ஞாயிறு, 22 அக்டோபர், 2023

நவராத்திரி நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு .. குஜராத்தில் சோகம் எல்லோருக்கும் சின்ன வயசு:

tamil.oneindia.com  - Vignesh Selvaraj : அகமதாபாத்: குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில், நவராத்திரி கொண்டாட்டத்தின்போது கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் பலியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட மாநிலங்களில் நவராத்திரிக் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. நவராத்திரி கொண்டாடப்படும் ஒன்பது நாளும் இரவுகளில் ஆடப்படும் நாட்டுப்புற நடனம் கர்பா. கர்பா நடனத்தை பாரம்பரிய உடைகளுடன் ஆண்களும், பெண்களும் விடியும் வரை இசைக்கு ஏற்ப ஆடுவார்கள்.
10 heart attack deaths in past 24 hours at garba events in Gujarat made big shock
நவராத்திரி விழாவின் போது பெண்ணின் தெய்வீக வடிவமான துர்க்காதேவியை மையமாக வைத்து, ஒன்பது சக்தி வடிவ தெய்வங்களைப் பாடுபொருளாகக் கொண்டுள்ள கர்பா பாடல்கள் இசைக்கப்படும்.
வட மாநிலங்களில் பலவற்றில் கர்பா நடனம் ஆடப்பட்டாலும் முக்கியமாக, குஜராத் மாநிலத்தில் கர்பா நடனம் புகழ் பெற்றது.
அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தின்போது கர்பா நடனமாடிய 10 பேர் ஒரே நாளில் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாரடைப்பால் உயிரிழந்த 10 பேரும் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
10 heart attack deaths in past 24 hours at garba events in Gujarat made big shock

அகமதாபாத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கர்பா நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இதேபோல், கபத்வாஞ்ச் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் கர்பா நடனமாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்துள்ளார். இதே போன்ற மேலும் 8 பலிகள் குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளன.

நவராத்திரி தொடங்கிய முதல் 6 நாட்களில் கர்பா நடனமாடியபோது 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் நவராத்திரி கொண்டாட்டங்கள் தொடங்கியது முதல் 6 நாட்களில் மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மாரடைப்பு தொடர்பாக 108 ஆம்புலன்ஸ்க்கு 521 அழைப்புகள் வந்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

'பொயட்டு’ பிரதமர்.. மோடி எழுதிய பாடல்கள் அடுத்தடுத்து ரிலீஸ்! யூடியூபை தெறிக்க விடுதே! 'பொயட்டு’ பிரதமர்.. மோடி எழுதிய பாடல்கள் அடுத்தடுத்து ரிலீஸ்! யூடியூபை தெறிக்க விடுதே!

எனவே, நவராத்திரி நிகழ்ச்சிகளில் கர்பா நடனம் நடக்கும் இடங்களுக்கு அருகே உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க குஜராத் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ்கள் நிகழ்வுகளுக்கு விரைவாக வரும் வகையில் ஏற்பாடுகளைச் செய்யவும் கர்பா அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நவராத்திரியை ஒட்டி கர்பா நடன நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய கர்பா அமைப்பாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தங்கள் ஊழியர்களுக்கு CPR பயிற்சி அளிக்கவும், பங்கேற்பாளர்களுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக