எஸ். முஹம்மது ராஃபி
ராமேசுவரம்
Tamil.thehindu.com:
உலகிலேயே மிகப்பெரிய ஸ்ட்ராபெரி பீட்சா இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பிரபல சுற்றுலாத் தலமான நுவரெலியாவில் உள்ள கிரான்ட் நட்சத்திர ஓட்டலில் ராட்சத ஸ்ட்ராபெரி பீட்சா ஒன்றினைத் தயாரித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நுவரெலியாவின் மேயர் சந்தன லால் கருணாரத்ன கலந்து கொண்டு பீட்சாவை வெளியிட்டார். இது குறித்து மேயர் சந்தன லால் கருணாரத்ன கூறுகையில், ''இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் உற்பத்தியாகும் ஸ்ட்ராபெரி பழங்களை உலகளவில சந்தைப்படுத்தும் நோக்கத்தில் இந்த ராட்சத ஸ்ட்ராபெரி பீட்சா தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் உள்ள ஸ்ட்ராபெரி பழங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க முடியும். இந்த பீட்சாவை 10 நாட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும்'' என்றார்.