வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

திருச்சி கொள்ளிடம் பழைய பாலம் 18-வது தூணில் விரிசல்

tamil.thehindu.com/ திருச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் பழைய பாலத்தின்
18-வது தூணில் நேற்று முன்தினம் இரவு திடீர் விரிசல் ஏற்பட்டது. அந்த விரிசல் அதிகமாகி நேற்று காலை தூணின் ஒரு பகுதி ஆற்றுக்குள் இறங்கியதால், எந்த நேரத்திலும் பாலம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத் தில் திருச்சியில் கொள்ளிடம் ஆற் றின் குறுக்கே 1852-ல் கட்டப்பட்ட பாலம் 1924-ல் நேரிட்ட வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட் டது. இதையடுத்து, திருவானைக் காவல் நெ.1 டோல்கேட் பகுதியை இணைக்கும் வகையில், 1928-ல் 12.5 மீ.அகலம், 792 மீ.நீளத்தில் புதிய பாலம் கட்டப்பட்டது. 24 தூண்களைக் கொண்ட இந்தப் பாலத்தின் பக்கவாட்டுச் சுவர்கள் கனத்த இரும்புக் கம்பிகளால் ஆனவை.

குறுகலான இந்தப் பாலம் வலுவிழந்துவிட்டதாகக் கூறி சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கொள்ளிடம் பழைய பாலத்துக்கு மாற்றாக, அதன் அருகிலேயே ரூ.88 கோடியில் சென்னையில் உள்ள நேப்பியர் பாலத்தைப் போன்ற மாதிரியில் புதிய பாலம் கட்டப்பட்டு, 2016 பிப்.14-ல் அப்போதைய முதல் வர் ஜெயலலிதாவால் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட் டது. அதைத்தொடர்ந்து, புதிய பாலத்தில் அனைத்து வகை வாக னங்களும் சென்று வருகின்றன. பழைய பாலத்தை நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள் மட்டுமே தற்போது பயன்படுத்தி வருகின்ற னர். இந்நிலையில், மேட்டூர் அணை யில் இருந்து அதிக தண்ணீர் வருவ தன் காரணமாக, முக்கொம்புக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இதையடுத்து, கொள்ளிடத்தில் மீண் டும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கொள்ளிடம் பழைய பாலத் தின் 18-வது தூணில் லேசான விரிசல் ஏற்பட்டிருந்தது. நேற்று காலை நிலவரப்படி கொள்ளிடத் தில் விநாடிக்கு 78 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், பழைய பாலத்தில் ஏற் பட்டிருந்த விரிசல் அதிகமாகி தூணின் ஒரு பகுதி ஆற்றில் இறங்கியது. இதனால், பாலமும் சேதமடைந்தது.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் போலீஸார் பழைய பாலத்தின் இரு புறமும் மணல் மூட்டைகளை அடுக்கி பொது மக்களின் நடமாட்டத்தை முற்றிலும் தடை செய் தனர். மின் வாரியத்தினர், தொலைத்தொடர்பு அலுவலர்கள் வந்து முன்னெச்சரிக்கையாக இணைப்புகளைத் துண்டித்தனர்.
சேதமடைந்த பாலைத்தை பார்வையிட்ட அமைச்சர் நடராஜன், “இச்சம்பவத்தால், அரு கில் உள்ள புதிய பாலத்துக்கு எந்த சேதமும் ஏற்படாது. கொள்ளிடத் தில் மேலும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படலாம். அடுத்தடுத்த நிகழ்வுகளைப் பொறுத்து தொடர் நடவடிக்கை இருக்கும்” என்றார்.
மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, “சேதமடைந்த பாலத்தை பழுது நீக்க முடியுமா? அகற்ற வேண் டுமா? என்று நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களைக் கொண்டு முடிவு செய்யப்படும். 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தாலும் காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை” என்றார்.
நெடுஞ்சாலைத்துறையினர் கூறும்போது, “இந்தப் பாலத்தின் ஆயுட்காலம் 60 ஆண்டுகள்தான். அதையும் தாண்டி சுமார் 90 ஆண்டு கள் உழைத்துவிட்டது” என்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக