tamil.asianetnews.com - Ajmal Khan : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த திட்டத்தை விரிவுபடுத்த கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடவுள்ளார்.
தமிழக அரசின் பெண்களுக்கான திட்டங்கள்
தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் தங்களது சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும் என்பதற்காகவும், யாரையும் எதிர்பார்க்காமல் சுய தொழில் செய்து வாழ வேண்டும் என்பதற்காவும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு உயர்கல்வியின் போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சுய தொழில் செய்ய இரண்டு லட்சம் ரூபாய் வரை மானியத்தில் கடன் உதவி வழங்கப்படுகிறது. மேலும் திருமண உதவி திட்டம். கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மகளிர் உரிமை தொகை திட்டம்
இந்த நிலையில் தான் பெண்களுக்கு மாதம், மாதம் அடிப்படை தேவைகளுக்காக யாரையும் எதிர்பார்க்காமல் வாழும் வகையில் திமுக அரசால் மகளிர் உரிமை தொகை திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் தற்போது வரை ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்துள்ளது. அந்த வகையில் இந்த திட்டத்தில் விதிக்கப்பட்ட விதிமுறைகள் தளர்த்த வேண்டும்,
விரிவாக்கம் செய்யப்படுமா.?
ஆயிரம் ரூபாய் வழங்குவதை 2000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்துப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் மகளிர் உரிமை தொகை தொடர்பாக சூப்பரான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள மகளிர் உரிமை தொகை திட்டம் போல் மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 2000 ரூபாய் வரை மகளிர் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் உதவி தொகை
இந்தநிலையில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள ஜார்கண்ட் மாநிலத்திலும் மகளிர் உதவி தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தற்போதைய முதல்வர் ஹேமந்த் சோரன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன் படி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ், பெண் பயனாளிகளுக்கு மாதம் ரூ 2,500 நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
article_image5
இலவச சிலிண்டர்
மேலும் ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியத்துக்குப் பதிலாக 7 கிலோ உணவு தானியம் வழங்கப்படும். ஓய்வூதியத் தொகையும் உயர்த்தி வழங்கப்படும். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு மதிய உணவில் பழங்கள் மற்றும் முட்டைகளும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கு போட்டியாக பாஜகவும் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன் படி ஜார்க்கண்ட்டில் தங்கள் கட்சி ஆட்சி அமைத்தால் மகளிருக்கு மாதம் 2 ஆயிரத்து 100 ரூபாய் அளிக்கப்படும் அறிவித்துள்ளது. மேலும் வருடத்திற்கு இரண்டு சிலிண்டர்கள் இலவசமாக அளிக்கப்படும், சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக