சனி, 9 ஜூலை, 2022

”ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல.. ஆனால் ஆத்மீகத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்துபவர்களுக்குதான் நாங்கள் எதிரி”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

கலைஞர் செய்திகள் - லெனின்  : ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (9.7.2022) திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆற்றிய உரை:
இங்கு குழுமியிருக்கக்கூடிய உங்களை பார்க்கிற நேரத்தில் உங்கள் எழுச்சியை, உணர்ச்சியை, ஆர்வத்தை, ஆரவாரத்தை காணுகிற நேரத்தில் குறிப்பாக, பெரும் திரளாக திரண்டிருக்கக்கூடிய அருமை தாய்மார்கள், சகோதரிகள், மகளிர் அணியைச் சார்ந்திருக்கக்கூடியவர்கள், உங்களை எல்லாம் பார்க்கிற நேரத்தில் எனக்கு என்ன தோன்றுகிறது என்று கேட்டால், கொஞ்ச நேரம் பேசாமல், அப்படியே உங்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு வந்திருக்கிறது.

இலங்கையில் பெரும் பதற்றம்; ரணில் வீடும் முற்றுகை; இலங்கை அதிபர் துபாய் தப்பி சென்றாரா...

zeenews.india.com/tamil  0  Vidya Gopalakrishnan :       கோத்தபய ராஜபக்சே ஆம்புலன்ஸ் மூலம், அதிபர் மாளிகையிலிருந்து தப்பியோடி விட்டார்.
    புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டார்.
    இலங்கையில் வரலாறு காணாத அளவு பொருளாதார நெருக்கடி
இலங்கையில் பெரும் பதற்றம்; ரணில் வீடும் முற்றுகை; இலங்கை அதிபர் துபாய் தப்பி சென்றாரா...
இலங்கையில் வரலாறு காணாத அளவு பொருளாதார நெருக்கடி நிலவுவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ளது. மக்கள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். இந்நிலையில், அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக மக்கள் போராட தொடங்கினர்.
நாட்டின் இந்த இக்கட்டான நிலைக்கு, ராஜபக்சே குடும்பத்தின் குடும்ப அரசியலும், ஊழலும் தான் காரணம் மக்கள் கொதித்து எழுந்த மக்கள்  முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேயிம்ன் இல்லத்தை  தீகிரையாக்கினர்.வேறு வழியின்றி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். பின்னர் புதிய பிரதமராக  ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டார்.

சிவந்த மேனியில் சோழர்களா? கறுத்த மேனியில் ரசிகர்களா?

வாலாசா வல்லவன் : சதாசிவ பண்டாரத்தார் எழுதிய பிற்கால சோழர் வரலாற்றில் ஆதித்ய கரிகாலனை கொன்ற நான்கு பார்ப்பனர்கள் பெயர்களை கல்வெட்டு சான்றுகளோடு எழுதியுள்ளார்.

Vineshbabu R  :  ராஜராஜ சோழரின் சோழதேசத்தை முன் நின்று இயக்கிய முதன் மந்திரி அநிருத்த பிரம்மராயர் - பிராமணர்
ராஜராஜசோழர்  சோழ தேசத்தை ஆள முடிசூட்டி வைக்க ( Start camera சொல்ல)  காசுமீரத்தில் இருந்து கொண்டுவரப்பட்டவர்  -பிராமணர்
ஆதித்த கரிகால சோழனை கொன்று மதுராந்தகச் சோழரை அரியணை ஏற்றி சோழமண்ணை இயக்கிய  சோமன்,  ரவிதாஸன் போன்றோரும் பாண்டிநாட்டு  -பிராமணர்
பல்லாண்டுகளுக்கு பிறகு  பொன்னியின் செல்வனை புதினமாக எழுதி சோழத்தை நோக்கி தமிழ் வாசகர்களை இயக்கிய எழுத்தாளர் அமரர் கல்கி - பிராமணர்
அதை திரைக்காவியமாக்கி பெரும்பான்மை மக்களிடம் சோழத்தை கொண்டு சேர்ப்பவரும் ரோஜா படத்தை இயக்கிய இயக்குநர்  மணிரத்னம் - பிராமணர்
ஆமாம்
முதன்மந்திரிகளாகவோ,
முடிசூட்டுபவர்களாகவோ,
கொலை செய்பவர்களாகவோ,
பின் நின்று ஆள்பவர்களாகவோ,

மரணப் படுகைகளாகிவிட்ட தமிழ்நாட்டு சாலைகள்.

May be an image of car and outdoors

RS Prabu :  போர் தொடர்பான ஆங்கிலத் திரைப்படங்களில் வீரர்களை வழியனுப்புகையில் Come home alive, in one piece என்ற வாசகத்தை மனைவிகள், காதலிகள் சொல்லி விடை பெறும் காட்சி நிறைய வரும். இன்று தமிழ்நாட்டில்  அன்றாடம் வண்டியில் வேலைக்குச் சென்று வருபவர்களிடம் 'போய்ட்டு வாங்க' என்று வழியனுப்பாமல் 'அடிபட்டு செத்துடாம உயிரோட வந்து சேருங்க' என்று சொல்லி அனுப்ப வேண்டிய நிலைமை.
சாலை விபத்துகளில் அடிபட்டு இறப்பவர்களில் கார் ஓட்டுநர்களில் சுமார் 70% பேரும், இருசக்கர வாகன ஓட்டிகளில் சுமார் 50% பேரும் they deserve such a brutal death. இது ஒரு arrogant, irresponsible statement என்று சிலர் கருதக்கூடும்.

சமஸ்கிருதத்தில் செந்தமிழின் தாக்கம்

 Ilangovan Chandran : *சமஸ்கிருதத்தில் செந்தமிழின் தாக்கம்_௯௫(95)...*
உலகில் மனித இனம் தோன்றியபோது,உறவுமுறைகள் ஏற்பட்டிருக்கவில்லை.
நாகரிகமடைந்ததும் உறவுமுறைகள் தோன்றின.
அதில் முதன்மையானது *தந்தை* உறவாகும்.
மூத்தமொழியான தமிழிலிருந்து இச்சொல் எவ்வாறு சமஸ்கிருதம் பெற்றதென்பதை பார்ப்போம்.
தமிழில் *தந்தை* *அப்பா* *அச்சன்* *அத்தன்*(தமிழ் முஸ்லிம்கள் அப்பாவை *அத்தா* எனவே அழைக்கிறார்கள்) *அண்ணல்* *பெற்றவன்* *தாதிரு* *ஈன்றவன்* *முதல்வன்*_இன்னும் பல சொற்கள் அப்பாவைக்குறிக்கும் சொற்களாகும்.
இனி சமஸ்கிருதத்தில் தந்தையைக்குறிக்கும் சொற்களையும்,அது எவ்வாறு தமிழிலிருந்து சென்றதென்பதையும் ஆராயலாம்.
*जनक*(janaka)_ஈன்றவன் என்பதே!
*पिता*(pithaa)_பெற்றவன் என்பதே!
*तात*(thaatha)_தாதிரு(திரு என்றால் செல்வம்.செல்வத்தை நமக்கு அளிப்பதால் தாதிரு)என்பதே!
*वप्र,वाप्य*(vapra,vaapya)_அப்பா என்பதே!
*मैलाः*(moulaah)_முதல்வன்(ஒவ்வொருவருக்கும் முதல்வன் அவரவர் தந்தையே)என்பதே!
*आन्नु*(aannu)_அண்ணல் என்பதே!

பொதுக்குழுவுக்குத் தடை : மற்றொரு வழக்கும் தள்ளுபடி! நாற்காலியை தூக்கி வீசி OPS, EPS ஆதரவாளர்களிடையே அடிதடி மண்டை உடைப்பு

EPS - OPS மின்னம்பலம் : அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கேட்டு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் இடையே அதிகார மோதல் நிலவி வரும் நிலையில் எப்படியாவது பொதுக்குழுவுக்கு தடை வாங்கிவிட வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு சட்டப்போராட்டத்தை நடத்தி வருகிறது.
ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பொதுக்குழுவுக்குத் தடையில்லை என்று தெரிவித்துவிட்டது. அதுபோன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு பன்னீர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கடந்த இரு நாட்களாக விசாரணை நடைபெற்று பொதுக்குழு நடைபெறும் 11ஆம் தேதி காலை 9 மணிக்குத் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெரியார் மணியம்மை திருமணம் ! “வீண் வம்பு வேண்டாமே!” கலி.பூங்குன்றன்

No photo description available.

“வீண் வம்பு வேண்டாமே!”
கலி.பூங்குன்றன்
“இந்து தமிழ் திசை” (2.7.2022) ஏட்டில் கீழ்க்கண்ட தலைப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
“பெரியார் - மணியம்மை திருமணம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?”
என்பது தான் அந்தத் தலைப்பாகும்.
இந்து - கிறித்தவர் இருவருக்கிடையே நடைபெற்ற திருமணம் தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
“இந்த வழக்கில் வயது வெறும் எண்ணா? என்ற கேள்வி எழுகிறது. எப்போதும், அப்படி இல்லை. சிறப்பு திருமணச் சட்டத்தில், திருமணப் பதிவுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும். அதை சார்-பதிவாளர் திருமண அறிவிப்பு புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். அந்தப் புத்தகம் அனைவரும் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும்.
அப்படிதான் 72 வயதான பெரியார் ஈ.வெ.ராமசாமிக்கும், 27 வயதான மணியம்மைக்கும் நடக்க இருந்த திருமணம் வெளிச்சத்துக்கு வந்தது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மனைவி அவரைவிட 25 வயது மூத்தவர். இதுபோன்ற உதாரண ஜோடி களுக்கு வயது என்பது வெறும் எண் மட்டுமே” என்று நீதிபதி திரு.ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தர வில் கூறியுள்ளார்.

வெள்ளி, 8 ஜூலை, 2022

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு!

 நக்கீரன் செய்திப்பிரிவு   :  வரும் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஓபிஎஸ்-இன் மனு மீதான உத்தரவு வரும் ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (08/07/2022) பிற்பகல் 02.15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்து வருகின்றனர்.
குறிப்பாக, நீதிபதி நேற்று எழுப்பிய கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள், 'ஓபிஎஸ்ஸின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ சுட்டுக்கொலை Shinzo Abe Death News

 zeenews.india.com/ : இன்று காலை துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ உயிர் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள கியோட்டோவிற்கு அருகில் அமைந்துள்ள நாராவில் பிரச்சார உரையின் போது முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மார்பில் சுடப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது ஒளிபரப்பு NHK தெரிவித்துள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்கான பொதுக்கூட்டத்தில் ஷின்சோ அபே உரையாற்றினார்.

கடலூரில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை... 4 மாணவர்கள் கைது!

நக்கீரன் செய்திப்பிரிவு   :  கடலூரில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் சக மாணவர்களாலேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது
கடலூர் மாவட்டம் ஆவினங்குடி அருகே அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவர் சக மாணவனின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்பொழுது மாணவனும் மாணவியும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டிய சக மாணவர்கள் மூன்று பேர் அவரை தனியாக அழைத்துவந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

ஒரே ஆண்டில் 20 புதிய கல்லூரிகள் திமுக அரசு சாதனை! தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 கலைஞர் செய்திகள் : 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.7.2022) தலைமைச் செயலகத்தில், 2021-22 மற்றும் 2022-23ஆம் ஆண்டுகளுக்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 152 கோடியே 1 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், தொழில் முனைவோர் மையங்கள், விடுதிகள் உள்ளிட்ட கல்விசார் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

வியாழன், 7 ஜூலை, 2022

சென்னை சங்கமத்தை தூத்துக்குடியில் மீட்டெடுத்த நெய்தல்: கலக்கிய கனிமொழி

 மின்னம்பலம் : கடந்த 2006-11 திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை சங்கமம் என்ற பெயரில் நாட்டுப்புற கலை விழாக்கள் அரசு சார்பில் நடத்தப்பட்டன. அதை அப்போது ஒருங்கிணைத்து நடத்தி, தனது தந்தையாரும் அப்போதைய முதல்வருமான கலைஞரிடம் பாராட்டு பெற்றார் கனிமொழி.
இந்த நிலையில் இப்போதைய திமுக ஆட்சியில் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் அரசு சார்பில் கலை விழாக்கள் நடத்தப்பட்டன. தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கவனிப்பில் நடத்தப்பட்ட அந்த விழாக்களில் கனிமொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற பேச்சுகள் எழுந்தன. அந்த விழாக்கள் சென்னை சங்கமம் போல பெயர் பெறவும் இல்லை.
இந்த நிலையில்தான், தனது 'ஏரியா'வான தூத்துக்குடியில் சென்னை சங்கமம் போலவே நெய்தல் கலை விழா என்ற பெயரில் பிரம்மாண்ட கலை விழாவையும், உணவுத் திருவிழாவையும் ஏற்பாடு செய்திருக்கிறார் கனிமொழி எம்பி. 

தமிழ்நாட்டை சீண்ட வேண்டாம், ஆங்கில இணையம் கொடுத்த அதிரடி ரிப்போர்ட்.

Arunachala Murthi : ·:தமிழ்நாடு   -- இது ஒன்றை கழித்துவிட்டால் மொத்த ஒன்றிய நிர்வாகமே ஆட்டம் கண்டுவிடும்..!!
அவர்களை சீண்ட வேண்டாம், ஆங்கில இணையம் கொடுத்த அதிரடி ரிப்போர்ட்.....
மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்பு..! தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும்..
தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்..
ஒட்டுமொத்த இந்தியாவின் ஜி.டி.பி அளவையும் ஒப்பிடும் போது வடகிழக்கு மாநிலங்கள் மொத்தமாக சேர்ந்து அளிக்கும் வருமானத்தை விட தமிழ்நாட்டின் வருமானம் அதிகம் என்கின்றது புள்ளிவிவரம்
இந்தியாவிலேயே செல்வ வளம் கொழிக்கும் மஹாராஷ்டிராவுக்கு அடுத்து 155 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவுக்கு வருமானத்தை கொடுக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே.

சிவாஜியின் சொத்துக்களை ராம்குமாரும் பிரபுவும் ஏமாற்றிவிட்டதாக சகோதரிகள் முறையீடு

நக்கீரன் செய்திப்பிரிவு  : 80 களில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். இவருக்கு  ராம்குமார், பிரபு என்ற இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி என்ற இரு மகள்களும் உள்ளனர்.
ஏராளமான படங்களில் நடித்த சிவாஜி கணேசன் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி வைத்துள்ளார். அவரின் மறைவுக்கு பிறகு அவர்களது வாரிசுகளான ராம்குமார், பிரபு, சாந்தி, ராஜ்வி ஆகியோர் அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தந்தையின் சொத்தில் தங்களுக்கு பங்கு தராமல் பிரபுவும், ராம் குமாரும் ஏமாற்றிவிட்டதாக கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

பாஜகவின் 4 நியமன எம்பிக்களுக்கும் உள்ள “ஒற்றுமை” -இதான் பாஜகவின் ”ஆபரேசன் சவுத் இந்தியாவா?” By

தமிழ்நாடு - இளையராஜா

Noorul Ahamed Jahaber Ali  -   oneindia Tamil News  : டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் ஆந்திரா, தமிழ்நாடு, கேரளாவிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று அறிவித்த நிலையில் தென்னிந்தியாவை சேர்ந்த 4 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள்.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக உள்ளனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்தான்.

நித்தி ஆசிரம குருகுலத்தில் கதறும் சிறுவன்! பதறவைக்கும் ஆடியோ!

file video

 மின்னம்பலம் : நித்யானந்தா தற்போது உடல் நிலை சரியில்லாமல் கைலாசாவில் ஜீவ சமாதி ஆகிக் கொண்டிருப்பதாக ஒரு தகவல் சில வாரங்களாகவே உலவிக் கொண்டிருக்கையில்.... அவரது பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் குருகுலத்தில் படித்துவரும், ஒரு சிறுவனை நித்யானந்தாவின் சீடர்கள் சரமாரியாக தாக்கியே கொல்ல முயலும் ஓர் ஆடியோ இன்று (ஜூலை 6) வெளியாகி பதை பதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிடதியில் உள்ள நித்யானந்தாவின் குருகுலத்தில் படிக்கும் சிறுவன் அஸ்வத். மா அவிமுக்தா மற்றும் ஸ்ரீ அவிமுக்தா ஆகிய இரு நித்தி சீடர்களின் மகன் தான் இந்த அஸ்வத். பால சாந்த் எனப்படும் குழந்தையிலேயே துறவு அருளப்பட்ட இந்த சிறுவனுக்கு பிடதி ஆசிரமத்தில் கடுமையான வேலைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.
அதைச் செய்ய முடியாத அந்த சிறுவன் அஸ்வத், ஒரு கட்டத்தில் பாத் ரூமுக்குள் போய் ஒளிந்துகொள்கிறான். பிறகு ஆசிரமத்தில் இருந்தே தப்பித்துப் போக முயற்சித்துள்ளான்.

;இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராகிறார்

 நக்கீரன் : இசையமைப்பாளர் இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா, பி.டி.உஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் பிரதமர் மோடி குறித்த புத்தகத்தில் அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒற்றுமைப்படுத்தி இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரை பல்வேறு விமர்சனங்களை பெற்றிருந்தது. பல்வேறு தரப்பிலிருந்து இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு எதிர்ப்புகளும், ஆதரவுகளும் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தகவலை பிரதமர் மோடி அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புதன், 6 ஜூலை, 2022

வாரன் பஃபெட் சொத்துக்கள் உலகின் அத்தனை குழந்தைகளுக்கு செல்கிறது தெரியுமா? இந்த மனசு தான் சார் கடவுள்

Tamilarasu J -  o GoodReturns Tamil  :   உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் வாரன் பஃபெட் என்பதும் அவர் தனது சொத்தில் பெரும் பகுதியை நன்கொடையாக கொடுத்து உள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே.
பங்குவர்த்தகத்தில் புலி என்று கூறப்படும் வாரன் பஃபெட் உலகில் உள்ள அனைத்து பங்கு வர்த்தகர்களுக்கும் குருவாக போற்றப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் தனது இறப்புக்குப் பின் தனது சொத்துக்களின் ஒரு குறிப்பிட்ட பகுதி உலகிலுள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் சேர வேண்டும் என்று அவர் கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராகிறாரா நக்வி? ஒரே நாளில் இரு மத்திய அமைச்சர்கள் ராஜினாமா...

முக்தர் அப்பாஸ் நக்வி

விகடன் -  சி. அர்ச்சுணன்:  : துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பாக முக்தர் அப்பாஸ் வேட்பாளராக நிறுத்தப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 பிரதமர் மோடியின் அமைச்சரவையில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த முக்தர் அப்பாஸ் நக்வி, தனது அமைச்சர் பதவியை திடீரென இன்று ராஜினாமா செய்துள்ளார். அண்மையில், துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பாக முக்தர் அப்பாஸ் நக்வி வேட்பாளராக நிறுத்தப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இன்று முக்தர் அப்பாஸ் ராஜினாமா செய்துள்ளார்.

மஹுவா மொய்த்ரா MP அதிரடி: காளி புகைப்பதுவும் மது அருந்துவதும் அவரவர் நம்பிக்கை பாஜக எம்பிக்கள் போர்க்கொடி

 மாலைமலர் : காளி தேவி குறித்து சர்ச்சை கருத்து- திரிணாமுல் காங். எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
காளி தேவியை மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வமாக கற்பனை செய்வதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கிறது.
மஹுவா மொய்த்ரா எம்.பி.க்கு அவரது சொந்த கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது. கொல்கத்தா: ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை வெளியிட்ட'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த போஸ்டரில் இந்து கடவுளான காளி வேடமணிந்த பெண் ஒருவர் வாயில் சிகரெட் வைத்துக்கொண்டு, கையில் ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியைப் பிடித்திருப்பதாக இருந்தது.
இதற்கு, பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
லீனா மணிமேகலையைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

அரசு பள்ளியில் சிறார் திரைப்பட விழா - மாணவர்களுக்கு அயல் நாட்டு சுற்றுலா: தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு

அரசு பள்ளியில் சிறார் திரைப்பட விழா - மாணவர்களுக்கு அயல் நாட்டு சுற்றுலா:  அரசின் அசத்தல் அறிவிப்பு!
கலைஞர் செய்திகள் : அரசு பள்ளியில் மாதத்தின் ஒவ்வொரு 2வது வாரத்தில் சிறார் திரைப்பட விழா நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
உலகெங்கும் உள்ள குழந்தைகளுக்குத் தெரிந்த ஒரு பெயர் எதுவாக இருக்கக் கூடும்? சார்லி சாப்ளின்? அண்மையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமப் பள்ளிக்கூடத்தில் பயிலும் சிறுவனிடம் கேட்டபோது, சார்லி சாப்ளினை அவனுக்குத் தெரியவில்லை.

கலைஞர் உணவகம்! அம்மா உணவகம் பெயர் மாற்றப்படுகிறதா?

 கலைஞர் செய்திகள் : தேர்தல் அறிக்கையில் சொன்னபடி விரைவில் கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று (ஜூலை 5) உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்த மாநாடு நடைபெற்றது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவுத்துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில், தமிழக அரசின் சார்பில் கலந்துகொண்ட  அமைச்சர் ஆர்.சக்கரபாணி, அதன் பின்  டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.“ ‘அம்மா உணவகங்களைப்போல கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும் என இதே இடத்தில், கடந்த ஆண்டு சொல்லியிருந்தீர்கள். ஆனால், ஓர் ஆண்டு முடிந்துவிட்டது. தற்போது அதன் நிலை என்ன?” என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

முருங்கை-யில் கோடிகளை அள்ளும் கரூர் தீபிகா.. வெறும் 26 வயதில் கோடீஸ்வரி..!

முருங்கை ஹெர்பல் டீ
மதிப்பு கூட்டுப் பொருட்கள்
விளைபொருட்கள்

  Prasanna Venkatesh -   GoodReturns Tamil :   எந்த ஒரு விஷயத்தையும் சரியான முறையிலும், சரியான நேரத்திலும் செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பதற்குக் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபிகா முக்கிய உதாரணமாகத் திகழ்கிறார்.
இன்றைய இளம் தலைமுறையில் 9-6 வரையில் வேலையைக் காட்டிலும் முட்டி மோதினாலும் சொந்த தொழில், நிறுவனம், வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதேவேளையில் எந்தத் துறையிலும் வெற்றி என்பது எளிதாகக் கிடைத்துவிடாது,
அதிலும் குறிப்பாக விவசாயத் துறையில் மிகவும் கடினம். ஆனால் விவசாயத் துறையிலும் வெற்றிபெற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது,

செவ்வாய், 5 ஜூலை, 2022

ராதா ரவி அதிரடி : “மோடி, அமித்ஷா 2 பேரும் இந்தியாவின் பெரிய அக்யூஸ்டுகள்”: பாஜக கூட்டத்திலையே சம்பவம்

 கலைஞர் செய்திகள் : இந்தியாவில் பெரிய 2 அக்யூஸ்டுங்க யார்னு கேட்டா அது மோடியும், அமித்ஷாவும்தான் என நடிகர் ராதாரவி பேசியது பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தினர். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறுக் கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
மேலும் நடிகர் ராதாரவியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசும்போது பெரிய அக்யூஸ்டு மோடி ஜியும், அமித்ஷாவும்தான் என பேசியது பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனா கணவர் மரணத்தை வைத்து பொழப்பு நடத்துறியே நீயெல்லாம் ஒரு மனுஷனா? பயில்வானை விளாசிய ராஜன்!

tamil.filmibeat.com -  Mari S  :  சென்னை: நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்தது தென்னிந்திய சினிமாவையே சோகத்தில் ஆழ்த்திய நிலையில், பயில்வான் ரங்கநாதன் மட்டும் அதை வைத்தே பிழைப்பு நடத்துகிறார் என தயாரிப்பாளர் கே ராஜன் விளாசித் தள்ளி உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பயில்வன் ரங்கநாதன் பெண்களையும், நடிகைகளையும் இழிவாக பேசுகிறார் என கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் ராஜன்.
இந்நிலையில், தெற்கத்தி வீரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராஜன் பயில்வான் ரங்கநாதனை பந்தாடி பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது.

சிகரெட் புகைக்கும் காளி! இயக்குநர் லீனா மணிமேகலை மீது டெல்லி போலீஸ் வழக்கு காளி

மாலை மலர்  :  காளி பட போஸ்டர் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி டெல்லி போலீசில் புகார். இந்து கடவுளை அவமரியாதை செய்வதாக கனடா இந்து அமைப்புகள் குற்றச்சாட்டு.
இயக்குநர் லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்றும், கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தி இருப்பது போன்றும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது.

முஸ்லீம் வியாபாரி கைது ..உணவு சுற்றிக் கொடுத்த காகிதத்தில் கடவுள் படம் .. உத்தர பிரேதசம்

Rishvin Ismath  : உணவுப் பொருட்களை சுற்றிக் கொடுக்க பயன்படுத்திய பழைய பத்திரிகைத் தாளில் இந்துக் கடவுளின் படம் இருந்ததால் முஸ்லிம் உணவக உரிமையாளர் உத்தரப் பிரதேசத்தில் கைது.
2012 ஆம் ஆண்டு முதல் 'மெஹெக் ரெஸ்டோரண்ட்' எனும் பெயரில் தெருவோர உணவகம் ஒன்றை நடாத்தி வரும் முஹம்மது தாலிப் என்பவரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளார்.
RSS உடன் தொடர்புடைய 'ஹிந்து ஜாக்ரன் மஞ்' எனும் ஹிந்துத்துவா அமைப்பின் மாவட்டத் தலைவரான கைலாஷ் குப்தா என்பவன் வழங்கிய புகாரின் அடிப்படையிலேயே முஹம்மது தாரிக் கைது செய்யப் பட்டுள்ளார்.
.'வழமை போன்று பழைய பத்திரிகைகளை விற்கும் கடை ஒன்றிலிருந்து வாங்கி வந்த தாள்களையே உணவுப் பொருட்களை சுற்றிக் கொடுக்கப் பயன்படுத்தினோம்.

மோட்டார் சைக்கிள் வேகம் போலீஸ் ரேடாரில் டிடிஎஃப் வாசன்.. Twin Throttlers யூடியூப் சேனலை முடக்க குவியும் முறைப்பாடுகள்

Vishnupriya R  -   Oneindia Tamil : சென்னை: அதிவேகமாக பைக்கை ஓட்டுவதற்காகவும் அதிக அளவில் கூட்டத்தை கூட்டுவதற்காகவும் யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
அப்படியென்றால் போலீஸாருக்கு நிறைய புகார்கள் சென்றிருக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
டிராவல் விபிலாகரான கோவையை சேர்ந்த டிடிஎஃப் வாசன் (22), லடாக் மற்றும் நேபாளத்திற்கு தனது ரூ 11 லட்சம் சூப்பர் பைக்கில் சென்று இளைஞர்களின் மனங்களை கவர்ந்தார்.
அண்மையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அன்னூரில் பிறந்தநாள் விழா மீட்டை வாசன் நடத்தியிருந்தார்.
இந்த நிகழ்வுக்கு கிட்டதட்ட 5000 பேர் வரை வந்திருந்தனர்.
வந்தவர்கள் எல்லாம் உரிமையுடன் வாசனை தம்பி, அண்ணா, மகன் என்றெல்லாம் அழைத்தனர்.

திங்கள், 4 ஜூலை, 2022

புலிகளை விமர்சிக்கும் பெரியார் தோழர்கள் இயக்கங்களில் இருந்து நீக்கப்படுகிறார்கள்?

 Loganayaki Lona  : விபு ப்ரச்சனையில் இயக்கத்தினர் முன்னெடுத்த  விதம் தவறென  பொதுவில் வாதாடினால்   பெரியார் இயக்கத்திலிருந்து நீக்கப்படுகிறோம்.
இயக்கத்தில் இணைத்துக்கொண்ட பதிவிலேயே மிகத்தெளிவுடன் திமுக இணையதள அணியில் ஏற்கனவே  செயல்படுகிறேன் என தெரிவித்தும் இன்னும் பல இயக்கங்களின் இணைய  செயல்பாட்டிலும் உண்டு என அறிவித்தும் தான் சேர்ந்தேன்.
அத்தனை பேருக்கும் பொது நபரின் கருத்து எப்படியோ அப்படித்தான் என் சிந்தனை இருக்கும்.எனக்கு ஒரே கருத்தியலில் பயணிப்பவர்களை எத்தனை தூரத்தில் இயங்கினாலும் அடையாளம் தெரியும்.
திமுக ஆதரவாளர் தபெதிக வில் இருக்க முடியாது என்பது எத்தனை வன்மம்? இது தலைவர்கள் எடுக்கும் முடிவல்ல என்பதையும் நாங்கள் அறிவோம்.

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் ஆலோசனைக் கூட்டம்!

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! 

மின்னம்பலம் : திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது.  பெரும்பான்மையாக திமுக வெற்றிபெற்ற மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு மேயர், தலைவர், துணைத் தலைவர் யார் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  

ஹைதராபாத் நகரின் பெயரை பாக்கியா நகர்? மோடியின் பேச்சால் கொதித்தெழுந்த தெலுங்கானா மக்கள்!

 கலைஞர் செய்திகள் : ஹைதராபாத் நகரின் பெயரை பாக்யாநகர் என மோடி கூறியுள்ளது அந்த மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து பழங்கால நகரங்களின் பெயரை தொடர்ந்து மாற்றி வருகிறது. மேலும் நாட்டின் பல்வேறு நகரங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என கூறி வருகிறது. உத்தரபிரதேசத்தின் பிரசித்திபெற்ற அலகாபாத் என்ற நகரின் பெயரை பிரயாக்ராஜ் என மாற்றியது. மேலும் பல்வேறு தெருக்கள் மற்றும் சிறிய நகரங்களின் பெயரை மாற்றியது.
இந்த நிலையில் பா.ஜ.கவின் தேசிய செயற்குழு கூட்டம் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ஹைதராபாத் நகரை பாக்யநகர் எனக் குறிப்பிட்டார்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்த சப்-இன்ஸ்பெக்டர் பைக் விபத்தில் மரணம்.. கொலை?

One more death in Kodanad heist and murder case

Kathiravan  -  .toptamilnews.com  : கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்து சப்-இன்ஸ்பெக்டர்  முஹம்மது ரபிக் சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.  கொடநாடு வழக்கில் பலர் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் தற்போது அந்த வழக்கை விசாரிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் மரணமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது . இந்த கொலை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய  ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்தார் .  அடுத்தடுத்து இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பலர் மர்மமாக உயிரிழந்தனர்.   இதனால் கொடநாடு வழக்கில்  பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கான Cm சந்திர சேகர ராவ் அதிரடி : மோடி குஜராத்தி நண்பர்களுக்கான ஒரு சேல்ஸ்மேன் மட்டுமே

 Maha Laxmi  : உங்களுக்கு வேறு வழியில்லை, நீங்கள் உங்கள் முதலாளிகளை  ஆதரித்துதான் ஆகவேண்டும். அதற்காக நீங்கள் மாநில அரசுகளின்மீது அதிகாரம் செலுத்தி ,
10 சதவீதம் நிலக்கரியை உங்கள் தனியார் முதலாளிகளிடம் அதிக விலைக்கு வாங்கச் சொல்லி வற்புறுத்துகிறீர்கள்.
இல்லாவிட்டால் கோல் இந்தியாவின் நிலக்கரி சப்ளை நிறுத்தப்படும் என்று மிரட்டுகிறீர்கள்.
இது என்ன ரெளடிசமா?  வலுக்கட்டாயமா?
மாநில அரசுகளை  மானம், மரியாதையுடன் நடத்தும்  முறையா?
அதனால் நான் தனியாரிடம் அதிக விலைக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய  மறுத்துவிட்டேன்.
உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று கூறிவிட்டேன்.
என் சொந்த மாநிலத்தில்  சிங்கரேணி நிலக்கரி சுரங்கம் உள்ளபோது அதை நான் உபயோகிப்பேன்.  
நான் ஏன் தனியாரிடம் அதிக விலைக்கு இறக்குமதி செய்ய வேண்டும்.

லஞ்சம் கேட்ட ஊராட்சி ஆய்வாளர் பேச்சை ஒலிப்பதிவு செய்து .... உண்மை சம்பவம்

May be an image of 3 people

Rajaram Gurusamy  ·: ஊராட்சியில் கட்டிட அனுமதி சான்று வாங்குவதற்க்காக போயிருந்தேன்..
சின்னதா 600 சதுர அடியில் வீடு..
ஆய்வாளர் ஏற இறங்க பார்த்தார்..
ஒரு செல் நம்பரை கொடுத்து,இவர் கட்டிட பொறியாளர், இவரைப் பார்த்துட்டு வாங்க என்றார்..
"ஏன்" என்றேன்..
அவர் உங்களது டாக்குமெண்ட்களை சரி செய்து தருவார் என்றார்..
"ஐயா.,
ஒரு நிமிடம்.. எல்லாம் சரியாக உள்ளது.. மேலும்,
ஐந்து பைசா லஞ்சமாக கொடுக்க மாட்டேன்" என்றேன்..
அப்ளிகேஷனை வாங்கிக் கொண்டு, "பணத்தை செலுத்திவிட்டு ஒரு வாரம் கழித்து வாருங்கள்" என்றார்..
ஒரு வாரத்தில் ஆரம்பித்து 37 முறை நகராட்சிக்கு சென்று வந்துவிட்டேன்.,
38 முறையாக சென்றேன், ஆய்வாளர் என்னை நிமிர்ந்து பார்த்தார்.,
"ஐயா, ஒரு வாரம் கழித்து வரட்டுங்களா" என்றேன் முந்திக் கொண்டு, வேறு வழியே இல்லாமல், சான்றை எடுத்து நீட்டினார்..

ஆசிரியர் மகாலக்ஷ்மியின் மாணவர் உயிரிழப்பு .. உண்மையில் நடந்ததென்ன?

May be an image of 1 person and text

May be an illustration of one or more people, people standing and text that says 'Thamizh Bharath Bharath'

Eniyan Ramamoorthy   இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதாவது முற்றடைப்பு (Lock down) ஆரம்பிக்கும் சிறிது காலத்துக்கு முன் colors தொலைக்காட்சியில் கோடீஸ்வரி நிகழ்வு நடைபெற்றது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.
அந்த நிகழ்வில் ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூர் அருகேயிருக்கும் அரசு பழங்குடியின உண்டு உரைவிடப் பள்ளியில் பணியாற்றும் நமது குழந்தைகளின் தோழமை ஆசிரியர் மகாலட்சுமி அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதும் நமக்கு நன்கு நினைவிருக்கும்.

ஞாயிறு, 3 ஜூலை, 2022

40-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை அரசுப் பள்ளி ஆசிரியர் .. கர்நாடக

மாணவிகள் உட்பட 40 பேருக்கு பாலியல் தொல்லை.. கர்நாடக அரசுப்பள்ளியில் நடந்த கொடூரம் !
  கலைஞர் செய்திகள் -KL Reshma : மாணவிகள் உட்பட 40 பேருக்கு பாலியல் தொல்லை.. கர்நாடக அரசுப்பள்ளியில் நடந்த கொடூரம் !
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் பகுதியை அடுத்துள்ள சிங்கபுரா என்ற கிராமத்தில் அரசு உயர் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் முகமது அசாருதீன். இவர் பாடம் சொல்லி கொடுப்பதாக கூறி பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்வதாக புகார்கள் எழுந்தது.  அதுமட்டுமின்றி அவர் தன்னுடன் பணிபுரியும் சக ஆசிரியைகளிடமும் தனது லீலைகளை காட்டி வந்துள்ளார். மேலும் இவரும் பெண் ஆசிரியை ஒருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்த வீடியோ ஒன்று அண்மையில் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மணிப்பூர் நிலச்சரிவு உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு; மீட்பு பணி நீடிப்பு

 தினத்தந்தி : இம்பால், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரெயில்வே கட்டுமானப் பணி நடந்துவருகிறது. கடந்த புதன்கிழமை இரவு அப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
அப்போது அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், அவர்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களும் நிலச்சரிவில் சிக்கினர்.
ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டனர். இந்நிலையில், 4-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

நுபுர் சர்மா பேச்சு மீதான உச்ச நீதிமன்றத்தின் கண்டனம்; கருத்து தெரிவிக்க விரும்பவில்லை: அமைச்சர் கிரண் ரிஜிஜு

 hindutamil.in  : நுபுர் சர்மாவின் பேச்சை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கண்டித்தது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று மத்திய சட்டதுறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இறைதூதர் முகமது நபிகள் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனிடையே நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று நுபுர் சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த், நுபுர் சர்மாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் ”நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார்.

திருமண நிகழ்ச்சியின்போது சிலிண்டர் வெடித்து 4 பெண்கள் உயிரிழப்பு உத்தர பிரதேசம்

 மாலை மலர்:   தீக்காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். திருமணத்தின்போது சிலிண்டர் வெடித்து 4 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் விக்ரம்பூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெடித்து சிதறியது.
இந்த விபத்தில், ஒரு சிறுமி, 3 பெண்கள் என நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 3 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இலங்கைக்கு சரக்கு விமான சேவை நிறுத்தம்: தினசரி 10 டன் பொருட்கள் தேக்கமடையும்!

 மின்னம்பலம் : சென்னை, திருச்சி, மதுரை விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கு சரக்கு (கார்கோ) சேவையை நிறுத்திக்கொள்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளதால் தினசரி 10 டன் பொருட்கள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை ஆகிய விமான நிலையங்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவை அளித்து வருகிறது. தினசரி சென்னைக்கு மூன்று சேவையும், திருச்சிக்கு மூன்று சேவையும், மதுரைக்கு ஒரு சேவையும் அளித்து வந்தது.

AIR ASIA எனும் பித்தலாட்ட உப்புமா ஏர்லைன்ஸ் கம்பெனி ,, சமூகவலையில் தெறித்த கதை

May be an image of 1 person and airplane

யவன குமாரன்  :  AIR ASIA எனும் பித்தலாட்ட உப்புமா ஏர்லைன்ஸ் கம்பெனி
ஜூன் மாதம் முழுதும் இங்கே பள்ளி விடுமுறை.
நானும் ஊரை பார்த்து மூன்று வருடம் ஆகிறது. கடைசியாக கொரோனா இழவு ஆரம்பிக்கும் முன்
கல்லூரி நண்பர்கள் ஒன்றுகூடலுக்காக திருச்சி போய் வந்தது.அதுவும் மூன்றே நாட்கள்.
சரி இந்த முறை இரண்டு பசங்களோடும் போய் வருவோம்.சதா கணினியிலேயே காலத்தை கழிக்கும் அவர்களுக்கும் ஒரு மாறுதலாய் இருக்கும் என்று
இணையத்தில் டிக்கெட் விலையை பார்க்க ஆரம்பித்தால் ரஜினிக்கு சுற்றியதை விட எனக்கு தலை கொஞ்சம் கூடுதலாய் சுற்றுகிறது.
இரண்டு வருடங்களுக்கு மேலாய் முடங்கி கிடந்தவர்கள் டிக்கெட் புக்கிங்கில் வெறி கொண்டு தீவிரம் காட்ட விலை தாறுமாறாய் ஏறியிருந்தது.