திங்கள், 23 அக்டோபர், 2023

Bagri tea தெருநாய்களால் பலியான தொழிலதிபர்! பக்ரி டீ நிறுவன குழும பாரக் தேசாய்

nakkeeran :  குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பாரக் தேசாய்(49). குஜராத்தில் இயங்கிவரும் பிரபல பக்ரி டீ நிறுவன குழுமத்தின் உரிமையாளரான பாரக் தேசாய், கடந்த 15ம் தேதி தனது வீட்டின் வெளியே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த சில தெரு நாய்கள் அவரை துரத்தியுள்ளது. அந்த நாய்களிடம் இருந்து தப்பிக்க பாரக் தேசாய் ஓடியுள்ளார்.
அப்போது அவர் கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதனைக் கண்ட அங்கிருந்த ஒரு வீட்டு காவலரும், அங்கிருந்த பொதுமக்களும் அந்தத் தெருநாய்களை துரத்தியுள்ளனர். மேலும், பாரக் தேசாயை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பாரக் தேசாய் அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


மேலும், அவரது வீட்டிற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அகமதாபாத் மருத்துவமனையில் பாரக் தேசாயை பரிசோதித்த மருத்துவர்கள், கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
பிறகு அவருக்கு அங்கு தீவிர மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில், தீவிர சிகிச்சையில் இருந்த பாரக் தேசாய் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பாரக் தேசாய்க்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக