செவ்வாய், 5 நவம்பர், 2024

அமரன் படத்தில்தான் அவாளுக்கு எத்தனை வசதி?

Kamal Haasan opens up on 'Amaran'; reveals why he decided to make the film!  | Tamil Movie News - Times of India

ராதா மனோகர் :  காஷ்மீர் தீவிரவாதி  இந்திய ராணுவம்
உண்மை கதை என்ற எக்ஸ்ட்ரா ஜிகினா வேற
நாட்டில் எத்தனையோ உண்மை கதைகள் தேடுவாரின்றி இருக்கிறது
ஆனாலும் முஸ்லீம் தீவிரவாதி இந்திய ராணுவம் .
போலி தேசப்பற்றை காட்டி கல்லா கட்டுவதற்கு கமலஹாசனுக்கு லட்டு ஒரு போன்ற வாய்ப்பு!
அடிமனதில் உறங்கி கிடைக்கும் பூணூல் வெறிக்கு தீனி போட்டது மாதிரியும் இருக்கும்
சங்கிகளை மகிழ்வித்தது போலவும் இருக்கும்
இஸ்லாமிய வெறுப்பை அதிகாரபூர்வமாக காட்ட தீவிரவாதி தேசபக்தி மசாலா.
அமரன் படத்தில்தான் அவாளுக்கு எத்தனை வசதி?

திங்கள், 4 நவம்பர், 2024

தெலுங்கர்கள் குறித்து அவதூறு பேச்சு…. கஸ்தூரிக்கு பாஜக கண்டனம்!

 மின்னம்பலம் -Selvam  : தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து தான் பேசிய இழிவான கருத்துகளை நடிகை கஸ்தூரி திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக டெல்லி மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி இன்று (நவம்பர் 4) வலியுறுத்தி உள்ளார்.
பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் நேற்று (நவம்பர் 3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, “மன்னர்களின் அந்தப்புரத்து மகளிருக்கு சேவை செய்தவர்கள்தான் தெலுங்கர்கள். எப்போதோ இங்கு வந்த அய்யர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? ” என்று பேசியிருந்தார்.

விஜயலட்சுமி விஜய்க்கு ஆதரவாக சீமானை விமர்சித்து வீடியோ

 hindutamil.in : சென்னை: விஜய்க்கு ஆதரவாக சீமானை விமர்சித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய்யின் கொள்கை குறித்து நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
தவெக தலைவர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாபம் விடுகிறார். விஜயும், திமுகவும் கொள்கை ரீதியாகவே தவறு செய்துள்ளதாக சீமான் கூறுகிறார்.

மகளிர் உதவித்தொகை திட்டத்தை விரிவுபடுத்த கோரிக்கை எழுந்துள்ளது!

 tamil.asianetnews.com - Ajmal Khan : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த திட்டத்தை விரிவுபடுத்த கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடவுள்ளார்.
தமிழக அரசின் பெண்களுக்கான திட்டங்கள்
தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் தங்களது சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும் என்பதற்காகவும், யாரையும் எதிர்பார்க்காமல் சுய தொழில் செய்து வாழ வேண்டும் என்பதற்காவும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

இரான் பல்கலைக் கழகத்தில் ஆடைகளை கழற்றி திடீரென போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவி!

 வெப்துனியா : ஈரான் பல்கலைக் கழகத்தில் பெரும் அதிர்ச்சி.. ஆடைகளை கழற்றி திடீரென போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவி!
ஈரானில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட முடிவு செய்த கல்லூரி மாணவி, திடீரென தனது ஆடைகளை கழற்றி உள்ளாடையுடன் போராட்டம் நடத்தினார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதையடுத்து, பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் மாணவியை கைது செய்தனர்.

திமுகவின் மீது இங்கு பலருக்கு ஒவ்வாமை ஏன்?

 Amudhan R P :  திமுகவின் மீது இங்கு பலருக்கு ஒவ்வாமை ஏன்?
திமுக, பார்ப்பனியத்தை எதிர்க்கிறது. இந்தியத் தேசியத்திடம் சரண் அடையாமல் சம அந்தஸ்தில் உரையாடல் நடத்துகிறது. மாநில சுயாட்சி பேசுகிறது. இந்தி மொழித் திணிப்பை எதிர்க்கிறது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் உரிமையை  வலியுறுத்துகிறது. கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வளர்ச்சியிலும் எல்லோருக்கும் பங்கு என்று இந்தியாவின் பிற மாநிலங்கள் யோசித்துப் பார்க்காத காலத்திலேயே (சுதந்தரம் அடைந்த உடனேயே) முழக்கமிட்டது.  
உயர்ஜாதி வகுப்பினர் கற்பனை செய்கிற இந்தி, இந்து, இந்தியாவை விமர்சனம் செய்யாமல் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது பார்ப்பனியத்தின் தனித்துவ அதிகாரத்தையும் நீர்த்துப் போகச்செய்தது. அது நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டாலும், திமுக போராடிக்கொண்டிருக்கிறது.
இப்படிப் பேசிப் போராடி, ஆட்சியைப் பிடித்து, சாதித்தும் காட்டியிருக்கிறது.

அமைந்தகரை குளியறையில் 16 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் : கணவன், மனைவி உள்பட 6 பேர் கைது - நடந்தது என்ன?

குளியறையில் 16 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் : கணவன், மனைவி உள்பட 6 பேர் கைது - நடந்தது என்ன?

கலைஞர் செய்திகள் - KL Reshma : சென்னை அமைந்தகரை, மேத்தா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் முகமது நிஷாத் என்பவர், பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் கும்பகோணம், திருவிடைமருதூரைச் சேர்ந்த 16 வயது ஒருவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல் பணிப்பெண்ணாக இருந்து வந்தார்.
வீட்டு பணிகள் மட்டுமின்றி, முகமது நிஷாத்தின் குழந்தை பராமரிப்பாளராகவும் இருந்து வந்துள்ளார்

கனடாவில் சங்கிகளின் அட்டகாசம் ..

canada indian

 ராதா மனோகர் : வடஇந்தியாவில் சங்கிகளின் ஆதிக்கம் கூட கூட அவர்கள் ஒரு காட்டு மிராண்டி கும்பல்களாக மாறி கொண்டு வருகிறார்கள் போல் தெரிகிறது  கனடாவிலும் இதர மேற்கு நாடுகளிலும் அவர்களின் பல செயல்பாடுகள் சொல்லும் தரமன்று!
இன்று கனடாவில் அவர்களின் செயல்கள் இங்குள்ள ஏனைய குடிவரவாளர்களுக்கும் ஒரு பெரும் தீமையை விளைவிக்க கூடும்.
வெள்ளை இனத்தவர்களுக்கு வடஇந்திய சங்கிகளுக்கும் ஏனைய தெற்கு ஆசிய மக்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் பெரும் பாலும் தெரிவதில்லை
குறிப்பாக ஆந்திர, கன்னட, மலையாள, சிங்கள, தமிழர்களுக்கும் வடஇந்திய சங்கிகளுக்கும் இடையே தோற்ற வித்தியாசம் பெரிதாக இல்லாத காரணத்தால்  எல்லோரும் சங்கி காட்டுமிராண்டி கூட்டம்தான் என்றுதான் பெரும்பாலும் கருதுவார்கள்.
கனடாவில் ஏராளமான மாணவர்கள் மற்றும் குடிவரவாளர்கள் நிரந்தர வதிவிட அனுமதி கோரி உள்ள நிலையில் இந்த  காட்டு மிராண்டி கூட்டத்தின் மீது உள்ள கோபத்தில் கனடா மக்களும் அரசியல்வாதிகளும்
புதிய கடுமையான குடிவரவு சட்டம் இயற்றவும் நிறைவேற்றவும் கூடும்!

அமெரிக்கா 19 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது!

19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

 BBC News தமிழ் - அபினவ் கோயல்  :  யுக்ரேனில் ரஷ்யா நடத்தி வரும் போருக்கு உதவும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி,
அமெரிக்க அக்டோபர் 30ஆம் தேதியன்று (புதன்கிழமை) 19 இந்திய நிறுவனங்கள் மற்றும் இரண்டு இந்தியர்கள் உள்பட 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது தடை விதித்துள்ளது.
இந்திய பிரஜை ஒருவர் சீக்கிய பிரிவினைவாத ஆதரவு தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவை அமெரிக்க மண்ணில் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டால் இரு நாட்டிற்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்ற நிலையில் அமெரிக்கா இந்தத் தடையை அறிவித்துள்ளது.

"மாநில மொழிகள் உயிரோடு இருப்பதற்கு காரணம் திராவிட இயக்கம்"... கேரளாவில் உதயநிதி பேச்சு!

 மின்னம்பலம் -Selvam  : இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருக்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் திராவிட இயக்கம் தான் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர் 2) தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இன்று ‘மலையாள மனோரமா’ ஊடகக் குழுமத்தின், கலை மற்றும் இலக்கியத் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “திராவிட இயக்க அரசியலில் இலக்கியம் மற்றும் மொழியியலின் தாக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “தந்தை பெரியார் இதே கேரளாவில் 1924-ஆம் ஆண்டு வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தி வெற்றி பெற்றார்.

கலைந்து போன வேடம்

ilakkiyainfo.: தேசிய மக்கள் சக்தி தன்னை மதவாதம், இனவாதம் இல்லாத கட்சியாக அடையாளப்படுத்துவதன் ஊடாக தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை திரட்டுவதற்கு திட்டமிட்டிருக்கிறது.
ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. எனவே, பொதுத்தேர்தலில் எல்லா இனங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சி என நிரூபிக்க முனைகிறது.
தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை குறிவைக்கும், இந்த கட்சி, அவர்களுக்கு அதிகாரங்களைவழங்குவதற்கு தயாராக இருக்கிறதா என்பதுதான் முக்கியமான பிரச்சினையாக உள்ளது.