வெள்ளி, 27 அக்டோபர், 2023

பூட்டான் இந்தியாவை புறக்கணித்து சீனா பக்கம் சாய்கிறதா? இந்தியாவுக்கு என்ன பிரச்னை? BBC

 BBC News தமிழ் -   எழுதியவர், ராகேவேந்திர ராவ் : பூடான் வெளியுறவு அமைச்சரின் சீனப் பயணத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயும் பல வருடங்களாக இருந்துவரும் எல்லைப் பிரச்னை முடிவுக்கு வரலாம் என ஊகங்கள் எழுந்து வருகின்றன.
மேலும், சீனவுக்கும் பூடானிற்கும் இடையே விரைவில் தூதரக உறவுகள் (Diplomatic Relations) ஏற்படுவதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன. இந்த இரண்டு விஷயங்களும் இந்தியாவிற்கு மேலும் தலைவலியைதான் தரப்போகின்றன.
சீனாவிற்கும் பூடானிற்கும் இடையேயான எல்லைப் பிரச்சனையில் சமரசம் ஏதும் ஏற்பட்டால் அது நேரடியாக டோக்லாம் எல்லையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
2017ம் ஆண்டு இந்திய மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையே 73 நாட்களுக்கு மோதல் நிலவியது. பூடானால் தங்களது பகுதி என சொல்லப்படும் இடத்தில் சீனா சாலை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் இந்த மோதல் ஏற்பட்டது.

கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களை அழைத்து வர சட்டப் போராட்டம் நடத்தப்படும்- பாஜக

மாலை மலர் : கட்டாரில்  எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு நேற்று அங்குள்ள நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தனியார் நிறுவனமான அல் தஹ்ராவில் பணிபுரிந்த இந்திய பிரஜைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உளவு பார்த்ததாகக் கூறப்படும் வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கத்தார் அதிகாரிகளோ அல்லது புது டெல்லியோ பகிரங்கப்படுத்தவில்லை.
கட்டார்  நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்களையும் இந்தியா திரும்பக் கொண்டுவர சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது.

கட்டாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை - இந்திய முன்னாள் கடற்படையினர்

BBC News தமிழ் : கட்டாரில்  இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை: மத்திய அரசு என்ன சொல்கிறது?
கட்டாரில்  மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
அல் தஹ்ரா நிறுவனத்தைச் சேர்ந்த 8 இந்திய ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் கத்தார் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதாக முதல்கட்டத் தகவல் கிடைத்துள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், விரிவான தீர்ப்புக்காகக் காத்திருப்பதாகவும் வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

வியாழன், 26 அக்டோபர், 2023

12,000 புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்த ஜெர்மனி தீர்மானம் ஆசிய ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த

lankasri.com : ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ள 12,000 புகலிடக்கோரிக்கையாளர்கள்: கேபினட் எடுத்துள்ள முடிவு
ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் முன்வைத்த, புலம்பெயர்ந்தோர் சிலரை நாடுகடத்துதலை ஒழுங்குபடுத்தும் புதிய புலம்பெயர்தல் மசோதாவை கேபினட் ஏற்றுக்கொண்டுள்ளது.
புலம்பெயர்ந்தோர் சிலரை எளிதில் நாடுகடத்த சட்டம்
ஜேர்மனியின் உள்துறை அமைச்சரான Nancy Faeser, சில புலம்பெயர்ந்தோரை விரைவாக அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு வழிவகை செய்யும் மசோதா ஒன்றை முன்வைத்தார்.
இந்த மசோதா, ஆபத்தானவர்கள் என கண்டறியப்பட்ட புலம்பெயர்ந்தோரை, அதாவது குற்றவாளிகள் மற்றும் ஆட்கடத்தல்காரர்களை அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு ஜேர்மன் அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும்.
மேலும், அவர்களை நாடுகடத்துவதற்காக அதிகாரிகளுக்கு கூடுதல் நேரம் கிடைக்கும் வகையில், அத்தகையவர்களின் தடுப்புக் காவல், 10 நாட்களில் இருந்து 28 நாட்களாக அதிகரிக்கப்பட உள்ளது.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட சம்பவம்: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

தினகரன் : சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ஜெகன்மோகன் ரெட்டி அவசரம் காட்டுவது ஏன்? - BBC News தமிழ்

 bbc.com : ஆந்திரா மாநிலத்தில் நவம்பர் 15 ஆம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
 எழுதியவர், சங்கர் வாடிஷட்டி
ஆனால், இதில் பிகார் அரசு பின்பற்றும் கொள்கைக்கும் ஆந்திர அரசு முன்மொழிந்த கொள்கைக்கும் வித்தியாசம் உள்ளது.
பிகாரில், இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வருவாய்த் துறையினர் தலைமையில் பணிகள் நிறைவடைந்தன.
ஆனால் ஆந்திராவில், கிராமச் செயலகத்தின் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு சாதிக் கணக்கெடுப்பை நடத்த ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.
தன்னார்வலர்களின் பங்கு குறித்து ஏற்கனவே பல விமர்சனங்கள் உள்ளன. இந்த விவகாரம் நீதிமன்றங்கள் தலையிடும் அளவுக்கு சென்றது.

தந்தை பெரியாரை இழிவு படுத்தி பொய்ப்பிரச்சாரம் செய்யும் சாட்டை துரைமுருகன் மீது சட்ட நடவடிக்கை! மனோஜ் குமார் கோரிக்கை

 Manoj Kumar : அனுப்புநர் பெறுநர்:  பொருள்:
தமிழ்நாட்டின் சமூக அரசியலின் முன்னோடியாக திகழும் தந்தை பெரியார் அவர்களை இழிவுபடுத்தியும்,வதந்திகளை பரப்பியும் அதே போல தமிழ்நாட்டில் சாதிய மோதல்களை உண்டாக்கும் விதமாக பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான சாட்டை துரைமுருகன் என்ற நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி.
மதிப்பிற்குரிய அய்யா!
நாம் தமிழர் கட்சியை சார்ந்த சாட்டை துரை முருகன் என்பவர் தன்னுடைய சாட்டை வலையொளியில் (Saattai youtube channel)
தந்தை பெரியார் அவர்கள் குறித்து ஆதாரமற்ற பொய் செய்திகளையும் தந்தை பெரியாரை ஒருமையில் "திருக்குறளை மலம் என்று சொன்ன பெரியாரை செருப்பால் அடித்திருக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்..

அதிமுக என்கின்ற எம் எல் எம் ( MLM ) கம்பனி! ... ஆதாரங்களோடு ஒரு அலசல்

ராதா மனோகர்  : முன்னாள் முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திராவிடம் ஆரியம் பற்றி எல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது.
அதை பற்றி ஆய்வாளர்கள்தான் கூறவேண்டும்!
இதை   ஒரு பாமரனின் ஒப்புதல் வாக்குமூலம் என்றுதான் கூறவேண்டும்!
ஆனால் இந்த வாக்குமூலத்தில் மூலம் இரு குற்றவாளிகள் மீண்டும் ஒரு தடவை அம்பலப்பட்டுள்ளார்கள்!
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் வெறும் ரசிகர் கூட்டத்தை வைத்து ஒரு அரசியல் கட்சியை உருவாக்கிய எம்ஜியாரும்,
அதை இன்னும் மோசமான விதமாக மெருகேற்றிய ஜெயலலிதாவும்தான் உண்மையான குற்றவாளிகள்!
இந்த கட்சி பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஒரு கட்டுரையில் இது பற்றி கூறியுள்ளேன்
அதில் உள்ள விடயங்களை எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதல் வாக்குமூலம் உறுதிபடுத்தி உள்ளது.
அந்த கட்டுரை பின்வருமாறு
மீள் பதிவு :   
ராதா மனோகர் : திமுகவில் இருந்துதான் அ தி மு க என்ற கட்சி உருவானாலும் இரு கட்சிகளும் உண்மையில் நேரெதிர் திசையில் உள்ளவை..

கனடாவுக்கு மீண்டும் இந்திய விசா! Entry visa business visa . medical and confrence visa available

tamil.goodreturns.in - Nantha Kumar R : டெல்லி: இந்தியா-கனடா இடையேயான மோதல் காரணமாக கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான விசா சேவைகள் சமீபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் தான் நாளை முதல் 4 பிரிவுகளுக்கான விசா மட்டும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே சமீபகாலமாக பிரச்சனை உள்ளது. இதற்கு முக்கிய காரணம் கேடிஎப் எனும் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் தான். சீக்கியரான இவர் கனடா குடியுரிமை பெற்று அங்கு வசித்தபடி இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டி வந்தார்.
மோதலுக்கு இடையே .. 4 கேட்டகிரிக்கு மட்டும்.. கனடாவில் இருந்து இந்தியா வர நாளை முதல் விசா
இவர் மீது இந்தியாவில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர் தேடப்படும் தீவிரவாதியாக இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே தான் கடந்த ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.

புதன், 25 அக்டோபர், 2023

தசரா பார்ட்டியில் பெண் மீது அத்துமீறிய இளைஞர்கள் தடுக்க போன தந்தை கொலை ஹரியானாவில்

அத்துமீறிய இளைஞர்கள் - கொலையான தந்தை: டாண்டியாவில் பயங்கரம்

மாலை மலர் : டெல்லி தலைநகர் பகுதிக்கு உட்பட்ட அரியானா மாநிலத்தை சேர்ந்த பகுதி, ஃபரிதாபாத் (Faridabad).
இங்குள்ள செக்டார் 87 பகுதியில் பிரின்சஸ் பார்க் சொசைட்டி (Princess Park Society) எனும் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 52 வயதான பிரேம் மேத்தா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த குடியிருப்பில் தசரா பண்டிகையை முன்னிட்டு வட இந்தியர்கள் கொண்டாடும் கார்பா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி அங்கு டாண்டியா ஆட்டம் நிகழ்ச்சி நடந்தது.
இந்த கொண்டாட்டத்தில் பிரேம் மேத்தாவின் மகளும் பங்கேற்றார்.
அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் இரண்டு இளைஞர்கள் பிரேம் மேத்தாவின் மகளை நெருங்கி, தங்களுடனும் டாண்டியா ஆட்டம் ஆடுமாறு வற்புறுத்தினார்கள். மேலும், அவருடைய தொலைபேசி எண்ணையும் கேட்டு வற்புறுத்தினார்கள். இதனால் பிரேம் மேத்தாவின் மகள் செய்வதறியாது திகைத்தார்.

ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகள் சம்ஸ்கிருதம், கிரேக்கம், சீனத்திற்கு சளைக்காத தனித்துவமான செம்மொழி என்பதை நிரூபித்தவர்

Robert Caldwell - Wikipedia
Robert Caldwell

Vimalaadhithan Mani  :  ராபர்ட் கால்டுவெல் என்ற திராவிட கருத்தியல் ஆசான் !!!
தமிழ்மொழி சம்ஸ்கிருதம், கிரேக்கம், சீனம் ஆகியவற்றிற்கு சளைக்காத ஒரு தனித்துவமான செம்மொழி என்பதை உலகிற்கு நிரூபிக்கும் விதமாக
” A comparative grammar of the Dravidian or South-Indian family of languages “ நூலினை எழுதியவர் ராபர்ட் கால்டுவெல். அவர் மட்டும் இந்த நூலை எழுதியிருக்காவிட்டால் இந்திய மண்ணில் தமிழ் மொழியின் பெருமையைக் குழி தோண்டிப் புதைத்திருப்பார்கள். .
”A Political and General History of the District of Tinnevelly ” என்ற நூலையும் அவர் எழுதினார்.
 கால்டுவெல் வெறும் மொழியறிஞர் மட்டுமில்லை.
அவர் வெகு தீவிரமான சமூகமுகம் கொண்டவரும்கூட என்பதை அவரது வாழ்க்கையை ஊன்றி கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திராவிட மொழிகள் தனித்துவமான ஒரு திராவிட மொழிக் குடும்பம் என்பதைக் கால்டுவெல் நிறுவினார்.
ஏறக்குறைய 1816 வரை இந்திய மொழிகளுக்கு எல்லாம் முதன்மை சமஸ்கிருதம் என்ற பரப்புரை விவாதத்திற்கு இடமின்றி தொடர்ந்தது.இந்த வாதம் தவறு என 1816ல் பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி இங்கே சமஸ்கிருதம்,பிராகிருதமல்லாத திராவிட மொழிக் குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது என அறிவித்தார்.

நவராத்திரி கூட்டணி.. ரஜினி வீட்டில் துர்கா ஸ்டாலின், விஜய் தாயார் ஷோபா, ஓபிஎஸ், தமிழிசை சவுந்தரராஜன்!

tamil.oneindia.com - Mathivanan Maran : தினுசான கூட்டணி.. ரஜினி வீட்டில் துர்கா ஸ்டாலின், விஜய் தாயார் ஷோபா, ஓபிஎஸ், தமிழிசை சவுந்தரராஜன்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின் சகோதரி செல்வி, நடிகர் விஜய் தாயாபார் ஷோபா சந்திரசேகர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் என பிரபலங்கள் ஒரே நேரத்தில் சங்கமித்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.
நவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் கொண்டாட்டம் களைகட்டும். இந்த ஆண்டும் நவராத்திரி கொண்டாட்டங்களுக்கு சிறப்பான ஏற்பாடுகளை ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் செய்திருந்தார்.
அத்துடன் ஏராளமான விவிஐபிகளுக்கும் லதா ரஜின்காந்த் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

துடியலூர் பேருந்து நிலையம் 8 வயது பெண் குழந்தை பிச்சை எடுக்கிறாள்.

May be an image of 3 people, hospital and text

Loganayaki Lona : அதிகாரிகள்  அரசியல்வாதிகள் பார்வைக்கு,
துடியலூர் பேருந்து நிலையம்  வாழ் மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்க!
முதல்படத்தில் ஒரு 8 வயது பெண் குழந்தை தியேட்டருக்குள் பிச்சை எடுக்கிறாள்.
எதுக்கு பணம் என்றதும் புத்தகம் நோட்டு வாங்க அப்பா அம்மாவிடம் 500 ரூபாய் நோட்டு தான் உள்ளது என பிச்சை எடுக்க அனுப்பியதாக பதில் தந்தாள்.
அடுத்த படத்தில் ஒரு அம்மா குழந்தையுடன் பிச்சை எடுக்கிறார்.

செவ்வாய், 24 அக்டோபர், 2023

இலங்கைக்கு விசா தேவை இல்லை . ஏழு நாடுகளுக்கு இந்த சலுகை

மாலை மலர் : ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு விசா எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். சில நாடுகளில் விசா எடுப்பதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையாகவும், சில நாடுகளில் இந்த வழிமுறைகள் மிகவும் கடுமையாகவும் இருக்கின்றன.
அந்த வகையில், இந்தியாவில் இருந்து இலங்கை செல்வதற்கு இந்தியர்கள் இனி விசா எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இலங்கை அரசு அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பின் மூலம் இந்தியர்கள் விசா எடுக்காமலேயே இலங்கைக்கு சென்றுவர முடியும். விசா இன்றி வெளிநாட்டவரை அனுமதிக்கும் திட்டத்தை இலங்கை அரசு சோதனை முறையில் துவங்கி இருக்கிறது.

ரஷ்ய அதிபர் புதினுக்கு மாரடைப்பு ஏற்படாத தகவல் வெளியாகியுள்ளது

tamil.oneindia.com : மாஸ்கோ: ரஷ்ய அதிபர் உடல்நிலை குறித்துக் கடந்த சில காலமாகவே தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போது புதிய பரபர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யாவில் புதின் அதிபராக இருக்கிறார். அங்கே பல ஆண்டுகளாக அதிபர் பதவியில் அவரே தொடரும் நிலையில், சாகும் வரை அதிபர் பதவியில் இருக்கும்படி சட்டத்தையும் மாற்றிக் கொண்டார்.
அங்கே தேர்தல் என்ற பெயரில் அவ்வப்போது வாக்குப்பதிவு நடந்தாலும் கூட பெரும்பாலும், எதிர்க்கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனு எதாவது ஒரு காரணம் சொல்லி நிராகரிக்கப்படும்.

கக்கனின் மகன் கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் 30 வருடங்களாக --அனைவராலும் கைவிடப் பட்ட நிலையில்-- கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு

தினமலர் : கக்கன் அய்யாவின், கடைசி மகன், நடராஜ மூர்த்தி.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி யில், எம்.பி.பி.எஸ்., முடித்தார்.
பின், சென்னைத் துறைமுகத்தில், தற்காலிக வேலை கிடைத்தது.
பணி நிரந்தரம் ஆகாத நிலையில், ஆறு மாதத்தில் வந்து விட்டார்.
 திருமணம் செய்து கொள்ளவும் இல்லை. துறைமுக வேலையை விட்டு வந்ததும், மனநலம் பாதிக்கப்பட்டது. கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.
பாவம், 25 ஆண்டுகளாக, அதுவே அவரது நிரந்தர வீடாக மாறி விட்டது.
நடராஜ மூர்த்தி மீது, கக்கன் அய்யா மிகுந்த பாசம் வைத்திருந்தார். கக்கன் வாரிசுகள் நல்ல நிலையில் இருக்கின்றனர் . நடராஜ மூர்த்தியை அவர்கள் ஆதரிக்கவில்லை

வெற்றிமணி தமிழன் :   தமிழ்த்திரைப்பட இயக்குநர் ருத்ரன், தனது "வெற்றிச் செல்வன்' படத்தின் காட்சிகளை 20நாட்களுக்கும் மேலாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் படமாக்கியிருக்கிறார்
அந்த அனுபவங்களைக் கேட்கச் சென்ற ஒரு பத்திரிகையாளர் எழுதுகிறார் ...

நடிகை கவுதமியை ஏமாற்றிய அழகப்பனுக்கு நிதியமைச்சர் நிர்மலா உபி முதல்வர் யோகி எல்லாம் தொடர்பாம்?

மின்னம்பலம் - Aara ; தமிழக பாஜகவில் 25 வருடங்களாக இருக்கும் நடிகை கௌதமி இன்று (அக்டோபர் 23) அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்கான காரணமாக நீண்ட ஆங்கில அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில்,. “பாஜகவில் இருக்கும் அழகப்பன், எனது சொத்துகளை ஏமாற்றிவிட்டார்.
அவரை பாஜகவில் இருப்பவர்களே காப்பாற்றுகிறார்கள்” என்று வேதனையோடு தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் பாஜகவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தவர் நடிகை கௌதமி.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதிப் பொறுப்பாளராக பணியாற்றினார்.
அந்தத் தொகுதியில் போட்டியிட விரும்பியும் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதையும் இன்றைய தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

திருவண்ணாமலையில் டாடா சுமோ மோதல் .. உடல் நசுங்கி 7 பேர் மரணம்

tamil.oneindia.com - Velmurugan P :  திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசுப் பேருந்தும், டாடா சுமோ காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்ட விபத்தில்,
காரில் பயணித்த 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
10 வினாடி கவனக்குறைவு பலரையும் விபத்தில் சிக்க வைத்துவிடுகிறது. விபத்திற்கு 10 வினாடிக்கு முன்பு ஒருவர் சாதாரித்தால் நிச்சயம் தப்பிவிட முடியும்.
துரதிஷ்டவமாக விபத்திற்கு ஒரு சில நொடிகளுக்கு முன்பே விபத்தில் சிக்க போகிறோம் என்பது டிரைவர்களுக்கு தெரிய வருகிறது.
அப்போது ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
பெரும்பாலான விபத்திற்கு கவனக்குறைவு காரணம் என்றாலும், அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, வாகனங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை போன்றவை தான் விபத்திற்கு மூலக்காரணமாக இருக்கிறது.

Court மராத்தி ... திரைத் தாலாட்டுக்களில் இருந்து விழிக்கலாம் முடிந்தால்?

ராதா மனோகர் : கோர்ட் ....மராத்தி ஹிந்தி குஜராத்தி ஆங்கிலம் எல்லாம் கலந்த கலவை!
2015 இல் வெளிவந்த  Court  ஒரு மராத்தி திரைப்படம். வழக்கமாக நான் ரசித்த  படங்களை பற்றி எல்லாம் வாய்க்கு வந்த படி அளந்து கொண்டு வரும் எனக்கு,
 இந்த படம் ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்து விட்டது.
வழக்கமான திரைப்படங்களுக்கு உரிய சட்ட திட்டங்களும் அல்லது கற்பனைகளும் .எதிர்ப்பார்ப்புக்களும் இந்த படத்துக்கு பொருந்தாது .
எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி விட்டது Court கோர்ட்.
இது எந்த மொழி படம் என்று அறுதியாக கூறமுடியாதோ அதே போலவே இது என்ன படம் என்றும் இலகுவாக கூறி விட முடியாது.
இந்த படத்தில் வரும் எந்த காட்சியும் ஒரு இலகுவான கவிதையை அல்லது காதலை கூறவில்லை. பின்னணி இசைகூட கிடையாது.
காட்சிகளில் காமராவோ இயக்குனரோ வசனகர்த்தவோ எதுவும் கிடையாது என்ற எண்ணம்தான் தோன்றுகிறது.

திங்கள், 23 அக்டோபர், 2023

Bagri tea தெருநாய்களால் பலியான தொழிலதிபர்! பக்ரி டீ நிறுவன குழும பாரக் தேசாய்

nakkeeran :  குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பாரக் தேசாய்(49). குஜராத்தில் இயங்கிவரும் பிரபல பக்ரி டீ நிறுவன குழுமத்தின் உரிமையாளரான பாரக் தேசாய், கடந்த 15ம் தேதி தனது வீட்டின் வெளியே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த சில தெரு நாய்கள் அவரை துரத்தியுள்ளது. அந்த நாய்களிடம் இருந்து தப்பிக்க பாரக் தேசாய் ஓடியுள்ளார்.
அப்போது அவர் கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதனைக் கண்ட அங்கிருந்த ஒரு வீட்டு காவலரும், அங்கிருந்த பொதுமக்களும் அந்தத் தெருநாய்களை துரத்தியுள்ளனர். மேலும், பாரக் தேசாயை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பாரக் தேசாய் அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நடிகை கௌதமி அளித்த புகாரில் பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு...

தினமணி : நடிகை கௌதமி அளித்த புகாரில் பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு...
சொத்து அபகரிப்பு தொடர்பாக நடிகை கௌதமி அளித்த புகாரில் பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மண்டல காவல் துறை தலைவரிடம், நடிகை கௌதமி அண்மையில் நிலம் மோசடி தொடா்பான புகாா் அளித்தாா்.
அதில், தனக்கு அறிமுகமான சென்னையைச் சோ்ந்த அழகப்பன் பொது அதிகார முகவராக நியமித்தேன். இவரிடம் திருவண்ணாமலையை அடுத்த ஐங்குணம் கிராமத்தில் 3.99 ஏக்கா் விவசாய நிலத்தை வாங்குவதற்காக ரூ.25 லட்சம் பணத்தைக் கொடுத்தேன்.

சிங்களவர்களும் தமிழர்களும் அசல் திராவிட மக்கள்தான்

ராதா மனோகர் :  சிங்கள மொழியிலும் இலங்கை தமிழிலும் சமஸ்கிருதம் அளவுக்கு அதிகமாகவே கலந்திருப்பது பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்
பார்ப்பன மயக்கமும் கூட கொஞ்சம் அதிகமாகவே இருப்பது பற்றியும் ஆய்வு செய்தல் வேண்டும்!.
குறிப்பாக சென்ற நூற்றாண்டில் இலங்கை சிங்கள தமிழ் தலைவர்கள் தமிழக இந்திய பார்பனர்களோடு நெருங்கிய உறவை கொண்டிருந்தார்கள்
குறிப்பாக லண்டனிலும் சென்னையிலும் கல்வி சார்ந்தும் தொழில்துறை சார்ந்தும் நல்ல தொடர்புகளை வைத்திருந்தனர்
 
ஏனெனில் அந்த காலக்கட்டங்களில் பார்ப்பனர்கள்தான் எல்லா உயர்ந்த இடங்களிலும் நிலை கொண்டிருந்தனர்
அதன் காரணமாகவே இலங்கை சிங்கள தமிழ் தலைவர்களுக்கு பார்ப்பனர்கள் மேல் ஒரு அளவு கடந்த மரியாதையை  அல்லது மயக்கம் இருந்தது
இந்த ஆரிய மயக்கமானது சிங்கள மொழியிலும் இலங்கை தமிழ் மொழியிலும் ஏராளமான சம்ஸ்கிருத சொற்கள் கலப்பதற்கு காரணமாகியது

மல்லிகார்ஜுன கார்கே : அதிகார வா்க்கத்தை அரசியல்மயமாக்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்!

தினமணி ;பாஜக தலைமையிலான அரசின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடையே கொண்டு சோ்க்குமாறு அரசு அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடிக்கு ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா்.
கடந்த அக்.18-இல் வெளியான உத்தரவில், ‘இணைச் செயலா், துணைச் செயலா், இயக்குநா் உள்ளிட்ட நிலைகளில் உள்ள மூத்த அரசு அதிகாரிகள், நாட்டில் உள்ள 765 மாவட்டங்களிலும் மத்திய அரசின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவா்’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைத் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டிய மல்லிகாா்ஜுன காா்கே, மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தாா்.

அமிதாப் பச்சனின் 7 மிகப்பெரிய முதலீடுகளும் .. அவற்றின் மதிப்பும்

tamil.goodreturns.in -Goodreturns Staff  :  பாலிவுட்டில் மிகவும் வெற்றிகரமான மற்றும் செல்வாக்கு மிக்க நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் அக்டோபர் மாதம் தான் 81வது பிறந்த நாள்-ஐ கொண்டாடினார்.
பழம்பெரும் நடிகர் 50 வருடங்களுக்கும் மேலாக இந்தி திரைப்படத் துறையில் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறார்.
வெள்ளித்திரையில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல் பல்வேறு வணிகங்களிலும் வெற்றி கண்டுள்ளார். பிக் பி என்று பிரபலமாக அறியப்படும் அமிதாப் பச்சன். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 3,190 கோடி ரூபாய்.
நடிப்பு மற்றும் பிராண்ட் ப்ரோமோஷன் அவரது முதன்மையான வருமான ஆதாரங்கள் என்றாலும், அவர் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் தனது நிதி ஆதரங்களை பன்முகப்படுத்தியுள்ளார்.
சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக்கில் (ஐ.பி.டி.எல்) சிங்கப்பூர் ஸ்லாமர்ஸ் டென்னிஸ் அணியின் இணை உரிமையாளராக இருப்பதில் துவங்கி தயாரிப்பு மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை நடத்துவது வரை, 81 வயதான நடிகர் ஆண்டுக்கு ரூ.60 கோடி சம்பாதிக்கிறார்.

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

பாலத்தீனர்களை கிராமம்கிராமமாக காலி செய்யும் இஸ்ரேலியர்கள்

மேற்கு கரையில் வசித்தவர்களின் நிலை என்ன ?

BBC News தமிழ் :  பாலத்தீனர்களை கிராமம் கிராமமாக காலி செய்யும் இஸ்ரேலியர்கள் - மேற்கு கரையில் என்ன நடக்கிறது?
மேற்கு கரையில் வசித்தவர்களின் நிலை என்ன ?
மேற்கு கரையில் குடியேறிய இஸ்ரேலியர்கள் பாலத்தீன விவசாயியை கற்களால் தாக்கும் காட்சி. (2020 அக்டோபரில் எடுக்கப்பட்டது)
அபேத் வாடிக்கு தனது தொலைபேசியில் செய்தி வந்தபோது, அவர் இறுதிச் சடங்கிற்காக தனது வீட்டில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தார்.

நவராத்திரி நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு .. குஜராத்தில் சோகம் எல்லோருக்கும் சின்ன வயசு:

tamil.oneindia.com  - Vignesh Selvaraj : அகமதாபாத்: குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில், நவராத்திரி கொண்டாட்டத்தின்போது கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் பலியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட மாநிலங்களில் நவராத்திரிக் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. நவராத்திரி கொண்டாடப்படும் ஒன்பது நாளும் இரவுகளில் ஆடப்படும் நாட்டுப்புற நடனம் கர்பா. கர்பா நடனத்தை பாரம்பரிய உடைகளுடன் ஆண்களும், பெண்களும் விடியும் வரை இசைக்கு ஏற்ப ஆடுவார்கள்.
10 heart attack deaths in past 24 hours at garba events in Gujarat made big shock
நவராத்திரி விழாவின் போது பெண்ணின் தெய்வீக வடிவமான துர்க்காதேவியை மையமாக வைத்து, ஒன்பது சக்தி வடிவ தெய்வங்களைப் பாடுபொருளாகக் கொண்டுள்ள கர்பா பாடல்கள் இசைக்கப்படும்.

RPF சேத்தன் சிங்கை நேரில் ஆஜர்படுத்துவது ஆபத்து! - போலீஸ் தரப்பு மனு

நக்கீரன் : RPF சேத்தன் சிங்கை நேரில் ஆஜர்படுத்துவது ஆபத்து! - போலீஸ் தரப்பு மனு
ரயில்வே பாதுகாப்புப் படை வீரராக இருந்தவர் சேத்தன்சிங் சவுத்ரி. இவர் கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி ஜெய்ப்பூர் - மும்பை விரைவு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அவர் பயணித்து அந்த ரயில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை அருகே உள்ள பால்கர் என்ற ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது ரயிலில் இருந்த சேத்தன் சிங் சவுத்ரி, தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தனது உயர் அதிகாரியான உதவி காவல் ஆய்வாளர் திகாராம் மீனாவை சுட்டார்.
மேலும், அங்கிருந்த மற்ற 3 பயணிகளையும் கொடூரமாகச் சுட்டு, கொலைவெறி தாக்குதல் நடத்தினார். அவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.