வியாழன், 26 அக்டோபர், 2023

தந்தை பெரியாரை இழிவு படுத்தி பொய்ப்பிரச்சாரம் செய்யும் சாட்டை துரைமுருகன் மீது சட்ட நடவடிக்கை! மனோஜ் குமார் கோரிக்கை

 Manoj Kumar : அனுப்புநர் பெறுநர்:  பொருள்:
தமிழ்நாட்டின் சமூக அரசியலின் முன்னோடியாக திகழும் தந்தை பெரியார் அவர்களை இழிவுபடுத்தியும்,வதந்திகளை பரப்பியும் அதே போல தமிழ்நாட்டில் சாதிய மோதல்களை உண்டாக்கும் விதமாக பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான சாட்டை துரைமுருகன் என்ற நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி.
மதிப்பிற்குரிய அய்யா!
நாம் தமிழர் கட்சியை சார்ந்த சாட்டை துரை முருகன் என்பவர் தன்னுடைய சாட்டை வலையொளியில் (Saattai youtube channel)
தந்தை பெரியார் அவர்கள் குறித்து ஆதாரமற்ற பொய் செய்திகளையும் தந்தை பெரியாரை ஒருமையில் "திருக்குறளை மலம் என்று சொன்ன பெரியாரை செருப்பால் அடித்திருக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்..


"பெரியார் திருக்குறளை மலம் என்று எங்கேயும் குறிப்பிடவில்லை மாறாக,  நாடு முழுவதும் திருக்குறள் மாநாடு நடத்தினார்"
உண்மை இவ்வாறு இருக்க,  சாட்டை துரை முருகன் பெரியாரை இழிவுபடுத்தி பேசியிருக்கிறார்..
மேலும் தமிழ்நாட்டில் ஜாதி மோதல்களை உருவாக்கும் விதமாகவும் பல்வேறு ஜாதிகளை இழிவுபடுத்தியும் அந்த காணொளியில்  பேசியிருக்கிறார்..
அதே போல பெரியார் தலித் பெண்கள் ரவிக்கை அணிந்ததால்
துணி விலை ஏறிவிட்டதாக கூறியதாகவும் திட்டமிட்டு பொய்யை தனது காணொளியில் பரப்பியுள்ளார்.
இவர் ஏற்கனவே முன்னாள் தமிழ்நாடு முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள்,  முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களை அநாகரீகமாக பேசியதற்காக கைது செய்யப்பட்டு , "இனிமேல் இது போல் பேசமாட்டேன்" என மன்னிப்பு கோரி பிணையில் விடுதலையானார்..
சிறையிலிருந்து வெளி வந்து மீண்டும் அதே போல தமிழ் நாட்டின் மதிப்புமிக்க தலைவர்களான பெரியார்,  அண்ணா, கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்..
தொடர்ந்து சமூக பதட்டத்தையும், வன்முறையையும் விதமாக  பேசி வரும் இந்த நபரை உடனடியாக கைது செய்யும்படியும் கேட்டுக் கொள்கிறோம்..
(அவர் பேசிய அவதூறு காணொலிகள் இந்த புகாரோடு இணைக்கப்பட்டுள்ளது)
*************************
மேலே உள்ள கடித மாதிரியை பயன்படுத்திக் கொண்டு,,,,
பெரியாரை இழிவுபடுத்தும் விதமாக தொடர்ச்சியாக பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றும்,பெண் பித்தன் என்றும்,தலித் விரோதி என்றும் தொடர்ச்சியாக பேசி வரும் இவனுக்கு எதிராக வாய்ப்புள்ள தோழர்கள் எல்லா மாவட்டங்களிலும் புகார் கொடுக்கவும்,,,
இப்படி பெரியாருக்கு எதிராக பொய்யை பரப்புபவர்கள் மீது நாம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறினால் இது தொடர்கதையாக மேலும் தொடரும்,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக