tamil.oneindia.com - Nantha Kumar R : சென்னை: திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு மீண்டும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Lok sabha Election 2024: In DMK alliance Namakkal parliament Constituency for Kongunadu Makkal Desiya Katchi
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கி விட்டன. ஆளும் திமுக தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரியின் ஒரு தொகுதி என 40 இடங்களிலும் வெல்லும் நோக்கத்தில் வியூகம் வகுத்து வருகிறது.
சனி, 24 பிப்ரவரி, 2024
திமுக கூட்டணியில் கொ ம தே கட்சிக்கு நாமக்கல் தொகுதி இ யூ முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி
வணிகத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் முடக்கப்பட்ட கதை.
பேராசிரியர் Chiam Rabin |
பக்தி இயக்கம் அடிப்படையில் சமணத்துக்கும்,
பௌத்தத்திற்கும் [வணிக வர்க்கம்] சைவத்திற்கும் [ நிலமானிய வர்க்கம் ] இடையில் நடந்த போர் என்பர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடல் ஊரெல்லாம் சென்ற வணிக வர்க்கத்தின் குரலாகத்தான் இருக்க முடியும்.
அதுமட்டுமல்ல அற நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு, திருக்குறள் ,சிலப்பதிகாரம் போன்ற இன்று தமிழை ஒரளவாவது உலகில் தலைநிமிர்ந்து நிற்க வைத்த நூல்கள் உருவாகிய காலம்!
வணிகர்களின் வளர்ச்சி மன்னர்களையும் பொறாமைப்பட வைக்குமளவுக்கு பொருளாதரத்தில் வணிகர்களை உயர்த்தியது.
காவிரிப் பூம்பட்டினம், நாகப்பட்டினம், காஞ்சி மாநகரம் போன்ற நகரங்களும், பரவலான கல்வியும் வளர்ந்தன.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.. விஜயதரணி நாளை பாஜகவில் இணைகிறார்! .
மின்னம்பலம் - Aara : கடந்த இரு வாரங்களாக அரசியல் ரீதியாக ‘தலைமறைவாக’வே இருக்கும் விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, நாளை (பிப்ரவரி 24) பாஜகவில் இணைகிறார்.
வரும் 28 ஆம் தேதி நெல்லையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பாஜக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பெல் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கான பூமி பூஜையில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார்.
இந்த பொதுக் கூட்டத்தில் மோடி முன்னிலையில் விஜயதரணி பாஜகவில் இணையலாம் என்று குமரி வட்டாரத்தில் பேசப்பட்டது.
காங்கிரஸ் தரப்பிலிருந்து புதிய தலைவர் செல்வப் பெருந்தகை, கன்னியாகுமரி சக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் என எவரது அலைபேசி அழைப்புக்கும் பதிலளிக்காத விஜயதரணி டெல்லியில்தான் தொடர்ந்து முகாமிட்டு வருகிறார்
வெள்ளி, 23 பிப்ரவரி, 2024
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கோவை கோர்ட்டில் குற்றவாளிகள் 9 பேர் ஆஜர்
இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹிரன்பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட 8 பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த 2021-ம் ஆண்டு சி.பி.ஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்தநிலையில் அதில் கூடுதல் ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 30-க்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
யாழ் பல்கலைக்கழக மாணவன் வீடொன்றில் வன்முறை வாகனத்துக்கு தீ .. திரும்பிய வழியில் விபத்து உயிரிழப்பு
tamilmirror : உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் குறித்து அதிர்ச்சி செய்தி
யாழ்ப்பாணம் – நீர்வேலியில் நேற்று (21) விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் குறித்து அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.
குறித்த மாணவன், வீடொன்றில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு வாகனத்துக்கு தீவைத்து விட்டு திரும்பிய போதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் நேற்று அதிகாலை நாய் குறுக்காக ஓடியதால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகி பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்தார்.
உதயநிதி கூட்டிய தலைமைக் கழகம்... திமுகவின் ‘குறிஞ்சி’ மெசேஜ்!
அவற்றை பார்த்தபடியே மெசேஜை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
“மின்னம்பலத்தில் இன்று (பிப்ரவரி 22) மாலை 4.42க்கு உதயநிதியின் குறிஞ்சி இல்லத்தில் மாசெக்கள் கூட்டம் என்ற தலைப்பில் செய்தி முதன் முறையாக வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படியே இன்று மாலை ஆறு மணி அளவில் அமைச்சர் உதயநிதியின் அதிகாரபூர்வ இல்லமான குறிஞ்சி இல்லத்தில் திமுக பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன் தொடங்கி, பொருளாளர் டி. ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே. என். நேரு, துணை பொதுச் செயலாளர்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டவர்களோடு அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
கலாஷேத்ரா பாலியல் குற்ற பேராசிரியர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை? உயர்நீதிமன்றம் சாட்டை
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி ஒன்றிய கலாச்சார துறையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது.
மாணவிகள் புகாரை தொடர்ந்து அக்கல்லூரி நிர்வாகம் விசாரித்தது. ஆனால் இந்த குற்றசாட்டு உண்மையல்ல என்று கல்லூரி நிர்வாக விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது.
கோவில்கள் மீது 10 சதவீதம் வரி விதிப்பு: கர்நாடக அரசு
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் திருக்கோவில்களின் வருமானத்தில் 10 சதவீதத்தை அரசு வசூலிக்க இந்தச் சட்ட மசோதா அனுமதிக்கிறது.
இந்நிலையில், இந்தச் சட்டம் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசின் இந்து விரோத கொள்கையை காட்டுகிறது என கண்டனம் தெரிவித்த பா.ஜ.க, முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான மாநில அரசு நிதியைத் தவறாக பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டியது.
வியாழன், 22 பிப்ரவரி, 2024
காங்கிரஸ் ஆம் ஆத்மி 3 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு காங்கிரஸ் -ஆம் ஆத்மி அதிரடி
இந்தியா கூட்டணி வரிசையில் டெல்லியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகள் இரு தரப்புக்கும் இடையே இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று மாலைக்குள் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?
ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, காங்கிரஸ் டெல்லியில் 3 மக்களவைத் தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளிலும் போட்டியிடலாம் எனக் கூறப்பட்டு உள்ளது.
கலைஞர் என்று முதல் அழைத்த நடிகவேள் எம் ஆர் ராதா
கவிஞர் நந்தலாலா : 'பாகப்பிரிவினை' படத்தை இந்தியில் எடுத்தபோது சுனில்தத் சொன்னாராம், "சிவாஜியின் பாத்திரத்தை திலீப்குமார் செய்கிறார்.
ஆனால் ராதாவின் 'சிங்கப்பூர் சிங்காரம்' பாத்திரத்தைச் செய்ய யாராலும் முடியாது" என்று. பாகப்பிரிவினையைத் தெலுங்கில் எடுத்தபோது இதையேதான் என்.டி.ஆரும் சொன்னார்.
ராதாபோல் செய்ய தெலுங்கில் ஆள் இல்லை என்று.
அந்த ஏற்றமும் இறக்கமும் திடீரெனக் கீழே இறங்கிக் கெக்கலி கொட்டும் மாடுலேஷனும்,
அந்தக் குரலின் மாயவித்தைகளை முகத்திலும் காட்டத் தெரிந்த பாவனைகளும்,
நாடார் சமூகத்தினரிடம் இருந்து வேளாளர்-நாயக்க -மறவர் நிலத்தை பறித்து கோவில்களுக்கு எழுதி வாங்கினர்! செப்பு பட்டய ஆதாரம்!
Rachinn Rachinn Rachinn : (24 April 2023) நேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் எத்தனை பேர் வாசித்தனரோ தெரியவில்லை.
இந்த நாளிதழில் திருமலை நாயக்கர் காலத்தில் அவரது மந்திரி பிரதானியாக பிள்ளை இருந்த சமயத்தில் பாண்டிய மரபினரிடம் இருந்து நிலத்தை வலிந்து கைப்பற்றி,
ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவிலுக்கு எழுதிய செய்தி பதிவாகி உள்ளது.
உண்மையில் இங்கு மட்டுமே அல்ல.
இன்னும் பல இடங்களில் இது நேர்ந்தது. நாடார் அச்சம்பாடு உள்ளிட்ட பத இடங்களில்,
நாடார் சமூகத்தினரிடம் இருந்து வேளாளர்-நாயக்க -மறவர் அரசியல் கூட்டணியினர் வலிந்து நிலத்தை பறிமுதல் செய்து,
-அதேவேளை நுட்பமாக கோவில்களுக்கு எழுதி வாங்கினர் என்பதே உண்மையாகும்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கூட பல உரிமைகள் இழந்து வேளாளர் வசம் சேர்ந்தது.
கட்டபொம்ம நாயக்கர் தந்தை, அருணாசலத் தேவன் மற்றும் காயல்பட்டினம் பிள்ளை கூட்டணியினர் அதிகாரம் ஓங்கியது.
நீதிமன்ற வழக்கில் சொற்ப உரிமைகள் உடன் நாடார் தரப்பினர் திருப்தி அடைய நேரிட்டது.
செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை வாதத்திற்கு ஆர்யமா சுந்தரம் பதிலடி ! எல்லாம் தவறு
tamil.oneindia.com - Vignesh Selvaraj : சென்னை: செந்தில் பாலாஜி மீது 30 வழக்குகள் உள்ளதால் அவரை ஜாமீனில் விடக்கூடாது என அமலாக்கத்துறை வாதம் வைத்த நிலையில், அவற்றில் பல கேஸ்கள், போராட்டங்கள் நடத்தியதற்காக, போஸ்டர் ஒட்டியதற்காக போடப்பட்ட வழக்குகள் என பதில் வாதம் வைத்துள்ளது செந்தில் பாலாஜி தரப்பு.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த சில நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையின்போது செந்தில் பாலாஜி தரப்பு பல்வேறு முக்கிய வாதங்களை முன்வைத்தது.
புதன், 21 பிப்ரவரி, 2024
மக்களவைத் தேர்தல் 2024: திமுகவில் யாருக்கு எம்.பி. சீட்? யாருக்கு கிடையாது?
tamil.asianetnews.com - Manikanda Prabu : மக்களவைத் தேர்தலில் திமுகவில் யாருக்கு வாய்ப்பளிக்கப்படும்? யாருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன.
இதுஒருபுறமிருக்க, எம்.பி. தேர்தலில் சீட் கேட்டு பலரும் முட்டி மோதி வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 39 தொகுதிகள் உள்ளன. புதுச்சேரி சேர்த்து 40 தொகுதிகள்.
உ.பி.யில் காங்கிரசுக்கு 17 தொகுதிகளை ஒதுக்கியது சமாஜ்வாதி .. உறுதியான இந்தியா கூட்டணி
இதனை உறுதிபடுத்தும் வகையில், அகிலேஷ் நிருபர்களிடம், ‛ அனைத்தும் சுமூகமாக செல்கிறது. நிச்சயம் கூட்டணி அமையும் ' எனக்கூறியுள்ளார்.
தேசிய அளவில் பா.ஜ.,விற்கு எதிராக அமைக்கப்பட்ட ‛இண்டியா ' கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. சில கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில்,
சில கட்சிகள் தங்கள் மாநிலத்தில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.
செவ்வாய், 20 பிப்ரவரி, 2024
கூட்டணியை லாக் செய்த ஸ்டாலின்? இதுதான் பார்முலா.. எடப்பாடிக்கு செக் வைக்க போகும் அடுத்த 10 நாட்கள்
tamil.oneindia.com -Shyamsundar : சென்னை: திமுக கூட்டணி தீவிரமாக தயாராகி வருகிறது, இன்னும் 10 நாட்களில் இந்தியா கூட்டணி முடிவு பற்றிய அறிவிப்பு வரும். யார் எத்தனை இடங்களில் போட்டியிடுகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியே வரும் என்று மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக சார்பாக சமீபத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அதிமுக நடத்திய இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதாவது வேறு கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை. கூட்டணியில் இடம் கேட்க பெரிய கட்சி தொடங்கி சிறிய கட்சி வரை எதுவும் வரவில்லை. அது அதிமுகவிற்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
Is CM Stalin finalizing the big DMK INDIA alliance with same new parties?
ஒன்றிய அரசுக்கு எதிரான வழக்கை கேரள அரசு திரும்பப் பெற்றால் மட்டுமே நிதி" - ஒன்றிய அரசின் அடாவடி பதில் !
கலைஞர் செய்திகள் = Praveen : ஒன்றிய அரசுக்கு எதிரான வழக்கை கேரளா திரும்பப் பெற்றால் கடன் வழங்கும் அனுமதியை கொடுக்க தயார் என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதிலும், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநில ஆளுநர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் போலவே செயல்பட்டு வருகின்றனர்.
திங்கள், 19 பிப்ரவரி, 2024
தமிழ்நாடு பட்ஜெட் : கல்லூரி மாணவர்களுக்கும் இனி 1,000 ரூபாய்!
மின்னம்பலம் -christopher : தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்ரவரி 19) அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் உயர்கல்வித் துறைக்கு 8,212 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே உயர்கல்விச் சேர்க்கை விகிதம் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. வரும் நிதியாண்டில், அரசு பொறியியல், கலை அறிவியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் கட்டடக் கட்டமைப்புப் பணிகள் 200 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
மேலும், ஒருங்கிணைந்த கற்றல் மேலாண்மை அமைப்புடன் பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை, அறிவியல் கல்லூரிகள் உட்பட 236 அரசு கல்வி நிறுவனங்களுக்கு கணினி மற்றும் இதர அறிவியல் கருவிகள் 173 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.
அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளை (பாலிடெக்னிக்) தொழில்துறை 4.௦ தரத்திற்கு உயர்த்திட 3,014 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை! பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த பேச்சு
தினத்தந்தி : சென்னை: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பான வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகருக்குஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை நடிகரும், அரசியல் பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்..
என் துயரை கேட்டபின் எழுச்சி கொண்டு துணைக்கு வந்த சிங்கமே! ..திரு ஜி ஜி பொன்னம்பலம் குறித்து கலைஞர்!..
வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் திமுக மீது பிராண்டும் ஆரிய பேய்களின் ஒரு பிராண்டல்தான் அது
அது பற்றிய ஒரு குறிப்பு அண்மையில் என் பார்வைக்கு எட்டியது!
கலைஞர் மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி முன்னாள் முதல்வர் திரு பக்தவத்சலம் கம்யூனிஸ்டு தலைவா கல்யாணசுந்தரம் போன்றோர் தயாரித்து திரு எம்ஜியார் அவர்களிடம் கொடுத்தார்கள்
இந்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் விசாரணைக்கு திரு ஜி ஜி பொன்னம்பலம் ஆஜாரானது தெரிந்ததே.
அந்த வழக்குதான் திரு ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் இறுதியாக பேசிய வழக்கு.
அதன் பின் சில நாட்களில் அவர் மலேசியாவில் இயற்கை எய்தினார்
அப்போது திரு கலைஞர் அவர்கள் தனது உற்ற நண்பர் ஜி ஜி பொன்னம்பலத்திற்கு அஞ்சலி செலுத்து முகமாக எழுதிய கவிதையும் அஞ்சலி குறிப்பும் தற்போது என் பார்வைக்கு எட்டியது
ஜி ஜி பொன்னம்பலம் அவர்களின் மறைவுக்கு கலைஞர் அவர்கள் எழுதிய இரங்கல் செய்தியும் கவிதையும்!
பாரெல்லாம் புகழ் பரப்பிய என்னருமை உடன் பிறப்பை இழந்து விட்ட
என் மனதின் துயர் துடைக்க இனி யார் வருவார் இவ்வுலகில்?
உண்மையுள்ள தோழனாய் உயிர் காக்கும் நண்பனாக
நட்புக்கு இலக்கணமாக நான் கண்ட நண்பா நின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு உன்னை இழந்து தவிக்கும் தமிழர் பரம்பரைக்கு குடும்பத்திற்கும் அனுதாபம் தெரிவிக்கும் இக்கட்டான நிலைக்கு என்னை ஏன் ஆளாக்கினாய்? நான் கண்ட நல்லவர்களில்,
நெஞ்சுரமும் நேர்மையும் கொண்ட சட்டத்துறையின் காவலனே -
ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024
மகனை இந்தியா அழைத்து வர நெப்போலியன் எடுக்கும் ரிஸ்க் - 6 மாசம் பயணமா? பிளைட்ல பறந்தா உயிருக்கே ஆபத்து..
1990-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன், இதையடுத்து அரசியலில் ஈடுபட்டு மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த அவர்,
ஒருகட்டத்தில் அமெரிக்காவில் செட்டில் ஆனார்.
அவரது மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு என்கிற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல் போனது.
மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்கா அழைத்து சென்ற நெப்போலியன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
விஜயதாரணி MLA காங்கிரசுக்கு எதிராக போர்க்கொடி .. விரிவான பேட்டி விரிவான பேட்டி
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி முதல் கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடித்துள்ள நிலையில் தமிழக காங்கிரசில் மேற்கொள்ளப்பட்டுள்ள திடீர் அதிரடி மாற்றங்கள் புயலை கிளப்பியுள்ளன.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக 3 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த கே.எஸ்.அழகிரி தேர்தல் நேரத்தில் மாற்றப்பட மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை அவரை மாற்றி விட்டு புதிய தலைவராக செல்வபெருந்தகையை நியமனம் செய்துள்ளது.
டெல்லி பாஜக மாநாட்டில், அண்ணாமலை தரையில் அமர்ந்திருக்கும் காட்சி
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக் குழு மற்றும் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகள் அடங்கிய மெகா அமர்வு நேற்றும் இன்றும் (பிப்ரவரி 17,18) டெல்லியில் நடைபெற்றது.
இந்த முக்கியமான கூட்டத்தில் தமிழ்நாடு பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலை தரையில் அமர்ந்திருக்கும் காட்சி சமூக தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
பாஜகவின் தேசிய அளவிலான நிர்வாகிகள், மாநிலத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
புதிய இந்தியா எனும் கோணல் மரம் -பரகால பிரபாகர் நூல் விமர்சனம்
Su Po Agathiyalingam “ ’இந்து – இந்தி – பாஜக’ எனும் சூத்திரத்துக்குள் கெட்டிப்படுத்தபடும் மனிதத் திரள் என்பது எவ்வளவு ஆபத்தான நகர்வு என்பதை அழுத்தமாகச் சொல்கிறது…”
[ மிக முக்கியமான நூல் குறித்தது .கொஞ்சம் நெடிய கட்டுரையாகிவிட்டது . இன்றைக்கு தேவையானது . அருள்கூர்ந்து பொறுமையாய் முழுதாய் வாசிக்கும் படி வேண்டிக்கொள்கிறேன்.]
நம் சமூகக் கட்டுமானம் என்கிற துணி கிழிக்கப்படுகிறது……
நிதானமாக வாசித்தேன்.. சில பக்கங்களை ஒரு முறைக்கு இரு முறை வாசித்தேன் . கவலை ,கோபம் , அறச்சீற்றம் எல்லாம் ஒருங்கே பீறிட்டன . இந்நூலைப் படிக்கும் உங்களுக்கும் அதே உணர்வு ஏற்படலாம்.
நான் இந்நூலை கடந்த ஒரு வருடமாகக் கேள்விப்படுகிறேன் . விஜய்சங்கர் மொழியாக்கம் செய்யத் தொடங்கியதுமே “ கோணல் மரம்” என்ற சொல் சரியா என கேட்டு பொதுவெளியில் பதிந்தார் . பொருளாதார நூலென்றே எண்ணி இருந்தேன் .வாசித்தபின் அதிர்ந்தேன் . மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியின் ஸ்கேன் ரிப்போர்ட்டாக , பரகால பிரபாகர் எழுதிய நூலே “ புதிய இந்தியா எனும் கோணல் மரம் “
நூல் முகப்பில் சொல்லப்பட்டுள்ள “ கோணல் மரமான மனிதகுலத் திலிருந்து நேரான எதுவும் ஒரு போதும் உருவாக்கப்பட்டதில்லை” என்ற இம்மானுவேல் காண்ட் பொன்மொழியில் இருந்தே தலைப்பு உருப்பெற்றுள்ளது .
தமிழ்நாட்டிற்கு 29 பைசா... ஆனால் உ.பி-க்கு வட்டியுடன் இரண்டு பைசா?” கனிமொழி MP!
கலைஞர் செய்திகள் Prem Kumar : ஒன்றிய அரசு கொண்டுவரும் ஒவ்வொரு மசோதாவிலும் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய திட்டத்திற்கு புரியாத மொழியில் பெயர் வைக்கப்படுகிறது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்பொழுது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டது.
திருப்பதி சமண கோயில்தான்! சமணம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது! பௌத்தம் கால ஓட்டத்தில் அழிந்தது .
முகமது ஜமீல் : பௌத்த மயமாக்கலும் பைத்திக்காரதனமும்:-
திருப்பதி பாலாஜி கோவில் சமண தீர்த்தங்கரர் நேமிநாதர் ஆலயமா?
திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் சமண சமயத்தின் 22 வது தீர்த்தங்கரர் நேமிநாதர் ஆலயம் என்றுதான் அனைத்து வரலாற்று ஆய்வாளர்களும் சொல்கிறார்கள்,
அதில் இந்து மத வரலாற்று ஆராய்ச்சியாளர் 1930ல் பிறந்த திரு.கிருஷ்ண ராவ்,திருப்பதி பாலாஜி கோவில் சமண சமயத்தின் 22 வது தீர்த்தங்கரர் நேமிநாதர் ஆலயம் என்று குறிப்பிடுகிறார்
பல முறை அதனை உறுதியும் செய்து இருக்கிறார்.
விஜய நகர பேரரசைத்தோற்றுவித்த ஹரிஹரனும் புக்கனும் திருப்பதிக்கு செல்கின்றார்கள், அங்கு உள்ள சமண துறவிகளை மிரட்டுகிறார்கள் சிலையை பெருமாள் சிலையாக மாற்றுங்கள்,
நீங்களும் வைணவத்திற்க்கு மாறுங்கள் இல்லையேல் சிரவண பெலகோலாவில் உள்ள பாகுபலி சிலையை உடைப்போம் என்று மிரட்டுகிறார்கள்