வியாழன், 9 மார்ச், 2023

காங்கிரஸ் இனி தேசிய கட்சி அல்ல... கேசிஆர் மகள் கவிதா சொன்ன 'டீம் பிளேயர்' அட்வைஸ்

 மாலை மலர்  :புதுடெல்ல  மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை அமல்படுத்தக் கோரி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், பாரத் ரஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கவிதா டெல்லி வந்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சி இனி தேசிய கட்சி அல்ல என்றும், அது எப்போது தன் ஆணவத்தை விட்டுவிட்டு யதார்த்தத்தை எதிர்கொள்ளுமோ? என்றும் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் ஒரு அணியின் வீரராக (டீம் பிளேயர்) இருக்க வேண்டும், பாஜகவை தோற்கடிக்க வேண்டுமானால் மாநில கட்சிகளுடன் கூட்டணி சேரவேண்டும், என்றும் கவிதா தெரிவித்தார்.


டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதாவிடம் சி.பி.ஐ. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணை நடத்தியது. இதேபோல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நாளை மறுநாள் இந்த வழக்கின் விசாரணைக்காக கவிதா ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக