சனி, 24 பிப்ரவரி, 2024

வணிகத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் முடக்கப்பட்ட கதை.

May be an illustration of 1 person and studying
பேராசிரியர் Chiam Rabin
TSounthar Sounthar பக்தி இயக்கம் என்ற போர்வையில் சமஸ்கிருதப் பண்பாடு:
பக்தி இயக்கம் அடிப்படையில் சமணத்துக்கும்,
பௌத்தத்திற்கும்  [வணிக வர்க்கம்] சைவத்திற்கும்  [ நிலமானிய வர்க்கம் ] இடையில் நடந்த போர் என்பர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடல் ஊரெல்லாம் சென்ற வணிக வர்க்கத்தின் குரலாகத்தான் இருக்க முடியும். 
அதுமட்டுமல்ல அற நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு, திருக்குறள் ,சிலப்பதிகாரம் போன்ற இன்று தமிழை ஒரளவாவது உலகில் தலைநிமிர்ந்து நிற்க வைத்த நூல்கள் உருவாகிய காலம்!
வணிகர்களின் வளர்ச்சி மன்னர்களையும் பொறாமைப்பட வைக்குமளவுக்கு பொருளாதரத்தில் வணிகர்களை உயர்த்தியது.
காவிரிப் பூம்பட்டினம், நாகப்பட்டினம், காஞ்சி மாநகரம்  போன்ற நகரங்களும், பரவலான கல்வியும் வளர்ந்தன.
வெளிநாடுகளுடன்  தொடர்புகளும் அதிகரித்தன. இதன் பயனாய் பிற மொழிகளில் தமிழ் சொற்கள் கலந்தன. உதாரணம் அகில், தோகை [ மயில்] என்ற சில தமிழ் சொற்கள் யூதர்களின் பாஷையில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலேயே பயன்படுத்தப்பட்டது.
இதுமட்டுமல்ல ,  பைபிளில் வருகின்ற ஆகச்  சிறந்த கவிதை எனக்கருதப்படும்   “உன்னதப்பாட்டு”  [Song of Songs ] என்பதனை  Chiam Rabin  என்ற இஸ்ரேலிய மொழியியல் வரலாற்று  பேராசிரியர் Solomon Songs & Tamil Poetry  என்ற கட்டுரையில் உதாரணம் காட்டி இவை தமிழ்  சங்க இலக்கியத்தின் அகஇலக்கியம் மரபை சார்ந்தது என்கிறார்.

அதுமட்டுமல்ல தமிழ் அகஇலக்கியம் மரபு போன்ற சிறந்த கவிதை மரபு உலகில் வேறெங்கும் கிடையாது என்கிறார். அது வணிகர்கள் மூலம் வந்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
அது மட்டுமல்ல இன்று அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கும் வெளிநாட்டு பொருட்கள் தமிழரின் வணிகத்தின் சிறப்பைக் காட்டுகின்றன. இப்படி பல பெருமைகள் இருக்க ....

மாறாக ஊரைவிட்டு வெளியே போவது பாவம் - அபச்சாரம் என்று சொல்லிவந்த சனாதனக் கும்பல் மன்னர்களின் உதவியுடன் வணிக வர்க்கத்தின் மீது மதம் என்ற [சைவம்- வைஷ்ணவம்] போர்வையில் போர் - வன்முறை முலம் தமிழ் மக்களை  பக்தியில் மூழ்கடித்து, சிதைத்து,

சீரழித்தது மட்டுமல்ல  கோயில்களையும், புரோகிதர்களையும், சாதிப்பிரிவினைகளையும் , சாதிக்கொடுமைகளையும் உருவாக்கி  நிலைநாட்டியுள்ளது. சிலர் இதை எப்படி முற்போக்கு என்கிறார்கள் என்பது புரியவில்லை?  

உலகில் அன்று முதல் இன்று வரை வணிகத்தாலேயே தொடர்புகளும் - வளர்ச்சியும் நிகழ்ந்துள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. வணிகத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் முடக்கப்பட்ட கதை.
படத்தில் பேராசிரியர் Chiam Rabin + கீழடி ..
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக