புதன், 25 அக்டோபர், 2023

நவராத்திரி கூட்டணி.. ரஜினி வீட்டில் துர்கா ஸ்டாலின், விஜய் தாயார் ஷோபா, ஓபிஎஸ், தமிழிசை சவுந்தரராஜன்!

tamil.oneindia.com - Mathivanan Maran : தினுசான கூட்டணி.. ரஜினி வீட்டில் துர்கா ஸ்டாலின், விஜய் தாயார் ஷோபா, ஓபிஎஸ், தமிழிசை சவுந்தரராஜன்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின் சகோதரி செல்வி, நடிகர் விஜய் தாயாபார் ஷோபா சந்திரசேகர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் என பிரபலங்கள் ஒரே நேரத்தில் சங்கமித்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.
நவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் கொண்டாட்டம் களைகட்டும். இந்த ஆண்டும் நவராத்திரி கொண்டாட்டங்களுக்கு சிறப்பான ஏற்பாடுகளை ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் செய்திருந்தார்.
அத்துடன் ஏராளமான விவிஐபிகளுக்கும் லதா ரஜின்காந்த் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்.. முதிர்வுத்தொகை பெற இன்றே கடைசி.. வெளியானது அறிவிப்புமுதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்.. முதிர்வுத்தொகை பெற இன்றே கடைசி.. வெளியானது அறிவிப்பு

இந்த அழைப்பை ஏற்றுதான் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின் சகோதரி செல்வி, நடிகர் விஜய் தாயாபார் ஷோபா சந்திரசேகர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் ரஜினி வீட்டில் சங்கமித்தனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் மனைவியுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அதேபோல திரை பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பெருங்களத்தூர் டூ ஜிஎஸ்டி ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்.. காலையிலேயே நெரிசலில் சிக்கிய சென்னைபெருங்களத்தூர் டூ ஜிஎஸ்டி ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்.. காலையிலேயே நெரிசலில் சிக்கிய சென்னை

சென்னையில் அதுவும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில், அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கிற அத்தனை 'சக்தி'களும் ஒன்று திரண்டது பார்க்க கண்கொள்ளா காட்சியாகவும் இருந்தது.. பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் தீனியும் போட்டுக் கொண்டே இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக