Eniyan Ramamoorthy இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதாவது முற்றடைப்பு (Lock down) ஆரம்பிக்கும் சிறிது காலத்துக்கு முன் colors தொலைக்காட்சியில் கோடீஸ்வரி நிகழ்வு நடைபெற்றது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.
அந்த நிகழ்வில் ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூர் அருகேயிருக்கும் அரசு பழங்குடியின உண்டு உரைவிடப் பள்ளியில் பணியாற்றும் நமது குழந்தைகளின் தோழமை ஆசிரியர் மகாலட்சுமி அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதும் நமக்கு நன்கு நினைவிருக்கும்.
அந்நிகழ்வின் மூலம் தனக்கு கிடைத்த வரி நீங்கலாக ₹112000 ல் ஒரு மாணவருக்கு மேற்படிப்புக்காக ₹12000 ம் கொடுத்தது போக மீதமிருந்த ₹100000(ஒரு லட்சம் ரூபாய்) தொகையை தன்னுடைய பள்ளியின் மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்போவதாக ஆசிரியர் மகாலட்சுமி நிகழ்விலேயே கூறியிருந்தார். அதேபோல் நிகழ்வு ஒளிபரப்பாகி தொகைக்கான காசோலை அவருக்கு சேர்ந்தபின், அப்போதைய திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த காந்திசாமி இ.ஆ.ப அவர்களிடம் 20-08-2020 அன்று ஒப்படைத்து பள்ளி மேம்பாட்டிற்கான ஏற்பாடுகள் செய்து வைக்குமாறு கோரிக்கை வைக்கிறார்.
அதனை ஏற்ற ஆட்சியர் 14.11.2020ல் தான் பணி இடமாற்றத்தில் செல்லும்முன் SSS திட்டத்தின் மூலம் பள்ளிக்காக ₹300000(மூன்று லட்சம் ரூபாய்) மதிப்பில் பள்ளிக்கான புதிய இடத்தில் மதில் சுவர் கட்ட சிறப்பு ஒதுக்கீடு மூலம் ஆணை பிறப்பிக்க, அதற்கான பணி ஒப்பந்தங்களை அப்போதைய ஆளும்கட்சி பிரமுகரான ஒப்பந்தாரர் ஒப்பந்தம் எடுக்கிறார்.
அதன்பிறகான கொரோனா இரண்டாம் அலை மற்றும் ஆட்சி மாற்றத்தினால் பணி தாமதாமாகவே துவங்கியிருக்கிறது. இந்நிலையில் ஒப்பந்ததாரர் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைக்கும், ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்திலும் மதில்சுவர் கட்டாமல் வேறு இடத்தில் குறைவான செலவில் மதில்சுவர் கட்டுகிறார். இதனைக் கேள்வி கேட்டும், BDO விடம் புகாரும் தெரிவிக்கிறார் ஆசிரியர் மாகாலட்சுமி.
இதனைத் தொடர்ந்து அந்த ஒப்பந்ததாரர் ஆசிரியர் மாகாலட்சுமியை கடந்த நவம்பர் 11ம் தேதி தகாத வார்த்தைகளால் திட்டத் துவங்கி டிசம்பர் மாதம் 10 தேதி வரையிலும் தொடர்ந்து ஒருமாத காலம் அச்சுறுத்தும் வகையில் திட்டிக்கொண்டும் இருந்தவர் அன்றையதினம் பள்ளிக்கு நேரடியாக சென்று பள்ளியை மூடிக் காட்டுகிறேன், உன்னை வேலையைவிட்டு துறதுகிறேன் எனச் சொல்லியும் தகாத வார்த்தைகளால் பேசியும் மிரட்டல் வரையும் விடுக்கிறார். அதன்பின் ஆசிரியர் மகா உயர்அதிகாரிகள் முதற்கொண்டு நெருங்கிய வட்டத்தினர் அனைவருக்கும் வாட்சப் குரல் பதிவின் வழியாக செய்தியனுப்பவும், சில கண்டிப்புகளுக்கு பிறகு கொஞ்சம் அமைதியாகிறது பிரச்சனை.
இந்நிலையில் கடந்த மாதம் 20 தேதி 7ம் வகுப்பில் முற்றடைப்பு காரணமாக பள்ளியில் இருந்து சென்ற மாணவர் சிவகாசி வயது 15, கடந்த ஆண்டு பள்ளிக்கு வராமல் தற்போது நேரடியாக 10ம் வகுப்பில் சேர்கிறார்.
இந்நிலையில் விடுதியில் இருந்த அவருக்கு கடந்த மாதம் 28ம் தேதி காலை முகத்தில் ஏதோவொரு கட்டி போன்று தென்பட்டுள்ளது. அதனை அந்த மாணவரே நகத்தால் கிள்ளி கீறி விடவும் ரத்தம் வந்துள்ளது. அதனைக் கவனித்த ஆசிரியர் மகாலட்சுமி பார்க்கும்போது அதில் இருந்து சீழும் வரவே துடைத்துள்ளார்.
பின் தான் வீட்டுக்கு செல்ல விரும்புவதாக கூற ஆசிரியர் மகாலட்சுமியின் அலைபேயைக் கொடுத்து வீட்டிற்கு பேசச் சொல்லியிருக்கிறார். மாலை 5 மணிமுதல் அம்மாணவரின் பெற்றோருக்கு தகவல் கொடுக்க முயற்சித்தும் அழைப்பு போகாமலேயே இருந்துள்ளது. பின் இரவு 7.20 மணி வாக்கில் மீண்டும் அவர்களாக தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த ஆசிரியர் மகாலட்சுமி "வயசுப்புள்ள வலியில் அழுகிறான் வந்து அழைத்துச் சென்று என்னான்னு கவனியுங்கள்"எனக் கூறியுள்ளார். 28ம் தேதி இரவு 9 மணி வாக்கில் அம்மாணவரின் அண்ணன் என்பவர் வந்து அழைத்துச் சென்றுள்ளார். அவர் சென்ற விசையமே மறுநாள் பள்ளிக்கு சென்றபின்புதான் தெரியவந்துள்ளது.
பின் மாணவரை வீட்டுக்கு அழைத்து சென்றவர்கள் ஒன்னரை நாளுக்கு பிறகு 30ம் தேதிதான் அருகே உள்ள PHC க்கு அழைத்துச் செல்ல, அங்கு அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கும் பரிசோதனை செய்ததில் பெரிதாக ஏதோ சந்தேகம் எழவும், cmc மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர். அங்கு சென்றதும் மாணவரின் நிலை கண்டு உடனடியாக icu வில் அனுமதிக்கப்படுகிறார். அதன்பிறகு கிட்டத்தட்ட 20 மணிநேரத்துக்கும் மேலாக வென்டிலேட்டர் உதவியுடன் இருந்த மாணவர் இறக்கிறார். அவரது இறப்புக்கு நுரையீரல்கள் இரண்டும் செயலிழந்ததே காரணம் எனக் கூறியிருக்கிறார்கள்.
இறந்த அந்த மாணவர் மேலே குறிப்பிட்ட முன்னாள் ஆட்சியாளர்கள ஒப்பந்ததாரரும் தற்போதைய ஊர் சேர்மன் நிர்வாகத்தின் கீழ் வரும் ஊர் என்பதாலும், அப்பகுதியின் முன்னாள் ஆட்சியாள கட்சியினர் சிலரது உதவியுடன் மாணவரின் பெற்றோரை வற்புறுத்தி ஆசிரியர் மகாலட்சுமி தனது சேலையில் குத்தி இருந்த safety pin ன்னால் கட்டியை உடைத்ததுதான் காரணம் எனச் சொல்லி ஜமுனாமரத்தூர் காவல்நிலையத்தில் கம்பலைன்ட் கொடுக்கப்படுகிறது. (மகாலட்சுமி பள்ளிக்கு சேலை அணிந்து செல்வதில்லை)
பிறகு காவல்துறையினர் பள்ளி விடுதியில் சக மாணவர்களிடம் விசாரணை செய்ததில் அப்படியொரு நிகழ்வு நடைபெறவேயில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
உடன் மாணவரின் உடல் உடற்கூராய்விற்கு அனுப்பப்பட்டு அதன் அறிக்கைக்காக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் காவல்துறையின் கள விசாரணையில் ஆசிரியர் மகாலட்சுமி மீது தவறில்லை எனத் தெளிவு படுத்தபட்டுள்ளது.
இந்நிலையில் ஊர் மக்களிடமும் அப்பகுதியில் இருந்து அதேபள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோரிடமும் முன்னாள் ஆட்சியாளர்களின் கட்சி பிரமுகர்கள் ஆசிரியர் மகாலட்சுமிதான் காரணம் எனச் செல்லச்சொல்லி வற்புறுத்த. அவர்கள் மறுப்பு தெரிவித்தநிலையில் மாணவரின் இறுதி நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளது.
ஊர் மக்களும் ஆசிரியர் மகாலட்சுமிக்கு ஆதரவான குரல் வந்தநிலையில் நேற்று ஆசிரியர்கள் யாருமற்றநிலையில் அப்பகுதி முன்னாள் ஆட்சியாளக் கட்சி பிரமுகர் ஒருவர் பள்ளியில் நுழைந்து பள்ளியையும், மாணவர்களையும் வீடியோ எடுத்துவிட்டு மாணவர்களை மிரட்டிச் சென்றுள்ளார் என்னும் தகவலும் இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் ஆட்சியாளர்கள் கட்சியினர் ஆசிரியர் மகாலட்சுமியின் மீது அவதூறு செய்தி பரப்பி அதனை சில ஊடகங்கள் மூலம் செய்தியாக்கி விட்டிருக்கின்றனர்.
காலை முதல் பரபரப்பாகிக் கொண்டிருக்கும் ஆசிரியர் மகாலட்சுமியின் பிரச்சனையின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ஊடகங்களும் செய்திகள் வெளிவிட்டு வருகிறன.
அரசுதுறைகள் உடனடியாக தலையிட்டு இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். மேலும் ஏற்கனவே தன்னை மிரட்டியவர்கள் மீது ஆசிரியர் மகாலட்சுமி காவல்துறையில் கம்பலைன்ட் கொடுத்துள்ளார்.
கூடுதல் தகவலாக ஆசிரியர் மகாலட்சுமி விடுதி காப்பாளர் அல்ல. அங்கு ஏற்கனவே ஆசிரியர்கள் பாற்றாகுறை இருப்பதை தொடர்ந்து பதிவு செய்துகொண்டே இருக்கிறார்.
*இனியன்*
*(பி.கு: சில ஊடகங்கள் உண்மைநிலை அறிந்து பதிவுகளை நீக்கம் செய்துள்ளனர்)*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக