வியாழன், 9 மார்ச், 2023

கொளத்தூரில் பன்னோக்கு மருத்துவமனை : அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்முதல்வர்

 minnambalam.com -  christopher : கொளத்தூரில் பன்னோக்கு மருத்துவமனை : அடிக்கல் நாட்டிய முதல்வர்
கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.71.81 கோடி மதிப்பில் பன்னோக்கு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 8) அடிக்கல் நாட்டினார்.
சென்னை கொளத்தூரில் பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம், இஸ்திரி பெட்டி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.71.81 கோடி மதிப்பில் பன்னோக்கு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.


பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அதிநவீன வசதிகளுடன் 3 அடுக்குகளாக இந்த பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட உள்ளது.
இங்கு மகப்பேறு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை கூடம், ரத்த வங்கி உள்ளிட்ட வசதிகளுடன் இந்த மருத்துவமனை அமைய உள்ளது.

மேலும் பன்னோக்கு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக சிகிச்சை பிரிவு அமைக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு தளத்திலும் தலா 220 படுக்கைகள் வீதம் மொத்தம் 1.11 லட்சம் சதுர அடியில் இந்த பன்னோக்கு மருத்துவமனை அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.  கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக