சனி, 11 மார்ச், 2023
ஹோலி கொண்டாட்டத்தில் ஜப்பான் பெண் மீது டெல்லி இளைஞர்கள் பாலியல் அத்துமீறல்
இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 8ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த தண்ணீரை ஊற்றியும் மக்கள் மகிழ்ச்சியாக ஹோலி பண்டிகையைக் கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டங்களில் போது இந்தியாவிற்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் டெல்லியில் உள்ள பகர்கஞ்ச் பகுதியில் அப்பகுதி மக்கள் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு இருந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் மீது வண்ணம் பூசுவதுபோல் இளைஞர்கள் சிலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ நேற்று இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வைகோ திருமா சந்திப்பு! மக்கள் நலக்கூட்டணி 2.0 .... ?
நக்கீரன் : அண்மையில் தொலைக்காட்சி நேர்காணலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது.
இக்கேள்விகளுக்கு திருமா பதில் அளித்தது சர்ச்சையாக்கப்பட்டது.
திருமாவளவனின் நேர்காணல் குறித்து மதிமுக துணைப் பொதுச்செயலாளர் தி.மு. ராசேந்திரன் காட்டமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.
அரசு பள்ளிக்குள் 10ம் வகுப்பு மாணவன் கொலை: 3 மாணவர்கள் கைது! திருச்சி மாவட்டம்
மாலை மலர் : திருச்சி மாவட்டம் தொட்டியம் பாலசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் தோளூர்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கோபி மகன் மவுலீஸ்வரன் (வயது 15) என்பவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றிருந்தார்.
நேற்று மதியம் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். சில மாணவர்கள் சிறு, சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது, ஏற்பட்ட தகராறில் மவுலீஸ்வரனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
தொடர்ந்து அவர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் 3 மாணவர்கள் சேர்ந்து மவுலீஸ்வரனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
அண்ணாமலை மீது வழக்கு: திமுக அரசைக் கண்டித்து சென்னையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
மாலை மலர் : சென்னை: வடமாநில தொழிலாளர்கள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்த திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் - தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ மற்றும் மாநில துணை தலைவர்கள் கரு நாகராஜன், திருப்பதி நாராயணன் ஆகியோர் தலைமையில் ஏராளமான பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
வெள்ளி, 10 மார்ச், 2023
காஷ்மீர் அமெரிக்க new york times தலையங்கம்! இந்தியா கடும் கண்டனம்
புதுடில்லி: காஷ்மீர் பற்றிய தகவல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அமெரிக்காவை சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்திக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பொய் மற்றும் கற்பனையான தகவல்களையும், இந்தியா குறித்து பொய் செய்திகளையும் பரப்பி வருவதாக குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவை சேர்ந்த நாளிதழ், இந்தியா குறித்து செய்தி வெளியிடும் போது நடுநிலையை கடைபிடிப்பதை நீண்ட நாட்களுக்கு முன்னரே நிறுத்திவிட்டது.
அந்த நாளிதழ், காஷ்மீர் குறித்த செய்தியை தவறான மற்றும் கற்பனையாக வெளியிட்டு உள்ளதுடன், இந்தியா மற்றும் அதன் ஜனநாயக அமைப்புகள் குறித்து பொய் பிரசாரம் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் வெளியிட்டு உள்ளது.
சீமானை ஏன் கைது செய்யவில்லை? பீகாரில் இருந்து பிரஷாந்த் கிஷோர் கேள்வி!
மின்னம்பலம் - christopher : சீமானை ஏன் கைது செய்யவில்லை? பீகாரில் இருந்து பிரஷாந்த் கிஷோர் கேள்வி!
வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழ்நாடு அரசுக்கு பிரஷாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் வடஇந்திய தொழிலாளர்கள் இந்தியில் பேசியதற்காக தூக்கிலிடப்பட்டதாகவும், கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளானதாகவும் கடந்த வாரம் இணையத்தில் பரப்பப்பட்ட போலி வீடியோக்கள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இருமாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் உயரதிகாரிகள் இதுகுறித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.
6 முறை இதய துடிப்பு நின்ற ஆசிரியர் உயிர் பிழைத்த அதிசயம் .. சென்னை அரசு மருத்துவ மனையில்
மாலை மலர் : சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜேஷ் (38). இவர் மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைத்த அதிசய சம்பவம் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது.
ஆசிரியர் பணி செய்து வந்த ராஜேசுக்கு கடந்த மாதம் 28-ந்தேதி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரை சைதாப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
கொந்தளித்த திருமா! மறுபுறம் தூதுவிடும் செல்லூர் ராஜூ! நோட் பண்ணுங்க
tamil.oneindia.com - Vigneshkumar : திருமாவளவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
சென்னை: தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. திருமாவளவனும் சில நாட்களுக்கு முன்பு, பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அது திமுக கூட்டணியாக இருந்தாலும் என்று கூறியிருந்தார். இந்தச் சூழலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இப்போது திமுக தலைமையிலான கூட்டணி வலுவாகவே உள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் உருவான இந்தக் கூட்டணி அதன் பிறகு பல்வேறு தேர்தல்களை இணைந்தே சந்தித்து வருகிறது.
வியாழன், 9 மார்ச், 2023
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு
BBC News தமிழ் : ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் அரசுக்கே ஆளுநர் ஆர்.என். ரவி அனுப்பி வைத்த நிலையில், அந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்போம். இரண்டாவது முறையாக மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தெரிவித்தாக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் இனி தேசிய கட்சி அல்ல... கேசிஆர் மகள் கவிதா சொன்ன 'டீம் பிளேயர்' அட்வைஸ்
மாலை மலர் :புதுடெல்ல மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை அமல்படுத்தக் கோரி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், பாரத் ரஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கவிதா டெல்லி வந்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சி இனி தேசிய கட்சி அல்ல என்றும், அது எப்போது தன் ஆணவத்தை விட்டுவிட்டு யதார்த்தத்தை எதிர்கொள்ளுமோ? என்றும் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் ஒரு அணியின் வீரராக (டீம் பிளேயர்) இருக்க வேண்டும், பாஜகவை தோற்கடிக்க வேண்டுமானால் மாநில கட்சிகளுடன் கூட்டணி சேரவேண்டும், என்றும் கவிதா தெரிவித்தார்.
கொளத்தூரில் பன்னோக்கு மருத்துவமனை : அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்முதல்வர்
minnambalam.com - christopher : கொளத்தூரில் பன்னோக்கு மருத்துவமனை : அடிக்கல் நாட்டிய முதல்வர்
கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.71.81 கோடி மதிப்பில் பன்னோக்கு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 8) அடிக்கல் நாட்டினார்.
சென்னை கொளத்தூரில் பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம், இஸ்திரி பெட்டி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.71.81 கோடி மதிப்பில் பன்னோக்கு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
நடிகை கஸ்தூரி சர்ச்சை ட்வீட்.! : திமுக எம்பி அப்துல்லா ஒரு பெண்ணா.?-
tamil.samayam.com : போனமுறை கலைஞரை இழிவுபடுத்திய நடிகை கஸ்தூரி, இம்முறை திமுக எம்பி அப்துல்லாவிற்கு மகளிர் வாழ்த்து கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய ட்வீட்களுக்கு பெயர் பெற்றவர் நடிகை கஸ்தூரி.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி, நாடு முழுவதும் பேசு பொருளானது.
குறிப்பாக பீகார் மாநில தொழிலாளர்கள் கொல்லப்படுவதாகவும், எரிக்கப்படுவதாகவும் வதந்தி பரவியது. அதைத் தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தமிழக அதிகாரிகளுடன் இது குறித்து பேசினார்.
தொடர்ந்து பீகார் அதிகாரிகள் குழு தமிழகம் வந்தது.
வானதி சீனிவாசன் : அண்ணாமலையின் தைரியமான பேச்சும் வேகமான செயல்பாடுகளும் எப்பொழுதும் என்னை ஈர்ப்பவை
நக்கீரன் : “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்றோரின் நீண்ட நெடிய அனுபவம் என்பது ஒவ்வொரு கட்சியில் இருப்பவர்களையும் ஈர்க்கக் கூடியதுதான்” என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை சித்தாபுதூரில் பாஜக மகளிரணி சார்பில் 25 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “அண்ணாமலையின் தைரியமான பேச்சும் வேகமான செயல்பாடுகளும் எப்பொழுதும் என்னை ஈர்ப்பவை. அவர் நேற்று பேசியது ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கும் தலைவர்களைப் போல் இந்த கட்சிக்கும் நான் தலைவன் என்ற அர்த்தத்தில் தான் சொன்னார்.
அந்த பேட்டியை நீங்கள் முழுவதுமாக பாருங்கள். எனக்கும் நேற்று அண்ணாமலையின் பேட்டியை பார்த்தபோது என்ன இந்த பேட்டி இப்படி இருக்கிறதே என நினைத்தேன்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி : அரசு பள்ளிகளில் நுழைவுத்தேர்வு என்ற வார்த்தையே இருக்காது-
மாலை மலர் : சென்னை அரசு பள்ளி மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளை ஊக்குவிக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சிறார் திரைப்படங்கள் ஒவ்வொரு மாதமும் திரையிடப்படுகிறது.
அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியை நாடகமாக நடித்தல், திரைப்படங்களுக்கு சுவரொட்டி வரைதல், விமர்சனம் தெரிவித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் சிறந்த 3,163 மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். அதில் வென்ற 152 மாணவர்கள் மாநில அளவில் நடந்த திரைப்பட விழாவுக்கு அழைக்கப்பட்டனர். இந்த விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். விழா முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதன், 8 மார்ச், 2023
சாதி மதம் பெண்களை அடிமைப்படுத்தவே... ஆண்களுக்கு விழிப்புணர்வு தேவை” - வனிதா ஐபிஎஸ்
நக்கீரன் : தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. புரட்சியாளர்கள் மூலம் எவ்வளவோ விழிப்புணர்வு வந்துவிட்டது. ஆனாலும் சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன.
பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள், ஆண்களுக்கு ஏற்பட வேண்டிய விழிப்புணர்வு குறித்து நம்மோடு கூடுதல் காவல்துறை இயக்குநர் வனிதா ஐபிஎஸ் உரையாடுகிறார்.
ஈரானில் 5 ஆயிரம் மாணவிகளுக்கு விஷம் கொடுத்த இஸ்லாமிய தீவிரவாத கும்பல்கள்? விசாரணைக்கு உத்தரவு
BBC tamil : ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு ஹிஜாப் விவகாரத்தில் போலீஸ் காவலில் மாஷா அமினி என்ற இளம்பெண் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக பரவியது. இந்நிலையில், அதற்கு அடுத்த ஒரு மாதத்தில் கடந்த நவம்பரில் பள்ளிக்கு சென்ற மாணவ மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பரவலாக நடந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.
ஷியா பிரிவு முஸ்லிம்களின் நகரான குவாம் நகரில் நவம்பரில் தொடங்கிய இந்த நிகழ்வு ஈரானில் உள்ள 31 மாகாணங்களில் 25 மாகாணங்கள் வரை பரவியுள்ளது.
அ.தி.மு.க. அசுர வேகத்தில் வளர்வதால் பா.ஜ.க.வினர் தாமாக இணைகிறார்கள!. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
மாலைமலர் :சென்னை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கல் வீசினால் உடைவதற்கு அ.தி.மு.க. என்பது கண்ணாடி அல்ல. அ.தி.மு.க. என்பது ஒரு சமுத்திரம், பெருங்கடல். அதில் கல் வீசினால் கல்தான் காணாமல் போகும். ஆனால் சமுத்திரம் இருந்து கொண்டுதான் இருக்கும்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. இன்று எழுச்சியுடன் உள்ளது. அ.தி.மு.க. அசுர வேகத்தில் வளர்வதால் பா.ஜ.க.வினர் விருப்பப்பட்டு தாமாக முன் வந்து இணைகிறார்கள்.
நாங்கள் யாரையும் இழுக்கவில்லை. தாமாக முன்வந்து இணைவதை அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எல்லாருக்கும் இருக்க வேண்டும்.
KK Nagar உள்ள அண்ணா பிரதான சாலை (Anna Main Road) பேசுகிறேன்.!
Kandasamy Mariyappan : கலைஞர் கருணாநிதி நகரில் (KK Nagar) உள்ள அண்ணா பிரதான சாலை (Anna Main Road) பேசுகிறேன்.!
நான், எனது பெயரில் ஆட்சி நடத்தும் எனது தம்பிகள் கருணாநிதிக்கும், ராமச்சந்திரனுக்கும் நடுவில் இருக்கிறேன்.!
150 அடி அகலம் 1,500 மீ்ட்டர் நீளம் உடையவன்.!
பில்லர் சாலை என்ற பெயர் பலகையை என்மீது வைத்துள்ளனர்.!
மணப்பாக்கம், போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், நெசப்பாக்கம் பகுதிகளிலிருந்து நகரத்திற்குள்ளும்...
நகரத்திலிருந்து நெசப்பாக்கம், ராமாபுரம், வளசரவாக்கம் மணப்பாக்கம், போரூர் பகுதிகளுக்கும் லட்சக்கணக்கான வாகனங்கள் என்மீது பயணம் செய்கின்றன.!
கடந்த 20 ஆண்டுகளாக வருடம் முழுவதும் யாராவது என்னை தோண்டிக் கொண்டே இருக்கின்றனர், அல்லது இயற்கையாகவே என்மீது ஒரு பெரிய பள்ளம் உருவாகி விடுகிறது.!
தம்பி முக. ஸ்டாலின் மேயராக இருந்த போது என்னை பிரித்து நடுவில் ஒரு குட்டி தடுப்பு சுவர் கட்டினார்.!
தம்பி மா. சுப்பிரமணியம் மேயராக இருந்த போது அந்த தடுப்பு சுவரை தொட்டி போல் கட்டி செடிகளை வைத்தார்.!
என்மீது எத்தனையோ தாய்மார்கள் கடைகள் வைத்து அவர்கள் பிழைப்பு நடத்துகின்றனர்.!
பாஜகவுக்கான B-Team அரசியலை பீகாரோடு நிறுத்திக்கொள்ளுங்கள்”.. சிராக் பாஸ்வானுக்கு ஆ.ராசா MP எச்சரிக்கை!
கலைஞர் செய்திகள்: பா.ஜ.க.வுக்கான B-Team அரசியலை சிராக் பாஸ்வான் தமிழ்நாட்டில் செய்ய வேண்டாம் என கண்டனம் தெரிவித்து தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
முற்போக்கு அரசுகள் அமைந்தாலும் சமூகத்தில் வேரூன்றிவிட்ட பழமைவாதத்தாலும் புரட்டுகளாலும் போதிய கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்காமல் வடமாநில சகோதர சகோதரிகள் தவிக்கின்றனர். தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் உருவாக்கிய மாற்றத்தை, மண்டல் எழுச்சி ஏற்படுத்திவிடக் கூடாது என இன்னுமும் சில பிற்போக்குச் சக்திகள் முயன்று வருகின்றன. இதனால், வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் வேலை தேடியும் புதுவாழ்வு தேடியும் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பணிபுரியும் அவர்களது நிம்மதியையும் கெடுக்கும் வகையில் சுயநல அவதூறு அரசியலை பா.ஜ.க. செய்வதும், அதற்கு மறைந்த ராம் விலாஸ் பாஸ்வான் மகனும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வான் துணை போவதும் கடும் கண்டனத்திற்குரியது.
வட மாநில தொழிலாளர்களுக்கு தைரியம் சொன்ன முதல்வர் ஸ்டாலின். பயப்படாதீங்க.. சாப்பாடு கிடைக்குதா?.
tamil.oneindia.com - Jeyalakshmi C : நாகர்கோவில்: வாட்ஸ்அப்களில் வரும் வதந்திகளை நம்பாதீர்கள் என்றும் பயப்படாமல் தைரியமாக இருங்கள் என்றும் வட மாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து நம்பிக்கை அளித்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள தொழிற்சாலைகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஹோட்டல்கள், கட்டிட வேலை, பனியன் தொழிற்சாலை உள்ளிட்ட பல நிறுவனங்களில் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
பீகார், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவியது. இதனையடுத்து வட மாநில தொழிலாளர்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டது. வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
செவ்வாய், 7 மார்ச், 2023
“இப்போ நானும் உள்ள போகணும்னு சொல்றீங்களா?” - உதயநிதி ஸ்டாலின்
நக்கீரன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் அமைச்சர் சேகர்பாபு புகைப்படக் கண்காட்சியை நடத்தி வருகிறார்.
இந்த கண்காட்சியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியார்களைச் சந்தித்த அவர்,
“எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற கண்காட்சியை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாடு செய்துள்ளார். மாணவர்கள் இளைஞர்கள் போன்றோர் வந்து பார்த்துக் கொண்டு உள்ளனர்.
கலைஞர், முதல்வர் ஸ்டாலினை உழைப்பு உழைப்பு உழைப்பு என பாராட்டினார்.
தமிழ்நாடு பஜாக் உட்கட்சி பூசல், கூட்டணி டமார்.. ஜேபி நட்டா மார்ச் 10-ல் வருகை!
tamil.oneindia.com - Mathivanan Maran : சென்னை: தமிழ்நாடு பாஜகவின் உட்கட்சி பூசல் உச்சகட்டமாக வெடித்திருக்கிறது. தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் நிர்வாகிகள் அதிமுகவில் இணைவதால் கூட்டணியிலும் பிளவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரும் 10-ந் தேதி பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா தமிழ்நாடு வருகை தர உள்ளார்.
தமிழ்நாடு பாஜகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன் விலகி அதிமுகவில் இணைந்தார்.
அவரைத் தொடர்ந்து பாஜக ஐடிவிங்கில் இருந்து நிர்மல் குமார், திலீப் கண்ணன் ஆகியோரும் விலகினர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளை மிக கடுமையாக விமர்சித்தே பலரும் வெளியேறி வருகின்றனர்.
மேலும் பாஜகவுடனான கூட்டணியால்தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக மிக மோசமான தோல்வியை தழுவியதாகவும் கூறப்படுகிறது.
திங்கள், 6 மார்ச், 2023
இத பன்னி திங்குது; நாய் திங்குது; கோழி திங்குது. ..நீ போய் இப்படி கேட்டியா? கஸ்தூரி அப்துல்லா முகநூல் கருத்துமோதல்
Comments
Duraiz Arumugam : திமுக பெண் நிர்வாகிகள் கிட்ட என்ன ண்ணே கேட்கணும்??
கஸ்தூரி பாட்டி கலைஞர் கூட travel பண்ணாத பத்தியா?
LR Jagadheesan : Duraiz Arumugam இந்த பதிவையும் அதில் நீங்கள் தெரிவித்திருக்கும் கருத்தையும் உங்கள் வீட்டுப்பெண்கள் அல்லது நீங்கள் பெரிதும் மதிக்கும் பெண்களிடம் காட்டி அவர்கள் உங்கள் கருத்து குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.
முடிந்தால் எனக்கும் தெரிவியுங்கள்.
இந்த ஒட்டுமொத்த சர்ச்சையையும் திமுக தரப்பில் ஆண்கள் ஆணின் பார்வையில் மட்டுமே அணுகிக்கொண்டு ஆணாதிக்க மொழியிலேயே பதில் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்களே தவிர,
இத்தகைய எதிர்வினைகளை திமுகவில் இருக்கும் பெண்களோ கட்சி சாராத பெண்களோ எப்படி பார்ப்பார்கள் எடுத்துக்கொள்வார்கள் என்கிற எந்த பரிசீலனையும் உங்களிடம் எழவே இல்லை.
தனியார் பஸ்களில் பெண்கள்-மாணவர்களுக்கு இலவச சலுகை உண்டு: அமைச்சர் சிவசங்கர் பேட்டி
மாலை மலர் : சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
சென்னைக்கு தினமும் வந்து செல்லும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பஸ் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தனியார் பஸ்கள் இயக்க கன்சல்டன்ட் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
இவை அமைக்கப்பட்ட பிறகு 3 மாதத்தில் ஆய்வு செய்து சாதக, பாதகம் குறித்து அறிக்கை தரும். அதன் பிறகுதான் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் மாநகர பஸ் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது.
திருமாவளவன் : ஏற்கனவே எச்சரித்தேன்..இனிமேலாவது சீரியஸாக இருங்கள்’
tamil.samayam.com : வடமாநில தொழிலாளர்கள் குறித்து பொய் செய்திகளை பரப்பியவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜகவினர் முயற்சி செய்வதாக சமீபத்தில் நடந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்துகள் கட்சி தலைவர் திருமாவளவன் எச்சரித்து இருந்தார். வடமாநில தொழிலார்கள் குறித்த சர்ச்சையில் அவரது கணிப்பு உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே அவர் எச்சரிக்கை விடுத்த நிலையில், சீரியஸாக செயல்பட சொல்லி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
‘‘பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டார்கள்' என்கிற பொய்யான செய்தியை வேண்டும் என்றே சமூக ஊடகங்களின் மூலமாகப் பரப்பி நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள்மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
தலைமறைவான இம்ரான் கான்? கைது நடவடிக்கையை தடுக்க கட்சித் தொண்டர்கள் போராட்டம்
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான்,
பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அடுத்து பதவி விலகினார்.
தனது ஆட்சிக்காலத்தில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றது தொடர்பாக பெடரல் ஏஜென்சி நடத்திய விசாரணையில் 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கி வெளிநாட்டு நிதி பெற்றது தெரியவந்தது.
இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஞாயிறு, 5 மார்ச், 2023
ரயில் தண்டவாளமருகே கிடந்த பாமக மகளிரணி தலைவியின் சடலம்
நக்கீரன் : ரயில்வே தண்டவாளம் அருகே பா.ம.க. மகளிரணி தலைவியின் உடல் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள ரெங்கசமுத்திரம் கிராமம் சண்முகத்தாய் என்பவரின் மகள் மாரியம்மாள் (44).
இவர் குருவிகுளம் ஒன்றிய பா.ம.க. மகளிரணி தலைவி பொறுப்பிலிருப்பவர்.
மாரியம்மாள் தனது கணவரைப் பிரிந்து ரெங்கசமுத்திரத்தில் தனியாக வசித்து வந்தாராம்.
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை” - பீகார் குழு
நக்கீரன் தமிழகத்தில் புலம்பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவியது.
ஆனால் அப்படி யாரும் தாக்கப்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் திமுக அரசும் தமிழ்நாட்டு மக்களும் அரணாக இருப்பார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகப் பரவிய வதந்தியை அடுத்து ஆய்வு செய்வதற்காக இன்று சென்னை வந்த பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலக் குழுக்கள்
தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் தலைமையில் ஆலோசனை நடத்தியது.