திங்கள், 18 ஆகஸ்ட், 2025

அந்நிய செலாவணியை இறக்குமதியாளர்களுக்கு வாரி வழங்கி விட்டு தொடர்ந்து கோட்டை விடும் இலங்கை

May be an image of car

தேயிலை இறப்பர் போன்ற உள்நாட்டு உற்பத்திகளாலும், புலம்பெயர்   மக்களாலும், மத்தியகிழக்கு நாடுகளில் பணிபுரியும் மக்களாலும், சுற்றுலா பயணிகள் வருகையாலும்,  தான் இலங்கைக்கு அதிக அளவு அந்நியச்செலாவணி கிடைக்கிறது1
இப்படி கிடைக்கும் அந்நிய செலாவணியை கோழிமுட்டையில் இருந்து லக்ஷ்ரி கார் வரையில்  இறக்குமதி செய்வதற்கு தாராளமாக  வாரி வாரி வழங்குகிறார்கள் 
அந்த இறக்குமதியாளர்களின் இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் சுங்கவரியை  இலங்கை ரூபாயில் செலுத்துகிறார்கள் 
இந்த இறக்குமதியாளர்கள் மேல்மட்ட செல்வாக்கு இல்லாமல் ஒரு போதும் இறக்குமதி அனுமதியையோ  அதற்கு உரிய அந்நிய செலாவணியையோ பெற முடியாது 
எந்த அரசு வந்தாலும் இந்த " இறக்குமதியாளர்கள்" எனப்படுபவர்கள் கொடுக்கவேண்டியதை கொடுத்து பெறவேண்டியதை பெறுவார்கள் 
இதனால் தொடர்புடைய பலரும் பெரிய அளவு பயன்பெறுவர்கள்!


இவர்கள் இலங்கை ரூபாயில் செலுத்தும் வரியை நாட்டின் வருமானமாக கணக்கு காட்டுவது 
என்னவிதமான பொருளாதார தத்துவம் என்று எனக்கு விளங்கவில்லை 

இந்த இறக்குமதியாளர்கள் தாங்களாகவே சம்பாதித்த அந்நிய செலாவணியை வரியாக  செலுத்தினால் அதில் ஒரு நியாயம் இருக்க கூடும்

வழி தேங்காயை.எடுத்து தெருவில் போட்டு உடைத்து விட்டு 
அத்தியா அவசிய தேவை என்று வரும்போது  உலகம் முழுதும் கடன் கேட்டு அலைவது ஏன்?   
இலங்கை சுங்கத்துறை வரலாற்றில் வரலாற்றில் ஒரே மாதத்தில் அதிகபட்ச வருவாய் கடந்த (ஜுலை மாதம்)  ரூ. 235 பில்லியன்  கிடைத்துள்ளது
இது 2023 ஆம் ஆண்டில் ரூ. 100 பில்லியனாக காணப்பட்டது.  ஆனால் இன்று ரூ. 235 பில்லியனைத் தாண்டிய நிலையை அடைந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக