செவ்வாய், 5 நவம்பர், 2024

தெலுங்கர்கள் மீது அவதூறு =நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

 மாலை மலர் : பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசும்போது "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யாருங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என பெயர் வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." எனப் பேசினார்.



தெலுங்கு பேசுபவர்களை நடிகை கஸ்தூரி இழிவாக பேசியதாக சர்ச்சை வெடித்தது. தெலுங்கு மக்களை இழிவுபடுத்தி பேசிய கஸ்தூரி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, தெலுங்கு மக்கள் குறித்து நான் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவிப்பதாக நடிகை கஸ்தூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில், தெலுங்கு மக்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகை கஸ்தூரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக