திங்கள், 4 ஜூலை, 2022

புலிகளை விமர்சிக்கும் பெரியார் தோழர்கள் இயக்கங்களில் இருந்து நீக்கப்படுகிறார்கள்?

 Loganayaki Lona  : விபு ப்ரச்சனையில் இயக்கத்தினர் முன்னெடுத்த  விதம் தவறென  பொதுவில் வாதாடினால்   பெரியார் இயக்கத்திலிருந்து நீக்கப்படுகிறோம்.
இயக்கத்தில் இணைத்துக்கொண்ட பதிவிலேயே மிகத்தெளிவுடன் திமுக இணையதள அணியில் ஏற்கனவே  செயல்படுகிறேன் என தெரிவித்தும் இன்னும் பல இயக்கங்களின் இணைய  செயல்பாட்டிலும் உண்டு என அறிவித்தும் தான் சேர்ந்தேன்.
அத்தனை பேருக்கும் பொது நபரின் கருத்து எப்படியோ அப்படித்தான் என் சிந்தனை இருக்கும்.எனக்கு ஒரே கருத்தியலில் பயணிப்பவர்களை எத்தனை தூரத்தில் இயங்கினாலும் அடையாளம் தெரியும்.
திமுக ஆதரவாளர் தபெதிக வில் இருக்க முடியாது என்பது எத்தனை வன்மம்? இது தலைவர்கள் எடுக்கும் முடிவல்ல என்பதையும் நாங்கள் அறிவோம்.

இணைய தளம் கருத்து தளம் .இயக்கம் போராட்ட தளம்.இங்கு ஒரே கருத்து எப்படி எல்லார்க்கும் இருக்கும்? சித்த மருத்துவத்தை அலோபதி செவிலியம் படிச்சுட்டு அது ஏமாத்தும் செயல்னு தெரிந்து  நீங்கள் சொன்னா ஆதரிக்கமுடியுமா? அப்போது விமர்சித்ததுக்கு ஏன் இயக்கத்தை விட்டு நீக்கல?அதுல முரண்பட்டு தானே பேசினேன்.
திமுக ஆதரவாளரான பெரியாரியவாதியோடோ கருத்து எப்டி  தோழர் மனோஜ் கூறும் குற்றச்சாட்டாடோ ஒத்துப்போகும்?. அவர் நட்பு முரணாக அணுக வேண்டிய ப்ரச்சனையை மே17இன் நிலையிலும்,நாம் தமிழருக்கு இணையாக திராவிட இயக்க எழுத்தாளர்களையும் அணுகுனா  உண்மை புரியறவங்க ஏற்க முடியாது தானே.எதிர்வினைக்கு எதிரி போல் அணுகியது தவறு .
ஒருவர் கருத்துக்கு எதிர்கருத்து இணையத்துல வைத்தால் இயக்கம் கீழ விழுந்துரும்..விபு வை தமிழக அரசியல் சார்ந்து விமர்சித்தால் உளவுத்துறை உள்ள புகுந்துரும் என்பது immature politics.is it possible?what we did is a very simple discussion.Now you people make that as a world level issue.
அப்பாவி ஈழத்தமிழர் பலர் கலங்கும் நிலையில் வந்து நிக்குது.
ஒரு எதிர்க்கருத்தையும் தாங்க வலுவில்லாதவர்களாகவே இவர்களை பார்க்க வேண்டி இருக்கு.அது தான் ப்ரச்சனை திசை மாறிப்போனதன் காரணமும்  என இங்கு   பலரும் அறிந்திருக்கிறோம்.
 திராவிட இயக்க கருத்தியலோட  இயங்கும் இளைஞர்கள்  விபு வின் போர்த்தோல்விக்கான காரணத்தை விவாதிக்குறாங்க..
எதுக்காக அப்டின்னா இங்கு இயக்கங்களில் இயங்கும் பலரிடம் திமுக வெறுப்பு நிலையோடு ,விபுகள் போல் இயங்க ஆசை இருக்கு.
அந்தப்பாதை பெரியாரை விட சரின்னு நினைப்பு இருக்குது.
அதை வைத்துக்கொள்ளுங்கள் .
ஆனால் போரை மீளாய்வு செய்து விட்டு இங்குள்ள தலைவர்களை விமர்சிங்க..
அதை ஒன்றும் செய்யாமல் பழி மொத்தத்தையும் நெடுங்காலம் ஈழமக்களுக்கு உதவிய கலைஞர் மேல் போடாதே என்பதே அவர்கள் வாதம்.
அது கட்சி சார் இளைஞர்கள் கட்சித்தலைவர் மேல் உள்ள பழியை நீக்க முன்னெடுத்த வேலை.
அது அவர்கள் கடமை.உரிமையும் கூட.
நானும் பலருடன் பல ஆண்டாக விவாதித்தவரை எப்பவும் அவர்கள் தரப்பு பற்றி அவர்கள் விவாதிக்க கூட தயாராக  இல்லை.
நேரடியாக இங்குள்ள தலைவர்களை தெலுங்கர்,கன்னடர்,துரோகி என வசை பாடி தங்கள் கவலையை தீர்த்துக்கொள்கின்றனர்.
இது இங்கு தேர்தலில்  எதிரொலிக்கிறது என்பதால் அந்த விமர்சனம் கண்டிப்பாக தேவையான ஒன்று.கூடாது என சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை.
ஏனெனில் தேர்தலுக்கு முன்பு கூட்டப்பட்ட இயக்க ஒருங்கிணைப்பு நிகழ்வுகளில் அனைத்து கலர் சட்டைப்பேரணிகள்,கொடி அறிமுகம் என அனைத்திலும் தெரிந்தே மே 17 இன் ஆசைப்படி திமுக புறக்கணிக்கப்பட்டது .

அதை நான் அறிவேன்.விமர்சித்து அப்போதே எழுதியிருக்கிறேன்.
திமுக வின் அரசியல் செயற்பாட்டில் விமர்சனங்கள் எல்லார்க்கும்,அரக்கர்களுக்கும் கூட உண்டு.
ஆனால் இயக்க ஒருங்கிணைப்பு நிகழ்வுகள் நடந்த போது திமுக தன் அரசியல்  நிலைப்பாட்டில் இயக்கங்களின் ஆக்கப்பூர்வமான அனைத்து செயல்களுக்கும் ஆதரவு நிலைக்கு வந்திருந்தது.
அதற்கான அறிவிப்பும் தந்திருந்தது.
அப்பவும் புறக்கணிக்கவே செய்தீர்கள்.
அதுக்கு பேரு தேர்தலில் நாங்க இல்லன்னா ஜெயிச்சுருவியா எனும் அதிகார வன்மம் தானே..
அதெப்படி ஒருங்கிணைந்த சமத்துவம் ஆகும்.
தேர்தல் அரசியல் கட்சியின் திட்டங்களில் மக்கள் விரோதம் வந்தால் எதிர்கட்சியாக நினைத்து விவாதிக்கலாம்.
எப்பவும் ஒத்த சிந்தனையுள்ள கட்சியை ஒதுக்கிட்டு ஒரு அரசியல் பேச நினைப்பது அநியாயம்.
ஒரே கருத்தியலில் இயங்குபவர்களை எதிரி போல் எதிர் நிலையில் பார்க்கும் மனநிலையை மாற்றிக்கொண்டு விவாதிக்கவும்.
ஒரே RSS,நாம் தமிழர்னு 10 ஆண்டாக  இயங்கியதன் பாதிப்பு இன்னும் நமக்குள் இருப்பதாகவே நினைக்கிறேன்.நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக