வியாழன், 16 ஆகஸ்ட், 2018

பாரதியார் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடவே இல்லை.. ஜாதி பெருமைகள் .....

தகடூர் சம்பத் : பாரதியார் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடவில்லை.மாறாக ஜாதி
பெருமைகள் இல்லையடி பாப்பா அதில் தாழ்ச்சி உயர்ச்சி செய்தல் பாப்பம் என்றுதான் 1913 இல் அவர் தொடங்கிய ஞான பானு இதழில் - 1915 பங்குனி .. பக்கம் 287 -288  எழுதினர்.  இது பின்பு நெல்லையப்பர் பதிப்பில் 1917 சாதிகள் இல்லையடி பாப்பா அதில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று மாறிவிட்டது .
இந்த விபரங்களை பாரதியாரை பற்றி தனது வாழ்நாள் முழுவதும் ஆய்வு செய்த சீனிவாசன் காலவரிசையில் பாரதி படைப்புக்கள் (அல்லயன்ஸ் பதிப்பகம்)  என்ற தலைப்பில் 16 தொகுதிகளாக பல ஆயிரம் பக்கங்களில் வெளிவந்த பாரதியின் களஞ்சியத்தில் 9 தொகுதியில் 148 பக்கத்தில் இந்த உண்மை தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.
பாரதியார் தனது மகளின் திருமணம் போன்ற வைபவங்களில் தனது பார்ப்பனீய கோட்பாடுகளை எள்ளளவும் வழுவாது கடைப்பிடித்தவர் என்பது எல்லோரும் அறிந்ததே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக