மாற்றமாக தோன்றியது.
என்ன மாற்றம் ? வாக்குச்சாவடியில் புதிதாக ஒரு சின்னத்திற்கு வாக்கு செலுத்தலாம். அதன் பின்னர்?
அந்த அரசியல் நீர்த்து போன பின்னர் , மீண்டும் ஒரு புதிய சின்னத்திற்காக காத்திருக்கலாம்.
ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்திருந்த சமயம், சகாயம் IAS அவர்களை அரசியலில் கொண்டுவரும் முயற்சிகள் நடந்தன.
நேர்மையான ஆள், தமிழகத்தை மாற்றிவிடுவார் என்றெல்லாம் பதிவுகளை காண முடிந்தது.
பின்னர் அது அப்படியே அமுங்கி போனது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சில இளைஞர்கள் சிலர் ஒரு புதிய கட்சியை (அல்லது இயக்கம்) துவங்கி இருந்தார்கள்.
அவர்களின் முகநூல் பக்கத்தை பின்தொடர்ந்து கொண்டிருந்தேன்.
அந்த இளைஞர்கள் தேர்தலில் பங்கெடுக்க வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற பொழுது, பல இடங்களிலும் அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
அந்த தேர்தலுக்கு பிறகு, அந்த வலைதள பக்கம் செயலிழந்து போனது.
நடுவில் டி ராஜேந்திர்,சிவாஜி,சீமான், சரத்குமார், கார்த்திக், பாக்கியராஜ், கமல் என்று பட்டியல் நீலம். இப்போது விஜய்.
சமீப காலங்களில் 'திமுகவை ஆதரிக்கவில்லை என்றால் பிஜேபி உள்ள வந்துரும் ப்ரோ' என்ற sarcasm அதிகமாக காண முடிகிறது.
இந்த முறை திமுக ஆட்சிக்கு வருவது கொஞ்சம் கடினம் தான் என்று பல இடங்களில் இருந்தும் கேட்க முடிகிறது.
திமுகவின் பலமான தொகுதிகளில் ஒன்று பழனி.
அங்கேயே இந்த முறை திமுக மேல் அதிருப்தி இருக்கிறது என்று கேட்ட பொழுது கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது.
பரந்தூர் போராட்டம், lockup மரணங்கள், ஜாதி ஆணவ படுகொலைகள், சாம்சங் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம் என்று அடுக்கடுக்கான குற்றசாட்டுகள் உள்ளன.
இதற்கிடையில், தொண்டர்களுக்கில்லை, முதலில் அமைச்சர் பதவியில் இருப்பவர்களுக்கு சமூக நீதி பாடம் எடுக்கும் அளவிற்கு தான் கட்சியும் இருக்கிறது.
இவை எல்லாவற்றையும் தாண்டி திமுகவை ஆதரிக்க இரண்டே இரண்டு காரணங்கள் தான்.
ஒன்று ஸ்டாலின். மற்றொன்று அண்ணா பேசிய அரசியலை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும் கட்சி.
அதிமுக நீர்த்து போயுள்ள இந்த வேளையில், திமுகவிற்கு சரியான எதிர்க்கட்சி இல்லாமல் போனது, தமிழ்நாட்டின் சாபக்கேடு.
திமுகவிற்கு தவெக சரியான போட்டியாக வருமா என்பதை தாண்டி, வெறும் தேர்தல் வெற்றியை மட்டுமே குறி வைத்து அரசியலுக்கு வந்த கட்சி, நாளை வெற்றிபெற்றதும் என்ன விதமான அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை எப்படி கணிக்க முடியும்!
ஓட்டு போடுவதை தவிர அரசியல் தெரியாத மக்களை விட்டுவிட்டு, திமுக மேல் வெறுப்பில் இருக்கும், குறைந்த பட்ச அடிப்படை அரசியல் அறிந்தவர்கள் கூட தவெகவை ஆதரிப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. திமுகவை எதிர்ப்பதில் எந்த பிழையும் இல்லை. அது நற்சீற்றம் கூட. எப்போதுமே ஆளும் கட்சி தான் மக்களுக்கு எதிரி. ஆனால் திமுகவை எதிர்த்து தவெகவை ஆதரிப்பவர்கள் கீழ் கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்
1.தவெகவின் அடிப்படை கொள்கை என்ன?
2.திமுகவின் எந்தெந்த திட்டங்களை எல்லாம் தவெக ஆதரிக்கிறது , எதிர்க்குறது? அதற்கான காரணங்கள் என்ன ?
3.விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா , ராஜ் மோகன் தவிர , வேறு பேச்சாளர்கள் யார் யார் ?
4.கட்சி துவங்கி நிகழ்ந்த பட்ட இரண்டு பெரிய மாநாடுகளை தவிர வேறு எத்தனை கூட்டங்கள் நடத்தப்பட்டன (காணொளி வாயிலாகவேனும்)
5.விஜய் தன் கட்சியினருடன் எத்தனை முறை ஆலோசனை கூட்டங்கள் நிகழ்த்தியுள்ளார்?
6.விஜய் வேண்டாம், ஆனால் எத்தனை மக்கள் போராட்டங்களில் தவெகவினர் கலந்து கொண்டுள்ளனர்?
7.கட்சியில் ஜாதியின் அடிப்படியில் பதவிகள் கொடுக்கப்படுகின்றன என்ற குற்றசாட்டை அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
8. விஜய் எப்போது பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவார்?
அடிப்படை கொள்கை என்று ஒன்று இல்லாமல், வெறும் மாற்றம் என்றும் தேர்தல் வெற்றிக்காகவும் துவங்கபடும் கட்சிகள் இதுவரை ஆட்சியை பிடித்ததேயில்லை. திமுகவை ஓரம்கட்ட வேண்டுமென்றால், வலிமையான கொள்கை கொண்ட கட்சி தான் மாற்றாக இருக்க முடியும். அது தான் ஆரோகியமானதும் கூட.
அந்த வகையில் தவெகவும் ஒரு சில்வண்டு தான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக